LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 4, 2026

‘சினிமாவின் ஆன்மா’ சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்

 

‘சினிமாவின் ஆன்மா’

சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்

கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் குறித்து …….

 _ லதா ராமகிருஷ்ணன்


 

(July 6, 2026 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)

 ………………………………………………………………………………………………………………………………………….வெளியீடு: சந்தியா பதிப்பகம்

 விலைரூ.180

 தொடர்பு எண்: 044 24896979 / 98409 52919

…………………………………………………………………………………………………………………………………………

 ஒப்புநோக்க, சினிமாவைப் பற்றிய நூல்கள் குறைவு எனலாம். ஆனால், சினிமா வந்த நாளிலிருந்தே அது மக்கள் மனங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திவருவது கண்கூடு. சினிமா ரசனை, சினிமா ரசனையை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம், சினிமாவும் சமூகமும் என எத்தனையோ தலைப்புகளில் ஆழமான வாசிப்புக்குரிய சினிமா தொடர்பான விஷயங்களை எழுத முடியும். நல்ல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும், இன்னும் நிறைய எழுதப்படவேண்டும்.

 அதுவும் சினிமா என்ற பிரம்மாண்ட கலைவடிவால் ஈர்க்கப்பட்டு, அதேசமயம் அந்தக் கலைவடிவத்தை மனித மேம்பாட்டுக்காக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட வர்கள், சினிமா குறித்த தங்களது அறிவையும், ரசனையையும் வளர்த்துக்கொள்வதில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சினிமா குறித்து   எழுதும் நூலின் மூலம் சினிமாவின் பல பரிமா ணங்களையும், சாத்தியப்பாடுக ளையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். அத்தகைய ஒரு நூலாக சமீபத்தில் சென்னை, சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள சினிமாவின் ஆன்மாவைக் கூற முடியும்.

தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத்தக்க பெயர்களில் இயக்குனர் சீனு ராமசாமியும் ஒன்று. சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்குனர். சிறந்த கவிஞரும் கூட. இதுவரை இவரது 13 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஒன்பது திரைப்படங்களை இயக்கி யுள்ளார். இந்த நூல் அவருடைய மூன்றாவது கட்டுரைத்தொகுப்பு.

 நூலாசிரியர் குறித்து பதிப்பாளர் சந்தியா நடராஜன் (இவர் சிறந்த எழுத்தாளரும்கூட!) எழுதியுள்ள ‘நிலத்தின் கலைஞன்’ என்ற தலைப்பிலான முன்னுரை குறிப்பிடத்தக்கது.

 உலக சினிமா என்பது எங்கோ அந்நிய தேசத்தில் எடுக்கப்படுவது அல்ல. உலக சினிமா என்பது உள்ளூரில் எடுக்கப்படும் நேர்த்தியான சினிமா என்ற தனது முத்திரை வாசகத்தை மீண்டும் வலியுறுத்தி ஒளிகளின் மொழி என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதியுள்ள ‘என்னுரை’யும் சிறப்பா னது. “ரசனை மிகுந்த மனிதன் இந்த சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஒருவனாக இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் ஆழமாக நம்புகிறேன். நமது பார்வையாளர் கள் வெறும் திரை யில் தோன்றும் உருவங்களுக்கு விசில் அடிப்பவர்களாக மட்டும் நின்று விடாமல், அந்த உருவங் களுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மாவை தரிசிப்பவர்களாக மாறவேண்டும்” என்று கூறுபவர், ‘இந்த நூல் ஒரு சிறு முன்மாதிரி நூல் மட்டுமே. இதை ஒரு மூல மாகக் கொண்டு, பாடங்களில் திரைப்படங்களின் எண்ணிக் கையை நாம் இன்னும் கூட்டிக்கொள்ளலாம். உலக சினிமாக் களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு எளிய வழி வகையாக இந்தப் படைப்பு இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. வாழ்க்கை என்பது ஒரு முடிவற்ற திரை. அதில் நாம் ஓட்டும் படங்கள் யாவும் பேரன்பால் நெய்யப்படட்டும்’ என்று ஒரு திரைப்பட இயக்குனராகத் தன் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவித்துவமாக வெளிப்படுத்தி யிருக்கிறார்.

