திருப்பங்களும் முட்டுச்சந்துகளும்
LIFE GOES ON.....
Saturday, February 11, 2023
திருப்பங்களும் முட்டுச்சந்துகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
அன்பின் துன்பியல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
அன்பின் துன்பியல்
தேசியக் கவி சம்மேளனத்தில் கலந்துகொண்டவரின் கவிதானுபவக் கட்டுரை -ரிஷி
தேசியக் கவி சம்மேளனத்தில் கலந்துகொண்டவரின் கவிதானுபவக் கட்டுரை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நான் காலையில் கண்விழித்தேன் _
வழக்கமாகச் சென்னையில்,
கடந்த வாரம் திங்கட்கிழமை தில்லியில்.
கட்டாயம் காபி வேண்டும் எனக்கு
சென்னையாயிருந்தாலென்ன தில்லியாயிருந்தாலென்ன.
காலை பத்துமணிக்கெல்லாம் கடைகண்ணிக்குச் சென்றுவரக் கிளம்பினேன்.
கைக்குக் கிடைத்த பாசி மணி ஊசியெல்லாம்
வாங்கிக்கொண்டேன்.
கவியரங்கக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களோடு கைகுலுக்கினேன்.
கைக்குட்டையைப் பையிலிருந்து எடுத்து
வியர்த்திருந்த கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.
கவிதை
வாசிக்க வந்திருந்த அண்டை
மாநிலக் கவிஞர்களோடு ஆசையாசையாக செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.
(அத்தனை
பேரிலும் நானே
அதிகப்
பொலிவோடு இருந்ததாகச் சொன்னார்கள்).
பார்வையாளர்களாக வந்திருந்த ருஷ்ய,
செக்கோஸ்லா வாக்கிய ஈரானிய
ஜெர்மானிய நாட்டுக் கவிஞர்கள் என்னைப் பார்த்து அத்தனை
பாசத்தோடு சிரித்தார்கள். நான்
வாசிக்காத என்
கவிதை
உலகத்தரமானது என்று
உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
கடைசி
வரிசைக்குப் பின்னால் வைத்திருந்த மினரல்
வாட்டர் புட்டிகளில் ஒன்றை
எடுத்துக் குடித்தேன்.
கவிதைகளை நான்
படித்தபோது கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது என்று
எழுதவிடாமல் என்
தன்னடக்கம் தடுப்பதால் _
மண்ணைப் பிளந்தது என்று
கூறி
(ம
- மு
விற்கிடையே உள்ள
ஓசைநயத்திற்காகவும்)
முடித்துக்கொள்கிறேன்.
(பி.கு: கவிதை பற்றி
எதுவுமே பேசவில்லையென்கிறீர் களே.
உளறிக்கொட்டாதீர்கள். உங்களுக்கு என்
மீது
பொறாமையென்று புரிகிறது. உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.)
புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல்
பிரதியை வாசித்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
பிரதியை வாசித்தல்
(லதா ராமகிருஷ்ணன்)
(Published in Pathivukal Online Magazine dated Feb 6,2023)
அவை
சில
சமயம்
ஒரே
புத்தகத்தின் பல
பிரதிகளாக இருந்தன
வேறு
சில
சமயங்களில்
வெவ்வேறு புத்தகங்களின் பிரதிகளாக இருந்தன.
புகைப்படத்தில் புத்தகத்தை
யொரு
குழந்தையாக ஏந்திக்கொண்டிருந்தனர் சிலர்
அருங்காதலராக அரவணைத்துக்
கொண்டிருந்தனர் சிலர்
அணுகுண்டைக் கையில்
பிடித்துக்கொண்டிருப்பதுபோல்
கலவரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர் சிலர்;
அந்தரத்தில் மிதக்கக் கிடைத்த மாயக்கம்பளமாய்
பெருமைபொங்கப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சிலர்.
இன்னும் சிலருக்கு புத்தகங்களும் புகைப்படங்களும்
சுயவிளம்பரப் பதாகைகள்
எப்பொழுதும்போல்
எல்லாவற்றையும்போல்
இருபத்தியெட்டு புத்தகங்கள் வாங்கினேன் என்றவர் முகம்
இருள
இருநூற்றியெட்டு வாங்கினேன் என்றார் ஒருவர்.
இல்லாத
காசு
கிடைக்கும் நாளில்
இந்தப்
புத்தகங்களைக் கட்டாயம் வாங்குவேன் என்று
எண்ணிக்கொண்டான் வாசிப்பில் மிகுந்த ஆசையுள்ள ஏழைப்
பள்ளிமாணவரொருவன்.
புத்தகம் ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை
என்று
எங்கோ
ஓர்
அரங்கில்
யாரோ
முழங்கிக்கொண்டிருந்தார்கள்.
மங்கிய
தெருவிளக்கின் ஒளியில் இரவு
உணவுக்கென எதிரேயிருந்த டீக்கடையில் பஜ்ஜி
வாங்கிச் சாப்பிட்ட பின்
அதைக்
கட்டித்தந்த செய்தித்தாள் கிழிசலை அத்தனை
ஆர்வமாக எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருந்தார்
நாளெல்லாம் அந்த
அழுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் ஒடுங்கி உட்கார்ந்துகொண்டிருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி.
அப்பாவைக் கிள்ளிக்கிள்ளிவிட்டவாறே அழுதுகொண்டிருந்த அந்த
சன்னதேகச் சின்னப்பையனுக்கு
அங்கிருந்த அத்தனை
புத்தகங்களும் கிடார்
பொம்மையாகவே தெரிந்தன.
முகங்கள் மறைய
அடையாளங்காணலாகாக் கைகள்
உயர்த்திப் பிடிக்கும் புத்தகங்களிலிருந்து
சொற்கள் சிறகடித்துப் பறக்கின்றன
அர்த்தம் துறந்து
Tuesday, February 7, 2023
இலவு காப்பது கிளி மட்டுமல்ல ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
இலவு காப்பது கிளி மட்டுமல்ல
ஊரும் பேரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
ஊரும் பேரும்







