LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 16, 2026

தினம் மகளிர்……… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

//2020, MARCH 12, - மீள்பதிவு//
தினம் மகளிர்………
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
நான்காம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
நாலு வயதுப் பெண் குழந்தையை
அண்டை வீட்டைச் சேர்ந்த
நாற்பது வயது ஆணொருவன்
பாலியல் வன்கொடுமைக்காளாக்கி
யிருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன் தமிழ் நாளிதழில்
எட்டாம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
காதலித்த பதினான்கு வயதுப் பெண்ணை
அவள் காதலன் சிநேகிதர்களோடு சேர்ந்து
அசிங்கமாகப் படம் பிடித்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
ஐந்தாம் பக்கத்தில் வெளியான செய்தியில்
சிறுநீர் கழிக்க வீட்டின் பின்பக்கம் சென்ற
பனிரெண்டு வயதுச் சிறுமியின் வாயைப்
பொத்தி இழுத்துச் சென்ற இரண்டு பேர்
பெண்டாண்டு முடித்துத் துண்டாக்கிப்
போட்டிருந்தார்கள்.
நேற்றைய தமிழ் நாளிதழில்
நினைவிலிருந்து நழுவிவிட்ட எண்ணிட்ட
பக்கமொன்றில்
தாய் வேலைக்குப் போன பின்
தனியாயிருந்த ஒன்பது வயது மகளை
அச்சுறுத்திப் புணர்ந்து முடித்தான்
பாவி அப்பா.
படித்துப் படித்து மனதில் பரவிய
சொல்லொணா வலியில்
துடித்துத் துவண்டவர்கள்
பெண்கள் மட்டுமல்லர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி சார்ந்து
அவளை ஆதரித்த, அவதூறு செய்த
பெண்களும் இங்குளர்.
தன் மகளிடமே தவறு செய்த கணவனைக்
கைதுசெய்யவைத்த மனைவியைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
மனைவியை இழந்த பின் தனது மூன்று
மகள்களுக்காக
மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்
அந்தத் தபால்காரர்
தவறாமல் நினைவுக்கு வருகிறார்.
வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து
செண்ட்ரல் ரயில்நிலையத்தில்
வந்திறங்கிய
வளரிளம்பருவப்பெண்ணை
பத்திரமாக அழைத்துவந்து
நான்கு பெண்களாக நின்றிருந்த எங்களிடம்
நம்பிக்கையோடு ’ஒப்படைத்த மனிதரை
எப்படி மறக்க முடியும்?
எல்லாவற்றுக்குமாய்,
ஒரு கையறுநிலையில்,
உறங்க மறுத்துப்
பேதுற்று அழும் மனது.
நிறைய நிறைய சிறுவர் சிறுமிகள்
வளரிளம்பருவத்தினர்,
யுவதிகள் இளைஞர்கள் சூழ
நீள்கிறது
தெருவீதி
ஊருலகு.

நீதிக்கதை - 1 வருகை _ லதா ராமகிருஷ்ணன்

 நீதிக்கதை - 1

வருகை
_ லதா ராமகிருஷ்ணன்

திடீரென்று ஒரு நாள் தற்போதைய அகில உலகப் புகழ் கவிஞர் தன் வீடு தேடி வந்ததும் அந்த மூத்த கவிஞருக்கு ஒன்றும் புரியவில்லை.
சிறிதுநேரம் அந்த மூத்த கவிஞரின் ஒன்றிரண்டு கவிதை களைப் பற்றிப் பேசிய பின் வந்திருந்தவர் “ நீங்கள் அந்த நாட்டில் உங்கள் பிள்ளைகளுடன் தான் இருக்கப்போகி றீர்கள் என்று கேள்விப் பட்டேன். அங்கே உங்களுக்காக தமிழ் இலக்கி யக் கவிதா நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியிருக்கி றதாமே - எனக்கும் உங்களைப் பாராட்டிப் பேச மிகவும் விருப்பம்’ என்று சொன்னபோது அவர் இன்னும் போகாத நாட்டுக்கான கடவுச்சீட்டாகத் தான் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பது புரிந்தது பெரியவருக்கு.

