LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

சொல்லாமலிருக்க முடியவில்லை – 4

 சொல்லாமலிருக்க

முடியவில்லை – 4


எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
_ திருவள்ளுவர்

ஓரிரண்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். முன்னாள் நீதிபதி சந்துரு டாஸ்மாக் கடைகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலைப் பற்றி விரிவாக ஒரு வார இதழில் எழுதியிருந்தார். அங்கே பணிபுரிபவர்கள் பெரும் பாலும் பட்டதாரிகள். (இப்படிச் சொல்வதால் படிக்காதவர்கள் பணிபுரியும் இடங்களில் சுகாதாரமான சூழல் தேவையில்லை என்று சொல்வதாக அர்த்த மாகிவிடாது. அந்த சுகாதாரமற்ற, போதுமான வெளிச்சமும், காற்றும் அற்ற நிலவரம் அங்கு பணிபுரிபவர்களுக்கு உண்டாக்கும் நுரையீரல் சம்பந்தமான நோய்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்.

தனது கட்டுரையொன்றில் எழுத்தாளர் சாரு நிவேதிதா வெளிநாடுகளில் அரசினால் நடத்தப்படும் மதுக்கடைகள் எத்தனை நேர்த்தியாக, தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதை விவரித்து எழுதி அதன் விளைவாக அங்கே மதுவருந்த வருபவர்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தாமல் கண்ணியமாகக் குடித்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதையும், அப்படியில்லாமல் இங்கே தமிழகத்தில் தூய்மையாக இல்லாமல் இருட்டும் அழுக்கும் படந்த நிலையில் இயங்குவதால் அங்கு வந்து கைக்காசை செலவழித்து மது அருந்துபவர்கள் கூச்சலிட்டும் சண்டையிட்டும் வீதியில் விழுந்துபுரண்டும் நடந்துகொள்கிறார் கள் என்றும் அங்கு வருபவர்களை மதித்துநடத்தும் விதமாக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளைப் பராமரிக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

குடி குடியைக் கெடுக்கும் என்று இக்குணூண்டு எழுத்துகளில் அவசர அவசரமாகத் திரையில் ஓடவிட்டு அமர்க்களமாக டாஸ்மாக் கடைகளை நடத்திவரும் அரசு(கள்) அங்கே மதுவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சுகாதாரமான சூழலை உருவாக்கித் தராமல் இருப்பதும். ஏழை மக்கள் தரும் பணத்தில் பெருங்கொள்ளையடித்து ஐந்து நட்சத்திர ஓட்டல் களில் தங்களுடைய மதுக்கேளிக்கைகளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிக் கொள்வதும் நியாயமா?

No comments:

Post a Comment