புல்லாங்குழற்கலைஞரின் உள்ளங்கையுலகு
https://www.facebook.com/100001078942965/videos/3073592312686703/?extid=Hst7n4VMXh8YvcVU
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பாடலைப் பார்க்க முடியும் தருணங்களின்
பரவசத்தைப் பாடமுடியாது
மூச்சுத்திணறும் மனதின் எளிய நன்றி நவிலலாய் கண்ணோரம் தளும்பும் ஒரு துளி.
முகமறியாத எளிய வள்ளல்களின் கனிவுக்கு
பதில் மரியாதை செய்ய வேறென்ன வழி....
ஆண்டான் - அடிமை யென்ற பழிகளுக்கு வழிகொடாத
காற்றின் ராஜாங்கத்தில்
அன்பே மொழியாக......
மௌனமாய் கேட்டுக்கொண்டிருக்கும் மரத்தின்
வேர்க்கால்கள் தாளமிடுவதை
உண்மையாகவே என் மனதால் காணமுடிகிறது!
அங்கே அமர்ந்திருப்பது கண்ணனும் யசோதையுமா?
மூதாட்டியின் கடந்தகாலமா? புல்லாங்குழற் கலைஞரின்
உள்ளங்கை யுலகமா
அவரவர் மனமெல்லாம்
அன்றாடம் என்னவெல்லாம்!
No comments:
Post a Comment