பிரக்ஞையும் சமூகப்பிரக்ஞையும்
ME TOO MOVEMENT மிகத் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், எத்தனையோ காரணங்களுக்காய் ஆண்டுக்கணக்காய் மௌனம் காத்து இன்று பேசும் பெண்களில் பலர் பொதுவெளியில் பெயர் பெற்றவர்கள், ஊடகவியலாளர்கள், பெண்ணிய வாதிகள் என்பதைப் பார்க்கும்போது இத்தனை காலம் தங்கள் ’வெளி’யில் உலவும் பாலியல் அத்துமீறல்காரர்களை அடையாளம் காட்டாம லிருந்ததில் எத்தனை சக-பெண்களுக்கு நிரந்தர பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை எண்ணாமலிருக்க முடியவில்லை.
மேலும், இத்தனை வருடங்கள் மௌனம் காத்தவர்கள் இன்று பேசத்தொடங்கியதும் உடனே தங்கள் சகமனிதர்களை ஏன் மௌனமாயிருக் கிறீர்கள் என்று கேட்பதும் உடனடியாக தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்றும் இல்லையென்றால் அப்படி ஆதரவு தெரிவிக்காதவர்களின் மௌனமே அவர்களைக் குற்றவாளிகளின் ஆதரவாளர்களாய் அடையாளங் காட்டிவிடும் என்று கூறுவதும் எப்படி சரியாகும்?
No comments:
Post a Comment