LIFE GOES ON.....
Thursday, August 20, 2026
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
பாரதியார்
விசுவாசம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
விசுவாசம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
விசுவாசம் உண்மையில் நல்ல விஷயம்தான்….
பிரச்னை என்னவென்றால்
தன்னுடைய விசுவாசத்தை அறிவார்த்தமானது என்றும்
இன்னொருவருடைய விசுவாசத்தை
ஆக்கங்கெட்டதாகவும்
அன்றாடம் அவர்கள் மண்ணில் கையடித்து
சத்தியம் செய்துகொண்டே யிருக்கிறார்கள்.
விசுவாசிகளில் ஒருசாரார் மறுதரப்பினரை
மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் முகநூலிலும்
அச்சு ஒளி ஒலி ஊடகங்களிலும்
யூ-ட்யூப், ட்விட்டர், சுவரொட்டிகள் சோப்பு விளம்பரங்கள்
என ஒன்றுவிடாமல்
எல்லாத்திசைகளிலிருந்தும் வந்தபடி
வழிமறித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
அதேபோல் மறுசாராரும்.
அதற்கென்றே செய்துவைத்திருக்கும்
கண்ணுக்குப் புலனாகாதவகையில்
ஒருபக்கமாகவே சரிந்திருக்கும்
துலாக்கோலை
கக்கத்திலிடுக்கிக்கொண்டு
உலாவந்துகொண்டிருக்கிறார்கள்.
சதாசர்வநேரமும்
மல்லாந்தபடியே பக்கம்பக்கமாய்
ஒருவர்மேல் ஒருவர்
காறித்துப்பிக்கொள்கிறார்கள்.
உன் விசுவாசத்திற்குரியது / குரியவர் உத்தமரா என்று எதிர்தரப்பிலிருந்தொருவர்
எகத்தாளச் சிரிப்போடு பெருங்குரலெடுத்துக்கூவ
பதிலுக்கு உன் விசுவாசத்திற்குரியவர் பத்தரைமாற்றுத்தங்கம்
என்று நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும் என்று
முதல் தரப்பினர்
தாவிக்குதித்துக் கூச்சலிடுகிறார்.
குறிப்பு: வசைகளில் மிக நாகரீகமானவை மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பு விசுவாசிகளும்
சதாசர்வகாலமும்
எதாவது நஞ்சைக் கக்கிக்கொண்டே
துக்கப்படுத்துவதும் துக்கித்திருப்பதுமாக
அரிதாய்க் கிடைத்திருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும்
அற்பமானதாக்கிக்காட்டப்
பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடையதை மட்டுமா?
கடையில் KISSES கேட்கும் குழந்தைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
கடையில் KISSES கேட்கும் குழந்தைகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
KISSES என்ற பெயரில் புது சாக்லெட்டுகள் விற்பனையில்
தொலைக்காட்சி விளம்பரத்தில் விதவிதமான ஜிகினாத்தாளில்
அந்த ஆங்கில வார்த்தை மின்னக்கண்டு
அதன்வழியான சின்ன பெரிய விளைவுகளை எண்ணி தன்னையுமறியாமல் சின்னதாய் அதிர்கிறது மனம்.
இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
• I AM ALL YOURS
• ENJOY ME AS NEVER BEFORE
• BE EXCITED FOREVER
• WHAT I HAVE IS THINE
• MY BODY IS DIVINE
• ALL IS FAIR IN LOVE AND WAR
• RULES NO BAR
• I WANT MORE
• ENTER ME I AM WITHOUT A DOOR
• AM I EXCEEDING THE LIMIT? I DON’T CARE.
_ இத்தனை வாசகங்களும் மொத்தமாகவும்
தனித்தனியாகவும்
இடம்பெற்றிருக்கும் இறுக்கமான சட்டைகளை அணிந்துகொண்டு
சிறுவர் சிறுமியரும் இளைஞர்கள் யுவதிகளும்
இன்னும் பிறரும்
அந்தப் பூங்காவில்
வேகவேகமாக நடைப்பயிற்சி செய்துகொண்டிருக் கிறார்கள்.
