LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 1, 2022

கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும்

 கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நவீன கவிதையாகச் சொல்லப்படும் சமகாலக் கவிதையை
மசாலா சினிமா பாணியில் கிசுகிசுக்கும் குரலொன்று வாசித்துக்கொண்டிருக்கிறது……

கவிதைக்குள் இருக்கும் சோகம் அந்தக் குரலின்
மிகையுணர்ச்சியில் எரிச்சலூட்டும் அவலமாக மாறுகிறது.

ஆனால் 'அடடா என்ன அருமை!'களும் 'Woo hoo!' களும்
’வாரே வா’க்களும்
அனேகரிடமிருந்து எழுந்தவண்ணமே.
அந்தக் கவிதையை எழுதியவர் உட்பட.

இடையிடையே கவிதை வாசிக்கும் குரல் விடும் பெருமூச்சுகள் கவிதைக்குள் கேட்கவில்லையே
என்று
எவரொருவரும் கேட்கலாகாது.

எவருக்கும் எவரொருவருக்குமிடையேயான அர்த்தபேதங்களைப்பட்டியலிடத் தொடங்கும்
அந்தக் குரல்
ஏழுக்குப் பிறகு பத்தைச் சொல்லும்போது
அதில் கிளம்புமொரு (எத்தனை நன்றாகப் படிக்கிறேன் பார்த்தாயா) குழந்தைத்தனமான பெருமையில்
கவிதைக்குள்ளிருக்கும் தத்துவமும் குறியீடும்
காணாமல் போய்விடுகின்றன.

ஒப்பனைக்கண்ணீர்விட்டு அழுதபடியே வாசிக்கும் குரலில்
என் கண்களிலிருக்கும் குளங்கள்
ஒரேயடியாக வறண்டுபோகின்றன.

கவிதையின் பாதியில் தூரத்தே ஒரு ரயில் போய்க்கொண்டிருப்பது காட்டப்படுகிறது.
அத்தனை தொலைவாக விரைந்துகொண்டிருக்கும் அதில் எப்படி ஏறிக்கொள்வது என்று புரியாமல்
அலங்கமலங்க விழிக்கிறது கவிதை

வாசிக்கும் குரல் கவிதை நேசிக்கப்படவேண்டியது
என்று குறிப்புணர்த்துவதாய்
ஒரு மாதிரி உயர்ந்துதாழ்கிறது.
ஒரு கணம் அந்தரத்தில் அறுந்து தொங்குவதா
யுணர்ந்து
அஞ்சி நடுங்குகிறது கவிதை.

வாசிக்கும் குரல் கவிதையை இழைபிரித்துத்
தருவதான நினைப்பில்
துண்டுதுண்டாகக் கடித்துப் போட _
வாசிப்பு முடிகிறது.

குதறப்பட்டுக் கிடக்கும் கவிதை
அந்த வாசிப்பையும்
அதை ரசித்துக் குவிந்தவண்ணமிருக்கும்
லைக், கமெண்ட், ஷேர்களையும் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது
தனக்கான மௌ(மோ)ன வாசகரைத் தேடி....
தனியறையொன்றில் நகம் கடித்தபடி
எழுதிக்கொண்டிருக்கும் கவியை நாடி.....

அறிவாளி – அறிவீலி - அரசியல்

 அறிவாளி – அறிவீலி - அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு
சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;
சுற்றிச் சுழல்கிறார்கள்; சுடரொளி வீசுகிறார்கள்;
சுநாதமிசைக்கிறார்கள்….
சொல்பவர் அந்தச் சொல்லைச்
சொல்லத் தகுதியானவராவென்றெண்ணத்
தலைப்படாமல்
சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்
சுட்டிக்காட்டும் முனைப்பில்
காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை
கோமாளிகளாகச் சித்தரித்து
சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _
சிறகசைத்துப் பறக்காத குறையாய்
சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
வரிசையில் நின்று
வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்
வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே
வாக்களித்துவிட்டு வந்தார்கள்
வெற்றிப்புன்னகையோடு.
அந்த வாக்காளர்களேே அறிவாளிகள் என்று அறைகூவலிட்டவாறே
அறிவாளிக்கெல்லாம் அறிவாளி
அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்
அவருடைய தன்னலத்தால் அறிவாளிகளாக
போற்றிப் பாடப்பட்டு
அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே
அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட
பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலிகள்
அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்
அம்மணமாய்
ஒருவர் பின் ஒருவராய் அனுப்பிவைக்கப்பட
காட்டெருமை சிங்க வகையறாக்கள் எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து
அவர்களைக் குதறத் தொடங்கும்.
சக்கரவர்த்திகளின் அட்டகாசச் சிரிப்பைக் கேட்டவாறே விழுந்துகிடக்கும் குற்றுயிர்கள்.

