LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

நடிகை பாவ்னாவின் நீதிக்கான போராட்டம்

 நடிகை பாவ்னாவின்

நீதிக்கான போராட்டம்

தமிழாக்கம்

லதா ராமகிருஷ்ணன்

 

[தி நியூஸ் மினிட் இணைய இதழில் வெளிவந்த பேட்டி யின் தமிழாக்கம் - மொழிபெயர்த்து வெளியிட தி நியூஸ் மினிட் ஆசிரியர் தான்யா ராஜேந்திரனிடம் அனுமதி பெற்றுத்தந்த சக கவிஞர் லீனா மணிமேகலைக்கு நன்றி. அனுமதியளித்த தான்யா ராஜேந்திரனுக்கும் நன்றி. - லதா ராமகிருஷ்ணன்]

வலுவான ஆதரவுக் கட்டமைப்பு இல்லாமல் அநீதியை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினம் என்கிறார் நடிகை பாவ்னா. 2017இல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து இத்தனை வருடங்களாக நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார். பணி முடிந்து வீடு திரும்பும்போது ஒரு காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அது வீடியோப் படமும் எடுக்கப்பட்டு ….. ஆனால் அந்தக் கயவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பாவ்னா தைரிய மாகச் சென்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தக் கொடூர செயலின் பின்னணியில் முக்கிய நடிகரொருவர் இருப்பதால் வேறு பல தொல்லைகள் ஏற்படுவதும் வழக்கு தாமதமாவதும் தவிர்க்கமுடியா ததாய்…. இவ்வருடம் மகளிர் தினத்தை யொட்டி நடிகை பாவ்னாவின் விரிவான பேட்டிதனக்கு நேர்ந்த கொடுமைக்குப் பிறகு இத்தனை வருடங்களில் இவருடைய முதல் நேர்காணல் இதுபார்க்கா தத் மூலம் வெளியாகியிருந்தது. மிகவும் ஆழமான கேள்வி கள்மிகுந்த புரிந்துணர்வோடு சகமனித நேயத்துடன் வெகு கவனமாகத் தெரிவுசெய்த சொற்களாலா னவை. பாவ்னாவை கேள்விகளால்மீடியா ட்ரையல்செய்யா மல் தன் மனதிலுள்ளவற்றை பேசவிட்டு தன் கேள்வி களை சுருக்கமாகவே அமைத்திருந்தார் பார்க்கா தத்.

 

அதன் பின் இந்தப் பேட்டி. தி நியூஸ் மினிட் ஆன் லைன் இதழில் அதன் பொறுப்பாசிரியர் தான்யா ராஜேந்திரன் செய்த நேர்காணல். குறிப்பிடத்தக்க இந்த இரண்டு பேட்டிகளையும் சக கவிஞர் லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக் டைம்லைனில் படிக்க நேர்ந்தபோது இவற்றை முடிந்தால் தமிழில் மொழிபெயர்த்து இங்கே இன்னும் நிறைய பேரை எட்டச்செய்யலாமே என்று தோன்றியது. ஏனெனில் தமிழ்ச்சூழலில் மீ டூ இயக்கம் தந்த மனவலி மையில் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு நேர்ந்த, இன்னும் நேர்ந்துகொண்டிருக்கிற பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைப் பற்றிப் பேசிய பெண்களுக்கு ஆதரவை விட அதிகமாக புறக்கணிப்பும் பரிகாசமுமே அதிகமாயிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட பெண்களால் பொதுவெளியில் அப்படி அடையாளங் காட்டப்பட்ட ஒருவருக்கு அரசே பாராட்டுவிழா நடத்துகிறது. தங்க ளுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேசிய பெண்கள் பல வகையிலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பாடகர் சின்மயி, கவிஞர் லீனா மணிமேகலை முக்கிய எடுத்துக் காட்டுகள். இத்தகைய அவலச் சூழலில் இந்தப் பேட்டி யைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அதற்குரிய அனுமதி வாங்கித் தந்த கவிஞர் லீனா மணிமேகலைக்கும் அனுமதியளித்த தான்யா ராஜேந்திரனுக்கும் என் நன்றி உரித்தாகிறது.

