LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, July 23, 2025

FAIR AND LOVELYயும் GLOW AND LOVELYயும் வெகுஜன ஊடகங்களும் வேறு சிலவும்…

FAIR AND LOVELYயும்
GLOW AND LOVELYயும்

வெகுஜன ஊடகங்களும்

வேறு சிலவும்…

 லதா ராமகிருஷ்ணன்

(*திண்ணை இணைய இதழ் - இவ்வாரம்)


http://puthu.thinnai.com/2025/07/21/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/

சொல்ல வேண்டிய சில
By latharamakrishnan
July 21, 2025

"அரை நிர்வாண பெண்களின் படங்களை வெளியிட்டு விற்ப னையை அதிகரிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகளின் அசிங்கங்களை, அபத்தங்களை விமர்சிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகள் என்றால் அவர்களை எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாமா? சொரணை உள்ள அரசியல்வாதிகள் இந்த அணுகுமுறையை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை யாவது மக்கள் நீதிமன்றத்தில் கூண்டிலேறி நிற்கவேண்டியிருக் கிறது. ஆனால், ஒரு பக்கத்தில் பெண் சார் பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பரபரப்பாக கண், காது மூக்கு வைத்து வெளியிட்டுக் கொண்டே இன்னொரு புறம் பெண்ணை போகப் பொருளாகக் காண்பிக்கும் போக்கை ஊடக அறமாகக் கொண்டுள்ள பல பெரிய பத்திரிகைகளுக்கு யாருக்கும் பதிலளிக்கவேண்டிய பொறுப்பேற்பு இல்லை போலும்......"

மௌனவோலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனவோலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





..............................................................................................
//*2000த்தில் வெளியான அலைமுகம் என்று தலைப்பிடப் பட்ட என் முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது//
.................................................................................

வழியெங்கும் சிதறியிருக்கின்றன வாளறுத்த யோனிகள்.
அப்பொழுதே அறுபட்டுக் குருதி பெருக்கி யிருப்பவை.
அனாதி காலந் தொட்டு ஆறாக் காய முற்றவை.
விழிநீரும் உதிரமுமாய் நிலைகுலைக்கும் பாதைகளில்
அடிக்கொன்றாய் மிதிபடும் முறிக்கப்பட்ட முலைகள்.
தெறித்துதிரும் கண்மணிகள் அலைகடலாழம் மூழ்க
துடிக்கத் துடிக்கப் பிடுங்கி யெறியப்பட்ட பூந்தொடைகள்
ஐந்து வயதிற்கும் அறுபதெழுபதுக்கும் இடைப்பட்டவை.
நைந்தழியும் கனவுகளை யெல்லாம் கழுகுகள்
கொத்திக் கொழிக்கும்.
கழுத்தில் முடிச்சிட்டு மூச்சிறுக்கி
மேளதாளத்துடன் கிழிபடுவன
வலிபொறுத்து விருப்பறுத்து வம்சவிருத்திக் கடன்
கழிக்கும்.
வறுமை யொரு வாளாய் விபச்சாரக் குழி வழிய
தழும்பணிந்த யோனிகள்.
யோனி பிளத்தல் இங்கே வீர விளையாட்டாக
காட்டு மேட்டிலும் கோட்டைக் கொத்தளங்களிலும்
மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும்
காலை மாலை யெவ்வேளையும்
நாளை நிலாவிலும் நடக்கும்
மூர்க்கத் தாக்குதல்கள் - மீட்பறு வியூகங்கள்.
நாய்க் குதறலில் வேய்ங்குழல்கள் நொறுங்கிப் போக
ஆய கீதமெலாம் ஓயாக் கதற லொன்றே யாக
உள்ளொளி யடங்கிப் போக,
ஊர் வாய் அமிலமாக
கொள் ளெண்ணம் செயல் எல்லாம் பெண்ணை
அந்நியமாக்கும் தன்னிடமிருந்தும்.
காணி நிலம் வேண்டவில்லை. அவள்
யோனியும் அவளுக்கில்லை.
அங்கிங் கெனாதபடி ஆணியறைந் தறைந்து
இந்திரக் கண்களாய் அவள் மேனி நிறையும்
யோனித் துளைகள் - ஈ ஊற, எறும்பூற.
திரைதோறும் தீராப் பகடை யுருளும்.
பிரபுதேவா அடவுகளில் பனிக்குடம் தடம் புரள
கருவறுக்கும் தில்லானா தில்லானாக்கள்.
மாக்களாய் பெண்டாளும் சண்டாளர்க்கு
எந்நாளும் புரியாது யோனிப் பரிபாஷைகள்.
வானவில்லாய்ப் பெறும் இன்னுறவை அருகழைத்து
உள்வாங்கிக் குழைந்துருகும் யோனிகளுமுண்டிங்கு.
முள்மலராகு மந்த மூன்றாம்பிறைப் பொழுதும்
முதுகழுந்தும் சிலுவைகள்...
எங்கும்
தாக்க வாளும் துலாக் கோலுமாய்
பூக்கப் பூக்கப் பூ பொசுங்கும் நாற்றம்
தேக்கித் தேக்கி உயிர்ச்சூழல் பட்டுப் போக _
பண்டு தொட்டு கண்டதுண்டமாகி விட்ட
யோனி மனம் ஊமை ரணம்;
யோனி நலம் உலக பலம்.