இந்த நூலின் சிறப்பம்சம் குழந்தைகளை பிரதான கதாபாத்திரங் களாகக் கொண்ட உலகத்தரமான 15க்கும் மேற்பட்ட திரைப்படங் களை அறிமுகம் செய்திருப்பது. அவை எதனால் சிறந்த படங்கள் என்று தேர்ந்த ரசிகர் பார்வையில் எடுத்துரைத்திருக்கிறார் நூலா சிரியர். ஒவ்வொரு படத்தைப் பற்றிப் பேசும்போதும் குழந்தைகள் பால் நூலாசிரியருக்கு உள்ள மெய்யான அக்கறை வெளிப்படு கிறது. எடுத்துக்காட்டாக, THE RED BALLOON என்ற , 1956இல் வெளி யான படம் குறித்த கட்டுரையின் ஆரம்பப் பத்தி இது:

 “குழந்தைகளின் உலகம் பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. அவர்களின் கற்பனைகளுக்குத் தர்க்கங்கள் கிடையாது. ஒரு சிறிய மரக்கட்டையை மோட்டார் காராக நினைத்து ஓட்டக்கூடிய வர்கள் அவர்கள். அவர்களுக்கு உயிரற்ற பொருட்களோடும் பேசத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு தனிமை யான சிறுவனுக்கும், அவ னோடு ஒட்டிக் கொண்ட ஒரு சிவந்த பலூனுக்கும் இடையிலான மௌனமான காதலே பிரெஞ்சு இயக்குனர் ஆல்பர்ட் லாமோரிஸ் 1956இல் உருவாக்கிய THE RED BALLOON.’

 CHILDREN OF HEAVEN என்ற 1997ஆம் ஆண்டைய படம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘வாழ்க்கை சில நேரங்களில் ஒரு ஜோடி கிழிந்த காலணிகளுக்குள் அடங்கிவிடுகிறது. வறுமை என்பது வெறும் பற்றாக்குறை அல்ல. அது ஒரு மனிதனின் தன்மானத் தையும் அவனது மென்மையான உறவுகளையும் சோதித்துப் பார்க்கும் ஒரு களம். ஈரான் நாட்டின் மகத்தான இயக்குநர் மஜித் மஜிதி செதுக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் வறுமை யின் நிறத்தை, அதோடு அந்த வறுமைக்குள்ளும் குடும் பம் எப்படி அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு கவிதையைப் போல் பதிவு செய்கிறது’ என்று எடுத்துச்சொல் கிறார்.

 இப்படி ஒவ்வொரு படமாக அதன் உள்ளடக்கச் சிறப்பை, அதிலுள்ள சமூகப்பிரக்ஞையை எடுத்துக்காட்டி அது சினிமாவாக எப்படி நேர்த்தியான பாணியில் காட்சிப்படுத்தப்பட்டிருக் கிறது என்பதை யும் விவரித்துச்சொல்கிறார்.

நூலின் இறுதிப்பக்கங்களில் சினிமா ரசனைக் கல்வியின் அவசி யமும் தேவையும் என்ற கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல பள்ளிகளில் நூலகங்களே மாணாக்கர்களுக்கு எட்டாக்கனி யாக இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். அரசுப்பள்ளி களில் புத்தகங்கள் கிழிந்துவிடும் என்று நூலகங்களில் பிள்ளை களை உள்ளே விடுவதில்லையென்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.  இந்த நிலை மாறவேண்டியது அவசியம். கூடவே, மாணாக்கர்களுக்கு உலகத்தரமான திரைப் படங்களும் அவ்வப்போது காண்பிக்கப்படலாம். அவர்களுடைய வளர்ச்சிக்காலத் திற்குத் தேவையான சில கருத்துகளை முன்வைக்கும் ஆவணப் படங்களும் காண்பிக்கப் படலாம்.

இன்று காட்சி ஊடகங்களின் காலம் எனலாம். இதில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் திசைதப்பி தறிகெட்டுப்போய் விடாமலி ருக்க அவர்களுக்கு சினிமா ரசனை என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது அவசியம் என்று நூலாசிரியர் வலியுறுத்தியிருப் பது கவனத்திற்குரியது. நூலில் கையாளப்பட்டுள்ள மொழியும், நடையும், பேச எடுத்துக்கொண்டுள்ள உலக சினிமாக்களும், சினிமா சார்ந்த விஷயங்களும்  திரு.சீனு ராமசாமியின் (தரமான) சினிமா ரசனையையும் சமூகப்பிரக்ஞையையும், தாக்கமேற் படுத்துவதான நேரிய மொழிப்பயன்பாட்டையும் எடுத்துக்காட்டு கின்றன.