 

இனி பேட்டி:

 

(2017இல் தனக்கு நிகழ்ந்த கொடுமையை எதிர்த்து காவல் துறையில் புகார் அளித்து வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார் பாவ்னா. ஆனாலும் இதுவரை பேட்டியென்று எதுவும் அளிக்கவில்லை. மலையாளம் சினிமாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த முகங்களுள் ஒன்று பாவ்னா வின் முகம். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் அவர் விளம்பரப்படங்களில் பத்திரிகை அட்டை களில் அவர் இடம்பெற்றிருந்தாலும் பிப்ரவரி 2017இல் தனக்கு நேர்ந்த தைப் பற்றிப் பேசவேயில்லை. ஆனால், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கு சற்று முன்பாக பாவ்னா தனது மௌனத்தைக் கலைக்க முடிவுசெய்து பேட்டிய ளித்தார். இந்த சமூகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணையே மேலும் மேலும் மதிப்பழிக்கும் புறக்கணிக்கும் போக்கே பரவலாக நிலவுகிறது. இந்த அநீதியை செய்தவர்கள் அதற்காக தலைகுனிவதில்லை. மாறாக, அநீதிக்காளானவர்களே அதிகமாக அவமானப் படுத்தப்படுகிறார்கள். இந்தச் சூழலில் பாவ்னா தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பற்றிப் பேச முடிவெடுத் திருப்பது. பாலியல் துன்புறுத்தல் குறித்த ஆணாதிக்க சமூகக் கண்ணோட்டங்களுக்கு எதிரான போரில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

தி நியூஸ் மினிட்என்ற ஆங்கில இணைய இதழுக்கு பாவ்னா அளித்திருந்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது:

 

கேள்வி (தான்யா ராஜேந்திரன்: சுமார் ஐந்து வருடங்களாக நீங்கள் உங்களுக்கு நேர்ந்ததைப் பற்றியோ, அது தொடர்பாக நடந்துகொண்டிருக் கும் வழக்கு பற்றியோ எதுவுமே சொன்னதில்லை. இந்த வருடம் ஜனவரியில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிடுகிறீர்கள், சமீபத்தில் சில ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுத்திருக்கிறீர்கள். மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு எதிராய் நடிகர் திலீப் அளித்திருக்கும் மனு குறித்து முடிவெடுப்பதற்கு முன் உங்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறீர்கள்? உங்களுடைய இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? எது மாறியது? எது உங்களை மாற்றியது?

 

பாவ்னா: என்னுடைய முடிவு திட்டமிட்ட ஒன்றல்ல. வழக்குவிசாரணை ஆரம்பமானவுடன் அது ‘ an in-camera trial’ ஆக இருக்கும்நீதிபதியின் முன்னிலையில் தனியறையில் நடக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நான் பொதுவெளியில் எதைப் பேசலாம் எதைப் பேசக் கூடாது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் டிசம்பர் 2021 சமயம் ஒருவர் (இயக்குனர் பாலசந்திரகுமாரைக் குறிப்பிடுகிறார் பாவ்னா) சில தகவல்களை முன்வைக்கிறார். தவிர இத்தனை வருடங் களில் பலர் என்னிடம் மௌனமாக இருக்கலாகாது என்று பலமுறை கூறியிருக்கிறார்கள். எனக்குத்தான் பயமாக இருந்தது. சில விஷயங்களுக்கு எதிராகக் குரலையுயர்த்தினால் அது வழக்குக்கு பாதகமாக அமை யுமோ என்று நினைத்தேன். ஆனால், இந்த மனிதர் சில தகவல்களோடு வந்தபோது மீண்டும் மக்கள் ஆதரவு எனக்காகப் பெருகியது. ஒருவேளை அவர்கள் இந்த வழக்கு முடிந்துவிட்டது என்று நினைத்திருக்கலாம். தந்திரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று கருதியிருக் கலாம்.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மக்களிடமிருந்து அத்தனை அன்பும் ஆதரவும் கிடைத்துக் கொண்டிருக் கிறது. என்னை ஆதரிக்கும் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிப்பது மிகவும் முக்கியமாகப் பட்டது. அதனால் தான் என் இன்ஸ்டாகிராம் பதிவு.