P.சுசீலாக்களின் பெருங்கருணை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //மீள்பதிவு - 2020, மார்ச் 16//

P.சுசீலாக்களின் பெருங்கருணை!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குரல் வழி பரவும் கனிவினிமையில்
ஒவ்வொரு மனதிலும்
காலத்தின் அதலபாதாளத்திலிருந்து
அல்லது, கைக்கெட்டா உயரத்திலிருக்கும்
பரணிலிருந்து
சில தருணங்கள் துடித்தெழுந்து
தரையிறங்கிவருகின்றன.
சில பாதி மூடிய,
இறுக்கமாகத் தாழிட்ட
கதவுகள்
தாமாகவே விரியத் திறந்துகொள்கின்றன.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கண்ணதாசன் தேவிகா கல்யாணகுமார்
ஸ்ரீதர் இன்னும் எத்தனையோ பேருமான
ஒரு சுசீலாவின் வாய்திறந்து
அத்தனை சுசீலாக்களும் பாடுகிறார்கள்.
ஆனாலும் சேர்ந்திசையாகாது,
அவரவருக்கு மட்டுமானதாக
மிகத்தனியாக
இசைத்துக்கொண்டிருக்கிறது பாடல்.
தடையரண்களெல்லாம் தகர்ந்துபோக
ஒரே சமயத்தில் தானாகவும் பிறனாகவும்
வாழக் கிடைக்கும் வாழ்க்கை
இந்த ஏழை மனதை
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
ரசவாதியாக்குகிறது!
அரங்கமொரு பிரபஞ்சவெளியாகிறது!
ஒரு பிறவிக்குள் எத்தனையெத்தனை
மறுபிறவிகள்!
அத்தனையையும் வாழ்ந்துபார்க்கும் ஆர்வமும்
வாழ்ந்தாகவேண்டிய அயர்வுமாய்
அமர்ந்திருக்குமவர்களை
அந்தப் பெண்ணின் குரல் அத்தனை பிரியமாய்
வருடித்தரத் தர
அவர்கள் ஏழைக் குசேலனின் அவிலாய்
தங்கள் கைத்தட்டல்களையும் கண்ணீர்த்துளிகளையும்
பரிசளிக்கிறார்கள்.
பாடல் முடிந்து
கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாய்
மீண்டும் மூடிக்கொண்டபின்னும்
விட்டகுறை தொட்டகுறையாய்
சன்னமாய் மென் காற்று வீச,
இன்னும்
மனமெங்கும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும்
சுநாதம்.
(சமர்ப்பணம்: பாடகி பிரியங்காவுக்கு)

SALUTE TO STEPHEN HAWKING (*Thanks to Lifehack)

 //march 16, 2018 -,

SALUTE TO STEPHEN HAWKING


Twinkle of the brightest star
Flapping wings black hole to brains
Wheel chaired universe
Good bye Stephen William Hawking
_ TAMIL POET NESAMITRAN

Poet Nesamithran’s profound goodbye to Stephen Hawking

Today morning I happened to read a piece of writing by a well-known writer of Tamil criticizing those who hail Stefan Hawking and giving him a rockstar welcome.

Why not? and in fact he deserves much more than a rockstar.

And, The writer has attributed our respect for Stefan Hawking to the slave mentality of people the world over with respect to the Whites. He further says that we give Stefan Hawking the credit of so many scientific inventions which in fact were done in Indian soil centuries and centuries ago.

But, I feel that the world's respect for Stefan Hawking is for the way he had led a meaningful life despite his acute physical inability.

How can anyone ignore this fact- and, in particular, a writer?

And, here I remember the anecdote which observes that when Helen Keller was speaking and writing about her disability and the resultant discomforts, many welcomed it, but when she started to give forth her views on the prevailing social climate it was not that much welcomed.

This is what I perceive as prejudiced mentality of the powerful - class.

In this case, the so-called normal ones. This powerful class can have different dimensions and denomi nations.

