சங்கக் கவிதைகளும்,
சமகாலத் தமிழ்க்கவிதைகளும்
_ லதா ராமகிருஷ்ணன்
எனக்குத் தெரிந்து நவீன தமிழ்க்கவிதைகள் ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பாக வந்தது ஏறத்தாழ கதா வெளியீடாக 2005இல் வெளிவந்த TAMIL NEW POETRY என்ற நூல். 90 தமிழ்க்கவிதை களின் ஆங்கில மொழிபெயர்ப்பு அதில் இடம்பெற்றிருந்தன. Translator -DR.K.S.SUBRAMANIAN.
அடுத்து 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட TAMIL POETRY TODAY தொகுப்பில் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த தமிழ்க்கவிதைகள் 106 மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆளுக்கொரு கவிதை என்று 106 கவிஞர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நூல் பின்னர் புஸ்தகா மின் நூல் பதிப்பகத்தால் மின் நூலாக வெளியாகியுள்ளது.
2010இல் தஞ்சாவூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட TAMIL WOMEN POETS - SANGAM TO THE PRESENTஎன்ற தொகுப்பில் சங்கப் பாடல்கள்(42 கவிஞர்கள்), நல்வழி, ஆத்திச்சூடி போன்ற நன்னெறிப் பாடல்கள்(நான்கைந்து கவிஞர்கள்), பக்தி இலக்கியம் (நான்கைந்து கவிஞர்கள்), தனிப்பாடல்கள்(20 கவிஞர்கள்), நாட்டுப்புறப் பாடல்கள்(
, தற்காலத் தமிழ்க் கவிதைகள்(33) என ஆறு பகுதிகளாய் கவிதை எழுதும் பெண்களின் எழுத்தாக்கங்களும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் தேர்வும், மொழிபெயர்ப்புமாக வெளியாகின.
இந்த இரண்டு தொகுப்புகளிலுமே விரிவான அறிமுகக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் டாக்டர் கே.எஸ். சுப்பிர மணியனின் தேர்வும் ஆங்கில மொழி பெயர்ப்புமாக சங்கப் பெண்கவிஞர்கள் அனைவருடைய கவிதைகளும் ஆங்கிலத் தில் இடம்பெற்றிருந்தன.
இது தவிர, கவிஞர்கள் உமா மகேஸ்வரி, தமிழன்பன் போன்று ஏறத்தாழ 10 தனிக் கவிஞர்களின் கவிதைகளும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு தொகுப்பாக வெளியாகியுள்ளன.
கவிஞர் இளம்பிறையின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங் கிய தொகுப்பு டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரைவில் நூலாக வெளிவரப்போகிறது!
பாரதியாரின் மொத்தக் கவிதைகளும் ஆங்கில மொழி பெயர்ப்பில் சாகித்ய அகாதெமி வெளியீடாக பிரசுரமாகி யிருக்கின்றன. அதில் ஏறத்தாழ 40% டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் மொழிபெயர்த்தது.
(இவை தவிர டாக்டர் மணி பௌமிக் எழுதிய பெயர்பெற்ற படைப்பான CODE NAME GOD இன் தமிழ் மொழிபெயர்ப்பு – கடவுளின் கையெழுத்து (கவிதா பதிப்பக வெளியீடு) , தமிழ்-சமஸ்கிருத இணை அர்த்தம் கொண்ட பாடல்கள், கவிதைகள் அடங்கிய ’சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற நூல், எழுத்தாளர் ஜெயகாந்தனின் 20க்கும் மேற்பட்ட படைப்புகளின் ஆங்கில மொழியாக்கம், அனுபவச்சுவடுகள் முதலான கட்டுரைத் தொகுப்புகள், சமீபத்தில் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம் என்ற தன் வரலாற்று நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை)
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் இந்த இலக்கியப் பங்களிப்பு கவனம் பெறவேண்டிய அளவு கவனம் பெற வில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இன்றும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு என்றால் ஏ.கே.ராமா னுஜம் பெயர் தான் கூறப்படுகிறது. டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் தரமான ஆங்கில மொழிபெயர்ப் பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சங்ககாலப் பெண்கவிஞர்கள் இடம்பெறும் கவிதைத் தொகுப்பு எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரிய வில்லை.







No comments:
Post a Comment