நிலைத்தகவல்
கட்டுச்சோறாக முடிந்துகொண்டு
தீராப்பயண வேட்கையில் கிளம்பியவாறே.
இலக்கு இங்கிருந்து வெளியே.
அடியில் சுழித்தோடும் நீர்ப்பிரவாகம்.
கரணம் தப்பினால் மரணமோ மார்க்கண்டேயமோ…
கூடுவிட்டுக்கூடு பாயக் கிடைப்பதொரு கொடுப்பினை.
நல்வினைப்பயனாய் செல்வழியெங்கும்
புதிதுபுதிதாய்ப் பிறந்தவண்ணம்!
காலடியில் தட்டுப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன
கல் முள் கனவு காலம் மேலும்….
ஆலமர நிழலுண்டு;
அக்கக்கோ குருவியுண்டு;
ஆலகாலவிஷமுண்டு;
ஆச்சர்யப் புத்துயிர்ப்புண்டு….
அற்புதம் நிகழ்த்தும் மாயக்கோல் சொற்கள்
நடுகற்களாய் அங்கிங்கெனாதபடி ….
அவ்வப்போது காற்று வந்து களைப்பாற்ற
சூர்ய சந்திர உதயங்களைக் காணக் கிடைத்த
கண்கோடியில்,
அக்கரைப் பச்சை இக்கரையில் துளிர்க்க _
ஏகியபடி இதயத்தால்
இருமொழிப்பாலம் மேல்….All reactions:
No comments:
Post a Comment