LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, January 2, 2014

மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும் : எழுத்தறிவித்தல்

மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும் : எழுத்தறிவித்தல்

Bottom of Form


 26, மே, 2013 திண்ணை இதழில் வெளியானது



நாடு முழுவதும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக் கும் அதிகமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதாக  24.11.2012 தின மணி இதழில் செய்தி வெளியாகியிருந்தது. நன்கொடை பெற்றது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 31 பள்ளிகளுக்கு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் [ஸிபிஎஸ்ஸி] இந்த ஆண்டில் 31  பள்ளிகளுக்கு நோட்டீச் அனுப்பியுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூர் குறிப்பிட் டுள்ளார்.

 

மேலும், பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டம் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் 40 புகார்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர். முக்கியமாக, உணவுத்தரம் மோசமாக இருப்பதா கவே பெரும்பாலான புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது.


எழுத்துவடிவில் தரப்பட்டும் புகார்கள் அவற்றை விட பன் மடங்கு அதிகமாகப் புகார்கள் பலதரப்பட்ட அச்சங் கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தரப்படாத நிலையில் இருக்கும் உண்மை நிலவரத்தையே குறிப்புணர்த்துகின்றன என்றால் மிகையாகாது.

 

‘மாடர்ன் பள்ளி’ என்று பெயர்ப்பலகையை மாட்டியிருக்கும் பல தனியார் பள்ளிகளில் போதுமான இட வசதியோ,  வெளிச்சம்,  காற்று உள்ளே வருவதற்கான வாய்ப்போ,  அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகளோ இருப்பதில்லை. குறிப்பாக,  மழலை யர்-ஆரம்பப் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம்.

 

‘மக்கள் நல அரசு’ என்ற கோட்பாட்டின் கீழ் இயங்கிவர வேண்டிய மத்திய மாநில அரசுகள் தமது பள்ளிகளின் தரம், செயல்பாடு குறித்து போதுமான கவனம் செலுத்தி வருகிறதா என்பது பெரிய கேள்விக்குறி. பதிவேடுகளெல்லாம் வெகு கவனமாகப் பராமரிக் கப்பட்டுவிடும். ஆனால், உண்மை நிலவரம் எப்படியிருக் கிறது?  இதை தொடர்ந்த ரீதியில் கண்காணித்துவரவும், தவறு களைக் களைந்து தேவையான மாற்றங்களைக் கொண்டுவரவும், கல்விப் பணியில் ஆர்வங் கொண்டுள்ள சமூகப்பணியாளர்கள், கல்வியா ளர்கள்,  தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள்,  சட்ட வல்லுனர்கள்,  ஆசிரியப்  பிரதிநிதிகள், பெற்றோர்களின் பிரதிநிதிகள், ஊடகப் பிரதிநிதிகள்,  மனித உரிமைக் குழுக்கள் போன்ற பல்வேறு பிரிவினரை, சமூக அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய  கண்காணிப்புக் குழு, மதிப்பாய்வுக் குழு[க்கள்] நம்மிடையே இல்லவேயில்லை எனலாம். உண்மையான அக்கறையோடும், ஆதங்கத்தோடும், தவறுகளைச் சுட்டு வோர்,  மாற்றங்களைக் கோருவோர் அரசுகளால்,  முக்கிய மாக அரசியல்வாதிகளால்  எதிரிகளாய் பார்க்கப்படும்,  அத்தகையோர் குரல்கள் ஒடுக்கப்படும் அவலநிலையே பெரும்பாலும் நிலவிவருகிறது.

