LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

கல்லூரி காலத்தில் எழுதிய கவிதைகள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 கல்லூரி காலத்தில் எழுதிய கவிதைகள் 

லதா ராமகிருஷ்ணன்

//2019 , MARCH 20 - மீள்பதிவு//

பள்ளி கல்லூரி நாட்களில் பிரபலமான இந்தித் திரைப்படப் பாடல்களின் மெட்டில் தமிழில் பாட்டெழுதிப் பாடுவது வழக்கம். . (அப்போதெல்லாம் நான் எனது என்று எண்ணுவதே பாவ காரியம் என்ற நினைப்பு வேறு மனதில் நெருடிக்கொண்டே யிருக்கும்!) அப்படி எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. ‘தேரா மேரா மேரா தேரா என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது. எங்கும் எழுதிவைக்கவில்லை. ஆனால், இப்போதும் மனப்பாடமாய் சொல்லமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது – லதா ராமகிருஷ்ணன்.

1. என்னில் உன்னை உன்னில் என்னை......

என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்தால்
என்றும் நன்மையாகும் –
மனப்புண்கள் ஆறிப்போகும்.
நீயும் நானும் பூவும் நாரும்
காயும் வேரும் என்றிணைந்தால்
நம் பலம் அதிகமாகும் -
நாம் எண்ணினால் நடந்தேகும்...

(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)

ஆதியந்தம் நாமறியோமே
வேதனைகள் நிறைய வருமாமே
பாதையிலும் காலில் முள் இடறும்
காதலிலும் தோல்வி பின் தொடரும்
அதனா லென்ன நெஞ்சமே –
பகலிரவே பிரபஞ்சமே

(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)

ஏன் எதற்கு என்று கேட்போமே
நாண(ந)யமும் துணிவும் காப்போமே
ஆனவரை நன்மை செய்வோமே
ஆணவம் முன் அடிபணிந்திடோமே
கானம் பாடு நெஞ்சமே
மானுடமே ஆனந்தமே...!

என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்……


2.ஏங்கித் தூங்கி யெந்நாளும்
ஏங்கித் தூங்கி யெந்நாளும் வாழ்ந்திருக்
கின்றோம் - வாழ்விதா?
எத்தனை நாள்தான் இவ்வாறே வாழப்போகின்
றோம் - தோழர்காள்?
விழித்தெழுவோம் வழியமைப்போம்
விதைவிதைத்தே கதிரறுப்போம்!
போகும் பாதை யெங்கிலும்
சோதனைகள் பொங்கிடும்…..
வேதனைகள் சேர்ந்திடும்….
சோர்ந்துபோக நேர்ந்திடும்….
அட, இரவின் பின் பகல் உண்டென்றே
அறிந்திடுவோமே நாமே –
மனமே விளக்காம்-
முன்னேறுவோம்.. (ஏங்கித் தூங்கி)
தேசமெங்கும் தரித்திரம்
வேஷந் தாங்கும் நரித்தனம்
ஜோசியத்தில் திருமணம்
காசுதானே உறவினம்
அட, யோசித்தால் விசுவாசித்தால்
இம்மாசுகள் விலகாதா
வாசம் இங்கேயும் வீசாதா (ஏங்கித் தூங்கி)

No comments:

Post a Comment