LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 1, 2022

அகங்காரம் அறியாமை அன்னபிற….. 2 லதா ராமகிருஷ்ணன்

 அகங்காரம் அறியாமை அன்னபிற….. 2

லதா ராமகிருஷ்ணன்
முன்பெல்லாம் நிறைய இலக்கியக் கூட்டங் களுக்குச் செல்வேன். அந்தக் கூட்டங்களிலெல் லாம் தவறாமல் இன்னொருவரையும் பார்க்க நேரிடும். என்னைப்போல் இலக்கிய ஆர்வலர் போலும் என்று எண்ணிக் கொள்வேன்.
ஒருமுறை கூட்டம் முடிந்ததும் வேகவேகமாக என்னி டம் வந்து டெமி ஸைஸில் சன்னமாயிருந்த ஒரு புத்தகத்தைத் தந்தார். அதிகார தொனியில் ‘இது நான் நடத்தும் சிறுபத்திரிகை. இனிமேல் இதிலும் எழுதுங்கள்’ என்றார்.
சில பக்கங்களைப் புரட்டியபோதே தெரிந்தது – அதன் மேம்போக்கான இலக்கியத்தனம்.
“இல்லேங்க நான் முடிஞ்சப்ப எழுதுவது. அவ்வளவுதான்’ என்று நாசூக்காய் மறுத்தேன்.
“அந்த இதழ்களுக்கெல்லாம் எழுதறீங்க – இதுக்கு எழுதக் கூடாதா? என்று அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு சில சிற்றிதழ்களின் பெயர்களைக் குறிப்பிட்டு” அதட்டும் குரலில் வற்புறுத்தினார்.
சிலரிடம் நாசூக்காகப் பேசிப் பயனில்லை.
மன்னிக்கணும். அளவில் சின்னதாக இருப்பதெல்லாம் சிற்றிதழல்ல” என்று சொல்லி அவர் முகம் சிறுத்து சினமேறிச் சிவப்பதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து அகன்றேன். அன்றுமுதல் நான் அவருக்கு ஆன்ற எதிரி!
நான் பெரிய ‘சிறுபத்திரிகையுலக முத்திரை எழுத்தாள ரெல்லாம் கிடையாது. அதற்காக சிறுபத்திரிகையென் றால் அளவில் சிறியதாக இருக்கும் என்று எண்ணுமளவு அத்தனை அஞ்ஞானியுமல்லவே!

No comments:

Post a Comment