LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 12, 2026

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து -3

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து -3
‘ இங்கே பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க’

” நீங்க சொல்றதை நான் எதுக்குங்க கேக்கணும்?’

‘உங்களுக்கு நன்மை செய்யணும்னு அமெரிக்கா விலேர்ந்து வந்திருக்கேன்.

அதுக்கு முன்னாடி எங்கேயிருந்தீங்க?:

நியூஜிலாந்தில்.

இப்ப என்னை மாதிரி ஆளுங்கிட்ட பேசி எங்க அறிவுக்கண்ணைத் தெறந்த பிறகு எங்க போவீங்க?

ஸ்விட்ஜர்லாந்துக்கு. அக்டோபர், நவம்பர் டிசம்பர் ஸ்பெயினுக்கு…..

ஆக மொத்தம் – இந்தியாவில் இருப்பதே யில்லை. நாங்க இங்கயே தான் எப்பவும். இங்கேத்த நிலவரத்தை நீங்க எடுத்துச்சொல்லி நாங்க புரிஞ்சுக்கவேண்டிய அவசியமில்லை. போய்ட்டு வாங்க.




மாதம் 2000 ரூபாய் அல்லது 5000 ரூபாயில் ஒரு பெண் என்னவெல்லாம் வாங்கலாம் தெரியுமா! ’

‘இன்று படித்தவர்களோ, படிக்காதவர்களோ , கிராமமோ நகரமோ – பெரும்பாலான பெண்கள் வருவாய் ஈட்டக் கூடிய வேலை ஏதாவது செய்கிறார்கள். வீட்டுவேலை முதல் வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளும் வேலை என எத்தனையோ வேலைகள். எனக்குத் தெரிந்து எத்தனையோ ஆட்டோ ஓட்டுனர்களின் மனைவியர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீட்டுவேலை செய்து கணவன் மதியம் வீடு திரும்புவதற்குள் வேலை முடிந்து வீடு திரும்பி சுடச்சுட உணவு தயாரித்து வைத்திருப்பார்கள். கேட்டரிங் தொழிலில் பல பெண்கள் வீட்டிலிருந்தே உணவுப்பண்டங்கள் சமைத் துத் தந்து வருமானமீட்ட முடிகிறது. எத்தனை பணம் வந்தாலும் செலவு அதிகம்தான் என்பது உண்மை. ஆனால், 1000, 2000 கூடுதலாகக் கிடைத்தால் அதைக் கொண்டு என்ன வாங்க முடியும் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.’






’படித்தவர்களாகிய நாங்கள் சொல்கிறோம் – கேளுங் கள். தமிழகம் வளர்கிறது, வளர்கிறது - வளர்ந்து கொண்டே போகிறது’

நீங்கள் பாரதியார் சொன்னதை முதலில் கேளுங்கள் - ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’
_ பாரதியார்




மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மிக மிக விழிப்பாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கை களுக்கு அடிமையாகிவிடக்க்கூடாது…..

அதாவது, ஆளுங்கட்சியே சர்வ வல்லமை பொருந்திய ஆண்டை என்று நம்பிவிடலா காது. 'மக்களாகிய நாங்கள் எப்போதுமே பல்லக்குத்தூக்கிகள்' என்ற மூடநம்பிக்கை யைப் புறந்தள்ளிவிடவேண்டும் - அப்படித் தானே?'

????????????????????????????????????????????



அவர் இதுவரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிருக்காரா, சொல்லுங்க

’இல்லை. அதனாலே என்ன?’

’அதனாலே என்னவா? மக்களாட்சியிலே மக்களால தேர்ந்தெடுக்கப்படாமல் வரலாமா?’

’அப்படின்னா, தேர்தல்ல ஜெயிச்சு வரவங்க எல்லாம் நல்லவங்களா? மக்களுக்கு நல்லது பண்றவங்களா?”


????????????????????????????????????????????





No comments:

Post a Comment