என்னுடைய நேர்காணலும் திட்டமிட்டதல்ல. சர்வதேச மகளிர் தினத்தன்று பேசச்சொல்லி பர்க்கா தத் என்னை தொடர்புகொண்டார். நான் தயங்கினேன். வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் எதைப் பேசலாம் எதைப் பேச லாகாது என்று தெரியவில்லை. ஆனால், இந்த வருடங்களை நான் எப்படிக் கடந்தேன் என்பதைப் பற்றி மட்டுமே நான் பேசினால் போதும் என்று என்னிடம் கூறப்பட்டது. இனியும் மௌனமாக இருக்கலாகாது. நான் பேச வேண் டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவுசெய்தேன். என் மனம் என்னவெல்லாம் அனுபவிக்கிறது, எப்படியெல் லாம் அலைக்கழிகிறது என்று பெரும்பா லோரால் உணர முடியாது. என்னுடைய மகிழ்ச்சியான படங்களை மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங் களில் என்னுடைய மகிழ்ச்சியான பதிவுகளைப் படிக்கிறார்கள். ஆனால் அது என் வாழ்க்கையல்ல. நிறைய துயரம் அனுபவித்துவிட்டேன். என்னுடைய நட்பினருக் கும் உறவினர்களுக்கும் இது தெரியும். என்னுடைய உணர்வுகளை அவ்வளவு எளிதாக வெளிப் படுத்திவிடுப வளல்ல நான். அதனால்தான் இந்த வருடங்களிலான என்னுடைய பயணத்தை பற்றிப் பேச விரும்பினேன். இது எளிதல்ல என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் பேசித்தானாக வேண்டும்.

 

கேள்வி: நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்ட அன்று, புகார் கொடுப்பதென்று நீங்கள் முடிவுசெய்த போது உங்கள் மனதில் என்னவெல்லாம் ஓடிக்கொண்டருந்தது? இத்தனை திருப்பங்களையும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

 

பாவ்னா: அதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலை யில் நான் இல்லை. எனக்கு என்ன நடந்தது என்று மீண் டும் மீண்டும் குழப்பத்தோடு எண்ணிக் கொண்டிருந் தேன். நடந்ததெல்லாம் உண்மையிலேயே நடந் ததா என்று என்னையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண் டிருந்தேன். அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். நியாயமற்ற ஒன்று எனக்கு நடந்துவிட்டது என்ற நினைப்பு மட்டுமே என்னில் மேலோங்கியிருந்தது. அது குறித்து புகார் தர விரும்பினேன். அதற்கு மேல் நான் வேறெதையும் எண்ணவில்லை. உண்மையிலேயே அது நடந்ததா? உண்மையாகவா என்று என்னை நானே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் அப்பா இறந்த போதும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது. உண்மை யிலேயே அது நடந்ததா? உண்மை யாகவா என்று என்னை நானே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண் டிருந்தேன்.

 

 

கேள்வி: நேர்ந்த பாதிப்பில் நிலைகுலைந்துபோகாமல் துணிச்சலாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்! உங்கள் நேர்காணலில் நீங்கள் நிரபராதி என்பதாய் நிரூபிக்கவேண்டியிருந்தது என்று கூறியதன் காரணம் என்ன? அதுதான் ஆகக் கடினமான விஷயமாக இருந் ததா?

 

பாவ்னா: ஒருவர் நீதிமன்றத்துக்குப் போகும்போது, நடந்த உண்மையைச் சொல்லிவிட்டால் போதும் என்று நினைத்துக் கொண்டுதான் போகிறார். ஆனால் நீதிமன் றத்தில் நடந்ததோ நான் சற்றும் எதிர்பார்க்காதது. நடந்தவையெல்லாம் நானே திட்டமிட்டுச் செய்ததாக, நாடகமாடியதாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றின் வழியாகநேரிடையாகவும் மறைமுகமாகவும் குறிப்புணர்த்தப்பட்டது. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஆனால், எனக்கு நடந்த அநீதி பொய்யல்ல என்று நிரூபிக்கும் பொறுப்பு என்னுடைய தாக்கப்பட்டது. என்ன இது இப்படியெல்லாம் கேட்கிறார்களே என்று மனப்போராட்டமும் மன அழுத்தமும் என்னைச் சூழ்ந்தது. எதனால் இப்படிக் கேட்கிறார்கள் என்று திகைத்துநின்றேன். நீதிமன்றத்தில் மட்டுமல்ல வெளியே கூட பலர் என்னிடம் ஏன் அந்த வேளையில் வெளியே போனீர்கள் என்று கேட்டார்கள். காலை 10 மணிக்கு வெளியே செல்லும் பெண் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகமாட்டாள் என்று எண்ணுகிறீர்களா?’ என்று என் மனம் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும்.