Tamil Sangam Women Poets In Translation Translated by Dr.K.S.Subramanian

 Tamil Sangam Women Poets

In Translation
Translated by
Dr.K.S.Subramanian
Published by NCBH

தற்காலத் தமிழ்க் கவிதைகள் - சங்ககாலம் தொட்டு இன்றுவரை, பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தனின் படைப்புகள், கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் என பல தமிழாக்கங்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 42 சங்கப் பெண்கவிகளின் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக் கிறார். சங்க இலக்கியங்களை முழுமையான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனம் இந்த நூலைப் பிரசுரித்துள்ளது. தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலம் வழியாக உலகெங்கிலும் பரவச் செய்யும் இத்தகைய பணிகள் போற்றத்தக்கவை; பேசப்படவேண்டியவை.

BACK WRAPPER BLURB
About 2000 years old, this must be one of the most ancient corpuses of Women Poetry in world literature, giving it an intrinsic importance.
A unique feature of Sangam Poetry is its organic linkage to Nature . The situations, similes, metaphors and leitmotifs are all intertwined with Nature, and are marked by sheer lyrical finesse and poetic allure.
Female sexuality, the passionate bond between the girl and her lover, the agony of separation, outpouring of suppressed ardour and a celebration of the female body have a strong presence in these poems. This has potential value in sociological and cultural-anthropological studies of ancient societies from a feminist perspective.
Dr.K.S.Subramanian

Monday, July 21, 2025

SIGNING OFF..... (Soliloquy – 2) 'rishi’ (Latha Ramakrishnan)

 SIGNING OFF.....

(Soliloquy – 2)
'rishi’
(Latha Ramakrishnan)
TRANSCIENCE
Yester night
some words as stray fireflies and butterflies
were hovering over me, oozing glow so rare
proving life more than a mere vanity fair
hoping that they would be seamlessly woven
into a poem.
But, half-afraid of the alien cabin
half of me already asleep, the rest drooping
I waved them away with a heavy heart.
Today I am wide awake,
waiting for those fireflies and butterflies
to bless me with their wings and shine
the boon of a poem sublime….
Much as I try, they refuse to oblige.
I remain a vauum to be filled by the
‘never to return’ Moment.

நிலையாமை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நேற்றிரவு
சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள், சில வண்ணத்திப்புச்சிகள்
என் தலைக்கு மேலாய் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;
வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல என்று நிரூபித்தபடி;
அத்தனை நேர்த்தியாய் அவையோர் கவிதையில் ஊடுபாவாய்
நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.
எனில், புதிய அறை தரும் பயமும், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்
மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும் கோலமுமாய்
கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.
இன்று நான் முழு விழிப்பில் காத்துக்கொண்டிருக்கிறேன்
அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.
தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர்
கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.
ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை ஏற்க மறுக்கின்றன.
வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத தருணம் இட்டுநிரப்ப








