LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அன்னா அக்மதோவா கவிதைகள். Show all posts
Showing posts with label அன்னா அக்மதோவா கவிதைகள். Show all posts

Friday, May 16, 2025

அன்னா அக்மதோவாவின் கவிதை -23

 அன்னா அக்மதோவாவின் கவிதை -23

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மொழிபெயர்ப்பு - 1
.......................................
இந்த மாலைவேளையின் ஒளி பொன்னிறத் தகதகப்பாய்....
இந்த மாலைவேளையின் ஒளி
பொன்னிறத் தகதகப்பாய்
ஏப்ரல் மாதக் குளிர் மிக இதமாய்
நீ பல வருடங்கள் காலதாமதமாய்
என்றாலும் உள்ளே வரும்படி உன்னை
வரவேற்கிறேன்.
எனக்கு அருகில் அமர்ந்துகொண்டு
மகிழ்ச்சி ததும்பும் கண்களால் சுற்றுமுற்றும் பாரேன்.
இந்தச் சிறிய நோட்டுப்புத்தகத்தில் இன்னுமிருக்கிறது
சிறுபிள்ளையாயிருந்தபோது எழுதிய கவிதைகள்
என்னை மன்னித்துவிடு
இத்தனைநாள் வருந்தியபடியே வாழ்ந்திருந்ததற்கு
சூரியக்கதிர்களுக்காக நன்றி பாராட்டாததற்கு
தயவு செய்து என்னை மன்னித்துவிடு
யார் யாரையோ நீயெனப் பிழையாக
என்ணியிருந்ததற்கு.
***
தமிழ் மொழிபெயர்ப்பு -2
...............................................................................

பொன்மாலைப்பொழுது
பொன்னென மின்னும்
இன்மாலைப்பொழுது
மிக இதமான ஏப்ரல் மாதக் குளிர்
மிகப் பல வருடங்கள் காலதாமதமாய் வந்திருக்கிறாய்
இருந்தும் உன்னை மனதார வரவேற்கிறேன்.
என்னருகில் அமர்ந்துகொண்டு ஆனந்தமாய்
அங்குமிங்கும் பார்க்கமாட்டாயா?
என் பிள்ளைப்பிராயக் கவிதைகள்
இன்னுமிருக்கிறது
இந்தச் சின்ன நோட்டுப்புத்தகத்தில்.
இதுகாறும் வருந்தியவாறே வாழ்ந்தமைக்கும்
சூரியக்கதிர்களுக்கு நன்றி பாராட்டாததற்கும்
மன்னித்துவிடு என்னை.
எவரெவரையோ நீயென்று கொண்டதற்கு
தயவுசெய்து மன்னித்துவிடு என்னை.

*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், அந்த வார்த்தை அதன் இடவமைவில் உணர்த்தும் பொதுவான, தனியான அர்த்தங்களுக்கு நியாயம் செய்யும் அளவில் இணை வார்த்தைகள் தமிழாக்கத்தில் இடம்பெற்றிருக்கின் றனவா? MOURNED என்ற வார்த்தை உணர்த்துவது வெறும் வருத்தத்தைத் தாண்டிய ஒரு இழப்புணர்வு என்று என் மனம் என் மொழிபெயர்ப்பைக் குறைகூறுகிறது. ஒருமுறை மொழிபெயர்த்து முடித்த கையோடு இதே கவிதையை இன்னொருமுறை மொழிபெயர்த்தபோது மொழிபெயர்ப்பு ஒரே மாதிரியாக இல்லை. இவ்வாறு ஒரே கவிதையை ஒரே மொழிபெயர்ப்பாளர் இரண்டு மூன்று முறை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பு ஒரேபோல் அமையாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.
...............................................................................

அன்னா அக்மதோவாவின் கவிதை - 21

  அன்னா அக்மதோவாவின் கவிதை - 21

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்



காட்டுத்தேனில் இருக்கிறது விடுதலையின் மணம்
புழுதியிலிருக்கிறது ஒரு சூரியக்கதிருடையது.
ஒரு பெண்ணின் வாய் – ஊதாப்பூவினது
பொன்னுக்கு மணமேது?
நீரனைத்தாய் Mignonette செடி
காதல் _ ஆப்பிள்போல்
ஆனால் எப்போதுமே தெரிந்துகொண்டிருக்கிறோம் நாம்
ரத்தமாகவேயிருக்கும் ரத்தத்தின் நெடி.

*Mignonette சிறு மலர்கள் கொண்ட ஒரு வகை தோட்டச் செடி.

