LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

எளிய உண்மைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய உண்மைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அட்சரலட்சம் பெறும் எழுத்துகளை
அரையணா எழுத்தென்பான்
கோடீசுவரனாயிருந்தாலும்
கேடுகெட்ட முட்டாளே!
ஊரிலுள்ள நூலகங்களை
ஏலத்தில் எடுப்பதால்
உலக இலக்கியங்களைப்
படி(டை)த்ததாகிவிடுமா என்ன!
கால அவதியாகிவிட்ட
மிட்டா மிராசுதாரெல்லாம் ஒன்றைக்
காலாவதியாகிவிட்ட படைப்பென்றால்
அது கட்டாயம் மேலானதே!

No comments:

Post a Comment