A POEM BY ATHMAJIV Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 A POEM BY 

ATHMAJIV





 

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 

The land ploughed so deep

Cries not

It creates Life

 

In the drops poured by

clouds banged against and broke

the land blooms

 

From inside the seed

that bursts and breaks

jungle comes to be…

 

From me 

broken into smithereens

rise up and walk

Words en masse


Thursday, August 20, 2026

PLEASE HELP QUALITY TAMIL POET ATHMAJIV

 A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


FRIENDS,

the amount may be big or small - that doesn't matter

your participation in helping a quality Tamil poet by name Athmajiv who needs our help and support is what matters most.

please gpay any possible amount to 78455 76241

நட்பினருக்கு வணக்கம்.

தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

                         கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்

...................................................................................

I long to see Mother

The craving proves overwhelming

Why so? I am at a loss to know.

Relations  there yet not there

Siblings being indifferent to the core

My poem  and I 

Facing rejection

Faring all alone

Though I have a family of my own

A life my own

Yet 

Today

I long to see my mother

The craving proves overwhelming

Why so? I am at a loss to know….

அம்மாவை பார்க்க வேண்டும் என்று

மிக ஏக்கமாக இருக்கிறது.

ஏனென்று தெரியவில்லை.

இருந்தும் இல்லாத உறவுகள்.

உடன்பிறந்தவர்களின் புறக்கணிப்புடன்...

புறக்கணிக்கப்படும்

என் கவிதையும் நானும்

தனிமையில்.

எனக்கென்று ஒரு குடும்பம்

ஒரு வாழ்க்கை

எல்லாம் இருந்தும் இன்று ஏனோ...

அம்மாவை பார்க்க வேண்டும் என்று

மிக ஏக்கமாக இருக்கிறது...

ஏனென்று தெரியவில்லை.

ஆத்மாஜீவ்#அகபுத்தகம்




எமோஜிக்களின் உரையாடல் - 101

 எமோஜிக்களின் உரையாடல் - 101

ஃபேஸ்புக்கில இருக்கற எல்லாரும் வெத்து வேட்டுங்க; வேலையத்தவங்க; வெளங்காத வங்க...

நீங்களும் ஃபேஸ்புக்ல இருக்கீங்களே?


எல்லாத்திலேயும் நான் விதிவிலக்காயிருப்பவன்


??????????????????????????????????????????????? 

வந்தே மாதரம் - தாய்மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

...................................................................................

வந்தே மாதரம்  . இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ் பணி புரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலைக் கட்டாயமாக் கினர்.[1]. 

பங்கிம் சந்திரர், இப்பாடலைத் தான் புலமை பெற்றி ருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். 

நாட்டளவில், வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. 

இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலைப் பொது இடங்களில் பாடுவதைத் தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களைச் சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலைப் பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார்.[1].

"இப்பாடல் பிரபலமடைவதைக் காண நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தி யனாலும் பாடப்படும்" என்று தன் பாடல் குறித்து தீர்க்கத்தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர். 

இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள் ளன. இப்பாடலின் பல்வேறு வடிவ இசைப்பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. Leader, அமர் ஆஷா, ஆனந்த்மத் ஆகிய திரைப்படங்களில் இப்பாடலுக்கான காட்சியமைப்புகள் இடம்பெற்றன. அனைத்திந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப் பப்படும் வந்தே மாதரப் பாடலுக்கு ரவி சங்கர் இசை யமைத்துத் தந்ததாக நம்பப்படுகிறது.[1]. 

இன்று வரை, வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்க மாகக் கருதப்படுகிறது.


தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள்

பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

(*விக்கீபீடியாவிலிருந்து)

LET MY COUNTRY AWAKE.... TAGORE

 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி என்

வாயுற வாழ்த்தேனோ - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே - அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே - தங்கள்

பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்

போந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே - அவர்

தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்

தழுவியதிந்நாடே - மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்

அங்கவர் மாய அவருடல் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

பாரதியார்

A HANDFUL OF QUOTABLE QUOTES

 





விசுவாசம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விசுவாசம்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


எல்லோருமே யாருடைய அல்லது எதனுடைய  விசுவாசிகளாகவோதான் இருக்கிறார்கள்.