Friday, May 9, 2025

அன்னா அக்மதோவாவின் கவிதை - 20 - வில்லோ மரம்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 20

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ் ணன்
(*முதல் வரைவு)

வில்லோ மரம்
நான் வளர்ந்தேன் _ நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட நிறைவமைதியில்
இளம் நூற்றாண்டின் நாற்றங்கால் மையத்தில்
ஓர் ஆண்குரல் எனக்கு அந்நியோன்யமாய் இல்லை
ஆனால் காற்றின் குரலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
எனில், எல்லாவற்றையும் விட சிறந்தது
அந்த வெள்ளி ‘வில்லோ’ மரமே.
தன் முழு வாழ்வையும் என்னோடு வாழ்ந்து கழித்தது,
அதற்காகவே பிறந்ததுபோல்;
அதன் விசும்பும் கிளைகள்
கனவுகளால் என் உறக்கமின்மையை விசிறிவிட்டன.
என்ன விசித்திரம்! அது என்னை முந்திக்கொண்டுவிட்டது.
அதோ அதன் அடித்தண்டு நிற்கிறது;
விந்தையான குரல்களால் ஏனைய வில்லோக்கள்
நமது, அந்த, ஆகாயங்களின் கீழ்
அளவளாவிக்கொண்டிருக்கின்றன
அமைதியாயிருக்கிறேன் நான்……
என் சகோதரன் இறந்துவிட்டதைப்போல…….

Willow

And I grew up in patterned tranquility,
In the cool nursery of the young century.
And the voice of man was not dear to me,
But the voice of the wind I could understand.
But best of all the silver willow.
And obligingly, it lived
With me all my life; it's weeping branches
Fanned my insomnia with dreams.
And strange!--I outlived it.
There the stump stands; with strange voices
Other willows are conversing
Under our, under those skies.
And I am silent...As if a brother had died.

ANNA AKHMATOVA

அன்னா அக்மதோவாவின் கவிதை - 19 - நான் கவிதை எழுதும்போது

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 19

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்.
(*முதல் வரைவு)
நான் கவிதை எழுதும்போது

அரூப மனவெழுச்சியால் ஆரத்தழுவப்படும்போது
நான் விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப்பாலம்,
படைப்பாக்கத்தின் உயர்-விழுமியங்களாக இதயம் கொள்ளும் அனைத்திலும்
ஆட்சிபீடத்தில் நான், ஒரு கவிதையோடு சுவாசித்திருக்கும்போது!
என்னுடைய ஆன்மா அதை விரும்பினால்,
அன்பின் தேவதையே,
மென்ரீங்காரத்துடன், இளரோஜாநிறக் கடல்
கனவுமயமான அலை கனவுமயமான தரையை அடைய
அதைத் தூக்கிசென்றுகொண்டிருக்கும்
அமைதியான கடலோர இசைக்குழுவைக்
கேட்கத் தருவேன் உனக்கு.
என்னால் எல்லாமே செய்யமுடியும், என்னை நம்பு அதுபோதும்:
நான் அதிவலிமையானவள்;
கருணைக்கும் காதலுக்குமான வேர்கள் என்னிடமுள்ளன;
நான் விரும்பினால், மேகங்களிலிருந்தும் மின்னலிலிருந்தும்
விண்ணிலிருக்கும் உன் இன்படுக்கைக்கு போர்வை தயாரிப்பேன்.
மேலும், அன்பே, வெகு சிறப்பான மிகப் பிரத்யேகமான
ஒரு சொல்லை உருவாக்குவேன் _
உலகனைத்தின் விதிகளை மாற்றிவிடுவதாய்,
தனதேயான கொண்டாட்டத்தை மீண்டும் வரவழைப்பதாய்
இரவின் குளிர்வில் சூரியன் விழுவதைத் தடுத்துநிறுத்துவதாய்.
நான் முழுக்க முழுக்க வேறொருவர், என் கவித்துவ மனவெழுச்சியில்.
நான் விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப்பாலம்,
படைப்பாக்கத்தின் உயர்-விழுமியங்களாக இதயம் கொள்ளும் அனைத்திலும்
ஆட்சிபீடத்தில் நான், ஒரு கவிதையோடு சுவாசித்திருக்கும்போது!

