INSIGHT
( abilingual blogspot for contemporary tamil poetry)
2019insight.blogspot.com
AUG, 2026 ISSUE
2019insight.blogspot.com
www.letgolatha.blogspot.in
INSIGHT
( abilingual blogspot for contemporary tamil poetry)
2019insight.blogspot.com
AUG, 2026 ISSUE
2019insight.blogspot.com
A POEM BY
ATHMAJIV
.................................................................................................................................................
முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித்தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன்.
நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.
நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241
*Please help POET ATHMAJIV, a quality Tamil poet who is distressed - healthwise and economically. any amount as donation would be most welcome and also help in securing more donations for the said cause.
GPay Number for payment of donations 7845576241 (India)
......................................................................................................................................................
A POEM BY
ATHMAJIV
Translated into English by Latha Ramakrishnan
THE VISION
Indeed I am walking on the sky _ Oh yes,
See for yourself
The shadows of my legs
keep strolling in the earth
On the skyway
my footprints don’t leave a trail
Dividing the Moon into two
and holding them in both my hands
_ All for fun, you see.
If looked intently
My very own eyes – they could be
I collect a few water-fetching clouds
and carry them in my bag
to drink when I feel thirsty
From the painting brush of
an unknown artiste
the greenish blue hue-mix is
sprayed
I move a little away
It is absolutely out of place in
the yellow-colour upper-wear
I speak of the ocean only
On returning to the ground
for resting a while
hugging close the sleep
that would be waiting for me in my cot
I would sleep fast.
#தரிசனம்
ஃ
வானத்தின் மீதுதான்
நடந்து கொண்டிருக்கிறேன்
நன்றாக பாருங்கள்
எனது கால்களின் நிழல்கள்
பூமியில் அலைந்தபடி இருக்கிறது
வான்பாதையில்
எனது காலடித் தடங்கள் பதிவதில்லை
நிலவை இரண்டாக்கி இரண்டு கைகளிலும்
ஏந்திக் கொண்டிருப்பதும்கூட
வேடிக்கைக்காகத்தான்
உற்று நோக்கினால்
எனது கண்களாகக்கூட இருக்கக்கூடும்
நீர்சுமந்த சில மேகங்களை
எனது பையில் எடுத்துச் செல்கிறேன்
தாகமெடுக்கும்பொழுது அருந்துவதற்காக
யாரோ ஒரு ஓவியனின் தூரிகையிலிருந்து
நீலப்பச்சை வர்ணக்கலவை தெளிக்கப்படுகிறது
நான் சற்று நகர்ந்து கொள்கிறேன்.
மஞ்சள்நிற மேலாடையில்
சற்றும் பொருந்துவதில்லை அது
சமுத்திரத்தை பற்றிதான் கூறுகிறேன்
ஓய்வுக்காக மண்ணுக்கு திரும்பும்போது
என் அறைக்கட்டிலில் காத்திருக்கும்
உறக்கத்தை அணைத்தபடி
தூங்கிவிடுவேன்
ஆத்மாஜீவ்
மறைக்கப்படும் உண்மைகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எனவே, பாகிஸ்தானிய பிரபலப் பாடலிசையை
சுட்டுக்கொள்ள கட்டுச்சோற்றுடன் கிளம்பிவிடுகிறவர்கள்
நிறைய பேர் நம்மிடையே அன்றும் இன்றும்.
அப்படித்தான்
புள்ளிவிவரங்களைக் கொட்டிப்பேசி
அறிவாளிப்பேச்சாளர்களாகிவிடுவோர் அனேகம்.
தரப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மை அறிய
நிறையவே மெனக்கெடவேண்டும் என்பதோடு
கிடைத்த விவரங்களைப் பகிர்வதும்
அத்தனை சுலபமல்ல.
அப்படித்தான்
இன்று பெரியாளாகிவிட்ட பத்திரிகையாளரொருவர்
சிரியாவின் வளர்ச்சியைப் புகழ்ந்துபேசினார்.
தன் நாட்டை மறைமுகமாக ஒப்பிட்டு மதிப்பழிப்பது
என்றுமான Hidden Agenda.
மடாக்குடியர்களும் மண்ணாந்தைகளல்ல.