விசுவாசம் உண்மையில் நல்ல விஷயம்தான்….

பிரச்னை என்னவென்றால்

தன்னுடைய விசுவாசத்தை அறிவார்த்தமானது என்றும்

இன்னொருவருடைய விசுவாசத்தை

ஆக்கங்கெட்டதாகவும்

அன்றாடம் அவர்கள் மண்ணில் கையடித்து 

சத்தியம் செய்துகொண்டே யிருக்கிறார்கள்.

விசுவாசிகளில் ஒருசாரார் மறுதரப்பினரை 

மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் முகநூலிலும் 

அச்சு ஒளி ஒலி ஊடகங்களிலும் 

யூ-ட்யூப், ட்விட்டர், சுவரொட்டிகள் சோப்பு விளம்பரங்கள் 

என ஒன்றுவிடாமல்

எல்லாத்திசைகளிலிருந்தும் வந்தபடி 

வழிமறித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அதேபோல் மறுசாராரும்.

அதற்கென்றே செய்துவைத்திருக்கும் 

கண்ணுக்குப் புலனாகாதவகையில் 

ஒருபக்கமாகவே சரிந்திருக்கும் 

துலாக்கோலை

 கக்கத்திலிடுக்கிக்கொண்டு

உலாவந்துகொண்டிருக்கிறார்கள்.

சதாசர்வநேரமும்

மல்லாந்தபடியே பக்கம்பக்கமாய் 

ஒருவர்மேல் ஒருவர் 

காறித்துப்பிக்கொள்கிறார்கள்.

உன் விசுவாசத்திற்குரியது / குரியவர் உத்தமரா என்று எதிர்தரப்பிலிருந்தொருவர் 

எகத்தாளச் சிரிப்போடு பெருங்குரலெடுத்துக்கூவ

பதிலுக்கு உன் விசுவாசத்திற்குரியவர் பத்தரைமாற்றுத்தங்கம் 

என்று நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும் என்று 

முதல் தரப்பினர்

தாவிக்குதித்துக் கூச்சலிடுகிறார்.

குறிப்பு: வசைகளில் மிக நாகரீகமானவை மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன.  

அனைத்துத் தரப்பு விசுவாசிகளும்

சதாசர்வகாலமும்

எதாவது நஞ்சைக் கக்கிக்கொண்டே

துக்கப்படுத்துவதும் துக்கித்திருப்பதுமாக

அரிதாய்க் கிடைத்திருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும்

அற்பமானதாக்கிக்காட்டப் 

பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடையதை மட்டுமா? 

கடையில் KISSES கேட்கும் குழந்தைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கடையில் KISSES கேட்கும் குழந்தைகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


KISSES என்ற பெயரில் புது சாக்லெட்டுகள் விற்பனையில்

தொலைக்காட்சி விளம்பரத்தில் விதவிதமான ஜிகினாத்தாளில்

அந்த ஆங்கில வார்த்தை மின்னக்கண்டு

அதன்வழியான சின்ன பெரிய விளைவுகளை எண்ணி தன்னையுமறியாமல் சின்னதாய் அதிர்கிறது மனம்.

இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள்

‘ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)



• I AM ALL YOURS

• ENJOY ME AS NEVER BEFORE

• BE EXCITED FOREVER

• WHAT I HAVE IS THINE

• MY BODY IS DIVINE

• ALL IS FAIR IN LOVE AND WAR 

• RULES NO BAR

• I WANT MORE

• ENTER ME I AM WITHOUT A DOOR

• AM I EXCEEDING THE LIMIT? I DON’T CARE.

_ இத்தனை வாசகங்களும் மொத்தமாகவும்

தனித்தனியாகவும்

இடம்பெற்றிருக்கும்  இறுக்கமான சட்டைகளை அணிந்துகொண்டு

சிறுவர் சிறுமியரும் இளைஞர்கள் யுவதிகளும்

இன்னும் பிறரும்

அந்தப் பூங்காவில்

வேகவேகமாக நடைப்பயிற்சி செய்துகொண்டிருக் கிறார்கள்.

