LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 25, 2022

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள்! - 1

 புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள்! -1

நான் கே. எஸ். பேசறேன்
இருமொழிக் கட்டுரைத் தொகுப்பு
தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன்
முதல் பதிப்பு : 2021 அக்டோபர்
வெளியீடு:
புதுப்புனல்
பாத்திமா டவர்(முதல் மாடி)
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
(ரத்னா கபே எதிரில்)
சென்னை - 600 005
அலைபேசி எண்கள் : 9884427997, 9962376282
மின்னஞ்சல்: pudhupunal@gmail.com
பக்கங்கள் : 330
விலை : ரூ.350:
வணக்கம்
தமிழ் இலக்கிய வெளியில் டாக்டர் கே.எஸ்ஸின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தமிழ் இலக்கி யப் படைப்புகளை உலக அரங்கில் தனது ஆங்கில மொழி பெயர்ப்புகள் மூலம் அவர் அறிமுகப்படுத்துவதையும் நன்கறிந்த நாங்கள் அவருடைய நூல்களை வெளியிட வேண்டும் என்று மிகவும் ஆர்வமாயிருந்தோம்.
அவரிடமும் கேட்டிருந்தோம்.
ஆனால் இன்று அவர் இல்லை. ஆனால் அவரு டைய முதலாம் நினைவுநாளன்று அவருடைய எழுத்தாக்கங்களிலிருந்து சில பகுதிகளும் அவரைப் பற்றி சிலரது நினைவுகூரல் களும் இடம்பெறும் இந்த நூலை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வருத்தமும் மன நிறைவும் ஒருங்கே நம்மைச் சூழ்வதுதானே வாழ்க்கை.

முடிந்தவரை இந்த நூலை நேர்த்தியாக உரு வாக்கி யிருக்கிறோம். தேர்ந்த வாசகர்கள் நிறைய பேரை இந்த நூல் சென்றடையும்
என்று நம்புகிறோம்.

ரவிச்சந்திரன் - சாந்தி
புதுப்புனல் பதிப்பகம்
உள்ளடக்கம்
அ) டாக்டர் ஏ.எஸ். தமிழில் எழுதி வெளியாகியுள்ள கட்டுரைகள்
(அவருடைய கட்டுரைத்தொகுதிகளில் இடம்பெறுபவை)
1. பாரதியின் மனிதநேயம்
2. ஜெயகாந்தனின் படைப்புலகம்
3. ஜெயகாந்தனின் முன்னுரைகள்
4. பிச்சமூர்த்தியின் கவிதையுலகம்
5. சிந்தனை ஒன்றுடையாள்
6. இலக்கிய மொழிபெயர்ப்பு - ஓர் அனுபவப் பகிர்தல்
ஆ) கடவுளின் கையெழுத்து என்ற தலைப்பிலான டாக்டர் கே. எஸ். சுப்பிரமணி யனின் தமிழ் மொழியாக்க நூலிலிருந்து (டாக்டர் மணி பௌமிக் எழுதிய உலகப்புகழ் பெற்ற THE CODE NAME GOD என்ற நூலின் தமிழாக்கம்) இரண்டு அத்தியாயங்கள்
இ) டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் பேட்டி (ஆங்கிலத்தில்)
ஈ) டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் சில.
1. A PEERLESS SPIRITUAL MENTOR
2. HOMAGE TO MBS
3. C. S. SUBRAMANIAN - A QUINTESSENTIAL PORTRAIT
4. PHILIPPINES - LAND OF SMILES
5. THE ALLURE OF SANGAM WOMEN POETRY
6. Dr. K. S. Subramanian on his volume LOCKDOWN LYRICS
உ) டாக்டர் கே. எஸ். சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில
1.FROM U.VE.SA’S THE STORY OF MY LIFE
2. FROM ASOKAMITHRAN’S CHENNAI A KALAIDOSCOPE
3.FROM MENTORS, AN ESSAY-COLLECTION BY BAVA
CHELLADURAI
4. A HANDFUL OF CONTEMPORARY TAMIL POEMS
TRANSLATED INTO ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN
ஊ) நினைவஞ்சலிக் கட்டுரைகள்
1. DR. NARENDRA SUBRAMANIAN 197
2. DR.AJANTHA SUBRAMANIAN 302
3. POET SIRPI BALASUBRAMANIAN 305
4. P.R.SUBRAMANIAN - MOZHI TRUST 307
5. DR. KRISHNASWAMy 311
6. MR.D.RAMACHANDRAN ON BEHALF OF MADRAS YOUTH
CHOIR 316
7. DR.JAWAHAR VADIVELU 318
8. POET RAVI SUBRAMANIAN 320
9. POET ILAMPIRAI 323
10. POET KARUNAKARAN SIVARASA 326




