எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 3
’சினிமா மாயை என்று ஒரு நடிகரின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும், அவரை அனுபவமில்லாதவர் என்றும் அவரை ஆதரிப்பவர்களை அரசியல் அறிவு இல்லாதவர்கள் என்றும் பேசும் ஊடகவியலாளர்கள் 'அரசியலுக்கு இதோ வரேன் வந்து கொண்டேயிருக்கேன், வந்துவிடுவேன்' என்று கூறிக்கொண்டே யிருந்தரையும், ஒரேயொரு மக்களவை சீட்டோடு தன் கட்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டவரையும், சினிமா விலேயே பணம் அள்ளிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளையும் திரும்பத் திரும்ப ‘ஜனநாயக் கடமை ஆற்றியதாய்’ வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன?’
அதுவும், பிரபலங்கள் வாக்களிக்கும்போது அவரைப் பின் தொடர்ந்து வாக்களிக்கும் அறைக்குள், பகுதிக்குள் அத்தனை ஊடகவியலாளர்கள் செல்லவேண்டிய தேவையென்ன? அப்படி செய்வது சரியா? அதை ஏன் யாரும் தடுக்கவில்லை?
//இப்ப புதுசா வந்திருக்கானே – அவன் சரியான பொறுக்கி – அவன் ஜெயிக்கவே மாட்டான். அவன் ஆட்சிக்கு வந்தா நாம நாசமாத்தான் போவோம். வெத்துப்பய, உதவாக்கரை//
//எல்லோருமே ஒரு சமயம் புதிதாக வந்து பின்பு அரசியல்களத்தில் பரிச்சயமானவர்களாக மாறியவர்கள் தான். ஆனால், ஒருவரை அவன், இவன் மொள்ளமாறி, முடிச்சவிக்கி என்று கண்ணியமற்ற சொற்களால் வசைபாடுவது அவரை விட நம்மையே அதிகம் அடையாளங்காட்டும்//


No comments:
Post a Comment