LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, December 1, 2025

குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
போகக்கிடைத்த நாடுகளின் பெயர்ப்பட்டியலிலோ
பேசக்கிடைத்த அரங்குகளில் குழுமியிருந்த
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலோ
பரஸ்பர முதுகு சொறிதலாய் பக்கம்பக்கமாக
எழுதப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனக்
கட்டுரைகளிலோ
பெரிய பதவிகளிலோ
பிரமுகர்களின் அறிமுகங்களிலோ
பாரிய அரசியல்கட்சியின் அரவணைப்பிலோ
ஊர் சாதி இன மத குழு மனப்பான்மையிலோ
நேர் நிறை இலக்கணமறிந்ததிலோ
அறியாததிலோ
கார்கால மழைக்கொரு புதுப்பெயர் சேர்ப்பதிலோ
வாலைத் தலையாக்கி வித்தைகாட்டுவதிலோ
பாலையைச் சோலையென்று
அம்மியாய்க் கும்மியடித்துச் சொல்வதிலோ
அடங்காது.....
பூக்களும் பூங்காற்றும் புறாக்களும்
அலைக்கழியும் மனம் ஆற்றி
அக்கடா என்று அமர்ந்திருக்க
அன்றாடம் தேடிவரும் மனிதக்கூட்டமும்
அங்கே பூரணமாக இருந்தாகவேண்டும்.
அதுவேயாம் கவிதையும்.

No comments:

Post a Comment