......................................................................................................................................
பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் .......
லதா ராமகிருஷ்ணன்………
ஒரு கதையை அணுகும் விதங்கள் அல்லது வழிகள் என்று சொல்லாமல் அணுகும் விதம் அல்லது வழி என்று சொல்வதி லேயே ஒரு ஒற்றை
வாசகப் பிரதியை வலியுறுத் தும் போக்கு புலப்படுகிறது. ஒரு
பிரதி ஏதோ வொரு விதத்தில் வாசகரிடம் தாக்கம் ஏற்படுத்தும்போது அவர் அதை உள்வாங்க ஆர்வங் காட்டுகிறார். அதன்
உள்ளும் வெளியும் திரிந்து அது குறித்த கூடுதல் தகவல்களை, நுட்பங்களை
சேகரிக்க முற்படுகிறார்.
இன்றைய காலகட்டத்தில் இதற்கு எந்தவொரு வழிகாட்டி யின் துணையுமின்றி ஒரு வாசகராலேயே தேவையான கூடுதல் விவரங்களை – பிரதி
எழுதப்பட்ட பின்புலம், அதில்
இடம் பெற்றுள்ள குறியீடுகள், பிரதியை
எழுதியவர் குறித்த விவரங்கள் அன்னபிற – பெற
முடி யும்.
ஒரு சாதாரண புனைவு – அ-புனைவுப் பிரதியை விமர்சனம் / திறனாய்வு
மூலம் ஆஹா ஓஹோ என்று வாசக மனங்களில் – புதிய
வாசகர்கள் மனங்களில் மட்டுமல்ல – பதியவைக்க
முடியும். அதேபோல்,
மொழிபெயர்ப்புப் பிரதிகளைப் பொறுத்த அளவிலும் கூட செய்ய முடியும்.
பிரதிகளை நல்ல எண்ணத்தோடு ஒருவர் அறிமுகப் படுத்த, அதை
எப்படி அணுகுவது என்று வழிகாட்ட ஒருவர் முற்பட்டாலும், அவரையுமறியாமல் தன்னுடைய வாசகப்பிரதியே சரியானதாக, மேலானதாக
முன்வைக்கும், வலியுறுத்தும் தன்மை வெளிப்பட்டு விடுகிறது.
இது குறித்து இன்னும் நிறைய எழுத இருக்கிறது….
No comments:
Post a Comment