அந்த வாசகங்களின் அர்த்தம் உள்ளர்த்தமெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா
என்று தெரிந்தும் தெரியாமலுமாய்
அந்த அந்திப்பொழுதும் கழிய
வழக்கம்போல் கவியத்தொடங்கும் இருள்.
வனவாசம் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
வனவாசம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தேன் என்ற பாரதி
எதை யென்று கேட்பவர்களுக்கு இதை யென்று சொல்லியிருக்கக்கூடும்
அதை யென்று சொல்லியிருக்கக்கூடும்
இல்லையில்லை, எதையெதையோ என்றும் சொல்லியிருக்கக்கூடும்
இன்னும்………
விதையோ விடுகதையோ மன்பதையோ என்பதையோ
அறியலாகாது
தேடலில் புதைந்து வதைபட்டுச் சிதையும் மனம்
பாரதிக்கு முன்னும் பின்னும்
நாலுவரிக் கவிதையின் நிழல் - ‘ரிஷி” (லதா ராமகிருஷ்ணன்)
நாலுவரிக் கவிதையின் நிழல்
‘ரிஷி”
(லதா ராமகிருஷ்ணன்)
’இதோ சில மணிநேரத்தில் வாடிவிடும் பார்’ என்கிறார்கள்.
சூரியகதிர்கள் ஆசிர்வாதங்கள் என்றால்
கதிரோன் ஒருநாள் வெடித்துச்சிதறத்தான் போகிறான் என்கிறார்கள்.
ஒரு சோற்றுப்பருக்கையை இருபது எறும்புகள் இழுத்துக்கொண்டு செல்வதை
பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றால்
வரும் கால்களில் அவை மிதிபட்டு சாகும்பார் என்கிறார்கள்.
நாலுவரிக் கவிதை வாசித்து கண்ணில் நீர்தளும்பி நின்றால்
அரைத்த மாவையே அரைப்பதையும் அள்ளித்தின்பதையும்
நிறுத்தவே மாட்டீர்கள் நீங்கள் என்று எள்ளிநகையாடுகிறார்கள்.
ஓர் உணர்வின் வருடலை புரிந்துகொள்ளாத
தம் இயலாமையை
பார் பார் நான் நாலுவீடு கட்டிவிட்ட வெற்றியாளன் என்று
மார்தட்டி மிகுவலிமையாகக் காட்டுபவர்கள் மத்தியில்
தத்தித் தவழ்ந்துகொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் _
ஒரு துளி நீருக்கும் கத்துங்கடலுக்கும் இடையேயான
வேற்றுமையில் ஒற்றுமையை,
ஒற்றுமையில் வேற்றுமையை
கற்கக் கசடறக் கற்றவாறிருக்கும்
வளர்ந்த குழந்தைகளாய்.
சொல்லத்தோன்றும் சில..... லதா ராமகிருஷ்ணன்
சொல்லத்தோன்றும் சில.....
PLEASE HELP A QUALITY TAMIL POET
A POEM BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
.....................................................................................
நட்பினருக்கு வணக்கம்.
தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.
கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்
.....................................................................................
A POEM BY ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
The pain of not being able to return
to the passage gone beyond
is being relived
by going there
with the wings of words
is what the grand world
of the writer indeed.
The height of release
Is but a hiatus.
That
would be forever conversing
in the language of silence.
That is
the soft music of Life
Those having ears listen
When the heart wanders
in this space
That can’t be filled with Life
Deficiency fills and swells
I fancy
The bird craving to fly
in the bygone sky
is the writer’s heart - Oh My!
கடந்துபோன பாதைக்கு
திரும்ப முடியாத வலியை
வார்த்தைச் சிறகுகளால்
மீளச் சென்று வாழும் மனம்தான்
படைப்பாளியின் பெரும் உலகம்.