பல்வலி யுடன் 'இல்' திரும்பிய கையோடு
’கூகுளி’ல் தேடியதில் கிடைத்த முதல் தகவலறிக்கை:
• சிரியாவின் பரப்பளவு:
71,498 square miles (185,180 square kilometers).Aug 1,
2019
மக்கட்தொகை :
183 லட்சம் (*2019 Estimate)
• இந்தியாவின் பரப்பளவு:
3,287,263[6] km2(1,269,219 sq mi)[d]
மக்கட்த்தொகை:
13392.00 லட்சம் (2017
நாயென்பது நாய் மட்டுமல்ல
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாய் என்பது சிலருக்கு சக உயிர்;
சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும் அலங்கார பொம்மை.
பைரவக்கடவுளென்றாலும் யாரும் நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.
கையிலிருக்கும் காசையெல்லாம் பொறை வாங்கித்
தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்
அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக் கிறேன்.
நாய் வைத்திருப்பவர் தமது நாயை அவள், அவன் என்று உயர்திணையிலும்
அடுத்தவர் நாயை அது என்று அஃறிணையிலும் பேசுவது வழி வழி மரபு.
தன்னால் முடியாத நீளந்தாண்டுதல் அகலந் தாண்டுதல்
தொலைவோட்டம் பந்துகவ்வல் என்றெல்லாவற்றையும்செய்யமுடிந்த
ஒன்றைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும்அதிகாரம் அலாதியானது.
அத்தனை அன்பையும் தன் எஜமானனுக்கேதரும் நாய் என்பது எத்தனை தூரம் உண்மை யென்று வளர்த்தவரின் பட்டறிவுக்கே தெரியும்.
எனில், பட்டறிவு பொய் சொல்லாது என்று என்ன நிச்சயம்?
எத்தனை பெரிய செல்வந்தர் வீட்டு நாயானா லும் தெருவோர வீட்டுச் சுவரோரமா கவோ அருகிலுள்ள வேறெந்த வீட்டுக்குச் சொந்தமான காரின் டயரிலோதான் ஒற்றைக் காலைத் தூக்குகிறது இன்றளவும்.
வளர்ப்புநாய்க்கென்று எந்த மாளிகையிலேனும் தனி கழிப்பறை என்பது நம்பிக்கையாகவியலா நம்பிக்கையாய்.
மேலுக்கு அவரவர் செல்லப்பிராணிகளைப் பற்றிபரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டா லும் நாய் வளர்ப்பவர்கள் பூனையை வளர்ப்பவர் களை ஒருவித எள்ளலோடு பார்ப்பதுபோல் தோன்றும்.
பூனை வளர்ப்பவர் அணில் வளர்ப்பவரை
அணில் வளர்ப்பவர் நோஞ்சான் கிளி வளர்ப்பவரை….
ஒரு அல்சேஷன் நாயின் கழுத்துப்பட்டையிலி ருந்து நீளும்சங்கிலியைப் பிடித்திழுத்த வாறே தெரு வீதி வலம் வருபவர்களில் சிலர்
தம்மை ஆண்டைகளாகவும் எதிரே வருவோரை அடிமைகளாகவும் எண்ணிக்கொள்வது எத்தனை இயல்போ
அத்தனை இயல்பு
குட்டிவாலை ஆட்டியபடி தன்பின்னால் ஓடிவரும் பப்பியை ஒரு சின்னப்பையன்
தன் ஆருயிர்த்தோழனாகக் கட்டிப் பிடித் துத் துள்ளிக் குதிப்பதும்.
நாயின் ஊளையை விட நெஞ்சையறுப்பதுஅதன் கண்களில் தெரியும் அடர்தனிமை.
நாய்க்கு நினைவிருக்குமாஅது ஓநாயின் வழித்தோன்றல் என்பதும்
கானகப்பெருவெளியும்….
.
என்றேனுமொருநாள் சங்கிலிக்குள் பொருந்தியிருக்கும் கழுத்துக்குரிய விலங்குமீண்டும் ஓநாயாக மாறுவதாய் தவிர்க்கமுடியாமலொரு நினைவெழ
நடுக்கத்தோடு காலெட்டிப்போடுகிறேன்.
