LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 1, 2021

சொல்லத்தோன்றும் சில லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்

 

என்ன டப்பா சினிமாவானாலும் அதில் மம்முட்டி நடித்தால் அதற்கென்று ஒரு தரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை யுண்டு!.

 இறுதியாகப் பார்த்த படம் மௌனம் சம்மதம்(அதுதான் தலைப்பு என்று நினைக்கிறேன்மம்முட்டி நடித்தது.

 அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தியேட்டருக்குப் போய் தெனாலி பார்த்தபோது தொலைக்காட்சித் திரைக் குப் பழகிய கண்களுக்கு கதாநாயகன்கதாநாயகியெல் லாம் ராட்சஸ பூதங்களாய் எங்கோ உயரத்தில் தெரிந்தார்கள்!.

 கதாநாயகி அணிந்திருந்த அதிகுட்டைப் பாவாடை அத்தனை அதிர்ச்சியளித்ததுபொதுவாக அத்தகைய ‘டூ மினி ஸ்கர்ட் களை’ வில்லிகள் தான் அணிந்துகொண்டு வருவார்கள்!

அதுவும்கதாநாயகி அதை அணிந்துகொண்டு காதலனோடு போனாலாவது பரவாயில்லைஆனால் அவள் அண்ணனோ டல்லவா போகிறாள்உண்மையாகவே பயங்கர அதிர்ச்சி தான்!

தெனாலி படம் அந்த ஒரு காட்சி – தனக்கு எதைப் பார்த் தாலும் பயம் என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்கள் மருண்டு கலங்க கதாநாயகன் (கமலஹாஸன்மனநோய் மருத்துவரிடம் தெரிவிப்பாரே – அந்த ஒரு காட்சியோடு அந்த மொத்தப்படமும் முடிந்துவிட்டதுமுடிந்திருக்கவேண்டும்.

ஆனால்ஹாஸ்யம் என்ற பெயரில் எத்தனையெத்தனை அபத்தக் காட்சிகள் நம்மீது திணிக்கப்படுகின்றன.

அவை ஒருவிதத்தில் ஒரு சீரியஸ் விஷயத்தைப் பேசுவதி லுள்ள மன நேர்மையைஆதாயநோக்கைத் தெரியப்படுத்தி விடுவதாகவே தோன்றுகிறது.

ஹமாம் சோப் விளம்பரம்போல்கோவிட் காலத்தில் பாதுகாப் பாய் இருப்பது குறித்த பிரக்ஞையேற்படுத் துவது என்ற பெயரில் சின்னப் பெண்ணின் வெற்றுத் தோளைக் காண்பித்து அதில் அவள் சோப்பை உருட்டும்படி செய்திருக்கிறார்கள்கைவிரல் களை சோப்பால் அழுத்தித் தேய்த்துக் காட்டியிருக்கலாம்செய்யவில்லை.

தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கு நடுநடுவே வரும் திரைப்படத்தைப் பார்ப்பது தாங்கமுடியாத துயரம்.

எது அதிக திராபை என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

மாஸ்டர் படம் பார்க்க நேர்ந்தது அத்தகைய துயரம்தான்சமூகப் பிரக்ஞை மிக்க கதைமுடிச்சுசிறுவர்களைசின்ன தவறுகள் செய்து கூர்நோக்குப்பள்ளிகளில் இருப்ப வர்களை போதைப் பொருள் கடத்துதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில்குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் ஒரு நாசகார கும்பலை எதிர்க்கும் கதா நாயகன்.

அவன் எதற்கு எப்போதுமே குடிப்பதாகக் காட்டப்பட வேண்டும்தெரியவில்லைஅவன் குடிக்கும்போதெல்லாம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பதாக ஏதோ வாசகம் வேறு திரையில் வந்து வந்து போகிறது.

 ஒரு நல்ல கதைக்கருவை இப்படி வீணாக்க இத்தனை கோடிகள் செலவழிப்பதற்கு பதில் அந்தப் பணத்தை உருப்படியாக ஏழைச் சிறுவர்களுக்கான நலத்திட்டம் எதிலாவது முதலீடு செய்யலாம்.

