LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, December 17, 2022

ANAAMIKAA ALPHABETS BOOKS

 ANAAMIKAA ALPHABETS BOOKS

(*இவற்றில் பல அமேசான் -கிண்டில் மின் -நூல்களாகவும் வெளியாகியுள்ளன)





நூல்கள் வாங்க புதுப்புனல் பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்




புதுப்புனல் பதிப்பகம்

 குறிப்பிடத்தக்க தமிழ் புனைவு, அ-புனைவு நூல்களை

புதுப்புனல் பதிப்பகம்

கணிசமாக வெளியிட்டிருக்கிறது.

தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

சாந்தி நூலகம் வெளியிட்டிருக்கும்
சிறுவர் நூல்களும்
ANAAMIKAA ALPHABETS வெளியீடுகளும்
இங்கு கிடைக்கும்!!
தொடர்புக்கு:















குக்குறுங்கவிதைக்கதைகள் / சொல்லடி சிவசக்தி 26 - 28

 

குக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி  26 - 28


26. மதிநுட்பமும் மொழித்திட்பமும்

 


எனக்குக் காபி என்றால் உயிர்என்றார் பரவசத்தோடு.

உயிரை எத்தனை மலிவாகப் பேசுகிறார் பார்த்தீர்களாஎன்று

ஒரு கரும்புள்ளியிட்டனர்.

உயிரென்ன வெல்லமா?’ என்று அவர் கோபத்தோடு கேட்டபோது

வெல்லத்தை இழிவுபடுத்துவதில் வெட்டவெளிச்ச மாகிறது இவருடைய புல்லுருவித்தனம்என்று

ஒரு செம்புள்ளியிட்டனர்.

நல்ல மனம் வாழ்கஎன்றதை

தன்னைத்தான் சொல்லிக்கொள்கிறார்என்பதாகவும்

அல்பகல் அயராதுழைத்தார்கள்என்றதை

அப்படி அல்லாடத்தான் அவர்கள் பிறந்திருப்பதாகமூளைச்சலவை செய்வதாகவும்

காலைமாலையெவ்வேளையும் புதுப்புது

()ர்த்தங் கற்பித்துக்கொண்டே போவதில்

ஒருவேளை

கைவசமிருக்கும் கரும்புள்ளி செம்புள்ளிகள் தீர்ந்துபோட்விட்டால் என்ன செய்வது என்று

சீரிய மதிநுட்பமும் மொழித்திட்பமும் வாய்க்கப்பெற்றவர்கள்

சிந்தித்துச்சிந்தித்துச்சிந்தித்து

ஸ்விஸ் வங்கி லாக்கரில் நிரம்பி வழியுமளவு

வெகு அதிகமாகவே கரும்புள்ளி செம்புள்ளி சொல்பொருள் ()ர்த்தாத்தங்களை

சேமித்துவைப்பதென்று ஒருமனதாய் முடிவுசெய்திருக்கிறார்கள்.

 

 27. கருமமே கண்ணாயினார்

 

கருமம் எப்படிக் கண்ணாகும்?’ எனக் கேட்டார்

ஒருவர்.

அல்லது கண் எப்படிக் கருமமாகும்?’ என்றார் இன்னொருவர்.

கருமம் கருமம்என்று முகத்தை கோணலாக்கி தலையிலடித்துக்கொண்டார் வேறொருவர்.

கருமம் பிடித்தவர்என்று காறித்துப்பினார்

மற்றொருவர்.

நார் கண்ணானதோ யார் கண்டார்என்றார்

காணாமலே விண்டிலராயிருப்பவர்.

கண்ணன் + நயினார் கண்ணாயினார்என்றார்

பன்மொழிப்புலவராக அறியப்படப்

பெருமுயற்சி செய்துகொண்டிருப்பவர்.

கரு, மரு மேருஎன்று WORD BUILDING கட்டி

இறும்பூதடைந்தார் சொற்கட்டிடக்கலைஞர்.

நயினாவுக்குத் தரப்பட்டிருக்கும்ர்விகுதியை

நிறையவே சிலாகித்தார் மொழியியலாளர்.

கண் ஆய் என்கிறாரேஇது என்ன கூத்துஎன்று

அவிட்டுச்சிரிப்போடு கேட்டவர்க்கு

வெண்பட்டுச் சால்வை போர்த்தப்பட்டது.

அவரவர் கண்ணும் கருமமும் நாரும் வேறும்

அவரவர்க்கேயாகுமாம்

என்றொரு அசரீரி எந்நேரமும் கூறும்…….

 

  28.வேடதாரிகளும் 

  விஷமுறிப்பான்களும்

 

அத்தனை கவனமாகப் பார்த்துப்பார்த்துத் தேர்ந்தெடுத்து

ஊரிலேயே மிகச் சிறந்த தையற்காரரிடம் கொடுத்துத்

தைக்கச்சொல்லி

மீண்டுமொருமுறை திருத்தமாய் நீவி மடித்து

பதவிசாக அதையணிந்துகொண்டு

ஆடியின் முன் நின்றவண்ணம்

அரங்கில் நளினமாக நடந்துவருவதை

ஆயிரம் முறை ஒத்திகை பார்த்து முடித்து

அப்படியே நீ வந்தாலும்

அடி! உன் விழியோரம் படமெடுக்கும் நாகம்

வழியெங்கும் நஞ்சு கக்கும் என

அறிந்திருக்குமெனக்குண்டாம்

குறைந்தபட்சம்

இருபது திருநீலகண்டங்கள்!