சொல்லத்தோன்றும் சில
லதா ராமகிருஷ்ணன்
என்ன டப்பா சினிமாவானாலும் அதில் மம்முட்டி நடித்தால் அதற்கென்று ஒரு தரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை யுண்டு!.
இறுதியாகப் பார்த்த படம் மௌனம் சம்மதம்(அதுதான் தலைப்பு என்று நினைக்கிறேன்) மம்முட்டி நடித்தது.
அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தியேட்டருக்குப் போய் தெனாலி பார்த்தபோது தொலைக்காட்சித் திரைக் குப் பழகிய கண்களுக்கு கதாநாயகன், கதாநாயகியெல் லாம் ராட்சஸ பூதங்களாய் எங்கோ உயரத்தில் தெரிந்தார்கள்!.
கதாநாயகி அணிந்திருந்த அதிகுட்டைப் பாவாடை அத்தனை அதிர்ச்சியளித்தது! பொதுவாக அத்தகைய ‘டூ மினி ஸ்கர்ட் களை’ வில்லிகள் தான் அணிந்துகொண்டு வருவார்கள்!
அதுவும், கதாநாயகி அதை அணிந்துகொண்டு காதலனோடு போனாலாவது பரவாயில்லை. ஆனால் அவள் அண்ணனோ டல்லவா போகிறாள்! உண்மையாகவே பயங்கர அதிர்ச்சி தான்!
தெனாலி படம் அந்த ஒரு காட்சி – தனக்கு எதைப் பார்த் தாலும் பயம் என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்கள் மருண்டு கலங்க கதாநாயகன் (கமலஹாஸன்) மனநோய் மருத்துவரிடம் தெரிவிப்பாரே – அந்த ஒரு காட்சியோடு அந்த மொத்தப்படமும் முடிந்துவிட்டது; முடிந்திருக்கவேண்டும்.
ஆனால், ஹாஸ்யம் என்ற பெயரில் எத்தனையெத்தனை அபத்தக் காட்சிகள் நம்மீது திணிக்கப்படுகின்றன.
அவை ஒருவிதத்தில் ஒரு சீரியஸ் விஷயத்தைப் பேசுவதி லுள்ள மன நேர்மையை, ஆதாயநோக்கைத் தெரியப்படுத்தி விடுவதாகவே தோன்றுகிறது.
ஹமாம் சோப் விளம்பரம்போல். கோவிட் காலத்தில் பாதுகாப் பாய் இருப்பது குறித்த பிரக்ஞையேற்படுத் துவது என்ற பெயரில் சின்னப் பெண்ணின் வெற்றுத் தோளைக் காண்பித்து அதில் அவள் சோப்பை உருட்டும்படி செய்திருக்கிறார்கள். கைவிரல் களை சோப்பால் அழுத்தித் தேய்த்துக் காட்டியிருக்கலாம். செய்யவில்லை.
தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கு நடுநடுவே வரும் திரைப்படத்தைப் பார்ப்பது தாங்கமுடியாத துயரம்.
எது அதிக திராபை என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
மாஸ்டர் படம் பார்க்க நேர்ந்தது அத்தகைய துயரம்தான். சமூகப் பிரக்ஞை மிக்க கதைமுடிச்சு. சிறுவர்களை, சின்ன தவறுகள் செய்து கூர்நோக்குப்பள்ளிகளில் இருப்ப வர்களை போதைப் பொருள் கடத்துதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் ஒரு நாசகார கும்பலை எதிர்க்கும் கதா நாயகன்.
அவன் எதற்கு எப்போதுமே குடிப்பதாகக் காட்டப்பட வேண்டும், தெரியவில்லை. அவன் குடிக்கும்போதெல்லாம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பதாக ஏதோ வாசகம் வேறு திரையில் வந்து வந்து போகிறது.
ஒரு நல்ல கதைக்கருவை இப்படி வீணாக்க இத்தனை கோடிகள் செலவழிப்பதற்கு பதில் அந்தப் பணத்தை உருப்படியாக ஏழைச் சிறுவர்களுக்கான நலத்திட்டம் எதிலாவது முதலீடு செய்யலாம்.
அதுவும், எம்.ஜி.ஆர் – சிவாஜி ஒரே நேரத்தில் 10 பேரை அடித்து வீழ்த்தி வெற்றிபெற்றார்களென்றால் ரஜினி கமலஹாஸன் 100 பேர், சூர்யா தனுஷ் விஜய் 1000 பேர் என்ற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் சும்மாவே கம்பு, கத்தி, கதாயுதன்
என பலவற்றால் அடுத்திருப்பவரை அடித்து விளையாடுவது அத்தனை காமெடியாகத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்தப் பட்டுக்கொண்டே.
அவர்களுடைய கத்தியும் கம்பும் பிரத்யேகமாக காகிதத் தால்
செய்யப்பட்டதாயிருக்கலாம். அதைப் பார்த்து அதேபோல் நிஜக் கத்தியால் விளையாடக் கூடும் சிறுவர்கள், வளரிளம் பருவத்தி னரை நினைக்க பயமாகவே இருக்கிறது.
அதைப்பற்றியெல்லாம் சின்னத்திரைக்கோ பெரிய திரைக்கோ
என்ன கவலை.
No comments:
Post a Comment