விடுபடுதலின் உயரம்
ஓர் இடைவெளி.
அது
மௌனத்தின் மொழியில்
பேசிக் கொண்டேதான் இருக்கும்.
அது
உயிரின் மெல்லிய இசை.
காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.
உயிரிட்டு நிரப்ப முடியாத
இந்த இடைவெளியில்
மனம் சஞ்சரிக்கும்போது
போதாமை நிரம்பி விடுமென
நினைக்கிறேன்.
கடந்து விட்ட வானத்தில்
பறக்கத் துடிக்கும் பறவை
படைப்பாளியின் இதயம்.
ஆத்மாஜீவ் :
Sunday, August 9, 2026
கைவசமாகும் நட்சத்திரங்கள்! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
கைவசமாகும் நட்சத்திரங்கள்!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு துண்டு ஜிகினாத்தாள்!
பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது
சில நூறாண்டுகள் இருக்கலாம்!
சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து
தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்
அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்
தீட்டி மேகங்களாக்கி
அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய
நிறைய நிறைய மழைபொழிந்தது!
கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்
கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து
நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து
’நட்சத்திரங்கள்’ என்றாள்!
’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’
என்ற கேள்வியைக் கேட்கநினைத்து
அவளை ஏறிட்டுப்பார்த்தபோது
கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின
சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!
தொடுவானின் விரிபரிமாணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
//2019, AUGUST 7 - மீள்பதிவு//
தொடுவானின் விரிபரிமாணங்கள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
‘EXPANDING DIMENSIONS OF THE HORIZON
(Originally written in Tamil the poem is rendered in English by the poet herself)
By
Rishi
(Latha Ramakrishnan(
தொடுவானின் விரிபரிமாணங்கள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
“All that you had drawn
when you were a little girl - fine.
But, you are now grown- up .
Still you do the same as before
Isn’t it absurd to the core?
How can there be moon and stars
on a rainy day?”
_ So asked the elders irritated and sarcastic.
And the little girl
Aged a few eons
responded with a smile:
‘ Just because they are not visible to us
Aren’t there the Moon and Stars?
The sky drawn by me is widespread
over the entire globe.
With rain pouring in one side
There would be moon radiant
on the other side
Do know that.?’
That which twinkles In the eyes of the kitten
which smiles listening to her _
Are they stars?
Venus? Jupiter? Mars?
Or Pluto afar?
‘சிறுமியாய் இருந்தபோது வரைந்ததெல்லாம் சரிதான்
வளர்ந்தபின்பும் இப்படியே செய்தால் எப்படி?
மழைபொழியும் வானில் நிலவும் நட்சத்திரமும் எப்படியிருக்கும்?’
என்று எரிச்சலும் எகத்தாளமுமாய் கேட்ட பெரியவர்களிடம்
சிரித்துக்கொண்டே சொல்வாள்
சில நூறாண்டுகள் வயதான சிறுமி:
‘நமக்குத் தெரிவதில்லை யென்பதால் நிலவும் நட்சத்திரங்களும்
அங்கேயில்லாமல் போய்விடுமாor
அல்லது
”நான் வரைந்துள்ள வானம் உலகெங்கும் விரிந்திருக்கும்.
ஓரிடத்தில் மழைபொழிய வேறிடத்தில் நிலா காயும் தெரியுமா!”
அதைக் கேட்டுப் புன்னகைக்கும் பூனைக்குட்டியின் கண்களில்
மின்னிக்கொண்டிருப்பது விண்மீன்களா?
வீனஸா ஜூபிட்டரா மார்ஸா ப்ளூட்டோவா?
சிறுமியும் சின்ன விண்மீனும்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
சிறுமியும் சின்ன விண்மீனும்!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன்னைப்போல் குட்டியாக இருப்பதால்தான்
நட்சத்திரங்களை நேசிக்கிறாளோ சிறுமி?