லதா மங்கேஷ்கருக்கு என் மனமார்ந்த வணக்கமும் நன்றியும்.

 லதா மங்கேஷ்கருக்கு என் மனமார்ந்த வணக்கமும் நன்றியும்.

லதா ராமகிருஷ்ணன்


https://www.youtube.com/watch?v=KsIR3v6hCy4

நிகழ்வுகளால் ஆனது வாழ்க்கை. நிகழ்வுகள் ஒவ்வொன் றுக்கும் காரணம் உண்டு என்பார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. எனக்குத் தெரியாததெல்லாம் இல்லையென்று என்னால் சொல்லவியலாது. பக்தர் பகுத்தறிவாளராகலாம், பகுத்தறிவாளர் பக்தராகலாம் - இருவரும் ஒருவரேயாகலாம். ......

இரண்டு நாட்கள் முன்பு க்விக்ஃபிக்ஸ் போட்டு ஒட்டிய ஸ்டிக்கர் ஹூக்கில் மாட்டிய ராமபிரான் காலண்டர் சற்று முன் அறுந்து விழுந்தது. கனம் தாங்காமல் எப்படி யும் ஒரு நாள் விழும் என்று எதிர்பார்த்ததுதான். மனதிற்குள் ஏதோ நெருடியது.
நாய் ஊளையிட்டால் அபசகுனமென்று பயந்தவர்களைப் பற்றிய கதை படித்திருக்கிறேன். இறுதியில் ஊளையிட்ட நாய் உடல்நிலை சரியில்லாததால் இறந்துபோகும்.
ஆனாலும், இன்று நாள்காட்டி விழுந்ததும் நேற்று உடல் நிலை கவலைக் கிடமாக இருந்த பாடகி லதா மங்கேஷ் கரின் நினைவு வர, தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்தால் அவர் காலமான செய்தியும் அவருடைய பாட லும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ராமனைப் பற்றி அவர் பாடியுள்ள எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
ராமன் இருந்தானா, இல்லையா ,
நல்லவனா, கெட்டவனா -
அதற்கு முன் _
நாம் இருக்கிறோமா இல்லையா
நாம் நல்லவர்களா கெட்டவர்களா....

ராமன் போன்ற ஒரு அரிய நபரைக் கணவனாகப் பெற்ற சீதை தன்னைக் கடத்திச்சென்று நைச்சியமாய் அடைய முயலும் இராவணனுக்காக ஏங்கினாள் என்று எண்ணும், வால்மீகியின் கைபிடித்து எழுதக் கற்றுத்தந்தவராகத் தன்னை முன்னிலைப் படுத்துவதாய் எழுதித்தள்ளும் மனவக்கிரம் பிடித்தவர்கள் அறிவுஜீவிகளாக அறியப்படும் அவலம் தொடர்கிறது.
(என் அப்பா எனக்கு வைத்த பெயர் லதா. லதா மங்கேஷ் கரின் மீதான அபிமானத்தில். அம்மாவைப் பெண் பார்க்க வந்தபோது பம்பாய்க்காரி என்பதால் லதா மங்கேஷ்கர் பாடலைப் பாடச் சொன்னாராம்.
இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் அப்பா இறந்து அரை நூற்றாண்டாகி விடும். )
இசையின் மொழி எல்லோரும் அறிந்ததுதானே.
லதா மங்கேஷ்கர் பாடல்கள் இந்தியறியாத எனக்கு தமிழ் அறிந்தும் பகுதியளவே புரியும், எனில் புரிந்தது மனதை அப்படி நெகிழ்த்தும் கவிதைகளாய்.
அவருடைய குரலின் உயிர் மொழிகளுக்கப்பாலானது. அது எனக்கு நிறையவே வாசகப்பிரதிகளை வழங்கியி ருக்கிறது.
வாசகராக இருப்பவர்க்கே வாசகப்பிரதிகள் வாய்க்கும்.....
திறந்தமுனைக் கவிதைகளுக்கான திறவுகோல்களைத் தேடவும் அர்த்தார்த்தங்களை உள்வாங்கிக்கொள்ளவும் மனதைத் திறந்துவைத்தபடி....
அதுவேயாகட்டும் வாழ்க்கைக்கும்.
அத்தனை அற்புதத் தருணங்களை, ஆத்மசுத்தியுணர்வு களை அள்ளிவழங்கிய பாடல்களைப் பாடிச்சென்ற லதா மங்கேஷ்கருக்கு என் மனமார்ந்த வணக்கமும் நன்றியும்.

சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்
காதுகளின் பின்புறமும் பிடரியிலும் நெற்றிப்பொட்டுகளிலும் வலி தெறித்தெழும்.
தாளமுடியாமல் சிணுங்கினால் நறுக்கென்று குட்டுவிழும்.
நடுமண்டையும் சேர்ந்து வலிக்கும்.
அல்லது குதிரைவால்.
கோடையில் கசகசக்கும்.
ஆனால் அம்மாவுக்குப் பெண் நாகரீகமாக இருக்கவேண்டும்.
அதாவது, அவர் வகுத்த நாகரீக வரம்பெல்லைக்
குட்பட்ட அளவில்
அவர் வகுத்தது அம்மம்மா வகுத்திருந்ததில் பாதி
அச்சு அசலாகவும் பாதி புறந்தள்ளப்பட்டு
திரிந்து உருமாறியதாகவும்.
பள்ளிக்குச் சென்றபின் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொள்ளலாமென்றால்
வகுப்பில் எல்லோருமே விறைத்துக்கட்டிய பின்னல்களும் அல்லது கசகசக்கும் குதிரைவால்களுமாயிருக்க
பாடமெடுக்கும் கைகளில் இருக்கும் இல்லா
திருக்கும் பிரம்புகளின்
நீள அகலம் நினைவில் பேயாகத் தலை
விரித்தாடும்.
அன்று அப்படியொரு தலைவலி வந்தபோது
அம்மா அலறியடித்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மருத்துவர் ‘அறிவுகெட்டத்தனமா இத்தனை இறுக்கமாகப் பின்னியிருக்கிறீர்களே – நரம்புகளே அறுந்துவிடுமளவு?’ என்று கோபமாகக் கேட்டபோது அன்பு அம்மாவின் முகம் துவண்டுபோவதைக் காணப்பொறுக்காத சிறுமி
’ அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள் – இப்படிப் பின்னுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள்.
‘அறிவுகெட்டத்தனமா’ என்று மருத்துவர்
கூறியிருக்கத் தேவையில்லை’.
யாகாவாராயினும் நாகாக்க.
மருத்துவர் சொன்னது அவளுடைய மீட்சிக்கான தருணம் என்று அந்தச் சிறுமிக்குப் புரிந்திருக்க வழியில்லை…
ஓர் அந்நியர் அன்பு அம்மாவை முட்டாளென்று திட்டக்கேட்டு முட்டிக்கொண்டு கோபம் வரத்தானே செய்யும்…
மகள் சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்துபோன அம்மா அடுத்தநாளிலிருந்து இன்னும் இறுக்கமாகப் பின்னக்கூடும்.
புரிந்தும் புரியாமலுமான குழப்பத்தில் உறங்கத்தொடங்கினாள் சிறுமி.


மனக்குருவி - கவிஞர் வைதீஸ்வரனின் முழுக்கவிதைத் தொகுப்பு

மனக்குருவி





சமகாலத் தமிழ்க் கவிதையின் குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர் வைதீஸ்வரனின் 2017 வரையில் எழுதப்பட்ட கவிதைகளின் முழுத்தொகுப்பு.

புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனையில்.

இந்தத் தொகுப்பில் கவிதைகளோடு கவிஞரின் கோட்டோவியங்கள், கவிதை குறித்து அவர் எழுதியுள்ள
அருமையான
கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
பக்கங்கள் 400க்கு மேல்.
விலை ரூ.500.

ஒருமையைத் தேடி. .... மூஸா ராஜா

 ஒருமையைத் தேடி. .... 

