LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 23, 2026

SUPERIORITY COMPLEX - Rishi (Latha Ramakrishnan)

 SUPERIORITY COMPLEX

Rishi

(Latha Ramakrishnan)

Who has seen the elephant in full

You, I, they ?– Come on, tell.

Well, what about its inner organs?

Have you seen them all ever?

Viewing them as images is not the same as

seeing them function inside a tusker.

And, what about its feelings?

Have we ever cared?

Stop feeling superior

when you are far from that.

See yourself in the mirror

Bespectacled or not

your vision is blurred. –

Let me tell you that.

Instead of parrotting the ‘elephant tale’

use your brain a little bit

take some time to go see a visually impaired child

and listen to what she or he has to say

about the elephant’s form.

Please don’t hide behind a cliche

that is insensitive to the core

and still claim that you care for 

your suffering brethren’s  welfare.

Half-baked intelligence being the norm

you would find it difficult to stay informed

about the visually impaired 

or, for that matter, any other

But you would go on blabbering 

unhindered.

about this that and what not

You know what

You are the one most impaired. 

பார்வை .......................................... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பார்வை

..........................................

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு

நூறு யானையின் பசியோடு

பழிபாவத்திற்கு அஞ்சாமல்

ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்

விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட

வழக்கொழிந்த கதையை

முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி

ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை 

அவர்களுக்கேயான வரைபடத்தில் 

தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,

ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக 

விரியக் கேட்டிருந்தவர்கள்,

கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த 

குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து

தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து

சரியாக முதுகிலேறி

தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,

அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி

அவ்வப்போது தடுக்கி விழுந்து

அடிபட்டுக்கொண்டும் முன்னேறி

இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்

பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _

‘உங்களால் மட்டும் 

பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?

உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா

இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....

கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிபிறழ்வுகளுக்கெல்லாம் 

எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?

என்று கேட்டால் 

ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ, 

இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….


......................................................................................................................................................

 //*இன்று கூட மெத்தப்படித்த ,மனிதநேயப் படைப்பாளி வெகு சாதாரணமாக 'பார்வையிழந்தவர் யானையைப் பார்ப்பதுபோல் என்று வெகு சாதாரணக் கதையொன் றுக்கான தனது மிக நீண்ட ஆதரவு- வியாக்கியான திறனாய்வுக் கட்டுரையொன்றில் எழுதியிருப்பதைப் படிக்க நேர்ந்தது. நம்மில் எத்தனையோ பேர் மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்கள். அப்படியே அணியவில்லையானாலும் அதனால் யானையை நாம் பரிபூரணமாகக் கண்டவர்களாகிவிடுவோமா?  அத்தனை நெருக்கத்திலா யானையைப் பார்த்திருக் கிறோம். பார்வையிருப்பதாலேயே யானையின் உள்ளுறுப்பைப் பார்த்துவிட முடியுமா ? யானையைக் கண்டாலும் டினோசாரையும் பார்த்திருப்பதாகச் சொல்லமுடியுமா? எல்லாவற்றையும் வெறுமே கண் காட்சிப்பொருளாகப் பார்ப்பதற்கும், சகவுயிர்கள் என்ற புரிதலோடு பார்ப்பதற்கும்  எத்தனை வித்தியாசம் இருக்கிறது ? என்றாவது எண்ணிப் பார்த்திருக்கி றோமா? எனக்குக் கண் இருக்கிறது எனவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக்கொள்வது எத்தனை அபத்தமான அகங்காரம் ?


TRANSCIENCE - 'rishi’ (Latha Ramakrishnan)

 TRANSCIENCE

'rishi’ 

(Latha Ramakrishnan)


Yester night 

some  words as stray fireflies and butterflies

were hovering over me, oozing glow  so rare

proving life more than a mere vanity fair

hoping that they would be seamlessly woven 

into a poem.

But, half-afraid of the alien cabin

half of me already asleep, the rest drooping

I waved them away with a heavy heart.

Today I am wide awake, 

waiting for those fireflies and butterflies

to bless me with their wings and shine

the boon of a poem sublime….

Much as I try, they refuse to oblige.