வாமனாவதாரம் விசுவரூபம் இருவருக்குமே உண்டுதானே!
ஒற்றை நிலவை நேசிக்க ஓராயிரம்பேர்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு துணுக்குதான் கைவசமாகும்.
நட்சத்திரமெனில் வேண்டுமட்டும் கைகளால் அள்ளிக்கொள்ளலாம்!
சின்ன விண்மீன் அவளுடைய செல்லப்பிராணி பப்பிக்குட்டியா?
சிஷ்யையா?
சமவயதுச் சினேகிதியா?
சீராட்டவொரு பாப்பாபொம்மையா?
அம்மையப்பனா?
அதியமான் நெல்லிக்கனியா?
அதிசயங்கள் நிகழ்த்தும் மந்திரக்கோலா?
அந்தர வீடு போலா?
ஒண்ணொண்ணாய் தெரிந்த ‘ரைம்’களைச் சொல்லிச்சொல்லி
அழைத்துப்பார்த்தாயிற்று.....
இன்னும் என்ன செய்தால் அவளிடம் வந்துசேரும் நட்சத்திரங்கள்?
தன்னை மறந்து அண்ணாந்திருந்த
சிறுமியின் கண்வெளியில் சுழன்றவாறிருக்கும் சில
அண்டங்கள்……
கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆரம்பத்தில் சிறுமியின் பிரார்த்தனை
யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது.
பள்ளிக்குச் செல்லும் வழியில் தெருவோரப் பிள்ளையார் கோயிலின் முன்
கைகூப்பி கண்மூடுவாள் கணநேரம்
வழியில் தேவாலயத்தைக் கடக்கும்போது
சின்ன விரல்களால் சிலுவைக்குறியிட்டுக்கொள்வாள்
இறைமை இன்னமும் முறையற்ற வழிகளில்
அறிமுகமாகியிராத பருவத்தில்
அந்தச் சிறுமியின் பிரார்த்தனையெல்லாம்
யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது:
வட்ட சதுர வடிவ நாணயங்களெல்லாம் நட்சத்திர வடிவம் பெறவேண்டும்.
முழுநம்பிக்கையோடு உள்ளங்கையை முகர்ந்து பார்த்தால் ஆப்பிள் மணக்கும் தானே!
அவளுக்கும் அப்படி ஆப்பிள் மணத்ததுண்டு.
ஆனால் சில்லறைநாணயங்கள் ஏனோ நட்சத்திரவடிவமாகவேயில்லை.
சிறுமிக்கு வருத்தமாயிருந்தது
தெருவோரம் எலும்பெல்லாம் தெரிய சுருண்டுகிடக்கும்
முதியவரின் கந்தல் விரிப்பில் ஒன்றிரண்டு நாணயங்கள் மட்டுமே
இருந்ததைக் கண்டபோது
அவள் துக்கம் இன்னும் அதிகமாகியது.
நாணயங்கள் நட்சத்திரங்களாவதைவிட
அந்தத் தாத்தாவால் வாங்கவியலாத ’ரொட்டி’ ’பன்’ இட்லியானால் எத்தனை நன்றாயிருக்கும்
என்று அனிச்சையாக அவள் மனதில் தோன்றிய நினைப்பில்
தன் பிரார்த்தனையில் சிறிது மாற்றம் செய்துகொண்டாள் சிறுமி.
//2019, AUGUST 7 மீள்பதிவு//
மௌனம் ஒரு காவல் தேவதை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
மௌனம் ஒரு காவல் தேவதை
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று
யார் சொன்னது?
மௌனம் ஒரு மந்திர உச்சாடனம்.
ஒரு மாயக்கோல்.
ஒரு சங்கேதமொழி.
ஒரு சுரங்கவழி.
சொப்பனசங்கீதம்
அரூபவெளி.
அந்தரவாசம்.
