LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 9, 2026

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 3

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 3

சினிமா மாயை என்று ஒரு நடிகரின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும், அவரை அனுபவமில்லாதவர் என்றும் அவரை ஆதரிப்பவர்களை அரசியல் அறிவு இல்லாதவர்கள் என்றும் பேசும் ஊடகவியலாளர்கள் 'அரசியலுக்கு இதோ வரேன் வந்து கொண்டேயிருக்கேன், வந்துவிடுவேன்' என்று கூறிக்கொண்டே யிருந்தரையும், ஒரேயொரு மக்களவை சீட்டோடு தன் கட்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டவரையும், சினிமா விலேயே பணம் அள்ளிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளையும் திரும்பத் திரும்ப ‘ஜனநாயக் கடமை ஆற்றியதாய்’ வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன?’


அதுவும், பிரபலங்கள் வாக்களிக்கும்போது அவரைப் பின் தொடர்ந்து வாக்களிக்கும் அறைக்குள், பகுதிக்குள் அத்தனை ஊடகவியலாளர்கள் செல்லவேண்டிய தேவையென்ன? அப்படி செய்வது சரியா? அதை ஏன் யாரும் தடுக்கவில்லை?



//இப்ப புதுசா வந்திருக்கானே – அவன் சரியான பொறுக்கி – அவன் ஜெயிக்கவே மாட்டான். அவன் ஆட்சிக்கு வந்தா நாம நாசமாத்தான் போவோம். வெத்துப்பய, உதவாக்கரை//

//எல்லோருமே ஒரு சமயம் புதிதாக வந்து பின்பு அரசியல்களத்தில் பரிச்சயமானவர்களாக மாறியவர்கள் தான். ஆனால், ஒருவரை அவன், இவன் மொள்ளமாறி, முடிச்சவிக்கி என்று கண்ணியமற்ற சொற்களால் வசைபாடுவது அவரை விட நம்மையே அதிகம் அடையாளங்காட்டும்//







வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
/ஃபாசிசம் ஒழிக பாசிஸத்தை உயர்த்திப்பிடிக்கும் கட்சி ஒழிக/
/ஃபாசிசத்தை வேரறுப்போம் வாருங்கள்/
/ஃபாசிசம் நம்மை கூறுபிரிக்க விடலாமா கூறுங்கள்/
/ஃபாசிசம் தான் மட்டுமே சரியென்று நினைக்கும்/
/ஃபாசிசம் தன்னை மட்டுமே முன்னிறுத்த முனையும்/
/ஃபாசிசம் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும்/
/ஃபாசிசம் தானே சரி, தான் மட்டுமே சரி என்று நீட்டிமுழக்கும்/
/ஃபாசிசம் எல்லோருமே தனக்குக் கட்டுப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்/
/ஃபாசிசம் தன்னை எதிர்ப்போரை வெட்டி வீழ்த்தும்/
என்றெல்லாம் பகலிரவாய்
தான் நேசிக்கும் கட்சிக்காய் குரல்வளை முறிய
கூவித்திரிந்தவன்
மற்ற கட்சிகளையெல்லாம் ஃபாசிஸ்ட் கட்சிகள்
என்று ஏசியவாறிருந்தான்.
ஒருநாள்
கட்சியில் தப்பெனத் தனக்குப் பட்ட ஒன்றை மட்டும்
தட்டிக்கேட்டான்.
கட்சிநீக்கம் செய்யப்பட்டான்.
அப்பிய அப்பில் அதோ குப்புற விழுந்தவனின்
கிழிந்த வாயிலிருந்து ரத்தத்தோடு
வழிந்துகொண்டிருக்கிறது
சத்தமில்லாமல் ஃபாசிசம்..

(2021, 2 MAY - மீள்பதிவு)

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும்! - 1

  எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும்! - 1

லதா ராமகிருஷ்ணன்



இந்தப் புகைப்படத்தைப் பாத்தாலே தெரியும் - நானும் இந்த உலகப்புகழ் ஓவியரும் ஒருவருக்கொருவர் எத்தனை நெருக்கமானவங்கன்னு.