வாய்ச்சொல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்”
_ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம்
அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில்
சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க
முக்கியஸ்தர்களுக்கெல்லாம்
மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில்
சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது அறுசுவை விருந்து
_ முழுவதுமாய் புரிந்ததென்று சொல்லமுடியாவிட்டாலும்
வெள்ளித்திரையில் விசுவரூபமெடுத்திருக்கும்
வீரநாயகன் குரல் முழக்கத்தில்
ஏற்றத்தாழ்வுகளற்று அகிலமே
அதியழகானதான பிரமையினூடே
பேருந்து நிறுத்தம் நோக்கி ரசிகர் நடந்துகொண்டிருக்க
அதே வழியாக வழுக்கியோடிச்சென்றது
அவர் வணங்கித் துதிக்கும் நடிகரின்
அந்நியநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
பிரம்மாண்ட ‘ப்ளஷர்’ கார்.
‘எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை யாவும்
நம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகள்’
என்று இரண்டரை மணிநேரம் வேகாத வெயிலில்
கால்கடுக்கக் குரலெழுப்பி முடித்த பின்
தலைவரிடம் சங்க நடைமுறை சார்ந்த ஒரு எதிர்க்கருத்தைச் சொன்னவனுக்கு
துரோகி என்ற பட்டம் தரப்பட்டு
அவனை அடித்துத் துரத்திவிட்டு
அடிப்படை உரிமைகளுக்கான கருத்தரங்கம்
தடையற்றுத் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தது
அடிமனக் கசடுகளையெல்லாம் வெகு சுலபமாகப்
பொறுப்புத்துறப்பு செய்ய
இருக்குமொரு துருப்புச்சீட்டா யிருந்துகொண்டே
யிருக்கும்
ஒரு சில பெயர்கள்
குறியீடுகள்
பிறவேறும் _
கொக்கரிக்கவும்
குத்திக்குதறவும்.

அவரவர் முதுகு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் முதுகு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன?
சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய்
முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம்.
அல்லது பெரிய ஆடியொன்றின் முன்
முதுகைக் காட்டிக்கொண்டு நின்று
கழுத்தை வளைத்துப் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் நம் அலைபேசியைக் கொண்டு
புகைப்படம் கூட எடுத்துவிட முடியும்.
சின்னத்திரையில் வரும் பெண்கள் அணியும் சட்டைகளில்
என்னமாய்த் தெரிகிறது முக்காலுக்கும் மேலான வெற்று முதுகு!
வீட்டிற்குச் சென்று
மெகாத் தொடரில் தான் நடித்த காட்சியை
மீண்டும் ஓட விட்டு
தன் முதுகை நன்றாகவே பார்த்துக்கொள்ளலாம்.
கைகளுக்கும் கழுத்துக்கும் போடுமளவு
நேர்த்தியாய் மேக்கப்
முதுகுப் பகுதிக்குப் போடப்படுவதேயில்லை.
எப்படியிருந்தாலும், நம் முதுகைப் பார்ப்பதற்கு
கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.
அடுத்தவர் முதுகைப் பார்ப்பதற்கு
அது தேவையில்லை…….
ஆனால் _
முதுகுகள் பெரும்பாலும் மேலாடையால்
மறைக்கப்பட்டிருக்கின்றன.
அம்மணமாயிருந்தாலும் அதன் தோலுமொரு
ஆடையாய்....
இன்னும்
எலும்புக்கூடு, முதுகுத்தண்டு, எத்தனையெத்தனையோ
நரம்பிழைகள்,
ரத்தநாளங்கள், பிசகிய வட்டுகள் ஒன்றிரண்டு.
எண்ண எல்லாருடைய முதுகுகளும் என்னுடையதாய்
என்னுடைய முதுகு எல்லோருடையதுமாய்…
எந்த முதுகைத்தான் முழுமையாகப் பார்க்கமுடிகிறது….
அப்படியே பார்க்கக் கிடைத்தாலும்
அழுக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று தட்டிவிட்டால்
அது என் முதுகும் என் கையுமெனில்
சுளுக்கிக்கொள்ளும் சாத்தியமுண்டு.
என் கையும் இன்னொருவருடைய முதுகுமெனில்
எனக்கு அடிவிழக் கூடும்
என் முதுகும் இன்னொருவருடைய கையுமெனில்
அதுவே இன்னும் பலமாக விழும்…..
எந்தவொரு முதுகிலும் கட்டாயமாய் பதிந்திருக்கும் _
பேயறை அறைந்த பாறாங்கல் கைகள் ஏற்படுத்திய
வலிகள் மட்டுமல்ல
ஏதோவொரு நாளில் வருடிய விரல்களும்,
ஏகாந்தத்தில் பரிவோடு சாய்ந்துகொண்ட தலையின்
சுருள்முடிப்பிரிகளும்கூட.
அடிதாங்கி போலும் தற்காப்புக்கவசம் போலவும்
பிடிமானமாயிருக்கும் திரு முதுகைக் காணக்
கண்கோடி வேண்டுமென்று
இருந்தாற்போலிருந்தொரு பாடல்
உள்ளுக்குள்ளிசைக்க _
அதைக் கேட்டுக் குலுங்கிச் சிரிக்கிறது
அவரவர் அடியாழத்திருக்குமொரு
அடி முடி காணா திரு முதுகு.
.