 

கேள்வி: சமூக வலைத்தளங்களில் உங்கள் மீதான அவதூறுகள் திட்டமிட்ட ரீதியிலும் தன்னிசையாகவும் எழுந்தவண்ணமிருக்கின்றன. குறிப்பிட்ட சில ஊடக நிறுவனங்களும் ஊடகவியல் சார் நெறிமுறைகளை மீறிய அளவில் உங்களைப் பற்றிய அவதூறுகளை அள்ளிவீசியிருக்கின்றன. இவையெல்லாம் உங்களை சோர்ந்துபோக, நம்பிக்கையிழக்கச் செய்தனவா?

 

பாவ்னா: இது குறித்து எனக்கு இப்போது நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கிறது. நம்மில் மிகச் சின்ன அளவு எண்ணிக் கையில் இப்படி எல்லோரையும் வசைபாடுபவர்களாக எல்லோரிடமும் குரூரமாக நடந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகவும் பிரபலமான அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட இத்த கைய வசைபாடல்களுக்கு ஆளாகியிருக் கிறார்கள். எனவே, நான் மட்டுமே அவர்களுடைய வசைபாடலின் இலக்கு அல்ல. இத்தகைய அவதூறுக்கூற்றை அனுப்பிய ஒருவர் மீது நான் வழக்கும் தொடுத்திருக்கிறேன். இத்த கைய நபர்களுக்கு மற்றவர்களை குரூரமாக நடத்துவது மிக எளிதான காரியமாக இருக்கிறது. கைபோன போக் கில் எதை யாவது குரூரமாக தட்டச்சு செய்து அதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இத்தகை யோரின் மன நிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இவர்களுடைய அவதூறுப் பேச்சுகளை எனக்கானதாகக் கொண்டு அவற்றால் பாதிக்கப்படுவதிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளவே முயல்கிறேன்.பல சமயங்கள் நம்பிக்கையிழந்து மனம் சோர்ந்துபோனதுண்டு. கேரளாவிலிருக் கும் சில தொலைக்காட்சி சேனல்களும் ஊடக நிறுவனங்களும்கூட என்னைப் பற்றிய தவறான எதிர் மறையான செய்திகளை வெளியிட்டு என்னை மதிப் பழித்தன. ஒருவேளை இன்னொருவர் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கைதட்டி ஆர்ப்பரிப்பதும், மகிழ்ச்சியடைவதும் அவர்களுக்கு சரியென்று தோன்று கிறதோ என்னவோ? ஆனால் இந்தவிதமான மனிதர் களும், இந்தவிதமான எதிர்மறையான அணுகுமுறைகளும் பெருங்கடலில் ஒரு துளி மட்டுமே. நேர்மறையான அணுகுமுறைகளின் மீதே எனக்கு ஆதரவளிக்கும் மக்களின் மீதே என் முழுக் கவனமும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

 

கேள்வி: 2017 முதல் ஆஷிக் அபு, ப்ரித்விராஜ் ஷாஜி கைலாஸ் போன்ற திரைத்துறையைச் சேர்ந்த பலர் தங்கள் படங்களில் நடிக்கச்சொல்லி உங்களை அணுகி யிருக்கிறார்கள். திரைத் துறையைச் சேர்ந்த அத்தகைய மனிதர்களைப் பற்றிக் கூறுங்கள்.

 

