LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 9, 2025

போர் வேண்டாம் – போர்ச்சூழலைப் பயன்படுத்தி இந்திய நாட்டை, அரசைப் பழிக்கவும் வேண்டாம்

 போர் வேண்டாம் – போர்ச்சூழலைப் பயன்படுத்தி இந்திய நாட்டை, அரசைப் பழிக்கவும் வேண்டாம்

........................................................................... ................................................................
யாரும் போரை விரும்புவது இல்லை. ஆனால் போர் இங்கே நடப்புண்மையாக இருப்பதையும் மறுக்கவிய லாது. ஒவ்வொரு நாடும் போர்த்தளவாடங்களுக்காகச் செலவிடும் பெருந் தொகையே இதற்கு சாட்சி.
நம்முடைய நாடான இந்தியா இன்னொரு நாட்டை ஆக்கி ரமிப்பதற்காக போர் தொடுத்ததில்லை. இப்போதும் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் படுகொலை செய்யப்பட் டதும் அதற்கு முன் பல வருடங்களாகத் தொடர்ந்து நடை பெற்றுவரும் தீவிரவாத/ பயங்கரவாத அத்துமீறல்களுமே இன்று இந்தியாவை போர்தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளி யிருக்கிறது. இதை மறந்து இந்தியாவுக்கு புத்தி சொல்லவும், இந்தியா வைக் கண்டிக்கவும், பஹல்காம் படுகொலை குறித்து அதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும். அந்த அவல நிகழ்வுக் கான நேரடி சாட்சியங்களும் சொல்வ தெல்லாம் பொய் என்ற விதமான ஒரு narrativeஐக் கட்டமைக்க வும் இங்கே சில இலக்கியவாதிகள் முற்படுவது வருத்தத்திற் குரிய விஷயம். தமிழ் இலக்கியவாதிகள் எல்லோருமே இந்தக் கருத்தைக் கொண்டவர்கள் என்பதுபோன்ற ஒரு தோற் றத்தை இது ஏற்படுத்திவிடலாகாது.

தீவிரவாதத்தை மதரீதியான விஷயமாகப் பார்க்க வேண்டாம். ஆனால், தீவிரவாதத்தை தீவிரவாதமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
இந்தக் குறிப்பிட்ட அவல நிகழ்வில், பஹல்காம் படு கொலை யில் குறிப்பிட்ட மதத்தினர் அல்லாதவர்களாகப் பார்த்து கொலை செய்யப்பட்டிருப்பதை நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள். அந்த பயங்க ரத்தைக் கண்டிப்பவர்கள் எல்லாம் மதவெறியர்கள் அல்ல.; இந்துக்கள் மட்டுமல்ல. மத நல்லிணக்கம் வேண்டுவோர் எல்லோருமே உலகெங்கிலும் இதை எதிர்க்கிறார்கள். ஆனால், சிலர் அப்படியொன்று நடக்க வேயில்லை என்று இங்கிருந்தபடியே கூறுவதன் நோக்கம் என்ன? இவர்கள்தான் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு மத நல்லிணக்கத்திற்கு ஊறு செய்பவர் கள்.

பொதுமக்கள் மதநம்பிக்கைக்கும், மதச்சார்பின்மைக்கும், மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட் டங்களுக்குமான வித்தியாசத்தைப் பற்றிய தெளிவான அறிவோடு இருப்பதால்தான் இந்தியாவில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இயல்பாக வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். அவர்களிடம் எழுத்து ரீதியாய் கருத்தி யல் வன்முறையைப் பிரயோகிப்பதும், அவர்களை மூளைச் சலவை செய்யப் பார்ப்பதும், அவர்களைப் பிளவுபடுத்த முனைவதும் அராஜகமான போக்கு. இந்திய அரசு இதைச் செய்கிறது என்று சொல்லிச்சொல்லி உண்மையில் இவர்கள் தான் இதை அதிக மாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தில் இன்று நம்மைக் காக்க இரவுபகல் பாராமல் பாடுபட்டுக்கொண்டிருக் கும் படைவீரர்கள் சாதி மதம் கடந்து இணைந்து நமக்காகப் போரிட்டுக்கொண்டிருக்கிறார் கள். செத்துமடிகிறார்கள். அவர்களில் இந்தியாவின் சிறு சிறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உண்டு. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உண்டு. தமிழகத் திலிருந்தும் ஏராளமானோர் நம் இந்திய ராணுவத்தில் உண்டு.

இப்போதைய போர்ச்சூழலில் இந்தியாவைச் சாடுவதும் இந்தியாவுக்கு போதிப்பதும் நம் படைவீரர்களைப் பழிக்கும், மதிப்பழிக்கும் செயல்.
இங்கே வசதியாக வீட்டின் பாதுகாப்பில் இருந்தவாறு வாய்க்கு வந்தபடி இந்தியாவை நிந்திப்பவர்கள், இந்தியா வுக்கு போர் நிறுத்த உபதேசம் செய்பவர்களின் உள்நோக்கங்கள் வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றன.

இவர்களுக்குப் பிடித்த சில நாடுகளில் நடக்கும் போர்களெல் லாம் இவர்களைப் பொறுத்தவரை உரிமைப்போர் கள். இவர்க ளுக்குப் பிடித்த நாடுகளின் மக்களுக்கு நாட்டுப்பற்று இருப்பதா கச் சிலாகிப்பார்கள்; மெய் சிலிர்ப்பார்கள். ஆனால், இந்தியா காலங்காலமாக சகித்துக் கொண்டு வேறுவழியின்றி இப்போது எதிர்த்தாக்குதல் நடத்தினால் இந்தியாவைப் பழிப்பார்கள்; வன்முறை பயில்வதாக ஆதங்கப்படுவார்கள்.

இந்தியர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கலாகாது. இருந்தால் அது பிற்போக்குத்தனம். மக்களாட்சித் தத்துவத்தின்படி தேர்தலில் வென்று பிரதம மந்திரியாக இருப்பவரை, அவருடைய தலைமை யின் கீழ் இயங்கும் அரசை கேலி செய்து கொண்டிருப்பதே, கீழிறக் கிப் பேசிக்கொண்டிருப்பதே, செயல்பட விடாமல் தடுப்பதே இங்கே மனித நேயம்; முற்போக்குத்தனம். இது என்ன நியாயம்?

போர் வேண்டாம் என்று சொல்வது நியாயம். ஆனால், இந்தப் போர்ச்சூழலை சாக்காக வைத்துக்கொண்டு இந்தியாவை, இந்திய அரசைப் பழிப்பதும், நிந்திப்பதும், அப்படிச் செய்வதை ஏற்காத இலக்கியவாதிகளைப் பிற்போக்குவாதிகள், சங்கிகள் என்று பரிகசிப்பதும், பழிப்பதும், நம் தாய்நாடான இந்தியாவின் இப்போதைய நடுவண் அரசை பற்றிய எதிர்மறையான ஓர் கருத் தியலைப் பரப்ப இந்தப் போர்ச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வ தும் படைப்பாளிகளின் அணுகுமுறையாக இருக்கலாகாது.

உலகமே என் வீடு என்று கவித்துவமாகச் சொல்லிக்கொள்ள லாம். ஆனால், ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் வேறு எந்த நாட்டிலும் பெரும்பாலும் சுற்றுலாப்பயணியர், குடியேறிகள் அல்லது அகதிகள்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

No comments:

Post a Comment