Like
Comment
Share

கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்
மூணு குடம் முப்பது குடம் மூவாயிரம் குடம்…”
என்று பாடிக்கொண்டே வந்தவர்
குடமும் நானே தண்ணீரும் நானே பூவும் நானே
பைந்தமிழ்க்கவியும் நானே யென
ஆலாபிக்கத் தொடங்கியபோது
கலங்கிநின்றவர்களை
“குவளையும் குளிர்ச்சியும், திவலையும், தளும்பலும்
தென்றலும் மழையுமிருக்க
கவலையெதற்கு என்று
கைபிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்கிறது
காலாதிகாலம் வற்றாக் கவித்துவ நீரூற்று.
’காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா
குருவீ குருவீ கொண்டைக்கு பூ கொண்டுவா”
எனக் குழந்தை பாட்டுப் படிக்க,
’கவிதை கொண்டு வா’யென
வளர்ந்தவர்கள் கேட்பதில் தவறில்லைதான்.
அதற்காக
காக்காய் பிடித்து
கவிதைச் சிம்மாசனத்தில்
கொடுங்கோலோச்சப் பார்த்தால்
சும்மாயிருக்கலாமோ சொல்
வல்லமை கொள் கிளியே.
”தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி
உன்னைத்தானே நாய்க்குட்டீ, ஓடிவாவா நாய்க்குட்டீ”
யெனத்
தேடித்தேடிக் குழந்தைப்பாடல்களைச் சொல்லிச்
சக கவிகளையெல்லாம் செல்லம் கொண்டாடுவது
தன்னை பழுத்து முதிர்ந்த கவியாகவும்
பிறர் வரிகளைக் குழந்தைப் பிதற்றல்களாகவும்
நிறுவத்தான்
என்று புரிய நீண்டகாலமாயிற்று.
”தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும் அரைச்சு சுட்ட தோசை”
யெனக்
கரைந்து கரைந்து தன் கவிதையை
கனியமுதென்றுரைக்கப்
பிரயத்தனப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு:
கேழ்வரகுக்கூழ் முதல்
பர்கர் பீட்ஸா வரை
வாய்க்கு ருசியாய்
இங்கே வகைவகையாய்
இருப்பது நன்றாகவே தெரியும் எமக்கு.
”நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,
மலைமேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டுவா ......
ஆ! தெரியுமா!
ஓயாமல் ஓடியோடி மலைமேல் தாவியேறி மல்லிகைப்பூ கொண்டுவரும் அந்த நிலா என் கவிதை:” யெனப்
பதவுரை சொல்ல ஆரம்பித்த பெருந்தனக்காரக் கவியை
இடைமறித்து
‘என் நிலா பறந்துவரும், மலையாகவே மாறிவிடும்
குறிஞ்சிப்பூவனைய அரிய பூக்களையே அதிகம் கொய்துவரும்
என்று கூறி
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தது குழந்தை.

மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கவிமனது
அல்லது கவிதைக்குள்ளிருக்கும்
‘சொல்லி’யின் மனது
எனக்காக முழுமையாகத் திறந்துவைத்திருக்கும்
அந்த இருண்ட பாதையில் பயணம்போகத்
தக்கதொரு தருணம் வாய்க்கவேண்டும்...
வரிவரியாய் வழியேகப் பழகலாம் இருளும்.
அருகேகும் மின்மினியின் சிறு வெளிச்சம்
அடுத்த கணமும் இருக்கும் என்று
எந்த நிச்சயமும் இல்லை.
தமக்காகப் பயிரிட்ட விளைபொருள்கள்
மூலிகைத் தாவரங்கள்
நிலத்தடி நீர்,
ஒளித்துவைத்திருக்கும் புதையல்,
கண்ணிவெடி,
கையகப்பட்ட மின்னற்கீற்றுகளால்
வேய்ந்த நிழற்பந்தல்
உள்ளாழமனதில் தைக்கும் முள்
கண்ணுக்குத் தெரியா நீரூற்று
சின்னக் குப்பிக்குள் இருக்கும் குட்டி பூதம்
ஆதாமும் ஏவாளும் உண்ட
ஆப்பிளின் மிச்சம்
உச்சம்தொடும் பிச்சிமனம்
கச்சிதமாய் விழுந்த ஒற்றைச்சொல்
எங்கிருக்கிறதென்று தெரியாத
நிலவறைகளின் திறவுகோல்கள்
புறாக்கள் சிட்டுக்குருவிகளுக்கான
தானியங்கள்
நிறைவான அரைவட்டங்கள்
ஆரக்கால்கள்
வால்கள்
கள்
உள்ளெங்கும் பொங்கும் உன்மத்தம்
ஷணப்பித்தம் .....
ஒன்றுவிடாமல் என்னைக் காணச்செய்யும்
கனிவுக்கு
இன்றளவும் கைம்மாறு செய்யலாகாதிருக்குமென்னை
தன்னுள்ளிழுத்துக்கொண்டு
தானேயாக்கியொரு
ஆளுயர நிலைக்கண்ணாடியில் முகம்பார்க்கச்செய்யும்
அன்புக் கவிதைகளுக்கு
என்றுமான என் ஒற்றைவரி நன்றி:
”நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா”