LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label LITERATURE. Show all posts
Showing posts with label LITERATURE. Show all posts

Wednesday, October 24, 2018

CITY WALLS - POEMS BY VAIDHEESWARAN Rendered in English


CITY WALLS POEMS BY VAIDHEESWARAN

Rendered in English





கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது

அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங்கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள் _ நானும் ஒருத்தி

இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் வைதீஸ்வரன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிவருபவர்) அந்தக் கவிதைகளையும் கூடவே இன்னும் ஓரிரு மொழிபெயர்ப்பாளர்களுடைய மொழிபெயர்ப்புகள், நான் புதிதாக மொழிபெயர்த்த திரு.வைதீஸ்வரனின் கவிதைகள் சில, தேவமகள் அறக்கட்டளை விருது அவருக்குக் கிடைத்த போது அவர் ஆற்றிய, தனது வாழ்க்கை, கவிதை குறித்த சீரிய உரையின் ஆங்கில ஆக்கம் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு நூல் வெளியிடலாமே என்று புதுப்புனல் பதிப்பகத்தை நாடியபோது அதன் நிறுவனர்களான திரு. ரவிச்சந்திரனும் சாந்தி ரவிச்சந்திரனும் ஆர்வமாக அந்த நூலை வெளியிட முன்வந்தனர்

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நூலின் முன் அட்டை ஓவியம் கவிஞர் வைதீஸ்வரன் வரைந்தது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தத் தொகுப்பில் அவருடைய 60 கவிதைகளும், ஒரு கட்டுரையும் ஆங்கில மொழிபெயர்ப்பில்.


பக்கங்கள்: 120
விலை: ரூ.250.


MOUNTS VALLEYS AND MYSELF - POEMS BY S.VAIDHEESWARAN (கவிஞர் வைதீஸ்வரன்)


MOUNTS VALLEYS AND MYSELF

POEMS BY S.VAIDHEESWARAN
(
கவிஞர் வைதீஸ்வரன்)


ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையை அவர் வாழுங் காலத்திலேயே வழங்குவதே முறை. அதுவே அவருடைய எழுத்துகளில் நமக்குக் கிடைத்த நிறைவான வாசிப்பனு பவத்திற்கு நாம்செய்யும் பதில் மரியாதை. இந்த எண்ணமே என்னை கவிஞர் வைதீஸ்வரனின் 70, 80 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தது. இதே எண்ணம் கொண்ட, – தன்னளவில் நல்ல மொழி பெயர்ப்பாளராக விளங்குபவரும் www.modernliterature.org,www.tamilliterature. in ஆகிய இரு தரமான இணைய இதழ்களின் நிறுவனர்ஆசிரியருமான நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியனின் முயற்சியால் இந்த மொழிபெயர்ப்புகளில் 50க்கும் மேல் இடம்பெறும் இந்தத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

கவிஞர் வைதீஸ்வரன், நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன், நூலை வெளியிட்டுள்ள HAWAKAL PUBLISHERS ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

நூலின் முகப்பு அட்டையும் சில விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது

விலை: ரூ 350
96 பக்கங்கள்
சுமார் 60 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்