 

தவிர, கல்வி இங்கே அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இருப் பதும், ஆயாக்கள், ஆசிரியர்கள் பணிநியமனங்கள் பல அத்தகை யோரின் செல்வாக்கின் அடிப்படையில்,  பரிந்துரையின் அடிப்படையில் நடத்தப்படுவதும், இந்தப் பணிக்கு இத்தனை தொகை கையூட்டாகத் தரப்பட வேண்டும் என்பது  ‘எழுதப்படாத சட்டமாக’  அமுலில் இருந்துவரும் நிலையும்,  தரமான கல்வியும், கல்விச்சூழலும் கிடைக்க வழியில்லாத நிலையைப் பரவலாக ஏற்படுத்தியிருப்பதாக, கல்விப் பணியில் ஆர்வ முள்ள, சமூக அக்கறையுள்ள பலர் வருத்தத்தோடு கூறக் கேட்டதுண்டு. [”நான் இத்தனை பணம் கொடுத்து இந்த வேலையில் சேர்ந்திருக்கிறேன். அதைத் திரும்ப எடுக்கமுடியும் என்ற நம்பிக்கையில்தானே சேர்ந்திருக்கிறேன்”, என்று உண்மையான ஆதங்கத்தோடு ஒரு பள்ளியைச் சேர்ந்த ஊழியர் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைக் களவாடிய தன் செயலை நியாயப்படுத்தி ஆட்சியர் ஒருவரிடமே வாதிட்டதாக சில நாட்களுக்கு ம்ன்பு ஒரு செய்தியைப் படிக்க நேரிட்டது].

 

அரசுப்பள்ளிகளில் தரமான சத்துணவு வழங்கப்படவேண்டும் என்று தற்போதைய தமிழகஅரசு புதிய உணவு அட்ட வணையைத் தயாரித்து அளித்துள்ளதாக செய்தி வெளியாகி யது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், மாணாக்கர்களுக்கு சத்துணவு அளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறை யாகப் பயன்படுத்தப்படுகிறதா, மாணாக்கர்களுக்கு தரமான உணவுப்பண்டங்கள் அளிக்கப்படுகின்றனவா என்பதையெல்லாம் உறுதியாகக் கண்காணிக்க என்ன ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட் டிருக்கின்றன? மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் குழந்தை களுக்காகத் தரப்படும் உணவுபொருட்கள் நல்ல முறையில் அவர்களுக்குக் கிட்டுவதில்லை என்ற புகார்களை ஏழைப் பெற்றோர்களிடமிருந்து நிறையவே கேட்கமுடிகிறது. ஆனால்,  சமூகத்தின் அடித்தட்டில் உள்ள இந்தப் பெற்றோர் கள் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்விகேட்க அஞ்சுவது இயல்பு.

பெற்றோர்களையும், ஆனால், பிள்ளைகளையும், மதிப்பழிப்பதே, கூனிக் குறுகச் செய்வதே நோக்கமாய் அவர்களை அலட்சிய மாக, அச்சுறுத்துவதாய் நடத்தும் போக்கையும் பல அரசுப் பள்ளிகளில்[தனியார் பள்ளிகளிலும் தான்] கணிசமான அளவு ஆசிரியப்பெருமக்களிடம் காணமுடிவதாய் நம்மிடம் கிசுகிசுப்பாய் தெரிவிக்கும் பெற்றோர்கள் ஏராளம்.

 

ஆசிரியப்பணி மகத்துவம் நிறைந்தது. மழலையரை கவனிக்கும் ஆயாக்களின் பணியும் அத்தகையதே. ஒன்று முதல் ஐந்து வரையான வயதுகளில் ஒரு குழந்தை பெறும் மனப் பதிவுகள்  வாழ்நாளுக்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத்த வல்லது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வளரும் பருவத்தில் குழந்தைகளுக்குச் சரியான கல்விச்சூழல் இருந்தால் தான் இலவச மாக, கட்டாயமாகத் தரப்படும் கல்வியால் அவர்கள் பயன்பெற முடியும். குழந்தைகளை மிரட்டிக்கொண்டே,  மதிப் பழித்துக் கொண்டே அவர்களுடைய வளர்ச்சிக்கென அரசு தரும் சலுகைகளின் பலன் அவர்களுக்குக் கிடைக்கவொட்டாமல் செய்தவாறே  ‘வளமான எதிர் காலத்’தை அவர்களுக்கும் அவர்கள் மூலமாக தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் எப்படி சாத்தியமாக்க முடியும்?