Thursday, December 9, 2021

அரசியல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அரசியல்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மற்றவர்களுக்கு 
நாட்டுப்பற்று இருந்தால்
அது முற்போக்கு
அதுவே இந்தியர்களுக்கு
இருந்தால்
அது பிற்போக்கு. 

பூமராங்……! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூமராங்……!

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


சுய லாபத்திற்காய்
சுயநலவாதியொருவரை

சக மனிதர்களை ரட்சிக்க

வந்தவராய்

சுண்டுவிரலை அல்லது

கட்டைவிரலைச்

சரேலென்றறுத்து

பெருகும் செவ்விரத்தத்தால்

கையெழுத்திடாத குறையாய்

சொல்லிச்சொல்லிச்சொல்லிக்

கொண்டேயிருப்பவரால்

என்றுமே ஏனோ காண

முடிவதில்லை

யவ்வொரு செயலில்

தன் சாயம் வெளுத்து

சுயரூபம் சுருங்கிக்கொண்டே

போவதை.

Monday, November 29, 2021

அண்மையும் சேய்மையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ண்மையும் சேய்மையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இடையிடையே கிளைபிரிந்தாலும்
இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே
பார்த்துப் பழகியிருந்தது
பேதை மனம்.
அதற்கான வழியின் அகலநீளங்களை
அளந்துவிடக்
கைவசம் தயாராக வைத்திருந்தது
எளிய கிலோமீட்டர்களை.
பத்துவருடங்களுக்கு முன்
நற்றவப்பயனாய்
பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச்
சென்றடைந்த இடங்களும்
சந்தித்த சகபயணிகளும்
இன்று
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருப்பதாய்
எட்டிப்போய்விட
தாற்காலிகக் குடியிருப்பாய் நகரும்
ஆட்டோக்கூட்டுக்குள்
பத்திரம் தொலைத்துச் சென்றவாறு
ஆயாசத்தில் அலைக்கழியும்
நேரம்
அறிவுக்குப் புலப்படும்
வயதின் அளக்கமாட்டா
தொலைதூரம்.

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -

           குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும்

சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(28.11.2021 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

ண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது

எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது.


ச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி

சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது

ஓட்டிக்கொண்டிருந்தபோது

போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில்

சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச் 

சிதறடிக்கச் செய்வதாயும்

குட்டிவிட்டுச் செல்வார்கள்.


சிலர் முதுகில் தட்டிக்கொடுக்கும் வீச்சில்

குழந்தையின் சின்ன தேகம் அதிர்வதைப் பார்த்து

அப்படி மகிழ்ந்து சிரிப்பார்கள்.