When I Write Poems
When I'm embraced by airy inspiration,
I am a bridge between the sky and earth.
Of all what heart high-values in creation
I am a king, when breathing with a verse!
Just if my soul wishes it, my fairy,
I shall give you the peaceful coast band,
Where, with a hum, the pinky sea is carrying
The dreaming tide to reach the dreaming land.
I can do all, just trust in me: I'm mighty;
I have the roots for kindness and for love;
And if I want, from clouds and from the lightning
I'll make a cover your sweet bed above.
And I can, dear, create a word such special,
That it would change laws of the whole world,
To call again its own celebration
And stop the sun from fall in the night cold.
I'm all another in my inspiration,
I am a bridge between the sky and earth.
Of all what heart high-values in creation
I am a king, when breathing with a verse!
Anna Akhmatova

அன்னா அக்மதோவாவின் கவிதை - 17 - மரணம்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்
*முதல் வரைவு)

மரணம்
(1)

திருத்தமான பெயர் எதுவுவில்லாத
ஏதோவொன்றின் விளிம்பிலிருந்தேன் நான்
தவிர்க்கமுடியாததொரு அரைமயக்கநிலை,
தன்னைத்தான் தவிர்த்தலாய்…..

(2)

ஏதோவொன்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருக்கிறேன்
எல்லோருக்கும் நேர்வதுதான் – ஆனால் இதன் விளைவு வேறு
இந்தக்கப்பலில் எனக்கென்று தனியறை இருக்கிறது
என் பாய்மரத்தில் காற்றிருக்கிறது
மற்றும் என் தாய்நாட்டிடம் விடைபெற்றுக்கொள்ளும்
அந்தக் கொடூரமான கணமும் இருக்கிறது.

Saturday, May 3, 2025

அன்னா அக்மதோவாவின் கவிதை *(சமர்ப்பணம்: N.V.N*க்கு) - 16

 அன்னா அக்மதோவாவின் கவிதை

*(சமர்ப்பணம்: N.V.N*க்கு)
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்(முதல் வரைவு)

அன்பின் நெருக்கத்தில் ஒரு புனிதமான விளிம்பு உண்டு.
நேசமோ வேட்கையோ அதைக் கடக்க அனுமதிக்கலாகாது _
காதல் உதடுகளை மௌன பிரமிப்பில்
திக்குமுக்காடி ஒன்றுகலக்கச் செய்தாலும்;
திட்டவட்டமாய் இதயத்தைக்
கிழித்தெறிந்தாலும்.
இங்கு நட்பு கையறுநிலையில்,
வளர்ந்துகொண்டே போகும்
மகிழ்ச்சியான ஆண்டுகளும் அவ்வாறே,
தகிக்கும் வேட்கைப்போதுகளும்
அத்தகைத்தே
இதயம் இச்சையின் மந்தமான துறைமுகத்திலிருந்து
ஒரு துணிச்சலான வழியில் பயணிக்கலாகும்
விடுதலையும் அவ்வண்ணமே.
இந்த எல்லையை எட்ட முற்படுபவர்கள்
பித்துப்பிடித்தவர்கள்.
இதை அடைந்துவிடுபவர்கள்
ஆறாவேதனையால் ஆட்கொள்ளப்படுவார்கள்.
உன் உள்ளங்கையின் அடியில்
என் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை உன்னால் ஏன் உணர முடியவில்லையென்று
இப்போது புரிந்திருக்கும் உனக்கு.
மே, 1915
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.
*N.V.N _ dedicated to Nikolai Vladimirovich Nedobrovo (1884 – 1919) – அக்மதோவாவின் நண்பர், கவிஞர் தரமான ரசனை கொண்ட இலக்கிய விமர்சகர்.
May 1915
St Petersburg
Translated by Peter Tempest.
*N.V.N _ dedicated to Nikolai Vladimirovich Nedobrovo (1884 – 1919) – Akhmatova’s friend, poet and literary critic of great taste.
A POEM BY ANNA AKHMATOVA (1889 – 1966)
To N.V.N*
In intimacy there’s a sacred verge
not to be crossed by fondness or by passion
though love brings lips in silent awe to merge
and tears the heart asunder in sure fashion.
Here friendship’s powerless, as are the years
of soaring happiness, or blazing ardour,
of freedom when the heart a bold course steers
away from sensuality’s dull harbor.
Those who aspire to reach this verge are mad,
And those who reach it are by anguish stricken….
You know now why it is beneath your hand
You cannot feel the beat of my heart quicken.
May 1915
St Petersburg
Translated by Peter Tempest.
*N.V.N _ dedicated to Nikolai Vladimirovich Nedobrovo (1884 – 1919) – Akhmatova’s friend, poet and literary critic of great taste.
All reactions:
அப்துல்லா கரீம் and Abdul Sathar