துக்ளக் வார இதழ்
துக்ளக் இதழ் மத்தியதர வர்க்கத்தினருக்கானது, மேற்குடியினருக் கானது, வலதுசாரியினருக்கானது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. துக்ளக் இதழில் முன்வைக்கப்படும் சில கருத்துகளோடு நமக்கு உடன்பாடில்லாமல் போகலாம். ஆனால், அதில் அடித்தட்டு மக்கள் நலனுக்கான, ஒட்டுமொத்த சமூக நலனுக்கான பல விஷயங்கள் தகுந்த ஆதாரங்கள், தரவுகளோடு பேசப்படு கின்றன.
எடுத்துக்காட் டாக, 15. 7. 2026 தேதியிட்ட துக்ளக் இதழில் 'மாற்றம் வேண்டும் பள்ளி கல்வியில் என்ற தலைப்பில் திரு எஸ்.புஷ்ப வனம் எழுதியுள்ள கட்டுரை பள்ளிக்கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகளை மிகத் துல்லியமாக, அகல்விரி வாக எடுத்துரைக்கிறது. 22.7.2026 தேதியிட்ட துக்ளக் இதழில்(இன்று வெளியானது)) 'ரேஷன் கடை ஊழல் பின்னணி என்ன?' என்ற தலைப்பில்? திரு ஸ்ரீவில்லிப் புத்தூர் எஸ்.ரமேஷ் எழுதியுள்ள கட்டுரை ரேஷன் கடை ஊழியர்கள் தினசரி எதிர்கொள்ளவேண்டி யிருக்கும் இடர்ப்பாடுகளை அகல்விரிவாக எடுத்துரைக்கிறது. இந்தக் கட்டுரைகள் துண்டுப் பிரசுரங்களாக விநியோ கிக்கத் தக்க அளவு சிறப்பானவை. அந்தக் கட்டுரைக ளின் முதல் பக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. (முழுக் கட்டுரைகளையும் வெளியிடலாமா தெரியவில்லை


No comments:
Post a Comment