LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 23, 2026

எழுத்தாளர்களும் EMPATHYயும் _ லதா ராமகிருஷ்ணன் பொருளாளர், WELFARE FOUNDATION OF THE BLIND

எழுத்தாளர்களும் EMPATHYயும்

_ லதா ராமகிருஷ்ணன்

பொருளாளர்,

WELFARE FOUNDATION OF THE BLIND

22 ஜூன் 2026 தேதியிட்ட *பதிவுகள் இணைய இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை)

.............................................................................................................................

மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும் அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரிய வில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்பப் பழகிவிட் டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப் பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.

மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொரு வருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 44வது அத்தியாயம் இடம்பெறுகிறது.

 

மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றல் என்ன என்று எடுத்துச்சொல்லி ‘ ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, மதம் உருவாக் கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக்காளர்களுக்கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர்கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம் பிக்கை இருப்பதைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமானதாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறுபவர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர்  பிறரிடத்தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன. 

முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச்சொல்லியிருக் கும் பார்வைக்குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே அவற்றின்பாற்பட்ட எல்லா சமூகங்களிலுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப் பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தாயிற்று. எத்தகையப் புனிதப் பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக் கொண்டு வேண்டாததைக் கடந்துபோவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவை யென்ன?

கட உபநிடதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதாம்:

”தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், அறிவாளிகளாகவும்
நினைத்துக்கொண்டு, அறியாமை என்னும் இருளில் மூழ்கியிருக் கும் மூடர்கள் கண்தெரியாதவர், கண் தெரியாதவர் களை வழிநடத்திச்செல்வது போல, பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிச் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

கட உபநிடதத்தில் உள்ள இந்த உவமை மிகவும் புகழ்பெற்றது
என்றும், அதை பின்னர் மூவாயிரமாண்டுகளில் இந்தியா முழுக்க ஏராளமான நூல்களில் திரும்பத்திரும்பக் காண முடியும்’ என்று சொல்லும் எழுத்தாளர் ‘ஆனால், இத்தனை
ஆண்டுகளில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் எத்தனையோ முன்னேறிவிட்டனர், சாதித்துவிட்டனர் என்று கட்டுரையின் ஓரிடத்திலும் சொல்லவில்லை.

மேலும், ‘கண் தெரியாத ஒருவர் கண் தெரியாத இன்னொருவ ரால் எப்படி வழிநடத்தப்பட முடியும்? இருவரும் குழியில்தான் விழுவார்கள்’ என்கிறார். திரு. ஜெயமோகன் நெரிசலான வீதிகளில் தன்னந்தனியாகவும் ஒருவர் முழங்கை மற்றவர் பிடித்துக்கொண்டு இரண்டு மூன்று பேராகவும் பார்வைக்குறை பாடுடைய மாற்றுத்திறனாளிகள் தினசரி கல்விசாலைகளுக்கும், பணியிடங்களுக்கும் செல்வதைப் பார்த்ததில்லை போலும். ‘ஆனால், கண் தெரியாத ஒருவர் பேசுவது கண் தெரியாத இன்னொருவருக்கு மிகச்சரியாகப் புரியும். கண் தெரியும் ஒருவர் சொல்வதை கண் தெரியாதவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ள முடியும். இதேதான் எல்லாவற்றிலும். நாம் எளி தாகப்புரிந்துகொள்ளும் ஒன்று நமக்கு அறிவை அளிக்காது. அது நமக்குத்  தெரிந்ததை நம்மைப் போன்ற ஒருவர் நம்மிடம் சொல்வதுதான். நாம் ஒன்றை உண்மையில் அறிய வேண்டு மென்றால் அதை நோக்கி நாம் வளர்ந்தும் விரிந்தும் சென்றடையவேண்டும்’ என்று தான் சொல்ல விரும்பும் கருத்தைச் சொல்ல தேவையில்லாமல் பார்வையற்றோரை உவமையாக்குகிறார். பார்வைக்குறைபாடுடைய ஒருவர் பேசுவது பார்வை தெரியாத இன்னொருவருக்குக் கச்சிதமாகப் புரியுமாம். அப்படி உறுதியாகச் சொல்ல முடியுமா? இருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுபவர்களாக இருந்தால்? பார்வையற்றவருக்கும் பார்வையுள்ளவர்களுக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் சைகைகள்தான் புரிதலுக்கான இடைவெளிகளை உருவாக்கும். சக மனித மரியாதையுடன் பார்வைக்குறைபாடுடையவர்களிடம் உரையாடும்போது இந்த இடைவெளியை எளிதாகக் கடக்க முடியும்.