பின்னால் கேட்கும் புலியின் உறுமல் என் முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கிறது
அவள் அழுதுகொண்டிருக்கிறாள்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அந்த நள்ளிரவில்
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.
ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
‘இதென்ன புதுக்கதை' என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….
;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?
ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்;
”இவர் அவரின் அன்னையை
தாசியென்று பேச
பதிலுக்கு
அவர் இவரின் அன்னையை
வேசியென்று ஏச’
ஆராரோ பாடி ஊட்டிவளர்த்த
அன்னையரெல்லாம்
யாராராலோ இப்படித் தம்
அந்திமக் காலத்தில்
தீராப் பழிசுமக்கும்
கோராமையை என்ணியெண்ணி
ஆறவில்லையே எம் மனது”
என்று கூறியவள்
அழுகை
நின்றபாடில்லை.
அலுவல்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த
பெண்ணைச் சுட்டிக்காட்டி
பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த
இவள் வயிறு
எத்தனை பாரமாயிருந்திருக்கும்
என்றார் அடுத்திருந்தவர்.
எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று
சொல்லியபடியே
அடுத்துவரும் பேருந்து
என்ன வழித்தடம் என்று
கண்களை உருப்பெருக்கிக்
கண்ணாடியாக்கப்
பிரயத்தனப்பட்டார் இவர்.
வாழ்வுப் பிரயத்தனத்தில்
ஒருவேளை இவள்
சோரம்போயிருந்திருப்பாளோ,
என்று மேலும் கேட்டார்
முதலாமவர்.
போயிருக்காவிட்டாலென்ன,
போனதாகச் சொல்வது
வெல்லமல்லவா உமக்கு
என்று தன்னையும் மீறிச்
சொல்லியவண்ணம்
வண்டியில் முண்டியடித்துக்கொண்டு
ஏறினார் இவர்.
கோதண்டராமன் காதையும்
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடிய ஸின் ஃபிடில் இசையும்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”.
(ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).
ரோம் தீப்பற்றி எரிகிறது.
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்
இன்னமும்கூட.
காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி
இன்று
அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..
‘ரோம் தீப்பற்றி யெரியட்டுமே
அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி
இங்கிதமற்றுப்போகும்’
என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்
தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு
தலைமறைவாயிருந்தபடியே
தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்
சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்கொண்டிருக் கிறார்கள்;
சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து
கோலமிடப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்;
’நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்று கண்ணதாசனின் வரிகளை
இரவல் வாங்கியாவது
தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று பாரதியை
மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர்
(மறந்தும் பின்பற்றமாட்டார்)
துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கீறானே இக்கரை இக்கால நீரோ மன்னன்
இவன் கொடுங்கோலனல்லவா என்று கேட்டுவிட்டால் போதும்
கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.
இன்னும் சிலர்
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று புன்சிரித்துக் கூறி
ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்
வருடித்தருகிறார்கள்.
ஐயோ ரோம் எரிகிறதே என்றால்
புனரபி ஜனனம், புனரபி மரணம்
காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்
சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை
அலைபேசியில் படம்பிடித்தபடியே
அகன்றேகுகிறார்கள்.
நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி
தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை
அகற்றியபடி
சுற்றுலா செல்கிறார்கள்.
அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை –
அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்
நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!
அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது
அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….
’நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே
நீரோவின் தீயும்’ என்று
கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக்
குதிரைக்கொம்பா?
வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ
என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த அனுமன் கண்களில்
புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.
எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும்,
கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்
ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை
அதிகமாகிக்கொண்டே.....
பேசா வாசகமும் பொய்சாட்சியமும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு வாசகம் உருவாக்கப்படுகிறது.
கூறப்பட்டதாய் பொய்சாட்சியம் தரும்படி
சிலரிடம் சொல்லிவைக்கப்படுகிறது.
தெருவெங்கும் அந்த வாசகத்தை
உரத்த குரலில் அடிக்கோடிட்டுக் காட்டும்
சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்
முன்னும் பின்னும்
வெகு கவனமாய் இன்னும் சில சொற்கள்
கோர்க்கப்படுகின்றன.
உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்
சந்துபொந்துகளில் மறைந்திருக்கும்
சொற்கள் அவை என்று
முந்திக்கொண்டு பொழிப்புரை தருவதற்கென்றே
சிலர் வழியெங்கும் அணிவகுத்து நிற்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் _
உதிர்க்கப்பட்ட சொற்களைக் காட்டிலும்
உதிர்க்கப்படாத சொற்களாலான வாசகமே
உடனடிக் கலவரத்திற்கு அதிகம் உதவி புரியும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
ஆசிரியர்களும் இலக்கிய ரசனையும்
ஆனால், நம்மிடையே உள்ள தரமான இலக்கிய வாதிகளில் தொழில்முறை ஆசிரியர்கள் -பள்ளி ஆசிரியர்கள் - கல்லூரி ஆசிரியர்கள் - கணிசமா கவே உண்டு. பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், க.மோகனரங்கன், இயற்கை, ராணி திலக், இளம் பிறை, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் இத்தகைய படைப்பாளிகளைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு அவர்கள் அரசியல் தலையீ டின்றி சுதந்திரமாகச் செயல்பட, மாணாக்கர் களிடம் படைப்பூக்கத்தை ஏற்படுத்த, இலக்கிய ரசனையை வளர்க்க அரசுகள், உரிய துறைகள் வழிசெய்தாலே போதும்.
ஆனால் ஒன்று, இத்தகைய இலக்கிய மேம்பாட் டுக்குழுவினரிடையேகூட எது தரமான இலக்கி யம் என்பதில் ஒத்த கருத்து (CONSENSUS) ஏற்படு வது அரிது! ஆனாலும், ஒரு COMMON MINIMUM PROGRAMMEஇன் அடிப்படையில் அவர்கள் நன் றாகவே செயல்பட முடியும்.
நதிமூலம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மிக மிக ஆழமானது
அதன் மிகவாரம்ப மலையுச்சி
மேகங்களுக்கு அப்பாலானது
வயதென்ப பல்லாயிர வருடமெனல் தப்பாகாது.
நதிக்கரைக் கூழாங்கற்களின்
நட்சத்திர விகசிப்பில்
அவற்றின் மேற்படியுங் கைகளிலெல்லாம்
முத்துக்கள் சேகரமாகும்
ஈரமணலூறும் சின்னச்சின்ன நண்டுகள்
தோராயமாய் ஆயிரங் காலுடைத்து
நதிநீரில் நிதமும் நீந்திக் குளித்தவர்கள்
முங்கிக் குளித்தவர்கள்
கரைமீதமர்ந்து நீரின் சலசலப்பை பளபளப்பை
கண்ணாரக் கண்டவர்கள்
இன்பண்ணிசைத்தவர்கள்
இத்தனையத்தனையில்லை
எத்தனையெத்தனையோ என்ப.
அசைந்து செல்லும் தோணிகள் படகுகள்
கப்பலுக்கு அப்பன் என்று எப்பொழுதும்
சொல்லாமலிருந்ததில்லை தாத்தா
வேத்தாள் என்றெல்லாம் நதிக்கு உண்டா என்ன?
யார் கால்வைத்தாலும் தண்ணென்றிருக்கும்
கைகுவித்து அள்ளிப் பருகினாலும் தாகம் தணியும்.
அது நதியல்ல சாக்கடை என்று
நாக்கூசாமல் பொய்யுரைப்பாருக்கு
நீருள்ளிருந்து மேலெழும்பும் சிறுமீன்கள் பதிலளிக்க
தன்போக்கில் தொடர்ந்தேகுமாறு
ஊருக்கு உயிரூட்டியவாறு
A POEM BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித்தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன்.
நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.
நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241
Please help POET ATHMAJIV, a quality Tamil poet who is distressed - healthwise and economically. any amount as donation would be most welcome and also help in securing more donations for the said cause.
GPay Number for payment of donations 7845576241 (India)
....................................................................................................................................
A POEM BY ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
I still remain
In this cabin
Ho, Friendly Flower...
After very many years
I utter your name
Once again today.
You are the indistinct warmth of
one half of mine.
It was you who taught me
The language of Motherhood
hiding inside me.
