சொல்லாமலிருக்க
முடியவில்லை.... 3
மனமொப்பி உடலுறவுகொள்வதும் பாலியல் வன்கொடுமையும் ஒன்றல்ல என்று சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியிடங்களில் பாலியல் சீண்டல், அத்துமீறல்களெல்லாம் சட்டப்படியான குற்றங்களே. ஆனால், ஊடகங்கள் திரு.சீமானைக் குதறியெடுக்கின்றன. தன் அக்காவைப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும் நடிகை விஜயலட்சுமியை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
அதற்கு பதிலாக அவருக்குத் தங்கள் ஒளி ஊடகங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தரலாம். அவருடைய அக்கா இப்படி படுத்த படுக்கை யாகக் காரணமாகச் சொல்லப் படுகின்ற நடிகை ஜெயப்ரதாவைப் பேட்டி கண்டு நியாயம் கேட்கலாம். அதையெல்லாம் செய்ய முற்படாதது ஏன்?
அதே சமயம் பணியிடத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக பல பெண்களால் குற்றஞ்சாட்டப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு சமீபத்தில் தமிழக முதல்வர் தலைமையில் வைரமுத்தியம் பன்னாட்டுக் கருத்தரங்கம் கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது. நீதிபதி அரங்க. மகாதேவன் உட்பட பல இலக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment