LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 12, 2026

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1



‘ நம் வாக்கு நம் உரிமை ’
‘ஆமாங்க – இதே தான் எல்லா சேனல்லேயும் வருது.
'அதை நாம் வீணடிக்கக் கூடாது'.

அப்படியெல்லாம் வீணடிக்க மாட்டோமுங்க – பணம் கிடைச்சாலும், கிடைக்காட்டியும் கட்டாயம் போடு வோம்ங்க. நீங்க?
நாங்க நீலாங்கரையில வீடு கட்டி குடியேறி நாலு வருஷம் ஆகுது. இன்னும் வாக்காளர் அட்டை விலா சத்தை மாத்த நேரம் கிடைக்கலை.
அடடா – அப்ப எப்பிடி வோட்டு போடுவீங்க?
நம்ம ஒருத்தர் வோட்டில என்ன இருக்கு? WHATEVER WILL BE, WILL BE’
எதுக்குங்க திடீர்னு இங்கிலீஷுக்கு மாறிட்டீங்க?
இங்கீலீஷ்ல ஏதாவது சொன்னா நான் அறிவாளின்னு நம்பிடுவீங்க, நான் வாக்களிக்காமலிருப்பது என்னு டைய அலட்சியம் இல்லை, அறச்சீற்றம்னு நினைச்சுக்கு வீங்கன்னுதான்….
?????????????????????????????????????????????????????????




அய்யோ – இது என்ன ?….
எது என்ன?
நேத்துவரைக்கும் ஆளுங்கட்சியைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்த இந்த நாளிதழ் இன்னிக்கு ஆளுங் கட்சியின் சாதனை களை விளக்கி முழுப்பக்கம் எழுதியிருக்குதே

அது அரசு விளம்பரம்ங்க

PAID NEWS போலவா

அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அப்படிச் சொல்லாம லிருக்கவும் முடியாது....



ஐயா, அம்மா – உங்கள் பொன்னான வாக்கை எனக்கே அளிக்க வேண்டுகிறேன்.

’ஆனா, யார் தன்னுடைய மொத்த சொத்தில பாதியை சமூக மேம்பாட்டுக்காக முதலிலேயே கொடுத்துவிடு கிறாரோ அவருக்குத்தான் என் ஓட்டு.

அய்யய்யோ, இது என்ன வம்பா போச்சு.....




எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

‘மொதல்ல, இது மக்களாட்சி’.

‘மக்களாட்சியிலும் மன்னர்கள் உண்டு; இளவரசர்கள் உண்டு.

‘அடிமைகளும் உண்டுதான். இதில் ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நல்ல நகைச்சுவை; பொழுதுபோக்கு'




’கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.’

இது நம்ம எல்லோருக்கும் பொருந்தும். இதிலே அவரை மட்டும் கத்துக்குட்டின்னு சொன்னா எப்பிடி?

'வாயை மூடு, அதிகப்பிரசங்கி.






‘எனக்குத் தெரியும் மேடம் – நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடு வீங்கன்னு… இருந்தாலும், மனசு கேக்கலை – அதனால சொல் றேன். அந்தக் கட்சிக்கு ஓட்டுப்போட றது உங்க மூஞ்சில நீங்களே கரி பூசிக்கிறதுக்கு சமம்.


அட! அப்படியானால், அந்தக் கட்சிக்கு நான் ஓட்டுப் போட்டா நீ என் மூஞ்சில கரி பூசுற சிரமம் உனக்குக் இருக்காது. அதுக்காக நீ எனக்கு நன்றி சொல்லணும்!


??????????????????????????????????




மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மிக மிக விழிப்பாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகிவிடக் க்கூடாது…..

அதாவது, ஆளுங்கட்சியே சர்வ வல்லமை பொருந்திய ஆண்டை என்று நம்பிவிடலாகாது. 'மக்க ளாகிய நாங்கள் எப்போதுமே பல்லக்குத்தூக்கிகள்' என்ற மூட நம்பிக்கையைப் புறந்தள்ளிவிட வேண்டும் - அப்படித்தானே?'


?????????????????????????????????????????????????????????????????????????????



காலைல 11 மணிக்கு உங்களைப் பார்க்க வரவா?


நான் பல்கலைக் கழகம் வரை போகணும்.


ஐயையோ – என்ன இது – கட்சி மாறப்போறீங் களா?




No comments:

Post a Comment