வேண்டுகோள்
லதா ராமகிருஷ்ணன்
பத்து வருடங்களுக்கு முன்பிருக்கலாம். நான் தன்னார் வலத் தொண்ட ராக இளங்குற்றவாளிகள் மையமொன்றுக்கு சில காலம் போய் அங்கி ருந்த சிறார்களுக்கு கதை சொல்லி, அவர்களுடைய படைப்பார்வத்தை ஊக்கு விப்பதாய் அவர்களை கதை, கட்டுரை, கவிதை எழுதச் சொல்லி் அவற்றை ஒரு சிறு நூலாகப் பிரசுரித்தேன். அத்தனை ஆர்வமாக அந்தக் குழந்தைகள் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதித்தந்தார்கள். எங்கள் இதழுக்கு நம்பிக்கை என்று பெயரிட்டோம்.
அந்தக் குழந்தைகளில் 99.9% வறிய குடும்பங்க ளைச் சேர்ந்தவர்களே. அந்தக் குழந்தைகளில் பலர் சென்னையைச் சுற்றிப்பார்க்க டிக்கெட் இல்லாமல் வண்டியேறி மாட்டிக்கொண்டவர்கள். வறுமை காரணமாக சின்னச் சின்னக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். தாய் வேலைக்குப் போக தகாத கூட்டாளிகளோடு சேர்ந்து கெட்டுப்போகிறார்கள் குழந்தைகள் என்பதற்காய் அந்த வறிய தாய்களே இளங்குற்றவாளிகளுக்கான இல்லத்தி லேயே - இந்த இல்லங்களில் சைவ அசைவ உணவும், கல்வியும் கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் - தங்கள் குழந்தை இருக்கட்டும் என்று சேர்த்து விடப்பட்ட வர்கள்.
தொலைவாயிருந்த காரணத்தால் (அது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது) அங்கே தொடர்ந்து போக முடி யாத நிலை. ஒவ்வொரு முறை அந்தச் சிறார்க ளோடு சில மணிநேரங்கள் கழித்துவிட்டு வெளியே வரும்போது சில சிறுவர்கள் சின்னச்சின்ன காகிதத் துண்டு களில் அவர்கள் வீட்டுத் தொலைபேசி எண்களைத் தந்து “அம்மாவும் தம்பியும் நன்றாக இருக்கிறார் களா என்று கேட்டுச் சொல்லுங்கள் - என்னை வந்து பார்க்கச் சொல் லுங்கள்” என்று கேட்டுக்கொள்ளும் போது மனம் கனத்துப் போகும். அப்படிச் செய்வது சரியா சரியில்லையா என்ற கேள்வியெழும்.
அவர்களிடம் விடைபெற்றுக்கொள்ளாமலேயே அங்கே போவதை நிறுத்திக்கொண்டேன். ஏன் வரவில்லை என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று சமயங்க ளில் ஒரு குற்றவுணர்வு மனதில் எழும்.
16 - 18 வயதுகளிலிருப்பவர்களை தனியிடத்தில் வைத் திருப்பார்கள். அவர்களில் இரண்டு கொலை, மூன்று பாலியல் வன்கொடுமை செய்தவர் களும் உண்டு என்று விவரம் தெரிவிப்பார்கள் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகள். அவர்கள் மேஜரானதும் வெளியே வந்து விடமுடியும் என்ற அனுமானத்தில் அவர்களைக் குற்றச்செயல்களில் ஈடுபடச்செய்வோர் நிறையவே. இந்தக் கருப்பொருளை வைத்து உருவாகியிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வழக்கமான ஹீரோ வர்ஷிப்’ படமாகவே உருக்கொண்டது அதி அவலம்.
எப்படி ஆறு வயதுக்குட்பட்ட சின்னக்குழந்தைகளின் கல்வி, பள்ளிச் சூழல், வளர்ப்பு குறித்து - அவர்கள் வாக்கு வங்கிகள் அல்ல என்ற காரணத்தால், உரிய கவனம் செலுத்தப்படு வதில்லையோ, அதுபோலவே வளரிளம் பருவத்தினர் குறித்தும் உரிய கவனம் செலுத்தப்படு வதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்த இரண்டு வளர்ச்சிக் கட்டங்களுமே மனித வாழ்வில் நிலைத்த தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை என்று உளவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக் கிறார்கள்; வலியுறுத் திக்கொண்டிருக்கிறார்கள். ) வளரிளம்பருவத்தினரிடம் வெறுப்பை விதைப்பதிலும், கற்பனாதீதங்க ளையும் வேண்டாத வீரசாகசப் போக்கு களை வளர்ப்பதிலுமே சுயலாபங் கருதி முனைப்பாகச் செயல்படுவோர் பலர்.
