LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, December 7, 2025

நாவின் சூடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாவின் சூடு



‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தருணமிதில்
மிகச் சரியாகக் குறிபார்த்து
சுருள்வில்லாய்ச் சுண்டியிழுக்கும்
விசையில்
மொழியப்படும்
அன்றி
மௌனமாயிருக்கும்
ஒரு சொல்லின் வலியேகும் திசையில்
உருப்பெறும்
நிலமிசை நரகம்.

No comments:

Post a Comment