அதுவும்எம்.ஜி.ஆர் – சிவாஜி ஒரே நேரத்தில் 10 பேரை அடித்து வீழ்த்தி வெற்றிபெற்றார்களென்றால் ரஜினி கமலஹாஸன் 100 பேர்சூர்யா தனுஷ் விஜய் 1000 பேர் என்ற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் சும்மாவே கம்புகத்திகதாயுதன் 

என பலவற்றால் அடுத்திருப்பவரை அடித்து விளையாடுவது அத்தனை காமெடியாகத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்தப் பட்டுக்கொண்டே.

அவர்களுடைய கத்தியும் கம்பும் பிரத்யேகமாக காகிதத் தால் 

செய்யப்பட்டதாயிருக்கலாம்அதைப் பார்த்து அதேபோல் நிஜக் கத்தியால் விளையாடக் கூடும் சிறுவர்கள்வளரிளம் பருவத்தி னரை நினைக்க பயமாகவே இருக்கிறது.

அதைப்பற்றியெல்லாம் சின்னத்திரைக்கோ பெரிய திரைக்கோ 

என்ன கவலை.


சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் - அமரந்த்தாவின் மொழிபெயர்ப்பில்

2018இல் நடந்த அமரந்த்தாவின் உலக சிறுகதைத் தொகுப்பான சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற நூல் குறித்த அறிமுகக்கூட்டத்தில் நான் வாசித்த கட்டுரை

- லதா ராமகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=jNciHC-VIpQ

படத்தில் என் வாசிப்பை கவனித்துக் கேட்டுக்கொண்டி ருப்பவர் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் பெரிதும் மதிக்கப்படும் தோழர் அ.ஜா.கான் தானா? சரியாகத் தெரியவில்லை. தமிழின் சிறுபத்திரிகை இயக்கத்திற் கும், நவீன தமிழ் இலக்கியத்திற்கும் ஆரவாரமில்லாமல் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. அத்தனை தன்மையான மனிதர். சமீபத்தில் மறைந்துவிட்ட அவரைப் பற்றி எழுத்தாளர் அமரந்த்தாவின் மகள் ரேஷ்மா எழுதியிருக்கும் அஞ்்சலிக் கட்டுரையை அவருடைய முகநூல் பக்கத்தில் யதேச்சையாக வாசிக்க நேர்ந்தது. அத்தனை அருமையான எழுத்து;, ஆத்மார்த்தமான அஞ்சலி!. - லதா ராமகிருஷ்ணன்  

INSIGHT - A BILINGUAL BLOG FOR CONTEMPORARY TAMIL POEMS

INSIGHT

A BILINGUAL BLOG FOR CONTEMPORARY TAMIL POEMS

www.2019insight.blogspot.com



முட்டாள்பெட்டியின் மூளை ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

முட்டாள்பெட்டியின் மூளை

 ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


 TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும்

மாமியார்களின்

முறைத்த கண்கள்;

முறம்போன்ற தடிமனான நகைகள்

எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும்

பட்டுக்குஞ்சலங்களும்

கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய்

அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும்

கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள்

மூச்சுவிடாமல் அவர்கள் வெளித்தள்ளும்

சாபங்கள்

காச்சுமூச்சென்ற அவர்களின் பேச்சுக்கள்

பழமொழிகள்

ஃபிலாஸஃபிகள் பிக்கல்பிடுங்கல்கள்

பப்ளிமாஸ்’ முகங்கள்

புஸுபுஸு சிகையலங்காரங்கள்;