Unfortunately many amidst us psychologically belong to this class.
Latha Ramakrishnan


SALUTE TO STEPHEN HAWKING

(*Thanks to Lifehack)
Stephen Hawking’s life is remarkable in many ways.
Firstly, because he was a brilliant physicist and has made groundbreaking discoveries regarding the cosmos, black holes and other unexplored aspects of the universe we live in.
Secondly, he had survived motor neurone disease (ALS) which was diagnosed when he was 21 years old. He was told he had a few years to live and now, at the age of 73, he was very much alive and as mentally active as ever. He had been immobilized since his twenties and then lost the power of speech and he now spoke via a computerized synthesizer.
He was born on Jan 8th in 1942 which was the 300th anniversary of the death of Galileo. At school, he only managed to get average grades. He was curious about how clocks worked and regularly took them to pieces but was not very good at reassembling them!
His studies at Oxford were disturbed by his rowing practice which occupied six afternoons a week. He was the coxswain who steered the boat and kept the rowers safe. The only problem was that his studies suffered and he admitted that he had to cut some corners to pass his exams!
His studies and research brought him countless and prizes. It is interesting to know that he held the Lucasian Chair of Mathematics at the University of Cambridge for 30 years. Isaac Newton held the same position way back in 1669.
Hawking’s relationship with his wife Jane is movingly portrayed in the film The Theory of Everything. When asked what he thought of the film, Hawking replied that there was not enough science in it while his ex wife thought that there was not enough emotion.
Stephen Hawking’s life is an astonishing story of a man who faced enormous odds and went on to become one of the world’s most famous scientists..


பாடகனின் அநாதிகாலம்! -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாடகனின் அநாதிகாலம்!

(“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’
என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்
மேடையில்.....
காதல் என்று அவன் பாடுவது எனக்குக்
காலம் என்பதாய் குழம்புகிறது.
அவனை மாற்றியிருக்குமோ காதல்?
ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?
எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.
சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.
குரலில் கரகரப்பு கூடுகிறது.
ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்
கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்
செல்லப் பாப்பாவும் வரக் காண்பது
சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!
இசையின் உன்மத்தநிலையில்
சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்
அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!
'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'
என்று அழைக்கும் அந்தக் குரல்
கண்ணனுடையதாக _
கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்
பாலினங் கடந்து!
வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்
முன்நெற்றி முடிச்சுருளுமாய்
அந்தப் பாடகனின் குரல்
அநாதி காலத்திலிருந்து கிளம்பி
அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.
மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்
அவனுடைய பிரதிபிம்பங்களாய்….
அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய
விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....
பாடலை எழுதிய, இசையமைத்த
கைகளும் மனங்களும்
தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்
இரண்டறக் கலந்து
ஈரம் நிறைக்கும் இசையில்
அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்
விரவிய ரசிகர்களின்
காலம் இல்லாமலாகியது.
அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்
அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து
அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது
அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி
அவனை அத்தனை அன்போடு
வழியனுப்பிவைக்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை
உருவாக்கித்தந்தவனுக்கு
என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்
நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.
(சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)

கவியின் அரிச்சுவடி - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவியின் அரிச்சுவடி

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கவிதையில் தனக்குக் கிடைத்த வாசகப்பிரதி
அருவருப்பாக இருந்ததாக உணர்ந்தவர்கள்
கவியின் கையை முறித்துப் போடுகிறார்கள்
எண்ணம்தானே எழுத்தாகிறது என்று
இருதயத்தை அறுத்துப்போடுகிறார்கள்
குருதி பெருக்கெடுத்தோட உறு வலியில் முனகியபடியே
வருந்திப் புன்னகைத்தவாறு
முணுமுணுக்கிறார் கவி மெல்ல:
"இருதயமும் இதயமும் ஒன்றல்ல

Sunday, March 15, 2026

அறைகூவல் அல்லது சமன்பாடு அல்லது இலக்கியக் கூட்டணி அல்லது....

 அறைகூவல் அல்லது சமன்பாடு

அல்லது இலக்கியக் கூட்டணி அல்லது....

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் சிறந்த விமர்சகர்
என்னை சிறந்த எழுத்தாளரென
சிலாகிப்பதால்.
அவர் அதிசிறந்த விமர்சகர்
என்னை அதிசிறந்த எழுத்தாளரென
அடித்துக்கூறுவதால்.

அவர் மட்டுமே விமர்சகர் நான் மட்டுமே எழுத்தாளரென
நாக்கில் பல்லு போட்டு
நயந்துரைப்பதால்.

