LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 24, 2018

பிரக்ஞையும் சமூகப்பிரக்ஞையும்


பிரக்ஞையும் சமூகப்பிரக்ஞையும்

ME TOO MOVEMENT மிகத் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமில்லை

ஆனால், எத்தனையோ காரணங்களுக்காய் ஆண்டுக்கணக்காய் மௌனம் காத்து இன்று பேசும் பெண்களில் பலர் பொதுவெளியில் பெயர் பெற்றவர்கள், ஊடகவியலாளர்கள், பெண்ணிய வாதிகள் என்பதைப் பார்க்கும்போது இத்தனை காலம் தங்கள்வெளியில் உலவும் பாலியல் அத்துமீறல்காரர்களை அடையாளம் காட்டாம லிருந்ததில் எத்தனை சக-பெண்களுக்கு நிரந்தர பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை எண்ணாமலிருக்க முடியவில்லை.

மேலும், இத்தனை வருடங்கள் மௌனம் காத்தவர்கள் இன்று பேசத்தொடங்கியதும் உடனே தங்கள் சகமனிதர்களை ஏன் மௌனமாயிருக் கிறீர்கள் என்று கேட்பதும் உடனடியாக தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்றும் இல்லையென்றால் அப்படி ஆதரவு தெரிவிக்காதவர்களின் மௌனமே அவர்களைக் குற்றவாளிகளின் ஆதரவாளர்களாய் அடையாளங் காட்டிவிடும் என்று கூறுவதும் எப்படி சரியாகும்?


’ME TOO’ வில் BRUTUSஇன் 'YOU TOO'


 ’ME TOO’ வில் BRUTUSஇன் 'YOU TOO'


நிறைய வருடங்களுக்கு முன் வார இதழொன்றில் படித்த எழுத்தாளர் ஜெயந்தனின் சிறுகதை (என்றுதான் நினைவு)‘இண்டர்வ்யூ. பெரிய வேலை, நிறைய வசதிகள் - இத்தனையையும் முன்னிறுத்தி கூடவேகொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும்என்பதாய்வேலை கிடைப்பதற்கான சாத்தியம் பற்றிக் கூறப்படுவதோடு கதை முடியும்.
ஒருவகையில் ’ME TOO’ வில் 
BRUTUSஇன் 'YOU TOO'
எதிரொலிிக்கிறது.


களம் ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


களம்
ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


வீரம்செறிந்தவர்களும்கூட
ஒரு வனவாச காலத்திற்குப் பிறகே
வெளியே வந்திருக்கிறார்கள்….
கூர்குறையா வாட்களோடு......
உள்ளுறைந்திருந்த காலமெல்லாம்
அதன் முள்முனை அவர்களைக்
குத்திக்கிழித்துக்
காயப்படுத்திய நாட்களின் நினைவுகளும்
தழும்பாகாமலே குருதிபெருக்கிக்
கொண்டிருந்திருக்கும்….
இருக்கும் இன்னமும்.
குகைக்குள் குரல்வளையிறுக
ஒடுங்கியிருந்த நாட்கள்போய்
இன்று கதிரவனின் கிரணங்கள்
மேலே படுவதாய்
மகோன்னத ஆகாயத்தைப்
பார்க்க முடிவதாய்
என்னவொரு ஆசுவாசம்!
காலைப் பிணைத்திருந்த
கொடூரப் பாறாங்கல்
கழண்டுபோய்விட்டதாய்….
என்றாலும்,
கண்ணில் படும் வழிப்போக்கர்களை
யெல்லாம் _
வயிற்றுப்பிழைப்புக்காக நீண்டதூரம்
அலைந்து களைத்திருப்பவர்களை
யெல்லாம் _
குகைகளிலிருந்து தம்மைக் காப்பாற்ற
வக்கில்லாத
கோழைகளாகவும்
அவ்வகையில் குற்றவாளிகளாகவும்
கைபோனபோக்கில் எழுதி சிலர்
காறித்துப்புவது எதற்கு?
குகைகளில் சிலர் இருந்ததே
இப்பொழுதுதான் தெரியவருகிறது.
கேட்டமாத்திரத்தில் கைவேலையை
யெல்லாம் விட்டுவிட்டு
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துவிட
வேண்டுமென்றால் எப்படி?
அவரவர் குகைகளைச் சுமந்தபடி
அன்றாடம் வாழ்பவர்களுக்கும்
அவரவருக்கான அவகாசம் பெற
உரிமையுண்டுதானே?
அவரவருக்கான விடுதலையைத்
தீர்மானிக்கவும்
அவரவருக்கான முன்னுரிமைகளை
முடிவுசெய்யவும்…..

ஜாக் லண்டன் எழுதிய நீண்ட சிறுகதை - ஒரேயொரு இறைச்சித்துண்டு -



Pudhupunal Publications
Address: 117 Fathima Complex 
1st Floor, Triplicane High Road, Opp To Rathna Cafe, Triplicane, 600005

                        Owner/ Contact Person:                           Ravichandran
                     9884427997


CITY WALLS - POEMS BY VAIDHEESWARAN Rendered in English


CITY WALLS POEMS BY VAIDHEESWARAN

Rendered in English





கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது

அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங்கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள் _ நானும் ஒருத்தி

இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் வைதீஸ்வரன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிவருபவர்) அந்தக் கவிதைகளையும் கூடவே இன்னும் ஓரிரு மொழிபெயர்ப்பாளர்களுடைய மொழிபெயர்ப்புகள், நான் புதிதாக மொழிபெயர்த்த திரு.வைதீஸ்வரனின் கவிதைகள் சில, தேவமகள் அறக்கட்டளை விருது அவருக்குக் கிடைத்த போது அவர் ஆற்றிய, தனது வாழ்க்கை, கவிதை குறித்த சீரிய உரையின் ஆங்கில ஆக்கம் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு நூல் வெளியிடலாமே என்று புதுப்புனல் பதிப்பகத்தை நாடியபோது அதன் நிறுவனர்களான திரு. ரவிச்சந்திரனும் சாந்தி ரவிச்சந்திரனும் ஆர்வமாக அந்த நூலை வெளியிட முன்வந்தனர்

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நூலின் முன் அட்டை ஓவியம் கவிஞர் வைதீஸ்வரன் வரைந்தது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தத் தொகுப்பில் அவருடைய 60 கவிதைகளும், ஒரு கட்டுரையும் ஆங்கில மொழிபெயர்ப்பில்.


பக்கங்கள்: 120
விலை: ரூ.250.