LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

அடையாளம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
மேகப்பொதியொன்றை அடையாளம் வைத்து
பயணத்தைத் தொடங்கியிருந்தேன்....

பகலிரவாய்
மனோவேகத்தில்
ஏக தூரம் சென்ற பின்
ஒரு காலை
திரும்ப
அண்ணாந்து பார்க்க
காணவில்லை
வானத்தையும்.

(*காலத்தின் சில தோற்றநிலைகள்’ – கவிதைத்தொகுப்பி லிருந்து)

No comments:

Post a Comment