Inside the unread pages of
The story unwritten of
He who couldn’t live without attachments
And turned a prey to the man-eaters
Who feed on his affection
You still remain
Alive
In the almirahs of forgotten memories
Escaping the termites of sorrow
infesting even miniscule reminiscences
You remain still alive
deep down
Being in the midst of all these humans
who move on with the flow of Time
I remain still here
As signifying a moving doll.
In the midst of my mass of words
that none reads
the noise of angst keeps sounding
in silence.
I remember those words of yours
Uttered before many years
Smilingly - “Just ignore those who understand not
the language of silence
and keep going”
I recall now.
“The language of silence
would always echo as deafening sound”
Time has made the hands of he
who penned Poetry
to stretch out for alms.
I, being crushed under the wheels of poverty
My scream seems to
Stay outside ears many.
Wearing the garment of humiliations
I stand stark naked
as personification of contradictions.
In this cabin called body
Still remaining alive.
இந்த அறைக்குள்தான்
இன்னுமிருக்கிறேன்
சிநேகப்பூ.
பல வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உன் பெயரை
உச்சரிக்கிறேன் இன்று.
என்னொரு பாதியின் உருவற்ற
மென்மை நீ.
எனக்குள் ஒளிந்திருக்கும்
தாய்மையின் மொழியை
கற்றுத் தந்தவள்.
பற்றர வாழ முடியாதவனின்
பாசத்தை தின்னும் புறந்தின்னிகளின்
கொடுரப்பசிக்கு இரையாகிப் போனவனின்
எழுதப்படாத கதையில்
வாசிக்கப்படாத பக்கங்களுக்குள்
இன்னும் நீ
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்.
மறக்கப்பட்ட ஞாபகங்களின் அலமாரியில்
சின்னஞ்சிறு நினைவுகளையும் அரித்த
துயரக் கரையான்களிடமிருந்து தப்பித்து
இன்னும்தான் உயிர்த்திருக்கிறாய்
உள்ளுக்குள் நீ.
காலத்தின் நகர்வுகளில் நகர்ந்து செல்லும்
இத்தனை மனிதர்களின் இடையில் நானும்
நகர்ந்து கொண்டு
இன்னும்தான் இங்கிருக்கிறேன்
அசையும் பொம்மையின் அடையாளமாய்.
யாரும் வாசிக்காத என்
சொற்களின் கூட்டத்திற்கிடையில்
சோகத்தின் சத்தம் ஒலித்துக் கொண்டுதான்
இருக்கிறது மெளனமாக.
"மௌனத்தின் மொழி புரியாதவர்களை
புறந்தள்ளிப் போய்கொண்டே இரு" என்று
அன்றொருநாள் நீ
புன்னகைத்தபடி கூறியதை
நினைத்துக் கொள்கிறேன் இப்போது.
"மௌனத்தின் மொழி எப்போதும்
பெருஞ்சப்தமாகத்தான் எதிரொலிக்கும்”
உண்மைதான் சிநேகப்பூ.
கவிதை எழுதியவனின் கைகளை
ஏந்த வைத்து யாசிக்க வைத்தது
காலம்.
வறுமையின் சக்கரத்தில் நசுங்கிக் கதறும்
என் சொற்களின் சத்தம்
யார் காதிலும் விழுவதாயில்லை.
அவமானங்களின் ஆடையணிந்து
நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறேன்
முரண்களின் மொத்த உருவமாய் இன்று.
உடல் என்ற இந்த அறைக்குள்
உயிருடன்தான் இருக்கிறேன்
இன்னும் நான்.
ஆத்மாஜீவ் : #அகபுத்தகம்_IB_68 : #சிநேகப்பூ
‘சினிமாவின் ஆன்மா’
சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்
கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் குறித்து …….

(July 6, 2026 தேதியிட்ட
திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)
…………………………………………………………………………………………………………………………………………
தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத்தக்க பெயர்களில் இயக்குனர் சீனு ராமசாமியும் ஒன்று. சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்குனர். சிறந்த கவிஞரும் கூட. இதுவரை இவரது 13 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஒன்பது திரைப்படங்களை இயக்கி யுள்ளார். இந்த நூல் அவருடைய மூன்றாவது கட்டுரைத்தொகுப்பு.