ரு தேக்கரண்டி நீர் சிற்றெறும்புக்கு நதியா கடலா

எப்படித் தத்தளிக்கிறது….


குழந்தையின் கன்னத்தில் வலிக்கக் கிள்ளுபவர்கள்

அதை எப்போதும் கொஞ்சலென்றே சாதிக்கிறார்கள்.


செல்லமே கொல்லும் வலி தரும்போது

கோப அறை குழந்தைக்குக் உயிர்வலியன்றி வேறென்ன?


குழந்தை பேசுபொருளாகும்,

ட்ரெண்டிங்கில் இடம்பெறும்

ஒருநாள்

அவர்கள் குழந்தையையும் அதன் சச்சதுரக் கப்பல்களையும்

அவை மிதக்கவென அது தன்னந்தனியே எப்போதும்

ஊற்றெடுக்கச் செய்துகொண்டிருக்கும்

சிற்றோடைகளையும்

சமுத்திரங்களையும்

தங்கள் குழுப்பெருமையைக் கொண்டாடுவதற்கான

இன்னொரு இனத்தை இழிவுபடுத்துவதற்கான

கச்சிதமான கருவியாகப் பயன்படுத்த வேண்டி

சொந்தங்கொண்டாடத்தொடங்குவார்கள்.


ப்பொழுதும் அவர்களுடைய இறுக்கமான அணைப்பிலிருந்து

திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை.

 

Tuesday, November 23, 2021

படைப்பும் பொறுப்பேற்பும் - லதா ராமகிருஷ்ணன்

 படைப்பும் பொறுப்பேற்பும்

லதா ராமகிருஷ்ணன்

( 21 நவம்பர் 202 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)  

மூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை.

அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினையாய் ஒரு அரசியல்வாதி ‘நாங்களா வது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள்மன்றத்தின்முன் நிற்க வேண் டியுள்ளது. ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாகப் பழிப்ப தன் மூலமும் பகடி செய்வதன் மூலமும் தங்களை சமூகப் புரட்சியாளர்களாக நிறுவும் திரையுலகவாதிகளிடம் இருக்கும் பணம் எங்களில் பலபேரிடம் இல்லை’ என்று கூறியது ஞாபகம் வருகிறது.

 காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் சினிமாவில் கதாநாயகனாக வரும் காவல்துறை அதிகாரி தன்னந்தனியாகப் போய் வீரபராக்கிரமம் செய்து இருபதுபேர் அடங்கிய சமூக விரோதிகள் குழாமை நையப்புடைப்பதாய் திரும் பத் திரும்பக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் ஒரு குழுவா கச் செயல்படுவதுதான் காவல்துறையின் வழக்கம். அப்படியில்லாமல் வெள் ளித் திரையில் காட்டப்படும் காவல்துறை வீரநாயக பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு தனியாகப்போய் இன்னலில் மாட்டிக்கொண்டவர்கள், இன்னு யிர் நீத்தவர்கள் உண்டு என்று தனது பேட்டி யில் சுட்டியிருந்தார்.

 சமூகப் பிரச்சினைகளை உண்மையான அக்கறையோடு அதற்கேற்ற கலா பூர்வமான நேர்த்தியோடு கையாண்ட தமிழ்ப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்ணை பண்டமாக பாவிக்கும் படங் கள்தான் அதிகம்.

மாற்று சினிமா என்பது வேறு பல மொழிகளில் குறிப்பிடத்தக்க தனியான இடத்தைத் தனக்கென நிறுவிக்கொண்டதைப்போல், ஒரு நீள்தொடர் முயற்சியாய் இருந்ததைப் போல தமிழில் இருந்ததில்லை; இன்றளவும் இல்லை. 

இன்னும் சொல்லப்போனால் தமிழில் black and white பாத்திரங்களே பரவா யில்லை என்னுமளவுக்குத்தான் grey shade பாத்திரங்கள் (உ-ம் நாயகன்) காணக்கிடைத்துள்ளன.

 இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் வீட்டுக்குள்ளேயே சோபாவில் அமர்ந்து கொண்டு கதாபாத்திரங்கள் பக்கம்பக்கமாக வசனம் பேசிவந்த வழக்கத்தை மாற்றி வெளிப்புறப் படப்பிடிப்பைக் கொண்டுவந்தார் என்ப தைத் தாண்டி கலாபூர்வமான படம் எதையும் எடுத்துவிடவில்லை.

மேலும், இவர்கள் காட்டிய கிராமங்களும் உண்மையான கிராமங்களை, கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனமும் அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இருந்தது. கிராமத்து மக்களெல்லாம் வெள் ளந்தி மனிதர்கள் – பட்டணம் போனால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ப தான சித்தரிப்பே அதிகம் இருந்தது.

 படிப்பு, படித்தவர்கள் பற்றியெல்லாம் ஒரு எதிர்மறையான கருத்துக ளை யே இவர்களுடைய படங்கள் அதிகம் முன் வைத்தன. பாரதிராஜாவின் பட மொன்றில் பட்டதாரி இளைஞனிடம் வேலைக்கான நேர்காணல் என்ற பெயரில் அபத்தமாகக் கேள்விகள் கேட்கப்படும். ஆத்திரமுறும் நாயகன் தன் பட்டப்படிப்புச் சான்றிதழை யெல்லாம் கிழித்தெறிவான். இதேமாதி கே.பாலச்சந்தர் படத்திலும் உண்டு. ஒன்று, ஒரு வேலைக்கான நேர்கா ணல்கள் எல்லாமே இத்தனை அபத்தமாக நடத்தப்பட வழியில்லை. இன் னொன்று, அப்படியே ஓரிடத்தில் அபத்தமாக கேள்வி கேட்டாலும் அதற் காக தன் படிப்புச் சான்றிதழ்களைக் கிழித்தெறிய வேண்டுமா? 

அது யாரு க்கு நஷ்டம்?  அவர்களைப் படிக்கவைக்க அவர்களது வீட்டார் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். இப்படி ‘வெத்து ஆவேசக்காரர்களாக’ இளைய சமுதாயத்தினரைக் காட்டிக் காட்டியே, மாணவர்களென்றால் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று இப்படி உருவேற்றியே திரையுலக வாதிகள் தங்கள் கஜானாக்களை நிரப்பிக்கொண்டார்கள்.

 இன்று இந்த ‘ட்ரெண்ட்’ தொலைக்காட்சி மெகா தொடர்களில் நீரூற்றி வளர்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு தொடரில் டாக்டர் ஒருத்தி கொலை செய்வது உட்பட அனைத்துவிதமான கொடூரங்களையும் செய்கி றாள், செய்கிறாள், செய்துகொண்டே யிருக்கிறாள். 

ஒரு தொடரில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கதாபாத்திரம் அத் தனை கேவலமான வில்லி யாக வருகிறாள். 

இது போதாதென்று, எம்பிஏ படித்த பெண்ணை அவள் அண்ணன் படிக்காத ஒருவருக்குத் திருமணம் செய்துவிடுகிறார். இந்தப் பெண்ணை மாமியார் நேரம் கிடைக்கும் போதெல் லாம் படித்த திமிர் என்று குத்திக் கிழிக்கிறாள். 50 குடங்களுக்கு மேல் தண்ணீர் இழுக்கச் செய்கி றாள். மருமகளோ மாமி யாரிடம் நல்ல பெயர் வாங்க நாயாய் உழைக்கிறாள். 

இந்தத் தொடர்களிலெல்லாம் மிக குரூரமான வசைபாடல்கள் சர்வ சாதார ணமாகப் புழங்குகின்றன. இறுதியில் ’எல்லாம் உன் நன்மைக்காகத் தான் செய்தேன்’ என்ற ஒரே ‘அரைத்த மாவு’ வாசகத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். 

‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று வள்ளுவர் சொன்னதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? வள்ளுவர் விழா கொண்டாட இந்த சேனல்களெல்லாம் தவறுவதேயில்லை.

 அதேபோல்தான் சாதி மறுப்பு பேசுவதான பாவனையில் ஒரு படத்தின் இறுதிக் காட்சியில் காதாநாயகி தன் கழுத்திலிருந்த சிலுவையையும் கதா நாயகன் தன் பூணூலையும் கழட்டிப் போட்டு கைகோர்த்து ஓடிவிடுவதா கக் காட்டப்படும். அதற்கு எதிர்வினையாக பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அப்படிச் செய்வதன் அபத்தங்கள் சுட்டப்படும்.