மேலும் மேலும் மேலும் மேலும் என நீளும்

அவர்களின் ஆர்வக் கிசுகிசுக்கள்அவதூறுகள்

அழுகைகள்அசிங்கம்பிடித்த சதித்திட்டங்களை

சகிக்கவும் ரசிக்கவும் எதிர்பார்க்கவும்  போடவும்

நாமின் நானும் நானின் நாமுமாய்

ப்ரோக்ராம்’ செய்யப்பட்டுவிட்டதில்

லாபம் முன்னூறு மடங்காகிவிட்ட

முட்டாள்பெட்டித் தொழிற்சாலையின் கிளைகள்

மூலைமுடுக்கெங்கும் முளைக்க

24 X7 முடுக்கிவிடப்படும் இயந்திரங்கள்

வெளித்தள்ளத் தொடங்குகின்றன

மூன்று வயது மாமியார்களையும்

முன்னூறு வயது மருமகள்களையும்

அவர்களின் மூவாயிரம் வழித்தோன்றல்களையும்.

கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கலைக்கொலைகளும் 

பிறழ்சாட்சிகளும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

Posted by rishi On February 24, 2020

அன்பே உருவான அவளைக் கொன்றுவிடலாம்’ என்றான் ஒருவன்

அவளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளச் செய்வது மேல்’ என்றான் இன்னொருவன்.

ஆம் என்று ஆமோதித்தாள் சக பெண்ணின் வலியறிந்த பாவத்தில் ஒருத்திசிரித்தபடி.

அறிந்து ஓடோடிவரும் அவளது அம்மா இந்த நாட்டுப்புறப்பாடலைப் பாடி ஒப்பாரி வைக்கட்டும்’ என்றார் அங்கிருந்த தமிழறிஞர் ஒருவர்.

அப்போது சமீபத்தில் பிரபலமாகியிருக்கும் திரைப்படப் பாடலைசன்னமாகப் பின்னணியில் ஒலிக்கச்செய்யலாம் என்றார் ஐந்தாமவர்.

அந்தப் பெண்ணின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வழிந்தால் பார்க்க நன்றாயிருக்கும் என்றார் மேசையின் இடப்பக்க ஓரம் அமர்ந்திருந்தவர்.

உதட்டோரமா அல்லது முழங்காலின் கீழிருந்து வழிவதுபோலவா என்று கண்களால் குறிப்புணர்த்தி புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்

அவர்களில் மூத்தவர்.

அவ்வப்போது அங்கிருந்த நான்கைந்து தட்டுகளிலிருந்த ’சிப்ஸ்ஸை ஆளுக்கொரு கை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்கள்.

அடுத்திருந்த சிற்றுண்டிவிடுதியிலிருந்து சற்றைக்கொருதரம் சூடாக காப்பி வர

அது வேண்டாமென்போருக்கு குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது லிம்க்காஸ்ப்ரைட்செவன் அப்கொக்கோகோலா பெப்ஸி ஆவின் பாதாம் பால் அவை போல்

பிற வேறு.

புதிதாக அந்தத் தொலைக்காட்சி சேனலின் ‘கதைக்குழுவில் வேலைக்குச் சேர்ந்தவனாய் கால்கடுக்க ஜன்னலோரம் நின்றிருந்தவன்

கண்களில் துளிர்த்த நீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டான்;

அவனறியாத அந்தப் பெண்ணிடம் மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

 

என்னை பாதித்த சில புத்தகங்கள் _ பத்மினி கோபாலன் - 17.6.2021 //

 என்னை பாதித்த சில புத்தகங்கள்

//இது பத்மினி கோபாலனின் பதிவு - 17.6.2021 //


\




• ஒரு பதினேழு வயதில் நான் படித்த மஹாத்மா காந்தியின் My Experiments with Truth என்னை சிந்திக்க வைத்தது , நாம் இதில் ஒருசதவிகித மாவது முயற்சி செய்யலாமே என்று.
• ஒரு முப்பது வயதில் நான் படித்த Conquest of Happiness by Bertrand Russell எனக்குப் புரிய வைத்தது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு த்தேவை என்ன என்பதை.
• Sartre யின் Existentialism ,a popular version என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு , self pity க்கு இடமே இல்லை என்பதை உணர்த்தியது.
• வயதானபின் படித்தது The Miracle of Mindfulness.by Thich Nhat Hanh .அதுதான் சரியான வாழ்க்கை முறை என்று புரிகிறது.

• ராமாயணமும் ,கர்னாடக ஸங்கீத மும் மனதை ஒரு மேலான நிலைக்கு இட்டுச் செல்கிறது.

• அரசியல் செய்திகள் மனதில் கலவரத்தை ஏற்படுத்துகிறது, உபயோகமில்லாமல்.

• பகவத் கீதையில் ஸ்வ தர்மத்தை மட்டுமே செய் என்று சொன்னது சரிதான் என்று தோன்றியது.

[[*நான் மிகவும் மதிக்கும் பத்மினி மேடம் தன்னை பாதித்த சில புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட் டதை இங்கே பகிரத் தோன்றியது .
சில பேர் சகட்டுமேனிக்கு சில உலகத்தரம் வாய்ந்த நூல்களின்ன் பெயர்களைக் குறிப்பிடு வார்கள் _ தாம்மை அறிவுசாலிகளாகக் காண்பித்துக்கொள்ள. ஆனால், பத்மினி மேடம் அப்படியல்ல. அதனாலேயே அவரோடு கருத்துமுரண் ஏற்பட்டாலும் அவருடைய கருத்துகளை நான் என்றுமே மதித்துக் கேட்பேன். (*முகநூலிலும் இருக்கிறார்.

[[ஸ்வதர்மம் பற்றி ஒரு சிறு குறிப்பு தருவது நல்லது என்று தோன்றுகிறது. கூகுளில் படித்ததுதான் - லதா ராமகிருஷ்ணன்

ஸ்வதர்மம் என்றால் என்ன?
ஸ்வ = சுய, சொந்த
தர்ம = தர்மம் என்றால் செய்யவேண்டிய கடமை.
நாம் இந்த பூமியில் பிறக்கும் போதே நமக்கான கடமையும் பிறந்து விடுகிறது. நாம் செய்ய வேண்டும் என்று சில கடமைகள் காத்து இருக்கின்றன. அந்த கடமைகள் நமக்கு முன்னால் பிறந்து நம் வருகைக்காக காத்து இருக்கும் என்று சொல்வார்கள்.
நம் கடமை அல்லது நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று எப்படி அறிந்து கொள்வது ?
- பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது.
- புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது.
- பெருமைக்காக, மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்காக செய்வது ஸ்வதர்மம் இல்லை.
- பொருளுக்காக , வயிற்று பிழைப்புகாக செய்வது ஸ்வதர்மம் இல்லை.
பின் எது தான் ஸ்வதர்மம்?
எது உங்களுக்கு இயல்பாக வருகிறதோ, எதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு சங்கடமாக இருக்குமோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.
சற்று விரிவாக பார்ப்போம்.
நம் வாழ்வில் நாம் எடுக்கும் முதல் மிகப் பெரிய முடிவு, என்ன படிப்பது என்பது.
அந்த முடிவை நாம் எப்படி எடுக்கிறோம் ?
பெரும்பாலானோரின் வாழ்வில் பெற்றோர் முடிவு செய்து விடுவார்கள். இல்லை என்றால் நண்பர்கள் முடிவு செய்கிறார்கள்.
அது தவறு. உங்களுக்கு எது பிடிக்குமோ, எதை செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகுமோ, எதை நீங்கள் உங்களை மறந்து செய்வீர்களோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.
"எனக்கு psychology படிக்க ஆசை. ஆனால், பெற்றோர் இன்ஜினியரிங் படிக்கச் சொன்னார்கள் எனவே இன்ஜினியரிங் படிக்கிறேன் "
இது ஸ்வதர்மம் இல்லை.
உங்கள் ஸ்வதர்மம் உங்களை அழைத்துக் கொண்டே இருக்கும். அதை செய்யாவிட்டால் உங்களுக்கு மனதில் ஒரு சலனம், ஒரு குழப்பம், ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.]]