I remain a vauum to be filled by the 

 ‘never to return’ Moment.


நிலையாமை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நேற்றிரவு

சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள், சில வண்ணத்திப்புச்சிகள்

என் தலைக்கு மேலாய் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;

வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல என்று நிரூபித்தபடி;

அத்தனை நேர்த்தியாய் அவையோர் கவிதையில் ஊடுபாவாய்

 நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.

எனில், புதிய அறை தரும் பயமும், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்

மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும்  கோலமுமாய்

கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.

இன்று நான் முழு விழிப்பில் காத்துக்கொண்டிருக்கிறேன்

அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.

தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர் 

கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.

ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை  ஏற்க மறுக்கின்றன.

வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத  தருணம் இட்டுநிரப்ப, 

RIPPLES AND BUBBLES by 'Rishi' (Latha Ramakrishnan)

RIPPLES AND BUBBLES

by 'Rishi' 

(Latha Ramakrishnan)


METAMORPHOSIS

Poems say nothing

Unless the reader becomes the poet


SYNOPSIS

Words in a poem are but

thorns and flowers in a jungle divine.


REALIZATION

Claps, applause _ can they

ever equal the joy of creating?


EXERCIZE

I walk along the vast expanse of

evergreen infinity of the world within.


PRAYER

Let me be wide awake in a

Dreamless full-throated sleep tonight.


‘rishi’ (Latha Ramakrishnan)

(from the poemvolume

‘THE RAIN BEYOND & OTHER POEMS)

A POEM BY NESAMITRAN

A POEM BY 

NESAMITRAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

That tree is just standing there

It is this ‘just standing’ tree

that ripens an old tree

A new root keeps banging against a rock 

on the way, 

piercing and probing

Worrying over the cloud going past

wondering whether it would darken

and cause the rain

it is bending and curving by way of protecting

the branch from breaking apart

in the blowing wind.

Holding so much of sun in its palm

it is cooking food;

consoles the chicks in the nest

when the return of the mother bird is delayed.

Watches helplessly the snake 

that steals the eggs from another nest.

Turns flowers into fruits.

Offers its body to the woodpecker.

Fully grown when on the day

it is cut and taken away

It would remain just standing there

Saying ‘My mother is just a house wife, Sir’,

is the same as saying 

‘The tree is just standing there’.

.............................................................................

நேச மித்ரனின் கவிதை:

..............................................................................

 அந்த மரம் சும்மாதான் நிற்கிறது 

சும்மா இருக்கும் மரம்தான் 

ஒரு பழைய இலையை பழுக்க வைக்கிறது

ஒரு புதிய வேர் வழியில் இருக்கும்

பாறையை முட்டிக் குடைந்து கொண்டிருக்கிறது

கடந்து போகும் மேகம் கருக்குமா

பொழியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது

வீசும் காற்றில் கிளை முறிந்து விடாமல் இருக்க வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது

அவ்வளவு வெய்யிலை 

உள்ளங்கையில் சுடச் சுட ஏந்தி 

சோறு சமைத்துக் கொண்டிருக்கிறது

தாமதமாய் கூடு திரும்பும் பறவைக் கூட்டில் குஞ்சுகளுக்கு சமாதானம் சொல்கிறது

இன்னொரு கூட்டில் முட்டைகளை திருடி உண்ணும் பாம்பை ஒண்னும் 

செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறது

பூக்களை கனியாக்குகிறது

மரங்கொத்திக்கு உடல் தருகிறது

நன்கு வளர்ந்து நின்ற ஒரு நாள் 

அறுத்துக் கொண்டு போகும்போதும்

அப்படியேதான் நின்று கொண்டிருக்கும் 

என் அம்மா

ஹவுஸ் ஒயிப்தான் சார் என்பதும்

மரம் சும்மாதான் நிற்கிறது

என்பதும் ஒன்றுதான் 

..............................................................................................................


*கவிதை குறித்து சொல்லத் தோன்றும் சில.....

லதா ராமகிருஷ்ணன்

கவிமனம் இருபாலினமானது என்ற என் நம்பிக்கையின் நிரூபணமாய் இக்கவிதை. நிறைவான வாசிப்பனுப வத்தைத் தந்தது.   