ஆனா, இது ஏதோ கலை-இலக்கிய அமர்வுல எடுத்த குரூப் ஃப்போட்டோவை வெட்டி ஒட்டினதுதானேங்க. இதோ, அந்த குரூப் ஃபோட்டோ.

??????????????????????????????????????????????????????






என்னங்க, நீங்க இட்லி செய்யக்கூட லாயக்கில்லைன்னு இப்பிடி பட்டுன்னு சொல்லிட்டாரு?
விமர்சனம்ங்கற பேர்ல அவரோட படைப்புக்கு PRO வேலை செய்யலை. அதுனால...




மனுஷங்களோட அதிகாரவெறி விதவிதமா பல டிசைன்ல வெளிப்படுது. பாக்க ஒரே வேடிக்கையா இருக்கு!

இது என்ன தத்துவம் மாதிரி என்னவோ சொல்றே?

தாமாவே வந்து ‘ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாரு.. நானே பாத்துப் பாத்து தான் நட்பழைப்பை ஏத்துப்பேன். இப்ப 1000 போல இருப்பாங்க. ஆனா, இந்த மனுஷன் அவர் சொல்ற அபத்தக் கருத்துகளுக்கெல்லாம் லைக் போட கூட ஒரு ஆளைத்தான் தேடிக் கிட்டிருக்காருன்னு அப்ப தெரியலை. பொதுவெளியில ஒரு கருத் தைப் பதி விட்டிருந்தவருக்கு கண்ணியமான முறையில மாற்றுக் கருத்துப் பதிவிட்டு பிறகு பாத்தா அவரு பேரையே ஃபேஸ்புக்கில காணலை. இன்னொருத்தருடைய ஃபேஸ்புக்கிலிருந்து பாத்தாக்கா அவருடைய பதிவுக்கான என் பின்னூட்டத்தையே டெலீட் பண்ணிருக்காரு!



என்னங்க இது – சாலையோர கோயில் உண்டியல்கள்ள எல்லாம் 2 ரூபா , 5 ரூபா நாணயம் இல்ல 10 ரூபா நோட்டுன்னு போடறீங்க? படிச்சவங்க நீங்க – இத்தனை மூடநம்பிக்கையோட இருக்கீங்க?

அடிக்கடி போடறதில்லைங்க .எங்கிட்ட பணம் இருக்கறப்ப - அது அபூர்வம் – எப்பவாச்சும் போடுவேன். மத்தபடி, இருபது லட்சம், முப்பது லட்சம்னு பகுத்தறி வோட சாமிக்கு காணிக்கை செலுத்த என்னால எப்படி முடியும், சொல்லுங்க?





F

எமோஜிக்களும் ஏஐயும் எப்போதுமான மொழிபெயர்ப்பாளர்களும்

எமோஜிக்களும் ஏஐயும் எப்போதுமான மொழிபெயர்ப்பாளர்களும்


AI வந்திடுச்சுங்களே – உங்க ளுக்கு முக்காவாசி வேலை மிச்சம் – மொழிபெயர்ப்புக்கு அதே ரேட் கேட்டா எப்பிடி?

மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்கற ரேட் எப்பவுமே கம்மிதானுங்களே. கையெழுத் திலேர்ந்து கம்ப்யூட்ட ருக்கு மாறினாப்பல ஏஐ ல உதவி கெடச்சா மொழி பெயர்ப்பாள ரும் எடுத்துக்கலாம் – தப்பில்ல. ஆனா, ஏஐ மொழிபெயர்ப்பைப் படிச்சு அதுல திருத்தம் செய்ற துங்கறது ‘டபுள்’ வேலை. ஒரு ‘எக்ஸ்பர்ட்’ வேலையும்கூட. நியாயமா பாத்தா நீங்க கட்டணத்தைக் கூட்டித்தரணும்.

?????????????????????????????????????????????????????????????