சொல்வதும் செய்வதும் _ லதா ராமகிருஷ்ணன்

 // MARCH 12, 2017 - மீள்பதிவு//

சொல்வதும் செய்வதும்
_ லதா ராமகிருஷ்ணன்

Beauty lies in the eyes of the beholder(அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது). மிகவும் உண்மை. அதேசமயம், அழகு என்பது உருவேற்றப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதும் அதேயளவு உண்மை.
வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று குழந்தை முதலே திரும்பத்திரும்ப உருவேற்றப்பட்டுவருகிறது. இது குறித்து கண்டனம் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் சில முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டியது முக்கியம்.
ஒளி-ஒலி ஊடகங்களின் உரிமையாளர்கள் இந்த நோக்கில் முனைப்பாய் செயல்பட முடியும்; செயல்பட வேண்டும். நிறம் சார்ந்து உயர்வு, தாழ்வுகளைக் கண்டித்துவருவோர் குறைந்தபட்சம் தங்கள் ‘சானல்’ களிலாவது அந்த ’உயர்வு-தாழ்வு’க் கண்ணோட்டங்களை வலியுறுத்தும் விளம்பரங்களை வெளியிடாமலிருக் கலாம்.
நடிகை ராதிகா இடம்பெறும் ‘அத்திகா’ gold விளம்பரத் தில் அவரை வெள்ளையாகக் காட்ட எதற்கு அத்தனை பிரயத்தனம்? அரசியலில் உள்ளவர்களிலும் நிறைய பேர் இப்படி ‘நிறம் மாறவேண்டிய’ தேவையில்லையென்றே தோன்றுகிறது.
தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் இளம் பெண் ஒருவர் (வர்ஷினி என்பது பெயரின் பின்பாதி. முழுப்பெயர் சட்டென்று நினைவுக்குப் பிடிபட வில்லை) உதட்டுச் சாயம் கூடப் பூசாமல் இயல்பாகத் தோன்றுவது வரவேற்கத் தக்கது. மக்கள் தொலைக்காட்சி யிலும் அப்படி சிலரைப் பார்க்க முடிகிறது. இந்தப் போக்கு இன்னும் பரவலாக இடம்பெறவேண்டி யது அவசியம்.
நந்திதா தாஸ் போல் இயல்பான தேன்நிறத்தில், அல்லது திராட்சை நிறத்தில் பெண்கள் (ஆண்களும்) ஏன் விளம்ப ரங்களில் இடம்பெறலாகாது? தொலைக்காட்சி அலை வரிசைகள் இந்த ‘நிறம் சார் சமத்துவத்தை’ ஒரு தொழில்முறைக் கோட்பாடாகக் கடைப்பிடிக்கலாமே.
இதில் இன்னும் மோசம் – ‘சன்’ குழுமத் தொலைக்காட்சி களில் ஒன்றில் இடம்பெறும் குட்டீஸ்-சுட்டீஸ்’ என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்துபவர் (அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளிடம் வேண்டாத பல கேள்வி கள் கேட்கப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க - உதார ணமாக – உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா, உன் அப்பா உன் அம்மாவை அடிப்பாரா? அல்லது உன் அம்மா உன் அப்பாவை அடிப்பாரா?) திரும்பத் திரும்ப “என்னை மாதிரி கருப்பா?”, ”என்னை மாதிரி ரொம்பக் கருப்பா?” என்று, நிகழ்ச்சியில் இடம்பெறும் குழந்தைக ளிடம் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் ‘வெள்ளை நிறம் தான் அழகு’ என்ற எண்ணத்தையே வளர்த்துக் கொள்ளும்.
FAIR & LOVELY ஐ GLOW & LOVELYயாக மாற்றிவிட்டால் மட்டும் போதுமா?