சில பணிகள் வருமானமீட்டித்தரும் தொழிலாய் மட்டும் பார்க்கப்படாமல், பற்றுறுதியோடு ஆத்மார்த்தமாய் செய்யவேண்டியவை. சமூகப் பணி அவற்றில் ஒன்று. (ஆசிரியப்பணிபோல்)
தன்னார்வல சமூகப்பணியாளரோ, தொழில்முறை சமூகப்பணியாளரோ - சமூகவுணர்வும், மனிதநேயமும் இந்தப் பணியில் மிக அவசியம்.
(வருமானமீட்டும் தொழிலாக மட்டும் சமூகப்பணியை பாவிக்கும் தொழில்முறை சமூகப்பணியாளர்களைப் பற்றி ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை என்ற தனது நீண்ட சிறுகதையில் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் மனம் நொந்து அத்தனை கோபத்தோடு தொழில் முறை சமூகப்பணியாளராக இயங்கிய சமயம் தான் எதிர்கொண்ட அவலங் களைப் பற்றி எழுதியிருக்கிறார்)
தன்னார்வல சமூகப் பணி யாளராகவும், தொழில்முறை சமூகப்பணி யாளராகவும் சீரிய முறையில் பணியாற்றி யிருப்பவர், பணியாற்றி வருபவர் தோழர் மோகன் தாஸ். சுனாமி பேரழிவின் சமயம் இவர் ஆற்றிய தொண்டுகளை யும், பார்வையற்றவர்களுக்காக இவர் ஆற்றிய தொண்டுக ளையும் நான் பார்த்திருக்கிறேன். 1980 உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டபோது இவர் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வாசித்துக்காட்ட ஆட்கள் தேவை என்று குமுதத் தில் தெரிவித்திருந்ததைப் படித்துத்தான் நான் இவரைத் தொடர்புகொண் டேன். முதன்முதலில் திரு.ரவிக்குமாருக்கு வாசித்துக்காண்பிக்கத் தொடங்கி னேன்.
இப்போது கணிணி தொழில்நுட்பம் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் பாடபுத்தகங்களோடு வேறு பல புனைவு, அ-புனைவு புத்தகங்களையும் தாமாகவே படிக்க முடிவது மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.
தற்போது திரு. மோகன் தாஸ் வடசென்னை குழந்தை கள் நலக் குழுமத் தின் தலைவராகச் செயல்படுகிறார். இளங்குற்றவாளிக ளுக்கான சீர்நோக்கு நலவாழ்வு மையங்களைச் சேர்ந்த 6 முதல் 18 வயது வரையான சிறார்களுக்குப் படிப்பதற்கு ஏற்ற புனைவு, அ-புனைபுப் புத்தகங்களை நன் கொடையாகக் கிடைத்தால் உதவி யாயிருக்கும் என்று தெரிவித்தார். முடிந்தவர்கள் உதவலாம். அவருடைய வேண்டுகோளும் விலாசமும் கீழே தரப்பட்டுள்ளன.
புத்தகங்களை ஒரே முகவரியில் சேகரித்து மொத்தமா கத் திரு.மோகன் தாசிடம் சேர்க்கலாம். அல்லது கீழ்க் காணும் விலாசத்திற்கு நேரடியாக அனுப்பலாம். அனுப்பும் புத்தகங்கள் சிறார்களுக்கு நேர்மறையான எண்ணங்களைத் தருமளவில் அமைந்தால் நல்லது.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்
FROM
A. MOHAN DOSS
CHAIRPERSON
CHILD WELFARE COMMITTEE NORTH
CHENNAI
58, SURYANARAYARAN ROAD
ROYAPURAM
CHENNAI - 600013
Recently we had an interaction with some children in GOVT CHILDREN HOMES. JUVENILES. TO CHANGE THEIR ATTITUDE WE HAD A DISCUSSION ON READING BOOKS AND THE USE OF LIBRARY. THEY ARE WILLING TO READ BOOKS REGULARLY. A SUGGESTION CAME OUT FROM THE CHILDREN THAT THEY WANT MORE BOOKS ON TAMIL POEMS ESPECIALLY FOR CHILDREN. STORY BOOKS ARE ALSO NEEDED. AGE GROUP 5 TO 18 YEARS. SO WE ARE APPEALING TO THE BOOK LOVERS TO SEND THEIR USED BOOKS FOR THESE CHILDREN.
(சமீபத்தில் நாங்கள் இந்தக் குழந்தைகளோடு ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டோம். அப்போது அவர்கள் புத்தகம் படிப்பதில் தங்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். எனவே முடிந்தவர்கள் புத்தகங்கள் அனுப்பித் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மோகன் தாஸ்
தலைவர்
வட சென்னை குழந்தை நலக் குழுமம்
...............................................................................................................................
No comments:
Post a Comment