அந்த வாசகங்களின் அர்த்தம் உள்ளர்த்தமெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா 

என்று தெரிந்தும் தெரியாமலுமாய் 

அந்த அந்திப்பொழுதும் கழிய

வழக்கம்போல் கவியத்தொடங்கும் இருள். 

வனவாசம் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வனவாசம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தேன் என்ற பாரதி

எதை யென்று கேட்பவர்களுக்கு இதை யென்று சொல்லியிருக்கக்கூடும்

அதை யென்று சொல்லியிருக்கக்கூடும்

இல்லையில்லை, எதையெதையோ என்றும் சொல்லியிருக்கக்கூடும்

இன்னும்………

விதையோ விடுகதையோ மன்பதையோ என்பதையோ

அறியலாகாது 

தேடலில் புதைந்து வதைபட்டுச் சிதையும் மனம் 

பாரதிக்கு முன்னும் பின்னும் 

நாலுவரிக் கவிதையின் நிழல் - ‘ரிஷி” (லதா ராமகிருஷ்ணன்)

நாலுவரிக் கவிதையின் நிழல்

‘ரிஷி”

(லதா ராமகிருஷ்ணன்)

இந்தப் பூ எத்தனை அழகாயிருக்கிறது என்றால்

’இதோ சில மணிநேரத்தில் வாடிவிடும் பார்’ என்கிறார்கள்.

சூரியகதிர்கள் ஆசிர்வாதங்கள் என்றால்

கதிரோன் ஒருநாள் வெடித்துச்சிதறத்தான் போகிறான் என்கிறார்கள்.

ஒரு சோற்றுப்பருக்கையை இருபது எறும்புகள் இழுத்துக்கொண்டு செல்வதை

பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றால்

வரும் கால்களில் அவை மிதிபட்டு சாகும்பார் என்கிறார்கள்.

நாலுவரிக் கவிதை வாசித்து கண்ணில் நீர்தளும்பி நின்றால்

அரைத்த மாவையே அரைப்பதையும் அள்ளித்தின்பதையும்

நிறுத்தவே மாட்டீர்கள் நீங்கள் என்று எள்ளிநகையாடுகிறார்கள்.

ஓர் உணர்வின் வருடலை புரிந்துகொள்ளாத 

தம் இயலாமையை

பார் பார் நான் நாலுவீடு கட்டிவிட்ட வெற்றியாளன் என்று

மார்தட்டி மிகுவலிமையாகக் காட்டுபவர்கள் மத்தியில்

தத்தித் தவழ்ந்துகொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் _

ஒரு துளி நீருக்கும் கத்துங்கடலுக்கும் இடையேயான

 வேற்றுமையில் ஒற்றுமையை, 

ஒற்றுமையில் வேற்றுமையை 

கற்கக் கசடறக் கற்றவாறிருக்கும்

வளர்ந்த குழந்தைகளாய். 

சொல்லத்தோன்றும் சில..... லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில.....

லதா ராமகிருஷ்ணன்

(*மீள்பதிவு)






வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற் கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினை யாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக் கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. Out of Context சில வரிகளை எடுத்துக்காட்டு வதுபோல்.
ஒரு வினைக்கு எல்லோரும் ஒரேவிதமாக எதிர்வினை யாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது; எதிர்பார்க்க வும் முடியாது. சகிப்புத்தன்மை எல்லோரிடமும் ஒரேயளவாய் இருக்கும் என்று சொல்லமுடியாது.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்பாலினத்தைச் சேர்ந்த முகநூலினர் ஒருவர் ‘அவனா, சரியான பொறுக்கியாயிற்றே’ என்று பொதுவெளியில் உள்ள ஆண் ஒருவரைக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது ’ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைப் பழிக்கும் வாசகம் அல்லது சொல்லாடல் மட்டும்தான் அழுத்த மான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உரியதா?’ என்ற கேள்வியெழுந்தது. யாரிடம் கேட்பது?
வீடுகளிலும், வீதிகளிலும் நடக்கும் சண்டைகளில் ஒருவரை மிக மோசமாகக் காயப்படுத்த அவருடைய தாயை வேசியாக ஏசுவார்கள். தாய் உண்மையிலேயே அப்படியிருந்தாலும் அவள் தாய். அந்த வசை குறிப் பிட்ட நபரை எத்தனைக் காயப்படுத்தும், கோபப்படுத் தும் என்பதைப் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கி றேன்.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு தாய்போலத்தான். இன்னொரு மதத்தைச் சார்ந்தவரோ, நாத்திகவாதியோ – எதற்கு அத்தனை கொச்சையாகப் பழிக்க வேண்டும்?
வார்த்தைகள் இருமுனைக் கத்திபோல். எதிரேயிருப் பவரையும் குத்திக்கிளறும்; நம்மையும் விட்டுவைப்ப தில்லை.
மூட நம்பிக்கை என்பது மதம் சார்ந்தது, கடவுள் சார்ந் தது மட்டும்தானா?
மாற்று மதத்தினரின் நம்பிக்கைகளை மிக மோசமான வார்த்தைகளில் பழிக்கும் அறிவுசாலிகள் பலரை முக நூலில் பார்க்கிறேன். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களி லும் குறிப்பிட்ட பிரிவினரை மிக மோசமாகப் பழிப்ப தையே கொள்கையாகக் கொண்டு இயங்குபவர்களும் இங்கே நிறைய.
‘உங்க ராமர் கூர்க்காதான் – தெரியுமா?’ என்று யாரையோ எகத்தாளம் செய்யும் வேகத்தில் வருடம் முழுவதும் குடும்பத்தைப் பிரிந்து எங்கேயோ குளிரிலும் வெயிலிலும் காவல்காத்துக்கொண்டி ருக்கும் தொழிலாளியைப் பழிப்பதைக்கூட உணராத மனித நேயவாதிகளையும் இங்கே பார்க்கிறேன்.
முன்பெல்லாம் கட்சிகளில் எதிர்க்கட்சியினரைக் கேவலமாகப் பொது வெளியில் பேசுவதற்கென்றே தனியாக சிலரை வைத்திருப்பார்கள். அந்த வேலையை படைப்பாளிகளாக அறியப்படும் சிலர் ஏன் விரும்பி ஏற்றுச் செய்யவேண்டும்? என்று இப்போது முகநூலில் சில அறிவுசாலிகளின் வன்மமான, கொச்சையான வசைபாடல்களைப் படிக்கநேரும் போது வருத்தத்தோடு என்னை நானே கேட்டுக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

PLEASE HELP A QUALITY TAMIL POET

 A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

.....................................................................................


FRIENDS, PLEASE HELP QUALITY TAMIL POET ATHMAJIV



நட்பினருக்கு வணக்கம்.

தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

                         கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்



.....................................................................................

A POEM BY ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

The pain of not being able to return

to the passage gone beyond

is being relived

by going there

with the wings of words

is what the grand world

of the writer indeed.

The height of  release

Is but a hiatus.

That 

would be forever conversing 

in the language of silence.

That is

the soft  music of Life

Those having ears listen

When the heart wanders 

in this space

That can’t be filled  with Life

Deficiency fills and swells

I fancy

The bird craving to fly

in the bygone sky

is the writer’s heart  - Oh My!

கடந்துபோன பாதைக்கு

திரும்ப முடியாத வலியை

வார்த்தைச் சிறகுகளால்

மீளச் சென்று வாழும் மனம்தான்

படைப்பாளியின் பெரும் உலகம்.

விடுபடுதலின் உயரம்

ஓர் இடைவெளி.

அது

மௌனத்தின் மொழியில்

பேசிக் கொண்டேதான் இருக்கும்.

அது

உயிரின் மெல்லிய இசை. 

காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.

உயிரிட்டு நிரப்ப முடியாத

இந்த இடைவெளியில்

மனம் சஞ்சரிக்கும்போது

போதாமை நிரம்பி விடுமென

நினைக்கிறேன்.

கடந்து விட்ட வானத்தில்

பறக்கத் துடிக்கும் பறவை

படைப்பாளியின் இதயம்.

ஆத்மாஜீவ்  :

Sunday, August 9, 2026

கைவசமாகும் நட்சத்திரங்கள்! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கைவசமாகும் நட்சத்திரங்கள்!

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

காலடியில் அப்படி ஒளிர்ந்துகொண்டிருந்தது

ஒரு துண்டு ஜிகினாத்தாள்!

பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது

சில நூறாண்டுகள் இருக்கலாம்!

சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து

தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்

அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்

தீட்டி மேகங்களாக்கி 

அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய

 நிறைய நிறைய மழைபொழிந்தது! 

கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்

கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து 

நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து

’நட்சத்திரங்கள்’ என்றாள்!

’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’

என்ற கேள்வியைக் கேட்கநினைத்து 

அவளை ஏறிட்டுப்பார்த்தபோது

கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின

சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!

தொடுவானின் விரிபரிமாணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

//2019, AUGUST 7 - மீள்பதிவு//

தொடுவானின் விரிபரிமாணங்கள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

‘EXPANDING DIMENSIONS OF THE HORIZON

(Originally written in Tamil the poem is rendered in English by the poet herself)

By 

Rishi

(Latha Ramakrishnan(


தொடுவானின் விரிபரிமாணங்கள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

“All that you had drawn 

when you were a little girl  -  fine.

But, you are now grown- up .

Still you do the same as before

Isn’t it absurd to the core?

How can there be moon and stars 

on a rainy day?”

 _ So asked the elders irritated and sarcastic.


And the little girl 

Aged a few eons

responded with a smile:

‘ Just because they are not visible to us

Aren’t there the Moon and Stars?

The sky drawn by me is widespread

 over the entire globe.

With rain pouring in one side 

There would be moon radiant 

on the other side

Do know that.?’


That which twinkles In the eyes of the kitten 

which smiles listening to her  _

Are they stars?

Venus? Jupiter? Mars? 

Or  Pluto afar?


‘சிறுமியாய் இருந்தபோது வரைந்ததெல்லாம் சரிதான்

வளர்ந்தபின்பும் இப்படியே செய்தால் எப்படி?

மழைபொழியும் வானில் நிலவும் நட்சத்திரமும் எப்படியிருக்கும்?’

என்று எரிச்சலும் எகத்தாளமுமாய் கேட்ட பெரியவர்களிடம்

சிரித்துக்கொண்டே சொல்வாள்

சில நூறாண்டுகள் வயதான சிறுமி:


‘நமக்குத் தெரிவதில்லை யென்பதால் நிலவும் நட்சத்திரங்களும்

அங்கேயில்லாமல் போய்விடுமாor

அல்லது

”நான் வரைந்துள்ள வானம் உலகெங்கும் விரிந்திருக்கும்.

ஓரிடத்தில் மழைபொழிய வேறிடத்தில் நிலா காயும் தெரியுமா!”

அதைக் கேட்டுப் புன்னகைக்கும் பூனைக்குட்டியின் கண்களில்

மின்னிக்கொண்டிருப்பது விண்மீன்களா?

வீனஸா ஜூபிட்டரா மார்ஸா ப்ளூட்டோவா?



சிறுமியும் சின்ன விண்மீனும்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சிறுமியும் சின்ன விண்மீனும்!

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

தன்னைப்போல் குட்டியாக இருப்பதால்தான் 

நட்சத்திரங்களை நேசிக்கிறாளோ சிறுமி?

வாமனாவதாரம் விசுவரூபம் இருவருக்குமே உண்டுதானே!

ஒற்றை நிலவை நேசிக்க ஓராயிரம்பேர்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு துணுக்குதான் கைவசமாகும்.

நட்சத்திரமெனில் வேண்டுமட்டும் கைகளால் அள்ளிக்கொள்ளலாம்!

சின்ன விண்மீன் அவளுடைய செல்லப்பிராணி பப்பிக்குட்டியா?

சிஷ்யையா?

சமவயதுச் சினேகிதியா?

சீராட்டவொரு பாப்பாபொம்மையா?

அம்மையப்பனா?

அதியமான் நெல்லிக்கனியா?

அதிசயங்கள் நிகழ்த்தும் மந்திரக்கோலா?

அந்தர வீடு போலா?

ஒண்ணொண்ணாய் தெரிந்த ‘ரைம்’களைச் சொல்லிச்சொல்லி

அழைத்துப்பார்த்தாயிற்று.....

இன்னும் என்ன செய்தால் அவளிடம் வந்துசேரும் நட்சத்திரங்கள்?