இப்பத்தான் ஏஐ எல்லாம் வந்திடுத்துங்களே உங்களுக்கு உதவ – அதனால மொழிபெயர்ப்புக்குக் கொஞ்சம் குறைச்சு சார்ஜு வாங்கிக்கங்க.
..............................................................................
என்னங்க ரொம்ப யோசிக்கிறீங்க?

இல்லீங்க – பாட்டில ஒரே வரி திரும்பத்திரும்ப வருது. அர்த்தமே யில்லாத டிங்கு டிங்கு, ஜிங்கு ஜிங்குவும் வருது – அதை யெல்லாம் தள்ளி மீதிக்கு மொழிபெயர்ப்பு சார்ஜ் சொல்லுங்கன்னு முன்ன கேட்ட திரைப்படப் பாடலாசிரியர் ஒருத்தர் ஞாபகம் வர்ரார். சினிமாவுக்கு என்ன ரேட்டுன்னு நமக்குத் தெரியாதுன்னு அவரா நெனச்சுக்கிட்டு அச்சு ஊடகத்திலே தர ரேட்டுக்குப் பேசி அதுல குறைச்சுக்க சொல்லி அறிவுறுத்தினாரு. பாவம், அவரு இறந்துட்டாரு.

???????????????????????????????????????????????????????????




“சில வாரங்களுக்கு முன்(அல்லது, மாதங்களுக்கு முன்) TIMES OF INDIA – SOUTHPOLE பகுதியில் தமிழிலக்கிய வெளியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து சிலர் கருத்துத் தெரிவித்திருந் தார்கள். மொழிபெயர்ப் பாளர்களுக்கு கொழுத்த கட்டணம் தரவேண்டியிருக் கிறது. செயற்கை நுண்ணறிவால் அதிலிருந்து மீளமுடியும் என்று ஓரிரு பதிப்பாளர்கள் சொல்லியிருந் தனரே – அதை படித்தாயா?”

“படித்தேன். ஆர்வம் ஒன்றே காரணமாக மொழிபெயர்க்கப் பட்டுள்ள படைப்புகள், அதை இன்றளவும் செய்துவரு வோர், பேசிய கட்டணம் தரப்படாமல் தவிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பினர் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தனர். “





சமீபத்தில் ஒரு பெப்பெரிய படைப்பாளியின் இணையதளத்தில் ஒரு ஆங்கிலக் கட்டுரை தரப்பட்டு அதன் தமிழ் வடிவமும் தரப் பட்டு அதன் கீழே ‘கூகுள் ட்ரான்ஸ்லேஷன் என்று அடிக்குறிப்பு தரப்பட்டிருந்தது. பார்த்தாயா?


அந்த ஆங்கிலக் கட்டுரையை கூகுள் ட்ரான்ஸ்லேஷனில் போட்டுப் பார்த்தபோது மேற்படி இணைய தளத்தில் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் திருத்தப்பட்டே தரப்பட்டிருப்பது தெரிந்தது. அச்சு அசல் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் என்று தரப்பட்டிருந்த அடிக் குறிப்பு மொழிபெயர்ப்பாளர் களை மட்டம்தட்ட என்பது புரிந்தது


எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 2

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 2

 ரோடு முழுக்க குண்டுங்குழியுமா இருக்குங்க. புதுசா இந்த வழியா வண்டி ஓட்டிக்கிட்டு வரவங்க நிலையை நினைச்சா பயம்மா இருக்குங்க. புதுசா வர ஆட்சியிலா வது இதெல்லாம் சரிசெய்யப்படணும்...

அப்படியிருந்துங்கூட நேரா ரோட்டைப் பாக்காம மேப் பையே பாத்து ஓட்டறாங்க, மௌபைல்ல பேசிக்கிட்டே ஓட்டறாங்க. இதெல்லாமும்கூட புதுசா வர ஆட்சியில் சரிசெய்யப்பட ணும்




சே, என்ன அநியாயம் இது தமிழ்நாட்டு மக்களெல்லாம் வெட்கப்படறாங்க. அவமானமா உணர்ராங்க... அத்தனை தமிழர்களையும் தலைகுனிய வச்சுட்டாங்க...