அனாதரட்சகம்.
முக்காலமிணைப்புப் பாலம்.
மீமெய்க்காலம்.
மொழிமீறிய உரையாடல்.
கதையாடல் ஆடல் பாடல்.
மனசாட்சியற்றவரிடம் நம் வார்த்தைகள்
மண்டியிட்டுத் தெண்டனிடுவதைத்
தடுக்கும் சூத்திரம்.
பாத்திரம் அறிந்து நாம் இடும் பிச்சை.
ஆத்திரத்தின் வடிகால்.
அடிமன வீட்டின் திறவுகோல்.
யாரிடமும் நம்மை நிரூபித்தாகவேண்டிய
கட்டாயத்திலிருந்து விடுதலை.
ஆய தற்காப்புக் கலை.
அவரவர் இமயமலை.
நெருங்கியிருப்பவரையும் கணத்தில்
நெடுந்தொலைவிலாக்க எறியப்படும்
சூட்சுமக்கல்.
நித்தமும் நெஞ்சொளிரும் வானவில்.
பித்தாகிநிற்கும் சொல்.
வலியாற்ற மனம் தயாரிக்கும்
அருந்தைலம்.
கொடியவிலங்குகளிடமிருந்து காக்க
நம்மைச் சுற்றிக் கனலும் எரிவளையம்.
கடல்நடுவே கரையாகும் மணல்திட்டு.
அடர்மழை.
நள்ளிரவின் உயிர்ப்பு.
நிலவின் புன்சிரிப்பு.
இன்னும்……
Thursday, July 23, 2026
SUPERIORITY COMPLEX - Rishi (Latha Ramakrishnan)
SUPERIORITY COMPLEX
Rishi
(Latha Ramakrishnan)
You, I, they ?– Come on, tell.
Well, what about its inner organs?
Have you seen them all ever?
Viewing them as images is not the same as
seeing them function inside a tusker.
And, what about its feelings?
Have we ever cared?
Stop feeling superior
when you are far from that.
See yourself in the mirror
Bespectacled or not
your vision is blurred. –
Let me tell you that.
Instead of parrotting the ‘elephant tale’
use your brain a little bit
take some time to go see a visually impaired child
and listen to what she or he has to say
about the elephant’s form.
Please don’t hide behind a cliche
that is insensitive to the core
and still claim that you care for
your suffering brethren’s welfare.
Half-baked intelligence being the norm
you would find it difficult to stay informed
about the visually impaired
or, for that matter, any other
But you would go on blabbering
unhindered.
about this that and what not
You know what
You are the one most impaired.
பார்வை .......................................... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
பார்வை
..........................................
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிபிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….
......................................................................................................................................................
//*இன்று கூட மெத்தப்படித்த ,மனிதநேயப் படைப்பாளி வெகு சாதாரணமாக 'பார்வையிழந்தவர் யானையைப் பார்ப்பதுபோல் என்று வெகு சாதாரணக் கதையொன் றுக்கான தனது மிக நீண்ட ஆதரவு- வியாக்கியான திறனாய்வுக் கட்டுரையொன்றில் எழுதியிருப்பதைப் படிக்க நேர்ந்தது. நம்மில் எத்தனையோ பேர் மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்கள். அப்படியே அணியவில்லையானாலும் அதனால் யானையை நாம் பரிபூரணமாகக் கண்டவர்களாகிவிடுவோமா? அத்தனை நெருக்கத்திலா யானையைப் பார்த்திருக் கிறோம். பார்வையிருப்பதாலேயே யானையின் உள்ளுறுப்பைப் பார்த்துவிட முடியுமா ? யானையைக் கண்டாலும் டினோசாரையும் பார்த்திருப்பதாகச் சொல்லமுடியுமா? எல்லாவற்றையும் வெறுமே கண் காட்சிப்பொருளாகப் பார்ப்பதற்கும், சகவுயிர்கள் என்ற புரிதலோடு பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறது ? என்றாவது எண்ணிப் பார்த்திருக்கி றோமா? எனக்குக் கண் இருக்கிறது எனவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக்கொள்வது எத்தனை அபத்தமான அகங்காரம் ?