இந்த உலகம் எல்லோருக்குமானது.  INCLUSIVE EDUCATION, INCLUSIVE GOVERNANCE   போன்ரறவை மேம்பட்ட சமுதாயத்தை நிர்ணயிக்கும் அளவுகோல்கள். SURVIVAL OF THE FITTEST என்று பேசுவது சுலபம். ஆனால், யார் FITTEST   என்ற கேள்விக்கான பதில் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை.

இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல், சமூகரீதி யான சமத்துவம் எட்டாக்கனியாகவே உள்ளது. அதில், இது போன்ற கருத்துகள் – எனக்கு பார்க்குந் திறன் இருப்பதால் நான் மேலானவன் என்ற ‘பாவம்’ அறியாமையில் விளைந்ததே. 

இன்று மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை போன்ற கண்சார் குறைபாடுகளுக்கான சிகிச்சையும், மூக்குக்கண்ணாடி போன்றவையும் கண்டுபிடிக்கப்படவில்லை யென்றால் பார்க்குந் நதிறன் குறைந்தவர்கள் தானே.

இன்று பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கணினி யைத் திறம்படக் கையாள்கிறார்கள். இலக்கியம் படைக்கிறார் கள். ஆசிரியர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல்- சமூகஞ்சார் சமத்துவம் இன்றுவரை கிடைக்காத நிலை. சட்டசபையிலோ, பாரளுமன்றத் திலோ அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அறவேயில்லாத நிலை இதில், லட்சக்கணக்கானோர் படிப்பதாகக் கூறப்படும் ஆனந்தவிகடன் போன்ற வெகுமக்கள் இதழில் இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவது பார்வையற்றோர் குறித்த எத்தனை எதிர்மறையான பார்வையை, அணுகுமுறையை ஏற்படுத்தும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் பேசும் பகுதி என்று எந்த அச்சு – மின் இதழ்களிலும் தொடர்ந்தரீதியில் ஒதுக்கப்படு வதில்லை. எதுவுமே பேசாமல் கடந்துபோய்விடுவதைவிடக் கொடுமை இப்படி எதிர்மறையான கருத்துகளை போகிற போக்கில் பரப்புவது.

திரு.ஜெயமோகனின் மேற்படி ஆனந்தவிகடன் கட்டுரையின் நிறைவுப்பத்தி கீழே தரப்பட்டுள்ளது:

“ஆனால், நம்மவர்கள் ஒரு கட்டத்தில் வளர்ச்சியையும் விரிவையும் நிறுத்திவிடுகிறார்கள். தாங்கள் நிறைந்து விட்ட தாக எண்ணிக்கொள்கிறார்கள். எது தனக்குப் புரிகி றதோ, அதை உண்மை என நினைக்கிறார்கள். அதையே உண்மை என நினைக்கிறார்கள். கட உபநிடதத்தின் அந்தப் பாடலில் உள்ள மூன்று வார்த்தைகள் ஒரு மந்திரம் போன்றவை. ‘அந்தோனைவ நீயமானா யதாந்தா’ -விழி யிழந்தோன் விழியிழந்தோனால் நடத்தப்படுகிறான். அப்படி வழிநடத்தப்படுபவன் அறியாமைக்கே உரிய அபாரமான தன்னம்பிக்கை கொண்டிருக்கிறான். அதை, பிறர் உடைக்க முடியாது. அவனே உள்ளிருந்து உடைத்துக்கொண்டால்தான் உண்டு. அவர்களை அதே பாடல் ‘ஸ்வயம்தீரா’ என்று சொல் கிறது. தன்னைத்தானே அறிஞர்கள் என எண்ணிக்கொள் கிற வர்கள்.

மேற்கண்ட வரிகள் மற்றெல்லோரையும் விட திரு.ஜெயமோகனுக்கு மிகவும் பொருந்துவது என்றே சொல்லத்தோன்றுகிறது. 


ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு எதிரில் போய் எதிர்ப்புக்குரல் எழுப்பலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பார்வைக்குறைபாடுடைய ஒரு தோழர் வேண்டாமென்று சொன்னார்: “இதெல்லாம் சிந்திக்கத்தெரிந்த மனிதர் மனதில் தோன்றவேண்டும். எழுத்தாளர்கள்கூட குறைந்தபட்ச சகமனிதநேயம், புரிதல் இல்லாமல் இப்படி எழுதுவது மிகுந்த வருத்தமளிக்கிறது”, என்று அவர் சொன்னது மிகவும் உண்மை.

"எங்களுக்கு பள்ளியிலேயே மிருகங்களின் உருவங்களின் பொம் மைகளை தடவிப் பார்க்கக் கொடுத்து அதன் வடிவமைப்பை, உறுப்புகளை அறியச்செய்வார்கள். நாங்கள் யானை மேல் அமர்ந்து அதைத் தடவிப்பார்த்ததுண்டு. இருந்தும், இன்றும் விழியிழந்த வர் யானையைப் பார்த்ததுபோல் என்ற உவமை யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தத்தோடு சொன்னார் பார்வையிழந்த இன்னொரு மாற்றுத்திறனாளி.....

இன்று அரசுக்கல்லூரியில் பிரின்ஸிபலாக இருக்கும் கோ.கண்ணன் ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவருடைய ஓசைகளின் நிறமாலை கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை ஒன்று தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது:

தடயம்

காவியம் பாடி காலம் வென்றனர்

எம் முன்னோர்.

அலட்சியப்படுத்திய

அறிவீலியின்

முகத்திரையைக் கிழித்ததாய்

சொல்லப்பட்டனர்

எம் மூதாதையர்.

எம் ஞான குருவோ எம்

அறிவுத் திறவுகோலுக்காய்

அறுபது ஆண்டு

அகிம்சைப் போர் புரிந்தார்.

அளவில்லா புகழ் கொண்டு

அறிவால் வென்றார்

மூவாசல் கதவுகள் அடைபட்டும்,

எம் மூதாட்டி விரல் வழி உலகளந்தார்;

வினோதங்களின் வினோதமாய்த் திரிந்தார்.

இன்று எம் சோதரர்

இமயத்தில் கால் பதித்து

பனி கண்டத்தே பவனி வருகின்றனர்.

சக மனிதர்க்குச் சமமாய் நாங்களும் அமர்ந்திருக்க

இன்றும் சித்தரிக்கப்படுகிறோம்.

துந்தனா சகித தெருப் பாடகராய்,

திருவோட்டோடு.

காட்சிக் கூடங்களில்

கண்காட்சிப் பொருள் ஆக்கப்படுகையில்

எப்படி

எங்கே

தேடி மீட்பது

எமக்கான உண்மைத் தடயத்தை?

 //பின்குறிப்பு: 'காசி' பட பாதிப்பால் எழுதப்பட்டது.//

............................................................................................................................................

எழுத்தாளர்களும் EMPATHYயும்!

- லதா ராமகிருஷ்ணன்
(பொருளாளர்,
WELFARE FOUNDATION OF THE BLIND)

22 ஜூன் 2026 (*பதிவுகள் இணைய இதழில் வெளியாகி யிருக்கும் கட்டுரை



..........................................................................................................................................................

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) பாகம் – 1 அத்தியாயம் – 9

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)


பாகம் – 1
அத்தியாயம் – 9
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்
//*கட்டுரையிலிருந்து சில பத்திகள்கீழே தரப்பட்டுள்ளன.
திண்ணை இணைய இதழில் முழுக் கட்டுரையையும் வாசிக்க -


//எனவே, எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் தங்களு டைய சமூகக் குழுவோடு இணக்கமற்றி ருக்கும் இளைஞர்கள் தாம் எந்தத் தொழிலைச் செய்வது, எந்தப் பணியில் அமர்வது என்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் வருவாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை – பணியிடங் களில், பார்க்கும் தொழிலில் இணக்கமான நட்புறவு கிடைக்க வழியிருக்கும் துறைகளையே அவர்கள் தமது வாழ்க்கைத்தொழி லாக, வாழ்வாதார வழியாக தேர்ந் தெடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியம் என்ப தையே அவர்கள் பல நேரங்களில் உணர்வ தில்லை. உலகம் பற்றிய அவர்களுடைய அறிவு மிகவும் தங்க ளுக்கு உலகம் பற்றி அவர்களுடைய அறிவு மிகவும் குறுகியதா கவே இருக்கிறது என்பதால் தங்களுடைய நிலத்தில், சூழலில் தங்களுக்கு பழக்கமாகிவிட்ட பாரபட்சப் பார்வைகள் உலக மெங்கும் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் வயதில் பெரியவர்கள் இளையவர்களுக்கு எத்த னையோ உதவி செய்ய முடியும். ஏனென்றால், இதற்கு மனித இனம் சார் கணிசமான அனுபவம் கட்டாயத் தேவையாகிறது.//
முழுமையாக வாசிக்க:



குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME

 

-          லதா ராமகிருஷ்ணன்

13, June, 2026 – pathivukal oniline magazine

https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-21-59/9754-abetment-to-the-crime

 

18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.

 

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்தபட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப்படுவது அவர்களி டம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன. 

இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண்டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல் கள் அறவேயில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.


ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ‘பள்ளிகளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப் படவேண்டியவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது.


சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங் களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள

கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கீழே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

இன்று குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர் களுக்கு ஆசிரியர்கள் நல்லொழுக்கம் போதித்துவந்ததை நிறுத்திவிட்டதுதான் என்று அவர் சொல்வதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்தாற்போல் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்:

‘பெற்றோரும் கண்ணை மட்டும் விட்டுட்டு எப்படி வேண்டு மானாலும் அடிங்க’ என்று ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளை களை ஒப்படைப்பார்கள்’

இது என்ன விதமான சமூகவுணர்வு? ‘இதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பவர்களைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான்: ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்ற அளவில் பெரியவர்கள் ‘தோலுரிக்க’ப் பிறந்தவர்கள் தான் குழந்தைகள்? இது என்ன காட்டுமிராண்டித்தனமான கண்ணோட் டம்; அணுகுமுறை?

அடித்துதுவைப்பதால் குழந்தைகள் நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டுவிட மாட்டார்கள். ஏற்கெனவே குழந்தைக ளுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்களுடைய நலன்கள் சமுக்க-அரசியல் ரீதியாய் புறக்கணிக்கப்படும் நிலையே பெருமளவு நிலவுகிறது.

இதில் சமூகப் பிரக்ஞை- மனிதநேயம் தூக்கலாக இருப்பவர் களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால் எப்படி? இதுதான் உண்மையில் அதி ஆபாசமான பேச்சு; ஆதிக்க மனப்பான்மை.

உண்மையான உலகத் தலைவர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்து தல், ஒழுக்கசாலியாக்குதல் என்ற பார்வையை ஒருபோதும் ஆதரித்த தில்லை. காந்தியடிகள் என்ன கூறுகிறார் பாருங்கள்:



தன் வாழ்நாள் முழுக்க குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை, பள்ளிப் பருவ வாழ்க்கையை இனிமையானதாய், பயனுள்ளதாய் ஆக்க பெரு முயற்சி எடுத்த மரியா மாண்டிஸோரி குழந்தைகளை அடிப்பது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்:


குழந்தைகளை அடித்தல் குறித்து மரியா மாண்டிசோரி
 

குழந்தைகளை அடிப்பது எந்த வகையிலும் அவர்களின் நற்பண்பை வளர்க்காது, மாறாக அவர்களின் சுயமரியாதையைக் குலைத்து எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மரியா மாண்டிசோரி உறுதியாக நம்பினார். தண்டனைகளுக்குப் பதிலாக, குழந்தைகளின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சுதந்திரம் மற்றும் சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுய-ஒழுக்கத்தை (Self-discipline) வளர்ப்பதே மாண்டிசோரி முறையாகும். 

ParentCo. +3

குழந்தைகளை அடித்தல் மற்றும் கண்டிப்பு குறித்து மரியா மாண்டிசோரியின்முக்கிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தண்டனைக்கு இடமில்லை

  • பாரம்பரிய பள்ளிகளைப் போலல்லாமல், மாண்டிசோரி முறையில் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு உடல் ரீதியான தண்டனைக ளுக்கோ அல்லது அபராதங்களுக்கோ (Punishments) எவ்வித இடமும் இல்லை. 

he Kavanaugh Report +1

  • அடிப்பதோ, கண்டிப்பதோ குழந்தைகளிடம் கீழ்ப்படிதலை ஏற்படுத்தாது, மாறாக அது அவர்களின் உள்ளத்தில் கலக மனப்பான்மையையும், எதிர்ப்பையும் மட்டுமே உருவாக்கும். 