ஸார், இருங்க, இருங்க - எப்போ சார் உங்களை தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய ஒரே பிரதிநிதியா நியமிச்சாங்க? சொல்லவேயில்லையே!





“சே, இந்த மக்களுக்கு மூளையே இல்லைங்க....

உங்களுக்கு மூளையில்லேன்னு வெளிப்படையா ஒத்துக்கற துக்கு ஒரு பெரிய மனப் பக்குவம் வேணுங்க. மூளையே இல்லைன்னாலுங்கூட நீங்க பெரிய மனுஷந் தாங்க.

?????????????????????????????????????????????????????




கடலளவு அனுபவம் உள்ளவர் அவர்..... அவரைப் போய் தோக்கடிச்சிட்டாங்களே

ஓ! அதுனாலதான் கப்பலா வாங்கிப்போட்டா கண்ணுல பட்டுடும்னு நீர்மூழ்கிக்கப்பலா வாங்கிப்போட்டாரோ!



இந்தத் தேர்தலைப் பற்றிய உங்க கருத்துக்கணிப்பு என்ன?

இந்தத் தேர்தல்னு இல்ல. எல்லாத் தேர்தல்களைப் பற்றி யும் என் கருத்துக்கணிப்பு இதுதான்: எந்தத் தேர்தல்லே யும் 100% வாக்களிப்பு இருக்காது. எல்லாத் தேர்தல்லே யும் புதிதாக ஒன்றிரண்டு கட்சிகள் வரும். எந்தத் தேர்தல்லேயும் ப்ரைம் சேனல்களெல்லாம் கருத்துக் கணிப்புங்கற பேர்ல காட்டுக் கத்தலா கத்தி விவாதிப்பாங்க. எந்தத் தேர்தல்லேயும் யாரும் வாக்காளர்களை விமானத்திலே கூட்டிக்கிட்டுப்போய் வாக்குச்சாவடில இறக்கிவிட மாட்டாங்க. எந்தத் தேர்தல்லேயும் வாக்க ளிக்க வரிசையில நிக்கறப்போ சில பேர் பிஸ்தாக்கள் மாதிரி எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. எந்தத் தேர்தல்லேயும் சின்னப்புள்ளைங்க வோட்டு போட மாட் டாங்க. எந்தத் தேர்தல்லேயும் .....

????????????????????????????????????????????????????????????????????



கணிப்பு(க்)கருத்து
.....................................................

இதென்ன – கருத்துக்கணிப்புக்கு கணிப்புக்கருத்துன்னு தப்பா எழுதியிருக்கே?

தப்பால்லாம் எழுதலை – இங்கே பலபேரோட கருத்தே ஒருவித கணிப்புல தானே வெளிப்படுது!

?????????????????????????????????????????

Governor Rajendra Arlekar Super Exclusive With Arnab On The Tamil Nadu Political Stalemate

 Governor Rajendra Arlekar Super Exclusive With Arnab On The Tamil Nadu Political Stalemate

https://www.youtube.com/watch?v=maovnJlpD4g



இலக்கிய நிகழ்வும் INCLUSIVITYயும்

 இலக்கிய நிகழ்வும் INCLUSIVITYயும்


சமீபத்தில் தில்லியில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வொன்றில் ‘ மாற்றுத் திறனாளிப் படைப்பாளிகளுக்கென தனி அமர்வு இருந்ததாகத் தெரியவந்தது.

ஆனால், அந்த அமர்விலும் கலந்துகொண்ட படைப்பாளி கள் அவர்களுடைய படைப்புகளை வாசித்துக்காட்டத் தான் செய்தார்களாம். மாற்றுத்திறனாளிகள் படைப் பாளிகளாக இயங்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்பதாக எந்தக் கலந்துரையாடலோ, கட்டுரை வாசிப்போ இல்லையாம்.
அப்படியிருக்க, படைப்பியக்க வெளியில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமர்வு எதற்கு?
ஒருவேளை, அவர்கள் எண்ணிக்கையில் அதிக அளவு கலந்துகொள்ள வழிவகுக்கும் நோக்கில் இப்படி செய்தி ருக்கலாம்.
ஆனால், இது தேவையற்றது.
INCLUSIVITY யே[அனைவரையும் உள்ளடக்குதல்; மைய நீரோட்டத்தில் ஒன்றிணைத்தலே] ஆரோக்கியமான அணுகுமுறை.

