LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 2, 2025

கைவீசம்மா கைவீசு….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கைவீசம்மா கைவீசு…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அளவைகள் ஒன்றுதாமென்றாலும்
அவற்றிலுள்ள பண்டங்கள் வேறு வேறு;
வாங்குபவர்களும் விற்பவர்களும் வேறு வேறு....
வாங்கிச்செல்பவர்கள் நுகர்வோர் என்றாலும்
அவர்களே பயனாளிகள் என்று உறுதியாகச் சொல்லவியலாது.
பணம்கொடுத்து வாங்குபவர்களா
பயன்படுத்துபவர்களா _
யார் நுகர்வோர்?
பணம்கொடுத்து வாங்கினால் தானா?
பண்டமாற்றுசெய்தால்…?
எது எதன் மாற்று?
எதன் மாற்று காற்று?
மனதின் விலைநிர்ணயம் பணத்தின் கையிலா?
பணத்தின் விலைமதிப்பு மனதின் கையிலா?
கையுண்டோ மனதிற்கு?
கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு….
வீசும் கை வீசித் தளர
வீதியோரங்களில் மூடத்தொடங்கும் கடைகள்.

No comments:

Post a Comment