தன்னை மறந்து அண்ணாந்திருந்த

சிறுமியின் கண்வெளியில் சுழன்றவாறிருக்கும் சில

அண்டங்கள்……

கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

ஆரம்பத்தில் சிறுமியின் பிரார்த்தனை

யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது.

பள்ளிக்குச் செல்லும் வழியில் தெருவோரப் பிள்ளையார் கோயிலின் முன்

கைகூப்பி கண்மூடுவாள் கணநேரம்

வழியில் தேவாலயத்தைக் கடக்கும்போது

சின்ன விரல்களால் சிலுவைக்குறியிட்டுக்கொள்வாள்

இறைமை இன்னமும் முறையற்ற வழிகளில்

அறிமுகமாகியிராத பருவத்தில் 

அந்தச் சிறுமியின் பிரார்த்தனையெல்லாம் 

யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது:

வட்ட சதுர வடிவ நாணயங்களெல்லாம் நட்சத்திர வடிவம் பெறவேண்டும்.

முழுநம்பிக்கையோடு உள்ளங்கையை முகர்ந்து பார்த்தால் ஆப்பிள் மணக்கும் தானே!

அவளுக்கும் அப்படி ஆப்பிள் மணத்ததுண்டு.

ஆனால் சில்லறைநாணயங்கள் ஏனோ நட்சத்திரவடிவமாகவேயில்லை.

சிறுமிக்கு வருத்தமாயிருந்தது

தெருவோரம் எலும்பெல்லாம் தெரிய சுருண்டுகிடக்கும்

முதியவரின் கந்தல் விரிப்பில் ஒன்றிரண்டு நாணயங்கள் மட்டுமே

இருந்ததைக் கண்டபோது

அவள் துக்கம் இன்னும் அதிகமாகியது.

நாணயங்கள் நட்சத்திரங்களாவதைவிட 

அந்தத் தாத்தாவால் வாங்கவியலாத ’ரொட்டி’ ’பன்’ இட்லியானால் எத்தனை நன்றாயிருக்கும்

என்று அனிச்சையாக அவள் மனதில் தோன்றிய நினைப்பில்

தன் பிரார்த்தனையில் சிறிது மாற்றம் செய்துகொண்டாள் சிறுமி. 


 //2019, AUGUST 7 மீள்பதிவு//

மௌனம் ஒரு காவல் தேவதை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம் ஒரு காவல் தேவதை

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


மௌனம் சம்மதமென்று, 

சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று

யார் சொன்னது?

மௌனம் ஒரு மந்திர உச்சாடனம்.

ஒரு மாயக்கோல்.

ஒரு சங்கேதமொழி.

ஒரு சுரங்கவழி.

சொப்பனசங்கீதம்

அரூபவெளி.

அந்தரவாசம்.

அனாதரட்சகம்.

முக்காலமிணைப்புப் பாலம்.

மீமெய்க்காலம்.

மொழிமீறிய உரையாடல்.

கதையாடல் ஆடல் பாடல்.

மனசாட்சியற்றவரிடம் நம் வார்த்தைகள் 

மண்டியிட்டுத் தெண்டனிடுவதைத் 

தடுக்கும் சூத்திரம்.

பாத்திரம் அறிந்து நாம் இடும் பிச்சை.

ஆத்திரத்தின் வடிகால்.

அடிமன வீட்டின் திறவுகோல்.

யாரிடமும் நம்மை நிரூபித்தாகவேண்டிய 

கட்டாயத்திலிருந்து விடுதலை.

ஆய தற்காப்புக் கலை.

அவரவர் இமயமலை.

நெருங்கியிருப்பவரையும் கணத்தில் 

நெடுந்தொலைவிலாக்க எறியப்படும் 

சூட்சுமக்கல்.

நித்தமும் நெஞ்சொளிரும் வானவில்.

பித்தாகிநிற்கும் சொல்.

வலியாற்ற மனம் தயாரிக்கும்

அருந்தைலம்.

கொடியவிலங்குகளிடமிருந்து காக்க

நம்மைச் சுற்றிக் கனலும் எரிவளையம்.

கடல்நடுவே கரையாகும் மணல்திட்டு.

அடர்மழை.

நள்ளிரவின் உயிர்ப்பு.

நிலவின் புன்சிரிப்பு.

இன்னும்……