எமோஜிக்களின் உரையாடல் - போலிப்பெண்ணியவாதிகளைப் பற்றி

 எமோஜிக்களின் உரையாடல் - போலிப்பெண்ணியவாதிகளைப் பற்றி

(1)


பேட்டியாளர்(பெண்): "வணக்கம் மேடம். பெண்ணுரிமை வாதியான உங்ககிட்ட ஒரேயொரு கேள்வி கேட்க வந்தி ருக்கேன். ஒரு நடிகையை அவங்க சாதியைச் சொல்லி **.....யா என்று பேசுவது சரியா? "

பெண்ணுரிமைவாதி(பெண்): "அப்படித்தாண்டி பேசுவேன் - உனக்கென்ன ? நீயும் பார்ப்ஸ்க்கு பொறந்த **.....யாவா ?"
பேட்டியாளர்(பெண்): "போதும் மேடம் - நீங்க எவ்ளோ பெரிய பெண்ணுரிமைவாதின்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்." ......
..
(*பி.கு: நிஜமான பெண்ணுரிமை வாதிகள் நிறையவே இருக்கி றார்கள். ஆனால், பெண்ணுரிமை வாதி என்று சொல்லிக் கொள் ளும் ஒருவர் நடிகை த்ரிஷாவை அவருடைய சாதியைச் சொல்லி '**.....யா' என்று குறிப்பிட்டுப் பேசியிருப்பதை யதேச்சையாகக் காணநேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களை இழிவுபடுத் தும் நோக் கில் இப்படி நடிகைகளாகப் பணியாற் றும் பெண்கள், வாழ்க்கைச் சூழலி னால் விலைமகளிராக இருப்பவர்கள் என்று சகபெண்களை இழிவுபடுத்தி யிருக்கிறார் இந்தப் பெண்மணி.)



(2)
போலி பெண்ணியவாதி (பெண்) 1 :
............................................................
நீங்க அந்த நடிகையை **.............யா என்று வசைபாடியது வரவேற்கப்பட வேண்டியதே. அந்த சமூகப்பிரிவைச் சேர்ந்த பொம்புளைங்களை இப்படி எவ்வளவுக்கெவ் வளவு இழிவுபடுத்த றோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம அறிவுசாலிகள்.. அதுவும், எந்தப் பிரிவினரைச் சொன்னா யாரும் எதுத்துக் கேள்வி கேட்க மாட்டாங் கன்னு நமக்குத்தான் நல்லாத் தெரியுமே.... ஆனா, அதுல எனக்கு ஒரேயொரு வருத்தம்...

போலி பெண்ணியவாதி(பெண்) – 2:
............................................................................
என்னது அது? சொல்லு.

போலி பெண்ணியவாதி (பெண்) – 1
................................................................................
இல்லை, வழக்கமா இங்கிலீஷ் வசைச் சொற்களைத் தான் பயன்படுத்துவீங்க. பிரமாதமாயிருக்கும். ஆனா, இப்ப தமிழ்வார்த்தையை பயன்படுத்திட்டீங்களே

போலி பெண்ணியவாதி(பெண்): 2
.......................................................................
சில வசைச்சொற்களை ஆங்கிலத்தை விட தமிழ்ல சொன்னா அத்தனைக்கத்தனை நம்ம ‘வெறுப்புப் பேச்சு’ பரவலாகும். நாமளும் புரட்சிக்காரப்பெண் ணுன்னு அடையாளங் காணப்படுவோம். அந்த குறிப் பிட்ட சமூகத்தினரையும் அதிலேயே சுலபமா இழிவு படுத்திட முடியும். அதனால தான் தமிழ்வார்த்தையைப் பயன்படுத்தி இழிவுபடுத்தினேன் – புரியுதா?

