எமோஜிக்களின் உரையாடல் -
சொல்லவந்த சேதியை கனகச்சிதமாய் சொல்வதற்கு ஓர் உதாரணம் – ‘கண்டேன் சீதையை’ இதையே சீரியல்தனமாய் சொல்வதென்றால் ?
‘அதாவது ராமா – நான் என்ன சொல்ல வருகிறேனென் றால் …. இருங்கள், என் தொண்டையடைக்கிறது. ....கண்ணீர் கரை புரளுமோ என்று பயமாயிருக்கிறது… கொஞ்சம் பொறுங்கள் ராமா – இப்போது சோப்பு சீப்பு கண்ணாடி விளம்பரம் வரப் போகிறது….. சரி, இப்போது சொல்கிறேன் – சீதையைத் தேடிச் சென்ற நானாகிய அனுமன் – சீதையைக் கண்டேனா என்றால்…. காண்ப தெல்லாம் காட்சிப்பிழை, தோற்ற மயக்கம் என்றால் சீதையை நான் கண்டேனா, காணவில்லையா – இருங்கள் - பின்னணியிசை வீணையிலிருந்தால் அது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா என்பதை ’மதரா, மம்மியா’ அல்லது ’அவையா சபையா’விவாத நிகழ்ச்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை தெரிந்துகொண்டுவிடுவீர்கள்…

No comments:
Post a Comment