கவிதையென்றால் என்னவென்றே தெரியாதவர்களெல் லாம் கவிதைக்களத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படுவ தாகப் பதாகை ஏந்தி வர ஆரம்பித்து, பெண் இன்னின் னது தான் எழுதவேண்டும் என்று பட்டிய லிட ஆரம் பித்து, ஆணினம் சார்ந்த கவிஞர்களை வீணாகக் குற்றவுணர்வு கொள்ளவைத்து, பெண் சார்ந்த மேம் போக்கான கவிதைகளை எழுதவைத்து, கவித்துவம் அறவேயற்று எழுதப்பட்ட வெறும் போதனை, அறிவுரை, பிரச்சார வரிகளையெல்லாம் பெண்விடுதலைக் கவிதைகளாக உருவேற்றி,  அதன் மூலம் தங்களுக்கான மேடைகளை நிறுவிக் கொண்டு, பெண்கள் எழுதும் கவிதைகளை ஆண் என்ற ஒரே காரணத்தால் திறனாய்வு செய்யத் தகுதிவாய்ந்தவர்களாய் பீடத்தி லேறி பரப்புரை செய்து ....

 - என நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடகங் களை யெல்லாம் வருடக் கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பதில் சலிப்புற்றிருக்கும், வெறுப்புற்றி ருக்கும் மனதிற்கு ஒரு வலி நிவாரணமாய் இவ்வகைக் கவிதைகள். 

பெண்களை victims என்பதாகவே உணரவைப்பதை விட தன் மதிப்பை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கவித் துவம் குறை யாத படைப்புமூலமாய் உணர்த்தும், இவ்வகைப் படைப்புகளே, உண்மையான பெண்ணிய எழுத்தாக்கங்கள் .

திருமணமான இளம்பெண் ஒருவர் சமீபத்தில் எனக்கு எழுதி யிருந்த தன்விவரக்குறிப்பில் கணவன் உழைப்பில் வாழ்கிறேன் என்பதாய் குறிப்பிட்டிருந்தார். இயல்பாய் எழுதினாரோ, உள்மன வலியோடு எழுதினாரோ – படிக்க வருத்தமாக இருந்தது. 

இன்றைய வாழ்க்கைச்சூழலில் வேலைக்குப் போகாத தன் மனைவி குறித்து அவமானமாக உணரும் கணவர்களையும் காண முடிகிறது. 

HOUSEWIFE என்பதற்கு பதில் இப்போது HOME-MAKER என்று சொல்லப் படுகிறது. ஆனாலும், சொற்களின் அர்த்தங்களை மனதில் வாங்கிக் கொண்டாலொழிய மனமாற்றம் ஏற்படாது. மனமாற்றத்திற்கு இத்தகைய கவிதைகள் கண்டிப்பாக உதவும்.


துக்ளக் வார இதழ்

துக்ளக் வார இதழ்

துக்ளக் இதழ் மத்தியதர வர்க்கத்தினருக்கானது, மேற்குடியினருக் கானது, வலதுசாரியினருக்கானது  என்ற ஒரு கருத்து நிலவுகிறது. துக்ளக் இதழில் முன்வைக்கப்படும் சில கருத்துகளோடு நமக்கு உடன்பாடில்லாமல் போகலாம். ஆனால், அதில் அடித்தட்டு மக்கள் நலனுக்கான, ஒட்டுமொத்த சமூக நலனுக்கான பல விஷயங்கள் தகுந்த ஆதாரங்கள், தரவுகளோடு பேசப்படு கின்றன. 