போலி பெண்ணியவாதி (பெண்):
............................................................................
ஹப்பா! என்னவொரு அறிவார்ந்த பெண்ணியவாதி நீங்க! வேற லெவல் மேடம்!
.........................................................................................................................

*பி.கு: இந்த உரையாடல் உண்மையான பெண்ணிய வாதிகளை மதிப்ப ழிக்க அல்ல.

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து

அவர் இதுவரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிருக்காரா, சொல்லுங்க

’இல்லை. அதனாலே என்ன?’
’அதனாலே என்னவா? மக்களாட்சியிலே மக்களால தேர்ந்தெடுக்கப்படாமல் வரலாமா?’
’அப்படின்னா, தேர்தல்ல ஜெயிச்சு வரவங்க எல்லாம் நல்லவங்களா? மக்களுக்கு நல்லது பண்றவங்களா?”





..................................................................................
வீதியில இறங்கிப் போராடணுங்க. ரத்தம் சிந்தாம எதுவும் நடக்காது.

நீங்களும் கலந்துப்பீங்கதானே?

இல்லீங்க, நான் இப்ப அமெரிக்காவுல இருக்கேன். நாளை மறுநா தான் இந்தியா வருவேன்.

அதுனால என்னங்க? போராட்டத்தை ரெண்டு நாள் தள்ளி வச்சுக்கலாம்.

இல்லீங்க – வந்ததும் நான் அடுத்தநாளே ஆஸ்திரேலியா வுக்குப் போயிடுவேன்.





“அய்யோ, என்னங்க இது இங்கே நிறைய அனுபவ சாலிங்க விஜயின் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடணும்னு எழுதிக் கிட்டிருக்காங்க?

அவங்களுக்கென்ன – பாதுகாப்பான இடத்தில இருந்துக் கிட்டு புரட்சிக் கருத்துகளை சொல்லிக்கிட்டேயிருப் பாங்க.... தவெக வைச் சேர்ந்த இளையதலைமுறையினரை உசுப்பேத்திவிட்டு போராடவச்சாத்தானே அவங்களுக்கு அடிபடவைக்க முடியும். அந்தப் பழியையும் விஜய் மேல சுலபமா தூக்கிப்போட்டுடலாம். .....

“அய்யய்யோ...





யாரையும் கலந்தாலோசிக்காம, அறிவுரை கேக்காம இப்பிடி மனம் போன போக்கில நடந்துக்கறது நல்லாவா இருக்கு? நான் சொல்றது புரியுதா?
நல்லாவே புரியுது. ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலை சந்திக்கக்கூடிய அளவு வந்திருப்பவர் யாரையும் கலந்தாலோசிக்காமலா, அறிவுரை கேட்காமலா செயல்பட்டிருப்பாரு? உங்களுடைய ஆதங்கமெல்லாம் ஃபேஸ்புக்கைத் தாண்டி பெரிஸ்ஸா யாருக்குமே தெரியாத உங்களை அவரு எப்படியாச்சும் தேடிவந்து இல்லைன்னா தொடர்புகொண்டு உங்க மேலான ‘அரைவேக்காடு’ ஆலோசனைகளைக் கேக்கலைங்கறது தானே?!
?????????????????????????????????????????????????????????????????????


பிரபல நடிகர்: ரொம்ப வருத்தமாயிருக்கு. ரொம்பவே வருத்தமாயிருக்கு. ஆனா, நீங்க வருத்தப்படாதீங்க. உங்க கஷ்டத்தில நான் உங்ககூடவே இருப்பேன்.
பதவியிழந்த அரசியல் தலைவர்: (மனதுக்குள்) எதுக்கு? என் அழுகையை துடைச்சுவிடறதுக்கா? எனக்கு வோட்டு போடச்சொல்லி ஒரு வார்த்தை வெளிப்ப டையா பொதுவெளியில சொன்னீங்களா?
பிரபல நடிகர் (மனதுக்குள்) மோடிக்கே நான் அப்பிடிக் கேட்கலையே. கேட்டிருந்தா நீங்களும் உங்க தொண்டர் களும் என்னை எப்பிடியெல்லாம் கழுவி ஊத்தியிருப் பீங்க! மோடி இன்னும் தோக்கலை . அதுனால நான் இன்னும் அவர்கிட்ட போய் இந்த வசனத்தைப் பேச வேண்டிய நேரம் வரலை.