இந்த நூலின் சிறப்பம்சம் குழந்தைகளை பிரதான கதாபாத்திரங் களாகக் கொண்ட உலகத்தரமான 15க்கும் மேற்பட்ட திரைப்படங் களை அறிமுகம் செய்திருப்பது. அவை எதனால் சிறந்த படங்கள் என்று தேர்ந்த ரசிகர் பார்வையில் எடுத்துரைத்திருக்கிறார் நூலா சிரியர். ஒவ்வொரு படத்தைப் பற்றிப் பேசும்போதும் குழந்தைகள் பால் நூலாசிரியருக்கு உள்ள மெய்யான அக்கறை வெளிப்படு கிறது. எடுத்துக்காட்டாக, THE RED BALLOON என்ற , 1956இல் வெளி யான படம் குறித்த கட்டுரையின் ஆரம்பப் பத்தி இது:
நூலின் இறுதிப்பக்கங்களில் சினிமா ரசனைக் கல்வியின் அவசி யமும் தேவையும் என்ற கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.
பல பள்ளிகளில் நூலகங்களே மாணாக்கர்களுக்கு எட்டாக்கனி யாக இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். அரசுப்பள்ளி களில் புத்தகங்கள் கிழிந்துவிடும் என்று நூலகங்களில் பிள்ளை களை உள்ளே விடுவதில்லையென்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலை மாறவேண்டியது அவசியம். கூடவே, மாணாக்கர்களுக்கு உலகத்தரமான திரைப் படங்களும் அவ்வப்போது காண்பிக்கப்படலாம். அவர்களுடைய வளர்ச்சிக்காலத் திற்குத் தேவையான சில கருத்துகளை முன்வைக்கும் ஆவணப் படங்களும் காண்பிக்கப் படலாம்.
இன்று காட்சி ஊடகங்களின் காலம் எனலாம். இதில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் திசைதப்பி தறிகெட்டுப்போய் விடாமலி ருக்க அவர்களுக்கு சினிமா ரசனை என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது அவசியம் என்று நூலாசிரியர் வலியுறுத்தியிருப் பது கவனத்திற்குரியது. நூலில் கையாளப்பட்டுள்ள மொழியும், நடையும், பேச எடுத்துக்கொண்டுள்ள உலக சினிமாக்களும், சினிமா சார்ந்த விஷயங்களும் திரு.சீனு ராமசாமியின் (தரமான) சினிமா ரசனையையும் சமூகப்பிரக்ஞையையும், தாக்கமேற் படுத்துவதான நேரிய மொழிப்பயன்பாட்டையும் எடுத்துக்காட்டு கின்றன.
A POEM BY
ATHMAJIV
Rendered in English by Latha
Ramakrishnan(*First Draft)
The land ploughed so deep
Cries not
It creates Life
In the drops poured by
clouds banged against and broke
the land blooms
From inside the seed
that bursts and breaks
jungle comes to be…
From me
broken into smithereens
rise up and walk
Words en masse
A POEM BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
the amount may be big or small - that doesn't matter
your participation in helping a quality Tamil poet by name Athmajiv who needs our help and support is what matters most.
please gpay any possible amount to 78455 76241
நட்பினருக்கு வணக்கம்.
தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.
கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்
...................................................................................
I long to see Mother
The craving proves overwhelming
Why so? I am at a loss to know.
Relations there yet not there
Siblings being indifferent to the core
My poem and I
Facing rejection
Faring all alone
Though I have a family of my own
A life my own
Yet
Today
I long to see my mother
The craving proves overwhelming
Why so? I am at a loss to know….
அம்மாவை பார்க்க வேண்டும் என்று
மிக ஏக்கமாக இருக்கிறது.
ஏனென்று தெரியவில்லை.
இருந்தும் இல்லாத உறவுகள்.
உடன்பிறந்தவர்களின் புறக்கணிப்புடன்...
புறக்கணிக்கப்படும்
என் கவிதையும் நானும்
தனிமையில்.
எனக்கென்று ஒரு குடும்பம்
ஒரு வாழ்க்கை
எல்லாம் இருந்தும் இன்று ஏனோ...
அம்மாவை பார்க்க வேண்டும் என்று
மிக ஏக்கமாக இருக்கிறது...
ஏனென்று தெரியவில்லை.
ஆத்மாஜீவ்#அகபுத்தகம்