LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 6, 2023

சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தனது வளையல்வட்டக் கிணறில்
இல்லாத முதலையின் வாலைப்பிடித்து
முறுக்கிச் சுழற்றி
அதைச் சாகடித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவருக்கும்
அனேக ’லைக்’குகள் அன்றாடம் கிடைத்தவாறே.
அங்கே இல்லாத முதலை அவர்களுக்குமானதாய்
அந்த வளையல்வட்டக்கயிறின்
சமுத்திரக்கரையோரம்
தனது வலிக்காத வாலுடன்
அநாதிகாலம் இளைப்பாறிக்கொண்டேயிருக்கிறது.

பொய்யிலே பிறக்கும் அழுகிய சொற்கள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொய்யிலே பிறக்கும்

அழுகிய சொற்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


சில பல சால்வைகளும் பூங்கொத்துகளும்
பட்டங்களும் பதாகைகளும்
சரவெடியாய்க் கிளம்பும் கரவொலிகளும்
நாளை கிடைக்கலாகும் பதவியும் வாகனமும் அதிகாரமுமாய்
ஆழ்ந்த கிறக்கத்திலிருக்கும்
காரியார்த்த இலக்கியவாதியொருவரின்
வாயிலிருந்து
கிளம்பியவாறிருக்கும் அழுகிய நாற்றம்பிடித்த சொற்கள்
முகஞ்சுளிக்க வைப்பவை எல்லோரையுமே
- அவரைத் தவிர.

தொழில்நுட்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொழில்நுட்பம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
AUDI கார்கள் ஐந்து வாங்கிவிட்டவர்
இவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
இருபது ஊர்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டிவிட்டவர்
வாயில்லாத இவர்களுக்கு நானே குரல் என்று சொல்லிச்சொல்லியே
வாய்த்த இடங்களிலெல்லாம் நிலபுலன்கள் வாங்கிப்போட்டிருப்பவர் வகைவகையாய் அடுக்குமாடி வீடுகள் வளைத்துப்போட்டிருப்பவர்
இன்னும் பல லட்ச அசையும் அசையாச் சொத்துக்களை
- இல்லையில்லை இன்றைய சூழலில் லட்சங்கள் என்றால்
அது மதிப்பழித்தலாயிற்றே – எனவே
இன்னும் பல கோடி அசையும் அசையாச் சொத்துகளை உடைமைகொள்ளும்
சமூகத் தொலைநோக்குப் பேரவாவில் பெருங்கனவில்
நேற்றிலிருந்து பெங்குவின்களுக்கு நான் தான் பேசக் கற்றுக்கொடுத்தேன் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.....
அண்டார்ட்டிகா பிரதேசத்தில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பு
கிடைக்காமலாபோய்விடும்?

கேட்கத்தோன்றும் சில 'ஏன்'கள்

 கேட்கத்தோன்றும் சில 'ஏன்'கள்

_ லதா ராமகிருஷ்ணன்


 ஏன்? - 1

ஒரு திரைப்படம் வெளியானால் அதை பல்வேறு காரணங்களுக்காக – வெளிப்படையானவை யும் மறைமுகமானவையும் – பாராட்டியும் தூற்றி யும் எழுதவும்பார்க்கவேண்டிய படம் என்று   விளம்பரப் பதாகைகள் வைப்பதாய் அறிவிப்புகள்  தரவும் பல இலக்கியவுலகப் படைப்பாளிகள் வரிந்துகட்டிக் கொண்டுவருவதுபோல் ஒரு புத்தகம் – கவிதைத் தொகுப்போசிறுகதைத்தொகுப்போ,   புதினமோ-புனைவு எழுத்தோ – திரைப்படத் துறையினர் வருவதில்லையே ஏன்?


ஏன்? - 2

Sub-ext என்பது இலக்கியப்பிரதிக்கு மட்டுமே  உரித் தானதாதிரைப்படங்களில் அதைத் தேடித்   துழாவ வேண்டியதில்லையா

Sub-Text என்பது பிரதிக்கு உள்ளே மட் டும் இருப்பதாதேடவேண்டி யதா

பிரதிக்கு வெளியே இருக்காதா

தேடக் கூடாதா?


ஏன்? - 3


  

பேச்சுரிமைஎழுத்துரிமைகருத்துரிமை என்றெல்லாம் முழங்கும்போராடும் அரசியல் கட்சிகள்  மாற்றுக் கருத்தைச் சொல்லக்கூட வழியற்ற,   அப்படியே சொல்வதற்கான இடமிருந்தாலும் அப்படிச் சொல்பவர் கட்டங்கட்டப்படுவதான சூழலையே தத்தமது கட்சிக்குள் நியமமாய்க் கொண்டிருப்பது ஏன்?



ஏன்..? - 4

JACK OF ALL TRADESஆகக்கூட இல் லாத சிலர் அல்லது பலர் 

தம்மை MASTER OF ALL ஆக பாவித்துக் கொண்டு சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் 

பற்றி மிக மிக மேம்போக்காகபொத்தாம்பொதுவாக, NON-STOPஆகப் பேசிக்கொண்டேயிருக் கிறார்களேஏன்?


ஏன்? - 5


சில பிரபலங்களின் சில வாசகங்களை மட்டும்  தேர்ந்தெடுத்துத் திரும்பத்திரும்பச் சொல்லி சக மனித மனங்களில் உருவேற்றப் பார்ப்பவர்கள்   அதையே இன்னொருவர் செய்தால் பதறிப்போய் பழிப்பதும்பழிசொல்வதும் ஏன்?


ஏன்? - 6



தங்களது உழைப்பால்எழுத்தால் உயர்ந்தவர் களைஉலகப்புகழ் பெற்றவர்களை சிலர் குத்தகைக்கு எடுத்தது போல் உடைமையுணர்வோடு   அணுகுவதும்அவ்விதத்தில் வேண்டும்போது   அந்த மகத்தான மனிதர்களை படைப்பாளிகளை மண்ணில் தள்ளி மிதிப்பதும் அதற்கு உனக்கு 
என்ன தகுதியிருகிறது என்று யாரேனும் 
கேட்டால்  உடனே அந்த மகத்தான மனிதரை
படைப்பாளியை ஈன்றெடுத்த தாய் நானே 
என்பதாய் அரங்கில் தாலாட்டுப் பாடத்
தொடங்குவதும் ஏன்?





 


 

 

 

 


 


 

 

 


 

 

 

ஏன்? - 6