 மேடையில் ஒரு இளம் கதாநாயகி ஆங்கிலத்தில் பேசியதற்காக அங் கேயே அந்தப் பெண்ணைத் திட்டி அவமானப்படுத்திய பாரதிராஜா சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவறாமல் செய் வார்.

தமிழ் என்று முழங்குவார்கள், உழவு என்று முழங்குவார்கள், பண்பாடு, பாரம்பரியம் என்று பாட்டும் வசனமுமாகக் கலக்குவார்கள். ஆனால் அவர் கள் வீட்டுப் பிள்ளைகளையெல்லாம் அயல்நாட்டில் படிக்கவைத்துக் கொ ண் டிருப்பார்கள். ‘லேட்டஸ்ட் மாடர்ன் டிரஸ், ஃபேஸ் லிஃப்ட் சகிதம் வாழ்ந் துகொண்டிருப்பார்கள்.

வடக்கிலிருந்து தமிழே தெரியாத வெளுப்புப்பெண்களாகத் தேடிப்பிடித்து  கதா நாயகிகளாக்குவார்கள்.

‘மாஸ்டர்’ படம் பார்க்க நேர்ந்தபோது உண்மையிலேயே ‘நொந்து நூலா கிப்’ போனது என் மனம். இளங்குற்றவாளிகள் கஞ்சா கடத்தலுக்காகப் பயன்படுத்தப்படுவது பற்றிப் பேசும் படம். எத்தனை சமூகப்பிரக்ஞையோடு கையாளப்பட்டிருக்கவேண்டிய கதைக் கரு. 

ஆனால் வழக்கமான ‘கதாநாயகரின் வீரபராக்கிரம(இதில் அவ்வப்போது புட்டியைத் திறந்து மதுவருந்துவதும் அடங்கும்) அடிதடி கொலைக்குத்துக ளோடு சுபமாய் முடிந்துவிட்டது. இப்படித்தான் தமிழில் கதாநாயக வழி பாடே பிரதானமாக அமைகின்றன படங்கள்.

இந்தப் படங்களுக்கான ‘பிரமோஷன்’ வேலைகளை ஜரூராகப் பார்க்கஊட கங்கள், சமூக ஊடகங்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள் வார்கள். படைப்புச் சுதந்திரம் என்று முழங்குபவர்கள் அது குறித்த எதிர்-விமர்சனங்களை தர்க்கபூர்வமாக முன்வைக்கும் சுதந்திரமும் உண்டு என் பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

திரையுலகவாதிகள் SELF-APPOINTED CHAMPIONS ஆக மற்ற துறையினரை  யெல்லாம் கேள்விக்குட்படுத்துவார்கள், அவர்களைப் பற்றிய பொதுப்படை யான எதிர்மறைக் கருத்துகளை உருவாக்குவார்கள். மொந்தைகளாகச் சித்தரிப்பார்கள். 

ஆனால், தங்கள் துறை சார்ந்த அவலங்களை, அத்துமீறல்களை மறந்தும் பேசமாட்டார்கள்.

சினிமாத்துறை சார்ந்த ’அசிங்கங்களை’ சித்தரித்து, மேலோட்டமாக அல் லாமல் ஆழமாக அலசி படங்கள் வந்திருக்கின்றனவோ தமிழில்?

நாவினால் சுட்ட வடு

நாவினால் சுட்ட வடு


சொற்களை விட

அதிகக் காயமுண்டாக்கும்,

சேதமுண்டாக்கும்,

புண்படுத்தும்,

பிரிவினையேற்படுத்தும்,

ஆகப்பெரிய பாதிப்புண்டாக்கும்

மோசமான

கொடூர ஆயுதம்

வேறு உண்டா என்ன?


சொற்களால்
ஒரே மனதை
எத்தனை முறை
படுகொலை செய்ய முடிகிறது?

உலகின் பிரச்னைகளுக்கெல்லாம்
காரணம்
மண், பொன், பெண்
என்பார்கள்.

இல்லை,
வன்சொற்களே.
......................................................................................................
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
_ திருவள்ளுவர்