பாவ்னா: 2017க்குப் பிறகு நான் மலையாளம் திரையுலகிலிருந்து விலகி யிருக்க விரும்பினேன். ஆனால் என் நட்பினரும் திரைத்துறையைச் சேர்ந்த சக கலைஞர்க ளும் அப்படிச் செய்யலாகாது என்று என்னிடம் கூறினார் கள்.ப்ரித்விராஜ்., இயக்குநர் ஜினு ஆப்ரஹாம், ஷாஜி கைலாஸ் மூவரும் அவர்கள் கூட்டாக உருவாக்கப் போகும் திரைப்படம் ஒன்றில் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டார்கள். பெங்களூருவிலிருக்கும் என்னு டைய இடத்துக்கு பாபுராஜ் வந்து நான் ஒடுங்கியிருக்க லாகாது என்றார். அனூப் மேனன் பெங்களூருவிலேயே தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை வைத்துக்கொள்வ தாகச் சொன்னார். ஆஷிக் அபு இரண்டு திரைப்படங்களில் என்னை ஒப்பந்தம் செய்ய முன்வந்து நான் மீண்டும் மலையாளத் திரை யுலகிற்கு வரவேண்டியது அவசியம் என்றார். நடிகர் நண்டு நான் எதனால் விலகியிருக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டவாறிருந்தார். இயக்கு நர் ஜீன் பாலும் கேட்டவண்ணமிருந்தார். இயக்குநர்கள் பத்ரனும் ஹரிஹரனும் தங்களிடம் எனக்கேற்ற பெண் பாத்திரத்தை மையமாகக்கொண்ட திரைக்கதை இருப்ப தாகவும் அதை நான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டு மென்றும் என்னிடம் வலியுறுத்தினார்கள். ஒருமுறை நடிகர் ஜெயசூர்யா திருச்சூரில் படப்பிடிப்புக்கு வந்திருந் தார். அது என்னுடைய பிறந்த நாள் என்று நினைக்கி றேன். அவர் ஒரு கேக்கை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் படி என்னை உத்வேகப்படுத்த முயன்றார். திரைப்படக் கலைஞர் விஜயபாபுவும் ஒரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார். நடிகர் மது ஒரு நல்ல கதை இருக்கிறதென் றும் அதை நான் கட்டாயம் படிக்கவேண்டுமென்றும் மூன்று மாத காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

கேள்வி: அப்படியென்றால் இத்தனை பேர் உங்களிடம் ஆதரவாக வந்து பேசியும் ஊக்கமளித்தும் எதனால் மலையாளப் படங்களிலிருந்து ஒதுங்கியிருக்கிறீர்கள்? நீங்கள் கன்னடத் திரையுலகில் மும்முரமாகப் பணியாற் றிக்கொண்டிருக்கிறீர்கள்?

 

பாவ்னா: எதனால் விலகியிருக்க விரும்பினேன் என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. அந்த உணர்வை என்னால் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட இயலாது. கேரளாவிலிருந்து தள்ளியிருக்கிறேன், பெங்களூரு வில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக் கிறேன் என்பதாக உணர்ந்தேன். மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வது புதிய விவாதங்களைத் தொடங் கும் என்று நான் எண்ணியிருக்கலாம்.

 

கேள்வி: ஆனால், மலையாளத் திரைப்படவுலகம் முழு மையாக எவ்வித நிபந்தனையுமின்றி உங்கள் பக்கம் நின்றிருந்தால் _ நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தி ருப்பீர்கள் என்று எண்ணுகிறீர்களா?

 

பாவ்னா: அந்த நிகழ்வுக்குப் பிறகு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து கொச்சியில் அந்தக் கூட்டத்தை நடத்தியபோது என் மனம் எல்லோருக்கு மான நன்றியால் நிரம்பியிருந்தது. ஆனால் விரைவி லேயே அவர்களில் சிலர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார்கள். உண்மையைச் சொல்வோம் என்றவர்கள் பின்வாங்கினார்கள். நான் யாரை யும் சுட்டிக்காட்டிக் குறைகூற விரும்பவில்லை. ஒவ்வொரு நாள் காலையும் யார் என்னை ஆதரிப்பார் கள், யார் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை எண்ணிய படியே நான் விழித்தெழ முடியாது. அவரவர்களுக்கென் றிருக்கும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளை அவர்கள் மேற்கொள்ளுகிறார்கள். திரையுலகம் முழுவ துமே என்னோடு நிற்கும் என்றெல்லாம் எண்ணி நான் புகார் தரவில்லை. மீண்டும் மலையாளத் திரையுலகிற்கு வருவது எனக்கு எளிதாக இருக்க வில்லை. முதலில் அதற்கான மனநிலை என்னிடமிருக்கவில்லை. எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல் என்னால் இங்கே தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை. ஆனால், இப்போது ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அது குறித்த விவரங்கள் விரைவில் வரும்.

 

கேள்வி: உங்களுடைய சிநேகிதிகளைப் பற்றிக் கூறுங்கள்?