 எடுத்துக்காட் டாக, 15. 7. 2026 தேதியிட்ட துக்ளக் இதழில் 'மாற்றம் வேண்டும் பள்ளி கல்வியில் என்ற தலைப்பில் திரு எஸ்.புஷ்ப வனம் எழுதியுள்ள கட்டுரை பள்ளிக்கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகளை மிகத் துல்லியமாக, அகல்விரி வாக எடுத்துரைக்கிறது. 22.7.2026 தேதியிட்ட துக்ளக் இதழில்(இன்று வெளியானது)) 'ரேஷன் கடை ஊழல் பின்னணி என்ன?' என்ற தலைப்பில்? திரு ஸ்ரீவில்லிப் புத்தூர் எஸ்.ரமேஷ் எழுதியுள்ள கட்டுரை ரேஷன் கடை ஊழியர்கள் தினசரி எதிர்கொள்ளவேண்டி யிருக்கும்  இடர்ப்பாடுகளை அகல்விரிவாக எடுத்துரைக்கிறது. இந்தக் கட்டுரைகள் துண்டுப் பிரசுரங்களாக  விநியோ கிக்கத் தக்க அளவு சிறப்பானவை. அந்தக் கட்டுரைக ளின் முதல் பக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. (முழுக் கட்டுரைகளையும் வெளியிடலாமா தெரியவில்லை

AI துணையோடு பாடல்கள்!

AI துணையோடு பாடல்கள்!


சமீபகாலமாக பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் - எழுத்தாளர் வ.நா.கிரிதரன் AI துணையோடு நிறைய பாடல்களைப் பதிவேற்றுகிறார்.  இந்தத்தொழில்நுட்பம் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனாலும், நன்றாக இருக்கிறது! இது பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்கு திரு.வ.நா.கிரிதரனின் கவிதாஞ்சலி - இசையாஞ்சலி

https://www.facebook.com/reel/2401119323716983

A POEM BY BRAMMARAJAN

 A POEM BY 

BRAMMARAJAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) 

......................................................................

THE CHANT 

Say ‘Flower’

in the Garden Field Park

would disappear

 all those standing in the jar

Create

somehow the blossom.

When you reprimand the wind

it freezes.

Inhale for me and thee

the life-breath.

In sounds dripping

in the force of gravitation

Bats  fallen.

Play your Music.

Say Food

Let everything rot.

that meant 

for Him

He would 

Create.


பிரம்மராஜனின் கவிதை

உச்சாடனம்

மலர் என்று சொல்

தோட்டத்திலும் வயலிலும் பூங்காவிலும்

மறையும் ஜாடியில் நின்றவை யாவும்

தோற்றுவிப்பாய்

ஏதோவிதம் பூவை

காற்றைக் கடிந்தவுடன் 

உறைகிறது

ஸ்வாசி எனக்கும் உனக்குமாக

பிராணனை

ஒலிகள் விழும்

புவிரீப்பில் வீழ்ந்த வௌவால்கள்

நடத்து உன் இசையை.

உணவென்று சொல்

எல்லாம் அழுகட்டும்

படைத்துக்கொள்வான்

தனக்கானதை

அவன். 

A POEM BY S.VAIDHEESWARAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 A POEM BY 

S.VAIDHEESWARAN 


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


POETRY

As the Poet

with the dream-net widespread

lying in wait to catch Poetry

A spider on the roof

spreading its saliva

faking sleep

so whiling away the time

memories aplenty inside

slipped off

without halting.

At one stage

the web tearing off

all too suddenly

As meaning

hidden deep down

writhed indistinguishable 

many insects ensnared.

The Spider rising and swelling

With its eight-legged

conceited gait

caught hold of the meaning and

Munched it.

The mouth said:

‘Poetry’.


கவிதை

எஸ்.வைதீஸ்வரன்

கனவு வலை விரித்துக் 

கவிதை பிடிக்கக் காத்திருக்கும் 

கவியாய்

ஓட்டில் ஒரு சிலந்தி

எச்சிலை விரித்துப் 

பொல்லாத பொய்த்துயிலில்

பொழுதோட்டிக் கிடக்கும் வேளை

மனதில் பல நினைவுகள் 

நில்லாமல் நழுவிப் போச்சு.

ஒரு நிலையில் பட்டென்று  வலையறுந்து

அடிமனப்பொருளென

தெளிவற்றுத் துடித்தன

சிக்கிய பல பூச்சிகள்

சிலந்தி எழுந்து விரிந்து

எட்டுக்கால் திமிர்நடையால்

பொருளைப் பிடித்து மென்றது.