ParentCo. +2

சுய-ஒழுக்கத்தை வளர்த்தல்

  • உண்மையான ஒழுக்கம் என்பது சுதந்திரத்தின் மூலமே வர வேண்டும். குழந்தைகள் தாமாக முன்வந்து பிறருடன் இணைந்து செயல்படும்போது ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். 
  • ஒரு குழந்தை தனத கவனத்தை ஒருமுகப்படுத்தி, ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, அதுவே அந்த குழந்தைக்கு ஒரு சுய-ஒழுக்கத்தை அளிக்கிறது. 

The Montessori School of the Berkshires +2

அன்பான வழிகாட்டுதல்

  • குழந்தைகள் சவாலான நடத்தைகளை வெளிப்படுத்தும்போது, அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான முறையில் அதை வெளிப்படுத்த உதவ வேண்டும். 


அன்பான வழிகாட்டுதல்

  • குழந்தைகள் சவாலான நடத்தைகளை வெளிப்படுத்தும்போது, அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான முறையில் அதை வெளிப்படுத்த உதவ வேண்டும். 

Montessori Academy +1

  • உதாரணமாக, குழந்தை கோபத்தில் அடிக்க வந்தால், "அடித்தல் தவறு. உனக்குக் கோபம் வந்தால் இந்த மெத்தையை அடிக்கலாம்" என்று மாற்று வழியைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் ஆற்றலை வழிநடத்த வேண்டும். 

Montessori Academy +1

நிபந்தனையற்ற மரியாதை

  • "குழந்தைகள் என்பவர்கள் மனிதர்கள், அவர்கள் உரிய மரியாதைக்குரியவர்கள்" (Children are human beings to whom respect is due) என்பது மரியா மாண்டிசோரியின் மிக முக்கியமான பொன்மொழியாகும். 

Goodreads +1

  • குழந்தைகளின் சுதந்திரமான செயல்பாடுகளில் பெரியவர்கள் தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்யக்கூடாது. அவர்களின் இயற்கை சார்ந்த செயல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 311870 – மே 61952)

இத்தாலி யைச்  சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கி ஜனவரி 61907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழு வதும் பயன்படுத்த துவங்கி னர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல்  1947 வரை  இந்தியாவிலும் இலங்கையிலும்  பணியாற்றினார்.


உலகெங்கிலுமுள்ள உளவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், கல்வியாளர்கள் எல்லோருமே குழந்தைகள் மனிதகுலத்தில் எதிர் காலம். அவர்கள் அன்பும் அனுசரணையுமாக, அவர்களுடைய அடிப் படை உரிமைகளும், தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வாழ வேண்டி யது அவசியம் என்று அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் என்ற பிரிவின் கீழ் வரு கிறார்கள் என்ற அளவில் அவர்களுடைய பலதரப்பட்ட தேவைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவேண்டியது அவசியம். அடித்துத் தண்டித்தல் எத்தனை ஆகாததோ அதேமாதிரி தான் வார்த்தைகளால் இழிவுபடுத்தலும்.

பள்ளிகள், கல்விக்கூடங்கள் எல்லாம் பிரதானமாக மாணாக்கர்களுக் கானவை.

ஆசிரியர் தொழில் என்பது வெறுமே பொருளீட்ட உதவும் வாழ்க்கைத் தொழில் அல்ல. அப்படி பாவிக்கப்படுவதும், அரசு ஆசிரியர் பணி கிடைக்க பெருந்தொகை தரவேண்டியிருப்பதும், இன்னும் பல காரணங்களும்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியவை.

சிறார்களுக்கான ஆபாசவலைத் தளங்களை, இணைய வழி விளை யாட்டுகளை நடத்துபவர் யார்? பெரியவர்கள்தானே?

அரசியல் பத்திரிகை என்ற பெயரில் துக்ளக் அரசியல்வாதிகளைப் பேட்டி கண்டு எழுதுகிறதே தவிர கல்வியாளார்களையோ, உளவியலாளர்களையோ, மாணாக்கர்களையோ எத்தனை முறை பேட்டிகண்டிருக்கிறது? விவாதத்திற்கு அழைத்திருக்கிறது?