TRANSCIENCE - 'rishi’ (Latha Ramakrishnan)
TRANSCIENCE
'rishi’
(Latha Ramakrishnan)
Yester night
some words as stray fireflies and butterflies
were hovering over me, oozing glow so rare
proving life more than a mere vanity fair
hoping that they would be seamlessly woven
into a poem.
But, half-afraid of the alien cabin
half of me already asleep, the rest drooping
I waved them away with a heavy heart.
Today I am wide awake,
waiting for those fireflies and butterflies
to bless me with their wings and shine
the boon of a poem sublime….
Much as I try, they refuse to oblige.
I remain a vauum to be filled by the
‘never to return’ Moment.
நிலையாமை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நேற்றிரவு
சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள், சில வண்ணத்திப்புச்சிகள்
என் தலைக்கு மேலாய் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;
வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல என்று நிரூபித்தபடி;
அத்தனை நேர்த்தியாய் அவையோர் கவிதையில் ஊடுபாவாய்
நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.
எனில், புதிய அறை தரும் பயமும், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்
மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும் கோலமுமாய்
கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.
இன்று நான் முழு விழிப்பில் காத்துக்கொண்டிருக்கிறேன்
அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.
தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர்
கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.
ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை ஏற்க மறுக்கின்றன.
வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத தருணம் இட்டுநிரப்ப,
RIPPLES AND BUBBLES by 'Rishi' (Latha Ramakrishnan)
RIPPLES AND BUBBLES
by 'Rishi'
(Latha Ramakrishnan)
METAMORPHOSIS
Poems say nothing
Unless the reader becomes the poet
SYNOPSIS
Words in a poem are but
thorns and flowers in a jungle divine.
REALIZATION
Claps, applause _ can they
ever equal the joy of creating?
EXERCIZE
I walk along the vast expanse of
evergreen infinity of the world within.
PRAYER
Let me be wide awake in a
Dreamless full-throated sleep tonight.
‘rishi’ (Latha Ramakrishnan)
(from the poemvolume
‘THE RAIN BEYOND & OTHER POEMS)
A POEM BY NESAMITRAN
A POEM BY
NESAMITRAN
It is this ‘just standing’ tree
that ripens an old tree
A new root keeps banging against a rock
on the way,
piercing and probing
Worrying over the cloud going past
wondering whether it would darken
and cause the rain
it is bending and curving by way of protecting
the branch from breaking apart
in the blowing wind.
Holding so much of sun in its palm
it is cooking food;
consoles the chicks in the nest
when the return of the mother bird is delayed.
Watches helplessly the snake
that steals the eggs from another nest.
Turns flowers into fruits.
Offers its body to the woodpecker.
Fully grown when on the day
it is cut and taken away
It would remain just standing there
Saying ‘My mother is just a house wife, Sir’,
is the same as saying
‘The tree is just standing there’.
.............................................................................
நேச மித்ரனின் கவிதை:
..............................................................................