மூஸா ராஜா

மத நல்லிணக்கம் குறித்த நூல்கள் பலவற்றின் தொனியும் உள்ளடக்கமும் மதக்கலவரத்தைத் தூண்டுவதாக பல நேரங்களில் அமைவது அவலமான உண்மை.

அப்படியில்லாமல் அத்தனை ஆழமாக, ஆத்மார்த் தமாக மத நல்லிணக்கம் குறித்து சீரிய ஒப்பாய் வோடு ஆங்கிலத்தில் திரு மூஸா ராஜா அவர்க ளால் எழுதப்பட்டு தற்போது தமிழில் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நூல் ‘ ஒருமையைத் தேடி.

அவசியம் வாங்கிப் படியுங்கள்.



டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் - ஒரு மனிதராக - மொழிபெயர்ப்பாளராக


டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் - ஒரு மனிதராக - மொழிபெயர்ப்பாளராக

இருந்தாலும் மறைந்தாலும்

பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்....





BOOKS BY ANAAMIKAA ALPHABETS - AVAILABLE IN PUDHUPUNAL PUBLICATIONS

 

BOOKS BY ANAAMIKAA ALPHABETS AVAILABLE IN PUDHUPUNAL PUBLICATIONS










புரியுங்கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புரியுங்கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எனக்கே புரியாத ஒன்றை
எனக்குப் புரியவைக்கப் பார்க்கவும்
உங்களுக்குப் புரிகிறதா
என்று அன்போடு கேட்கவும்
உன்னை நான் புரிந்துகொள்ள
என்ன செய்யவேண்டும் என்று
நானறியாத என்னை யுன்னை
என்உன்னைக் கேட்கவும்
ஒரு சில வரிகளைக் கவிதையாக்குகிறேன்.
திருத்தமான உரு பெறாததால்
கருவுள்ளிருக்கும் சிசு பிசுபிசுத்துச்
சிதைந்துவிட்டது
என்று உருவேற்றுவோரைக்
கடவுள் மன்னிக்கட்டும்.
உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லையென்றாகும்
அருங்காதலை புகைப்படம் எடுத்து
ஆழியில் ஆணியடித்து மாட்டுவதுபோல்
ஆழ்மனதிலொரு கவிதையென்னைச்
சூழ்ந்தவண்ணம்....
அதன் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது.
கழுத்தைக் கடந்து மூக்கிலும் வாயிலும்
காதுகளிலும் நுழைவதற்கு முன்
வெளியேறிவிடவேண்டும்;
வெளியேற்றிவிடவேண்டும்.
உயிர் பெரிது;
கவிதை காற்றுபோல்.
தீண்டக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
உள்ளங்கைக்குள் ஒரு கணம்
தேக்கிவைக்க முடிந்தால்
பின் வேறென்ன வேண்டும்?
கள்வெறி கொள்ளும் மனம்
காத்திருக்கும்.
அட, யார் கல்லெறிந்தால் என்ன?
அடங்க மறுத்தெழும்
ஆவியுருக் கவிதை.

அகங்காரம் அறியாமை அன்னபிற….. 1 லதா ராமகிருஷ்ணன்

 அகங்காரம் அறியாமை அன்னபிற….. 1

லதா ராமகிருஷ்ணன்
ஒரு கவிஞரின் கவிதைகள் இன்று பிரசுரமாகாதிருக் கலாம். குறிப்பாக, அச்சில். அதற்காக, அவர் கவிதையே எழுதுவதில்லை என்று சொல்லிவிட முடியுமா?
அப்படியே அவர் இன்று எழுதுவதில்லையென்றாலும் அதற்காக அவர் எழுதியதெல்லாம் இல்லையென்றாகி விடுமா?
அவர் இலக்கியத்தின் வேறு துறையில் இயங்கத் தீர்மானித்திருக்கலாம்; இயங்கிக்கொண்டிருக்கலாம்.
அட, அவர் எழுதிய
அருமையான
கவிதைகள் அகல்விரி வாக இன்றளவும் பேசப்படவில்லையே. அதனால் அவர் கவியில்லையென்றாகிவிடுமா?
அட, சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்கூட அவர் எழுதிய கவிதைகள் இல்லாமலாகிவிடுமா?
யாருக்கு யார் எதற்குத் தன்னை நிரூபிக்கவேண்டும்?
ஒருவர் கவிதையெழுதிக்கொண்டேயிருந்தால்தான் அவர் கவிஞர் என்றால் பின் நம்மிடையே நினைவுமண்ட பங்கள் எதற்கு? நினைவுதான் எதற்கு?