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குரிய அளவுகோல்களில் ஒன்று அங்கு குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது. குழந்தை களை அடிப்பது, அவமரியாதையாக நடத்துவது, வீட்டிலும் சரி, கல்விக் கூடங்கள் போன்ற வெளியிடங்களிலும் சரி – சட்டரீதியாய் குற்றம். இந்தக் குற்றத்தை ‘ஒழுக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடா கத் திரும்பத்திரும்ப வலியுறுத்தும் துக்ளக் போன்ற பத்திரிகைகள் ‘இந்தக் குற்றத்திற்குத் துணைபோகின்றன. குழந்தைகளை அடித்துத் திருத்த வேண்டும் என்ற இவர்களின் பார்வையும் போதனையும் கொடுங் கோலர்களின் காட்டுமிராண்டித்தனத்தைவிடக் கொடுமையானது. இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர் சட்டரீதியான தண்டனைக் குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.


https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-21-59/9754-abetment-to-the-crime


*

  • குழந்தைகளின் சுதந்திரமான செயல்பாடுகளில் பெரியவர்கள் தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்யக் கூடாது. அவர்களின் இயற்கை சார்ந்த செயல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

 

 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 311870 – மே 61952)

இத்தாலி யைச்  சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கி ஜனவரி 61907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழு வதும் பயன்படுத்த துவங்கி னர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல்  1947 வரை  இந்தியாவிலும் இலங்கையிலும்  பணியாற்றினார்.

 

உலகெங்கிலுமுள்ள உளவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், கல்வி யாளர்கள் எல்லோருமே குழந்தைகள் மனிதகுலத்தில் எதிர்காலம். அவர்கள் அன்பும் அனுசரணையுமாக, அவர்களுடைய அடிப்படை உரிமைகளும், தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வாழவேண்டியது அவசியம் என்று அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார்கள். 18 வயதுக்குட் பட்டவர்கள் குழந்தைகள் என்ற பிரிவின் கீழ் வருகிறார்கள் என்ற அளவில் அவர்களுடைய பலதரப்பட்ட தேவைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவேண்டியது அவசியம். அடித்துத் தண்டித்தல் எத்தனை ஆகாததோ அதேமாதிரி தான் வார்த்தைகளால் இழிவுபடுத்தலும்.

 

பள்ளிகள், கல்விக்கூடங்கள் எல்லாம் பிரதானமாக மாணாக்கர்களுக் கானவை. ஆசிரியர் தொழில் என்பது வெறுமே பொருளீட்ட உதவும் வாழ்க்கைத்தொழில் அல்ல. அப்படி பாவிக்கப் படுவதும், அரசு ஆசிரியர் பணி கிடைக்க பெருந்தொகை தரவேண்டி யிருப்பதும், இன்னும் பல காரணங்களும்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியவை. சிறார்களுக் கான ஆபாசவலைத் தளங்களை, இணைய வழி விளையாட்டுகளை நடத்துபவர் யார்? பெரியவர்கள்தானே? அரசியல் பத்திரிகை என்ற பெயரில் துக்ளக் அரசியல்வாதிகளைப் பேட்டி கண்டு எழுதுகிறதே தவிர கல்வியாளார்களையோ, உளவியலாளர்களையோ, மாணாக்கர்க ளையோ எத்தனை முறை பேட்டிகண்டிருக்கிறது? விவாதத்திற்கு அழைத்திருக் கிறது?

 

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குரிய அளவுகோல்களில் ஒன்று அங்கு குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது. குழந்தை களை அடிப்பது, அவமரியாதையாக நடத்துவது, வீட்டிலும் சரி, கல்விக் கூடங்கள் போன்ற வெளியிடங்களிலும் சரி – சட்டரீதியாய் குற்றம். இந்தக் குற்றத்தை ‘ஒழுக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடா கத் திரும்பத்திரும்ப வலியுறுத்தும் துக்ளக் போன்ற பத்திரிகைகள் ‘இந்தக் குற்றத்திற்குத் துணைபோகின்றன. குழந்தைகளை அடித்துத் திருத்த வேண்டும் என்ற இவர்களின் பார்வையும் போதனையும் கொடுங்கோலர் களின் காட்டுமிராண்டித்தனத்தைவிடக் கொடுமையானது. இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர் சட்டரீதியான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.

https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-21-59/9754-abetment-to-the-crime

*