 

பாவ்னா: இந்த நட்புறவுகள் எனக்கு மிக மிக முக்கிய மானவை; மூலா தாரமானவை. இவர்களிடம் நான் ஏறத்தாழ தினமுமே பேசுகிறேன். அடிக்கடி இவர்கள் தான் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள்; துணை நிற்பவர்கள். கீது மோகந்தாஸ், சம்யுக்தா வர்மா, மஞ்சு வாரி்யர், ரெம்யா நம்பீசன், ஸயனோனாரா ஃபிலிப், ம்ருதுளா முரளி, ஷில்பா பாலா, ஷாஃப்னா ஆகியோரி டம் நான் தினமும் பேசுவேன். வேறு பலரும் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறார்கள். அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி என் நலம் விசாரிப்பார்கள். எனக்காக பிரார்த்தனை செய்வதாகச் சொல்வார்கள். ரேவதி, ஒப்பனைக் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமார் மற்றும் ஜீனா போன்றவர்கள். டப்பிங் கலைஞர் பாக்யலஷ்மி எனக்காக நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் தந்தவர்; தருபவர்; பல்வேறு இடங்களில் எனக்காகப் பேசியிருப் பவர். நம் அம்மா அல்லது சகோதரியைப்போல.

 

பின், திரைத்துறைப் பெண்கள் கூட்டமைப்பு (Women in Cinema Collective) இருக்கிறது, அவர்கள் எனக்காகப் போராடியவர்கள். அதன் காரணமாய் இவர்களில் பல பெண்களுக்கு திரைத் துறையில் கிடைத்துவந்த வாய்ப்பு கள் இல்லாதுபோயிற்ரு. இது மிகவும் வருத்தமளிக் கிறது. எனக்கு ஆதரவாய் நின்றார்கள் என்பதற்காக இப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். இவர்களைப் பற்றி நினைத்தாலே மனம் நெகிழ்ந்து போகிறது எனக்கு. இவர்களெல்லோருமேஅஞ்சலி மேனன், தீதி தாமோதரன் வேறு பலரும் எனக்கு அத்தனை உறுதியான ஆதரவளித்தார்கள்; பக்கபலமாய் நின்றார்கள். சக கலைஞர்களான மியா, நவ்யா நாயர், பார்வதி, பத்மப்ரியா, ரிமா, அனுமோல், கவிதா நாயர், கிருஷ்ணப்ரபா, ஆர்யா பதாய், கனி குஸ்ருத்தி ஆகியோர் அனைவருமே எனக்குத் துணையாய் நின்றார்கள்.

கேள்வி சினேகிதிகளைப் பற்றியது என்றாலும் ஆதரவ ளித்தவர்கள் என்றூ நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த நன்றியோடு நான் நினைவுகூர்வது நாடாளுமன்ற உறுப் பினர் பி.டி.தாமஸை. எனக்கு நேர்ந்த கொடுமை யைப் பற்றி நான் முதலில் கூறியவர்களில் அவரும் ஒருவர். நியாயம் கிடைக்க நான் போராடவேண்டும் என்று ஆரம பம் முதலே அவர் மிகத் தெளிவாகவும் உறுதி யாகவும் இருந்தார். உண்மை ஜெயிக்கும் என்று எப்பொழுதும் என்னிடம் கூறுவார்.

 

என்னுடைய் நெருங்கிய நண்பன் ஷன்மீம், ஃபிலிம்ஃபேர் ஆசிரியர் ஜிதேஷ் பிள்ளைஎப்பொழுதுமே எனக்கு நம்பிக்கையூட்டும் குறுஞ்செய்திகளை அனுப்ப நேரம் ஒதுக்கிக்கொள்பவர்ஆஸிஃப் அலி, குஞ்சக்கோ, டோவினோ, சுப்ரியா, ப்ரித்வி ராஜ்நான் எப்படியிருக்கிறேன் என்று அடிக்கடி நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்பவர், - என்னோடு எப்போத்மே இருக்கும் லிஸி பிரியதர்ஷன், சூர்யா கிருஷ்ணமூர்த்தி (கலை-பண்பாடு களப்போராளி) என்னை அழைத்து நம்பிக்கை இழக்கக் கூடாது என்று அறிவுறுத்தி நியாயத்திற்காகப் போராட எனக்கு உத்வேகமளிப்பார். இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகி தப்பிப்பிழைத்திருக்கும் நபர்களை வார்த்தை களால் தாக்குகின்றவர்களைப் பற்றியே நாம் அடிக்கடி படிக்கிறோம். அதைவிட, பாதிக்கப்பட்டவர் களுக்கு உறுதுணையாக அவர்களது நியாயத்திற்கான பயணத் தில் கூட வருபவர்களைப் பற்றி, அவர்கள் தங்களுக்கு முடிந்த எந்த வழியில் ஆதரவுக்கரம் நீட்டினா லும், நாம் பேசவேண்டியது இன்றியமையாதது. அப்படி எனக்கு ஆதரவுக்கரம் நீட்டிய வர்களின் பட்டியல் மிக நீளமானது. அந்தப் பட்டியலை நேர்காணலில் நான் கூறிவிட இய லாது. நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புவ தெல்லாம் இதுதான்: நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து ஆதரவுக்குரல்கள் எழுவது , மிக மிக முக்கியமானது.