வாய் ‘கவிதை’ என்றது. 

A POEM BY VAIDHEESWARAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) - MODEL

A POEM BY 

VAIDHEESWARAN 

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

MODEL



 A square-shaped hall

In that a round table

She stands 

Stark naked

From atop

A leaning pole of light

alights on her.

Her limbs stand firm

swelling, wholesome.

Attires leaving her

are covering a chair there.

The eyes of apprentice-artists

sitting in a circle

and assessing her figure

separate her body from her

and making them 

parts of their Art.

So long as the fingers stretch – the lines

With passionate screeching

Swallows her limbs

One by one.

The body’s 

Ups and downs

Mounds and slopes.

Melting – swirling

Sliding –Swelling

solidity and subtlety

Edges – buds

Fold and mystery

Stirring the artist endlessly

Test his skill and mastery.

There, striving to contain in a paper square

the proud human form standing there 

right in front of them

converting it into an art-piece

and exhibit

the  passion unleashed of human breath

the reverberation of human hearts in unison

For the artist who sketches 

with dreamy fingers

the marvel called woman

Time and surroundings

have no meaning.

In the folded stomach

of the figure there 

being submissive to the core

The air that roar 

in the empty stomach 

and the thin line of tears

at the corner of her eyes 

dried

never find a place

in the art-piece.

They somehow escape....

On completion

She flutters in the sheet of paper

as new-born parrot

scattering dreams galore

to all the viewers.

மாடல்   

எஸ்.வைதீஸ்வரன்.

சதுரமான ஹால் 

அதில் வட்டமான மேசை ஒன்று 

அவள் 

அப்பட்டமாக நிற்கிறாள் 

உச்சியிலிருந்து சாய்ந்த ஒளிக்  கோலொன்று 

அவள் உருவத்தில் பாய்கிறது 

அங்கங்களில் அழுத்தமான பூரிப்பு

 ஆடைகள் அவளை துறந்து

 ஒரு நாற்காலியை 

மறைத்துக் கொண்டிருக்கின்றன

 வட்டமாய் அமர்ந்து 

அவள் வடிவம் கணிக்கும் 

பயிற்சிக் கலைஞர்களின் பார்வை 

உடம்பை அவளிடமிருந்து பிரித்து 

ஓவியத்தின் உறுப்புகளாக்குகின்றன.

விரல்கள் இழுக்கும் வரை கோடுகள் 

ஆவேசமான கிரீச்சல்களுடன்

அங்க அங்கமாக அவளை விழுங்குகின்றன

மேனியின்

மேடும் – சரிவும்

குழைவும் – நெளிவும்

வழுக்கலும் - தாங்கலும்

பாரமும் - நளினமும் 

முனைகளும் மொட்டும்

மடிப்பும் – மர்மமும்

ஓவியனை ஓயாமல் சீண்டி

அவன் திறனை

ஆழம் பார்க்கின்றன.

கண்ணெதிர் நின்ற உருவத்திமிரை

காகிதக் கட்டத்துக்குள் அடக்கி 

கலை வடிவாக்கி நிறுத்த அங்கே 

மனித மூச்சின் மொத்தமான ஆவேசம் 

மனங்களின் ஒருமித்த ரீங்க ஆங்காரம்

 பெண் என்ற அற்புதத்தை 

கனவு விரல்களால் பூசும் கலைஞனுக்கு

 காலமும் சூழலும் அர்த்தமற்றது

கீழ்ப்படிந்த உருவத்தின் 

மடிந்த வயிற்றுக்குள் இரையும் 

காலிக் குடல் காற்றும் 

விழிக்கிடையில் சுவடான நீர்க்கோடும்

ஓவியத்துக்குள் வருவதில்லை.... எப்படியோ 

தப்பிவிடுகின்றன

 முடிந்த போது 

காகிதங்களில் அவள்

பிறந்த கிளி போல் படபடக்கிறாள் 

கனவுகளைப் பார்ப்போருக்கு 

வாரியிறைத்துக்கொண்டு

மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் 

கவிதைகள்


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கவிமனது 

அல்லது கவிதைக்குள்ளிருக்கும்

 ‘சொல்லி’யின் மனது 

எனக்காக முழுமையாகத் திறந்துவைத்திருக்கும்

அந்த இருண்ட பாதையில் பயணம்போகத்

தக்கதொரு தருணம் வாய்க்கவேண்டும்...

