LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 30, 2021

ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்

 ஹமாம் விளம்பரமும் 

அப்பாவி சிறுமிகளும்

 ()

மனம் வெளுக்க வழியில்லையோ 

எங்கள் முத்துமாரீ

லதா ராமகிருஷ்ணன்

(திண்ணை இணைய இதழில் வெளியானது)

விளம்பரங்களில் 99.9 விழுக்காடு பெண்களைக் காட்சிப்பொருளாகத் தான் கையாள்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சில அதைக் கொச்சை யாக, அப்பட்டமாகச் செய்கின்றன. சில நாசூக்காகச் செய்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம்.

சில மாதங்கள் முன்புவரையும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் ஒரு சிறுமி தனது ஆடையற்ற தோள்களில் ஹமாமை வைத்து உருட்டிக் கொண்டேயிருப்பாள். (குளிக்கிறாளாம்). அருகில் நின்றுகொண்டு அவளுடைய அம்மாக்காரிஓடு, துரத்து, பயந்து ஒளியாதேஎன்று வெற்று வீரமுழக்கமிட்டுக் கொண்டிருப்பாள்.

இப்போது வேறொரு விளம்பரப்படம் வருகிறது. முன்பிருந்த அதே அம்மாக்காரி. முந்தைய விளம் பரத்திலிருந்ததைவிட வயதில் இன்னும் இளைய வளான சிறுமி. கொரானோ சமயத்தில் அவர்கள் வீட்டுக்கு வரும் வர்த்தகப் பிரதிநிதியொருவ ருக்கு அந்தச் சிறுமி அன்போடு ஹமாம் கொடுப்ப தாக வசனங்கள்.

கோவிட் பற்றிய உரையாடல் என்பதால் சிறுமி, அந்த அம்மாக்காரி, அந்த வர்த்தகப் பிரதிநிதி மூவருமே ’ஹமாம் சோப்பால் நன்றாகக் கைவிரல்களையும் உள்ளங்கைகளையும் கழுவு வதாகக் காட்டியிருக்கலாம். ஆனால், இதிலும் சிறுமி தன் வெற்றுத்தோள்களில் ஹமாமை உருட்டுவதாகவே காட்டப்படுகிறது.

 குழந்தைத் தொழிலாளி என்பதில் விளம்பரத்தில் நடிக்கும் குழந்தைக ளையும் சேர்க்கவேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதற்குப் பிறகு அது என்னவாயிற்று தெரியவில்லை.

 விளம்பரத்தில் நடிக்கும் குழந்தைகளின் அப்பா அம்மாக்களுக்கு ஒப்புதல் இருப்பதால். அல்லது, குழந்தைக்கே ஒப்புதல் இருந்தாலும்கூட, அதற் காக வேறு யாரும் இதைப் பற்றிப் பேசலாகாது என்பது சரியேயல்ல. அதேபோல்தான், வீட்டில் அம்மா மட்டும் இருக்க சிறுமி குளிப்பதாகத்தானே காட்டப்படுகிறது என்ற வாதமும்.

காதலன்தானே காதலியை அவளுக்குத் தெரியா மல் அசிங்கப்படம் எடுத்தான் என்று அவனை சட்டம் விட்டுவிடுமா? சிறுமிகளையும் காட்சிப் பொருளாக்கத் தான் செய்வோம் என்று எத்தனை திமிராக இத்தகைய விளம்பரங்கள் செயல்படு கின்றன? ஒருவகையில், காட்சிஊடகங்களில் இடம்பெறும் பெண் சார் இத்தகைய சித்தரிப்புகளே பெண்மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு முக்கியக் காரணமாகின்றன என்பதும் உண்மை.

காட்சி ஊடகங்களின் எதிர்மறைத் தாக்கம் சமூகத் தில் நிறையவே.

 பெண் தனது உடலைக் காட்சிப்படுத்த அவளுக்கு முழு உரிமையிருக்கிறது என்பதான வாதங்களின் மூலம் யாரும் சமூகப்பொறுப்பைத் துறப்பது சரியல்ல.

வெளிப்படையாக பெண்ணைக் காட்சிப்பொரு ளாக்குபவர்களைவிட ஹமாம் போன்ற போலி சமூகப் பிரக்ஞையாளர்களே அதிக அபாயகரமான வர்கள். இத்தகையோரை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம். 

 


 

No comments:

Post a Comment