அகங்காரம் அறியாமை அன்னபிற….. 3 லதா ராமகிருஷ்ணன்

 அகங்காரம் அறியாமை அன்னபிற….. 3

லதா ராமகிருஷ்ணன்

தொலைக்காட்சி சேனல்களில் சில நிகழ்ச்சிகள் நேர் காணல்களில் பங்கேற்றி ருக்கிறேன்.
பெரும்பாலும் பேட்டி காண்பவர் நியமமான கேள்விகள் சிலவற்றைத் தயாராகக் கொண்டுவந்திருப்பார்கள். சிலர் ‘உங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்டால் நன்றாயி ருக்கும் என்று நீங்களே சொல்லிவிட்டால் உதவியாயி ருக்கும் என்று கேட்பார்கள்.
ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துபவருக்கு அது அவருடைய வேலைகளில் ஒன்று. ஒரு நேர்காணலை நடத்துவதற்கு சில முன் தயாரிப்புகள் அவசியமே என்றா லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரளவிலேயே ஆர்வ மான வாசகராக இருந்தாலொழிய அவர் பேட்டி காண வேண்டிய அனைத்துப் படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களையெல்லாம் அவர் படித்திருக்க வழியில்லை. அத னால் அவரைக் கோபித்துப் பயனில்லை.
பேட்டி கொடுத்துவிட்டுத் திரும்பும்போது ஜெயா டிவி யில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பா ஒன்று தந் தார்கள். சன் டிவியில் என் முத்திரைவாசகங்கள் சில வற்றை சொல்லாமல் வெட்டி அப்புறப்படுத்தி ஒளிபரப்பி யிருந்தார்கள்.
விஜய் டிவியிலிருந்து ஒருமுறை பெண் ஒருவர் என் னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணா வேலைக்குப் போகும் பெண்ணா – யார் சிறந்தவர் என்றவிதமாய் ஒரு தலைப் பைக் கூறி அதில் கலந்துகொள்ளும்படி அழைத்தார். அத்தகைய தலைப்புகளின் அபத்தத்தைச் சுருக்கமாக எடுத்துரைத்து வர இயலாது என்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு பொதிகை தொலைக்காட்சி யில், பார்வைக் குறைபாடுடையவர்களைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குபெற மருத்துவர் ஒருவரும் பார்வையற் றோர் நன்னல அமைப்பான WELFARE FOUND ATION OF THE BLINDஇல் இடம்பெற்றுள்ள நானும் அழைக் கப்பட்டிருந்தோம்.
பார்வைக் குறைபாடுடைய பெண்ணொருவரும் இடம் பெற்றுக் கருத்துரைத்தால் நன்றாயிருக்கும் என்று நான் சொன்ன ஆலோசனையை ஏற்று எனக்குத் தெரிந்த பெண் யாரையேனும் அழைத்துக்கொண்டுவரச் சொன் னார்கள். எனக்குத் தெரிந்த மாணவி ஒருவரையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றதில் எனக்குச் செலவு ரூ.300.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக எனக்கு ரூ 1000 வழங்கப்படுமென்றும் அந்த பார்வையற்ற மாணவிக்குத் தனியாக சன்மானம் தர இயலாது என்றும் தெரிவித்தார் கள்.
எனக்குக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயில் உனக்கும் பாதி தருகிறேன். என்றேன் அந்தப் பெண்ணிடம். சில கருத்துக ளைச் சொல்ல முடியுமே என்ற ஆர்வம் அந்தப் பெண்ணி டம் இருந்தது. அருமையாகப் பேசினார்.
ஆனால் எனக்கான சன்மானம் வரவேயில்லை. கடிதம் மின்னஞ்சல், அலைபேசி, தொலைபேசி என்று நயமாக வும் நறுக் கென்றும் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேற வில்லை.
ஒரு கட்டத்தில் அலுப்புத்தட்டி, என் கைக்காசிலிருந்து அந்த மாணவிக்கு ரூ500ஐக் கொடுத்துமுடித்தேன்.
’வாரா வரவு எட்டணா வந்த செலவு பத்தணா – இப்ப டியே போனால் துந்தனா துந்தனா’ என்று கவிதையாகா வரிகள் சில மனதிலோடின!