அந்த மரம் சும்மாதான் நிற்கிறது
சும்மா இருக்கும் மரம்தான்
ஒரு பழைய இலையை பழுக்க வைக்கிறது
ஒரு புதிய வேர் வழியில் இருக்கும்
பாறையை முட்டிக் குடைந்து கொண்டிருக்கிறது
கடந்து போகும் மேகம் கருக்குமா
பொழியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது
வீசும் காற்றில் கிளை முறிந்து விடாமல் இருக்க வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது
அவ்வளவு வெய்யிலை
உள்ளங்கையில் சுடச் சுட ஏந்தி
சோறு சமைத்துக் கொண்டிருக்கிறது
தாமதமாய் கூடு திரும்பும் பறவைக் கூட்டில் குஞ்சுகளுக்கு சமாதானம் சொல்கிறது
இன்னொரு கூட்டில் முட்டைகளை திருடி உண்ணும் பாம்பை ஒண்னும்
செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறது
பூக்களை கனியாக்குகிறது
மரங்கொத்திக்கு உடல் தருகிறது
நன்கு வளர்ந்து நின்ற ஒரு நாள்
அறுத்துக் கொண்டு போகும்போதும்
அப்படியேதான் நின்று கொண்டிருக்கும்
என் அம்மா
ஹவுஸ் ஒயிப்தான் சார் என்பதும்
மரம் சும்மாதான் நிற்கிறது
என்பதும் ஒன்றுதான்
..............................................................................................................
*கவிதை குறித்து சொல்லத் தோன்றும் சில.....
லதா ராமகிருஷ்ணன்
கவிமனம் இருபாலினமானது என்ற என் நம்பிக்கையின் நிரூபணமாய் இக்கவிதை. நிறைவான வாசிப்பனுப வத்தைத் தந்தது.
கவிதையென்றால் என்னவென்றே தெரியாதவர்களெல் லாம் கவிதைக்களத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படுவ தாகப் பதாகை ஏந்தி வர ஆரம்பித்து, பெண் இன்னின் னது தான் எழுதவேண்டும் என்று பட்டிய லிட ஆரம் பித்து, ஆணினம் சார்ந்த கவிஞர்களை வீணாகக் குற்றவுணர்வு கொள்ளவைத்து, பெண் சார்ந்த மேம் போக்கான கவிதைகளை எழுதவைத்து, கவித்துவம் அறவேயற்று எழுதப்பட்ட வெறும் போதனை, அறிவுரை, பிரச்சார வரிகளையெல்லாம் பெண்விடுதலைக் கவிதைகளாக உருவேற்றி, அதன் மூலம் தங்களுக்கான மேடைகளை நிறுவிக் கொண்டு, பெண்கள் எழுதும் கவிதைகளை ஆண் என்ற ஒரே காரணத்தால் திறனாய்வு செய்யத் தகுதிவாய்ந்தவர்களாய் பீடத்தி லேறி பரப்புரை செய்து ....
- என நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடகங் களை யெல்லாம் வருடக் கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பதில் சலிப்புற்றிருக்கும், வெறுப்புற்றி ருக்கும் மனதிற்கு ஒரு வலி நிவாரணமாய் இவ்வகைக் கவிதைகள்.
பெண்களை victims என்பதாகவே உணரவைப்பதை விட தன் மதிப்பை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கவித் துவம் குறை யாத படைப்புமூலமாய் உணர்த்தும், இவ்வகைப் படைப்புகளே, உண்மையான பெண்ணிய எழுத்தாக்கங்கள் .
திருமணமான இளம்பெண் ஒருவர் சமீபத்தில் எனக்கு எழுதி யிருந்த தன்விவரக்குறிப்பில் கணவன் உழைப்பில் வாழ்கிறேன் என்பதாய் குறிப்பிட்டிருந்தார். இயல்பாய் எழுதினாரோ, உள்மன வலியோடு எழுதினாரோ – படிக்க வருத்தமாக இருந்தது.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் வேலைக்குப் போகாத தன் மனைவி குறித்து அவமானமாக உணரும் கணவர்களையும் காண முடிகிறது.
HOUSEWIFE என்பதற்கு பதில் இப்போது HOME-MAKER என்று சொல்லப் படுகிறது. ஆனாலும், சொற்களின் அர்த்தங்களை மனதில் வாங்கிக் கொண்டாலொழிய மனமாற்றம் ஏற்படாது. மனமாற்றத்திற்கு இத்தகைய கவிதைகள் கண்டிப்பாக உதவும்.





