Thursday, March 5, 2026

ரங்கநாயகி (புதினம்) ஆசிரியர்: கே.பாரதி

ரங்கநாயகி

(புதினம்)
ஆசிரியர்: கே.பாரதி

முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ்

 //இவ்வார (march 1, 2026) திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை யிலிருந்து ஆரம்ப வரிகள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. கட்டுரையை முழுவதும் வாசிக்க கீழே லிங்க் தரப்பட்டுள்ளது - லதா ராமகிருஷ்ணன்//

https://puthu.thinnai.com/2026/03/01/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d/

ல்ல படைப்பு என்பதற்கான தர நிர்ணய அளவுகோல் எது? தர நிர்ணய அளவுகள் யாவை? ஒரு வகையில் இது வாசகருக்கு வாசகர் மாறுபடலாம் என்றாலும் பரவலாக அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அளவுகோல் கள் சில உண்டு. ஒருவகை Catharsis உணர்வை ஏற்படுத்து தல்; மனித மனதை மேம்படுத்துதல், விசாலமாக்குதல் வாழ்க்கை குறித்த நம் பார்வையை தெளிவுபடுத்துதல், விரிவுபடுத்துதல்… அதேபோல் Style of narrationனும் முக்கி யம். ஒரேடியாக புரியாமல் போனாலும் அனைத்து தரப்பு வாசகர்களாலும் ஒரு படைப்பிற்குள் ஒன்றமுடியாமல் போய்விடும் அதேசமயம், எளிமையாக எழுதுகிறேன் என்று ஒரேயடியாக வறண்ட எழுத்துநடையாக இருந் தாலும் வாசகர் மனதில் தாக்கம் ஏற்படுத்தத் தவறி விடும். படைப்பாளி கதையோட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதே குறியாக கிடைத்த இடத்தி லெல்லாம் பீடம் ஏறி போதித்துக்கொண்டேயிருந்தால், மேடை ஏறி முழங்கிக்கொண்டே யிருந்தால் வாசகருக்கு கதையில் பங்கேற்க இயலாது. வாசகப் பிரதிக்கான இடமேயில்லாமல் வாசகர், வெறும் பார்வையாளர் நிலையில் நின்றுவிடுவார்.
Underplay of emotions எழுத்து, சினிமா இரண்டிலுமே தரமான படைப்புக்கான தர நிர்ணய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. Underplay of emotionsஇல் வாசக மனங் களில், பார்வையாளர்கள் மனங்களில் உச்சபட்ச தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பது உட்பொருள்.....
கே.பாரதி எழுதிய ரங்கநாயகி என்ற தலைப்பிலான நாவலை (வெளியீடுகவிதாபப்ளிகேஷன்ஸ்; முதல் பதிப்பு: ஜனவரி,20 21) வாசித்த போது மேற்கண்ட சிந்தனைகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. இந்த புதினத்திலும், இதற்கு முந்தைய அவரது நூல்க ளான சொந்தசகோதரிகள் என்ற தலைப்பிலான சிறுகதை தொகுப்பு, தேவ மனோகரி என்ற புதினம் போன்றவற்றி லும் கதாசிரியர் பற்றிய குறிப்பு மிகவும் சுருக்கமாகவே தரப்பட்டி ருக்கும். பல புத்தகங்களில் பெரிய பெரிய மகத்தான என்னுரைக ளும், முன்னுரைகளும், அணிந்து ரைகளுமாக அந்த படைப்பை வாசகர்கள் பாராட்டிய தீர வேண்டும் இல்லையென்றால் அவருக்குத்தான் ரசனை இல்லை தேர்ந்த வாசிப்பில்லை என்ற ஒரு நினைப்பை பதட்டத்தை வாசக மனங்களில் தோற்றுவிப்ப தைப் பார்க்க முடியும்.

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!
(BERTRAND RUSSEL)
பாகம் – 1
மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்
அத்தியாயம் – 7 பாவ உணர்வு / குற்ற உணர்ச்சி
[THE SENSE OF SIN]
தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்


https://puthu.thinnai.com/2026/02/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-3/

(WWW.PUTHU.THINNAI.COM (22, பிப்ரவரி, 2026) இதழில் இல் வெளியாகியுள்ளது)


” குற்ற உணர்வு என்பது, அதன் மிக முக்கியமான வடிவங்களில், இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்வது. அது நம் நினைவிலி மனதில் வேரூன்றியிருப்பது. மற்றவர்கள் அதை ஏற்க மாட்டார்கள், மற்றவர்களால் அது கண்டனத்திற்கு உரிய அவச்செயலாகப் பார்க்கப்படும் என்ற அச்சத்தால் இந்த குற்ற உணர்வு நமது பிரக்ஞைத்தளத்தில் வெளிப்படுவதில்லை.