அநியாயம், அக்கிரமம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்தான் ஏதோ கோளாறு. அதுதான் நான் தோற்றதற்குக் காரணம் - நான் பதவி விலகவே மாட்டேன்.

அப்பிடின்னா, நீங்க ஜெயிச்சிருக்கிற தொகுதிகள்ள?

அங்கெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விதிவிலக்கா நல்லாத்தான் வேலை செஞ்சுது!
????????????????????????????????????????????????????




[*வாக்களிக்கச் செல்லும் வழியில் கேட்டது]

’எல்லோரும் ’நோட்டா’வுக்கே போட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்

'ஆமாம். ஆனால், செய்யமாட்டாங்களே'

[அதாவது, பேசிக்கொண்டுபோன அந்த இரண்டு பேரும் அத்தனை அறிவாளிகளாம். இந்த தேர்தலுக்காக உழைத்த அத்தனை பேரும் - வேகாத வெய்யிலில் பிரச்சாரம் செய்த அரசியல்வாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - அறிவீலிகளாம்]



‘ நம் வாக்கு நம் உரிமை ’


‘ஆமாங்க – இதே தான் எல்லா சேனல்லேயும் வருது.

'அதை நாம் வீணடிக்கக் கூடாது'.

அப்படியெல்லாம் வீணடிக்க மாட்டோமுங்க – பணம் கிடைச்சாலும், கிடைக்காட்டியும் கட்டாயம் போடு வோம்ங்க. நீங்க?

நாங்க நீலாங்கரையில வீடு கட்டி குடியேறி நாலு வருஷம் ஆகுது. இன்னும் வாக்காளர் அட்டை விலா சத்தை மாத்த நேரம் கிடைக்கலை.

அடடா – அப்ப எப்பிடி வோட்டு போடுவீங்க?

நம்ம ஒருத்தர் வோட்டில என்ன இருக்கு? WHATEVER WILL BE, WILL BE’

எதுக்குங்க திடீர்னு இங்கிலீஷுக்கு மாறிட்டீங்க?

இங்கீலீஷ்ல ஏதாவது சொன்னா நான் அறிவாளின்னு நம்பிடுவீங்க, நான் வாக்களிக்காமலிருப்பது என்னு டைய அலட்சியம் இல்லை, அறச்சீற்றம்னு நினைச்சுக்கு வீங்கன்னுதான்….

?????????????????????????????????????????????????????????




அய்யோ – இது என்ன ?….

எது என்ன?

நேத்துவரைக்கும் ஆளுங்கட்சியைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த இந்த நாளிதழ் இன்னிக்கு ஆளுங்கட்சி யின் சாதனைகளை விளக்கி முழுப்பக்கம் எழுதியிருக் குதே

அது அரசு விளம்பரம்ங்க

PAID NEWS போலவா

அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அப்படிச் சொல்லாமலிருக்கவும் முடியாது...



ஐயா, அம்மா – உங்கள் பொன்னான வாக்கை எனக்கே அளிக்க வேண்டுகிறேன்.

’ஆனா, யார் தன்னுடைய மொத்த சொத்தில பாதியை சமூக மேம்பாட்டுக்காக முதலிலேயே கொடுத்துவிடு கிறாரோ அவருக்குத்தான் என் ஓட்டு.

அய்யய்யோ, இது என்ன வம்பா போச்சு.....





‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

‘மொதல்ல, இது மக்களாட்சி’.

‘மக்களாட்சியிலும் மன்னர்கள் உண்டு; இளவரசர்கள் உண்டு.

‘அடிமைகளும் உண்டுதான். இதில் ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நல்ல நகைச்சுவை; பொழுதுபோக்கு'