வரிவரியாய் வழியேகப் பழகலாம் இருளும்.

அருகேகும் மின்மினியின் சிறு வெளிச்சம் 

அடுத்த கணமும் இருக்கும் என்று 

எந்த நிச்சயமும் இல்லை.

தமக்காகப் பயிரிட்ட விளைபொருள்கள் 

மூலிகைத் தாவரங்கள்

நிலத்தடி நீர், 

ஒளித்துவைத்திருக்கும் புதையல், 

கண்ணிவெடி,

கையகப்பட்ட மின்னற்கீற்றுகளால் 

வேய்ந்த நிழற்பந்தல்

உள்ளாழமனதில் தைக்கும் முள்

கண்ணுக்குத் தெரியா நீரூற்று

சின்னக் குப்பிக்குள் இருக்கும் குட்டி பூதம்

ஆதாமும் ஏவாளும் உண்ட 

ஆப்பிளின் மிச்சம்

உச்சம்தொடும் பிச்சிமனம்

கச்சிதமாய் விழுந்த ஒற்றைச்சொல்

எங்கிருக்கிறதென்று தெரியாத 

நிலவறைகளின் திறவுகோல்கள்

புறாக்கள் சிட்டுக்குருவிகளுக்கான 

தானியங்கள்

நிறைவான அரைவட்டங்கள்

ஆரக்கால்கள்

வால்கள்

கள்

உள்ளெங்கும் பொங்கும் உன்மத்தம்

ஷணப்பித்தம் .....

ஒன்றுவிடாமல் என்னைக் காணச்செய்யும்

கனிவுக்கு

இன்றளவும் கைம்மாறு செய்யலாகாதிருக்குமென்னை

தன்னுள்ளிழுத்துக்கொண்டு 

தானேயாக்கியொரு

ஆளுயர நிலைக்கண்ணாடியில் முகம்பார்க்கச்செய்யும்

அன்புக் கவிதைகளுக்கு 

என்றுமான என் ஒற்றைவரி நன்றி: 

”நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா”




தரிசனம் - ‘ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)

தரிசனம்

‘ரிஷி'

(லதா ராமகிருஷ்ணன்)

”எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் 

பின் உனக்கு எதற்கு தனிவீடு?”

”நீக்கமற நிறைந் திருக்கும் காற்று 

ஒவ்வொரு உடம்புக்குள்ளும் நிரம்பி 

தனித்தனி உயிராவதுபோல் 

என்று வைத்துக்கொள்ளேன்” _

கண்ணிமைப்போதில்

ஒலியின்றிக் கேட்கும் அசரீரியுடன்

பார்வைப்பரப்பிற்கு அப்பால் 

தெரிகிறதொரு சிறு புன்னகை.

கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்

மூணு குடம் முப்பது குடம் மூவாயிரம் குடம்…”

 என்று பாடிக்கொண்டே வந்தவர்

குடமும் நானே தண்ணீரும் நானே பூவும் நானே

பைந்தமிழ்க்கவியும் நானே யென

ஆலாபிக்கத் தொடங்கியபோது

கலங்கிநின்றவர்களை

“குவளையும் குளிர்ச்சியும், திவலையும், தளும்பலும்

தென்றலும் மழையுமிருக்க

கவலையெதற்கு என்று

கைபிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்கிறது

காலாதிகாலம் வற்றாக் கவித்துவ நீரூற்று.

* 

’காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா

குருவீ குருவீ கொண்டைக்கு பூ கொண்டுவா”

எனக் குழந்தை பாட்டுப் படிக்க,

’கவிதை கொண்டு வா’யென

வளர்ந்தவர்கள் கேட்பதில் தவறில்லைதான்.

அதற்காக

காக்காய் பிடித்து

கவிதைச் சிம்மாசனத்தில்

கொடுங்கோலோச்சப் பார்த்தால்

சும்மாயிருக்கலாமோ சொல் 

வல்லமை கொள் கிளியே.

”தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி

உன்னைத்தானே நாய்க்குட்டீ, ஓடிவாவா நாய்க்குட்டீ”

யெனத் 

தேடித்தேடிக் குழந்தைப்பாடல்களைச் சொல்லிச்

சக கவிகளையெல்லாம் செல்லம் கொண்டாடுவது 

தன்னை பழுத்து முதிர்ந்த கவியாகவும்

பிறர் வரிகளைக் குழந்தைப் பிதற்றல்களாகவும்

நிறுவத்தான் 

என்று  புரிய நீண்டகாலமாயிற்று.

*

”தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை

அரிசி மாவும் உளுந்த மாவும் அரைச்சு சுட்ட தோசை”

யெனக்

கரைந்து கரைந்து தன் கவிதையை

கனியமுதென்றுரைக்கப்

பிரயத்தனப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு:

கேழ்வரகுக்கூழ் முதல்

பர்கர் பீட்ஸா வரை

வாய்க்கு ருசியாய்

இங்கே வகைவகையாய்

இருப்பது நன்றாகவே தெரியும் எமக்கு.

*

”நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,

மலைமேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டுவா ......  

ஆ! தெரியுமா!

ஓயாமல் ஓடியோடி மலைமேல் தாவியேறி மல்லிகைப்பூ கொண்டுவரும் அந்த நிலா என் கவிதை:” யெனப்

பதவுரை சொல்ல ஆரம்பித்த பெருந்தனக்காரக் கவியை 

இடைமறித்து

‘என் நிலா பறந்துவரும், மலையாகவே மாறிவிடும்

குறிஞ்சிப்பூவனைய அரிய பூக்களையே அதிகம் கொய்துவரும்

என்று கூறி

கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தது குழந்தை.

FREEDOM OF SPEECH

FREEDOM OF SPEECH


CITIZEN A to B: 

Your belief is bull shit . This is my freedom of speech

CITIZEN B TO A: Y

Your belief is Rhino’s shit. This is my freedom of speech

FREEDOM OF SPEECH: 

I too have Freedom of Speech.  And I say_ 

PLEASE SHUT UP

Tuesday, July 21, 2026

A POEM BY ATHMAJIV (*PLEASE HELP THIS QUALITY TAMIL POET)

 A POEM BY

ATHMAJIV






Rendered in Engish by Latha Ramakrishnan(*First Draft)
In the dream of the hungry man
costly dishes being served.
He looks around searching for his
starving family
But there was none
In front of him who likes not to eat all alone
the dishes come hand in hand and console him.
‘In their dreams too we would be served
So, eat to your heart’s content’ – They say.
But, refusing to believe
he wakes up his family members
They all get up startled
‘In your dreams were you served with
delicious costly dishes?’
Asks he hurriedly.
And, they stare at him blankly.

பசித்திருக்கும் மனிதனின் கனவில்
விலையுயர்ந்த உணவுகள் பரிமாறப்படுகிறது.
தன் குடும்பத்தை தேடுகிறான்.
பசித்திருக்கும் குடும்பத்தினர்.
அங்கே யாருமில்லை.
தனியே உண்பதற்கு விரும்பாத
அவன் முன்பு
உணவுகள் ஒன்று சேர்ந்து
சமாதானப்படுத்துகிறது.
அவர்களின் கனவுகளிலும்
நாங்கள் பரிமாறப்படுவோம்
தாரளமாக வயிராற உணவு கொள்.
அவன் நம்பத் தயாராக இல்லை.
விழித்துக் கொள்கிறான்.
அருகில் உறங்கிக் கொண்டிருக்கும்
தன் குடும்பத்தினரை எழுப்புகிறான்.
திடுக்கிட்டு எழுகிறார்கள் அனைவரும்.
"உங்கள் கனவில்
விலையேறப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டதா"
அவசர அவசரமாக கேட்கிறான்.
அவர்கள் திருதிருவென பார்க்கிறார்கள்
அவனை.
ஆத்மாஜீவ் :

பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிபிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….
(2017 - ஜூலை 20 - மீள்பதிவு)
See less