தகவல் பரிமாற்றம்
LIFE GOES ON.....
Friday, May 16, 2025
தகவல் பரிமாற்றம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.
இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

......................................................................................................போரும் பயங்கரவாதமும் நாமும்
போரும் பயங்கரவாதமும் நாமும்
Saturday, May 10, 2025
என் அம்மா - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும் லதா ராமகிருஷ்ணன்
நிலவும் போர்ச்சூழலும்
தமிழக அரசின் பேரணியும்
லதா ராமகிருஷ்ணன்

இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற் கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைசொல்வதும், எதிர்த்துநிற் பதும், மதிப்பழிப்பதாய் பேசுவதும், தனித்தமிழ் நாடு கேட்கிறார் களோ, அதற்கான கலவரங்கள் ஊக்குவிக்கப்படுமோ என்ற அச்சத்தை நிறைய பேர் மனங்களில் ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய கலவரங்களை விரும்பும், ஊக்குவிக்க விரும்பும் (இத்த கைய கலவரங்களில் பெரிதும் பாதிப்படைவோர் எளிய மக்களே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) தரப்பினருக்கும் இந்தப் பேரணி மாநில அரசுக்கு அப்படியெதுவும் எண்ணமில்லை என்று தெளிவு படுத்தியிருக்கிறது. அவ் வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ‘மாநில சுயாட்சி’ என்ற சொற்றொடர் இங்கே இரண்டுவிதமான அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.
இது மக்களாட்சி நாடு. ஆளும் அரசு பிடிக்கவில்லையென்
றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்ப தற்கான நியாயமான ஆயத்தங்களை, பரப்புரைகளை மேற் கொள்ள
லாம். ஆனால், ஒரேயடியாக ஆளுங்கட்சி செய்வதை
யெல்லாமே திட்டித்தீர்த்த வாறிருந்தால் எதிர்க் கட்சியென்றாலே இப்படித்தான் என்று மக்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
ஆனால், படைப்பாளி என்றாலே ‘அரசு’ என்ற கட்ட மைப்பை எதிர்க் கக் கடமைப் பட்டவர் என்பதாக இங்கே ஒரு பார்வை நிலவுகிறது. (ஆனால், இந்தக் கண்ணோட்ட முடைய இலக்கியவாதிகளும் மாநில அரசுக்கு எதிராக இதுவரை முணுமுணுப்பாகக்கூட குரல் எழுப்பியதில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது).
மாறாக, பாராட்ட வேண்டியவற்றை பாராட்டினால், பின் அரசின் மீது - அது மத்திய அரசோ, மாநில அரசோ - நாம் வைக்கும் எதிர் விமர்சனங்களைப் பொருட்படுத்தி கவனத்தில் கொள்வார்கள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ‘ இப்போதைய போர்ச்சூழல் தொடர்பான மத்திய அரசின் முயற்சிகளை மிகத் தெளிவாக அலசி, பாராட்டியிருப்பது ஓர் உதாரணம்.
விண்டவர் கண்டிலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
விண்டவர் கண்டிலர்