 

கேள்வி: இவ்வகையான கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டுவந்து அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உறுதியான ஆதரவுக் கட்ட மைப்பு எத்தனை முக்கியமானது?

 

பாவ்னா: என்னுடைய கணவர், குடும்பம், நட்பினர், பல சக கலைஞர்கள் ஆகியோருடைய ஆதரவில்லாமல் நான் போராடுவது என்பது கற்பனைசெய்யவும் முடியா தது. இந்த ஆதரவுக் கட்டமைப்பு இல்லாமல் அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கான துணிச்சலை நான் பெற்றி ருப்பேனா என்பது சந்தேகமே. என் மனம் சோகமாக, பலவீனமாக இருக்கும்போது என்னைச் சுற்றி எனக்கான ஆதரவுக்குழுவினர் இருக்கிறார்கள். சோகமாக இருக் காதே என்கிறார்கள். நான் தவறில்லை; தவறிழைக்கப் பட்டவள் என்பதை அவர்கள் எனக்கு நினைவுபடுத்து கிறார்கள். எதிர்மறையான மனப்போக்கு டையவர்கள், முடியாது நடக்காது என்று சொல்பவர்கள் 2 அல்லது 3%தான் மற்றவர்கள் என்னை ஆதரிப்பவர்கள். மேலும், என்னைச் சுற்றி கண்ணுக்குப் புலனாகாத ஒரு சுவர் இருக்கிறது. இந்த வழக்கைப் பற்றி தினசரி விவரம் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அதைத் தாண்டி எனக்கு குடும்பம் இருக்கிறது வேலை இருக்கிறது. விசார ணையை நான் மட்டுமே தன்னந்தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் என் பணியில் ஈடுபட்டிருக்கும் நாட்களில் அதில் மட்டுமே நான் கவனம் செலுத்தவேண்டிய தேவையிருக்கிறது. வழக்கு விசாரணை தொடர்பான எதையும் எனக்கு அனுப்பவேண்டாம் என்று சில பேரிடம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் என் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் அந்தத் தகவல்களைத் தருகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனாலும், 365 நாட்கள் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும் அதில் நான் கவனம் செலுத்த வேண்டும் அதையே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்பது என்னை மூச்சுத்திணற வைக்கிறது. என் நட்பினரும் குடும்பத்தினரும் என்னுடைய இந்த அலைக் கழிப்பைப் புரிந்து கொள்கிறார்கள். நான் அந்த விஷயங்களிருந்து ஒதுங்கி யிருக்கவேண்டிய தேவையைப் புரிந்து கொள்கிறார்கள். என்னுடைய சுவரையும் புரிந்துகொள்கி றார்கள்; எனக்கான அந்த வெளியை மதிக்கிறார்கள்.

 

கேள்வி: வழக்கு விசாரணை இந்த வருடங்களில் எத்தனையோ மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்திருக்கிறது. நியாயம் கிடைக்கு மென்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

 

பாவ்னா: பலர் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டார் கள். இந்த வழக்கை முறியடிக்க எத்த னையோ சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பாக என்னையே குற்றம்சாட்டிக்கொள்ளும் மனப் போக்கு என்னிடம் இருந்தது. ஆனால் நீதிமன்றம் சென்று எல்லாவற்றை யும் வெளிப்படையாகக் கூறிவிட்ட பிறகு எதற்குமே நான் குற்றம்சாட்டப்பட வேண்டியவளல்ல என்ற வலுவான தெளிவும் புரிதலும் எனக்குக் கிடைத்தி ருக்கிறது. நான் தவறிழைக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவள். எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடிக் கொண்டி ருப்பவள். ஆம்! எனக்கு நியாயம் வேண்டும்.

 

(குறிப்பு: சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலோடு இந்த நேர்காணலும் அவருடைய புகைப்படமும் வெளியிடப் படுகிறது).

 

No comments:

Post a Comment