 

எனக்குத் தெரிந்த பெற்றோரொருவர் கூலிவேலை செய்யும் பெண்மணி. குழந்தையை அரசு மழலையர் பள்ளியில் விட்டுச் சென்றால்தான் அவரால் வேலைக்குச் செல்லமுடியும். ‘என் பிள்ளைக்கு இரண்டு வயது. நான் அவனைக் கொண்டுவிடச் செல்லும்போதெல்லாம் அவனைப்பற்றி என்னிடம் குறை  கூறுகிறார்கள். என் எதிரிலேயே பிள்ளையின் தலையில் குட்டுகிறார்கள், கன்னத்தில் நறுக்கென்று கிள்ளுகிறார்கள். என் பிள்ளைக்கென நான் தரும் உணவுப்பெட்டியில் உள்ள தின்பண்டத்தை ஆயா தின்று விடுவதாய் குழந்தை தினமும் என்னிடம் அழுதுகொண்டேகூறுகிறான். குழந்தை சிறுநீர் கழித்துவிட்டாலோ அல்லது மலம் கழித்துவிட்டாலோ வாய்க்குவந்தபடி அதை வைகிறார்கள். முதுகிலும்,  தலையிலும் மொத்து கிறார்கள்”,என்று வருத்தத்தோடு தெரிவித்தவர் “இது குறித்து நான் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தரவோ, அந்த ஆயாவிடமே கேட்டுவிடவோ எனக்கு தைரிய மில்லை. அதன் விளைவாக என் குழந்தைக்கு மேலும் அடி கிடைக்கும். சாதாரணமாகவே, போகும்போதும் வரும்போதும் இந்தச் சின்னக் குழந்தைகளின் தலைகளில் விளையாட்டாக நறுக்’கென்று கை போன போக்கில் குட்டுவது அந்த ஆயாவின் வழக்கம். குழந்தைகளுக்கு விநியோகிப் பதற்காகக் கொண்டு வந்து தரப்படும் தின்பண்டங்களில் பெரும் பகுதியை ஆசிரியப் பெருமக்களும் ஆயாக்களும் எடுத்துக்கொண்டு மீதியைத் தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்”, என்றும் வருத்தத் தோடு கூறினார்.

 

அரசியல்வாதிகளின் ஆதரவில், கையூட்டு கொடுத்து  இந்தப் பள்ளிகளில் பணியில் சேருபவர்களை நியாய-அநியாயம் தெரிந்த உயர் அதிகாரிகளாலும்  பெரிய அளவில் கண்டிக்க முடிவ தில்லை. ’அநாதரவான அடித்தட்டுப் பெண்கள் தான் பெரும்பாலும் ஆயாக்களாகப் பணிபுரிபவர்கள்,  பாவம்,  அவர்களைப் பற்றி புகார் கூறி அவர்கள் வேலைக்கு உலைவைப்பது சரியா?’ என்ற மனிதநேய வாதத்தை முன்வைப்பவர்களும் உண்டு. ’அப்படி யென்றால் அவ்வாறு   பணிநியமனம் செய்யப்படு பவர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உணவு விடுதிகளில் சமையல் செய்யும், பணி செய்யும் பணிகளில் அரசு நியமிக்கட்டுமே. தம் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பத் தெரியாத குழந்தைகள் மத்தியில் பணியாற்றும் யாரும் கூடுதல் பொறுமை யோடும், பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டியது இன்றியமை யாததல்லவா?’ என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்கள் குழந்தை களின் உரிமைக்காக, நலவாழ்வுக் காகப் பாடுபடுபவர்கள்.

 

முன்பு அறுபதுகளின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் ஆரம்பத் திலும் தமிழக கிராமங்களில் ஐ.நா குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் [UNICEF] –ன் ஆதரவில் இயங்கிவந்த குழந்தைகளுக்கான பால்வாடிகளுக்கு வந்துசேரும் ஜெர்மன்-சில்வர் தட்டுகள், கோப் பைகள், கரண்டிகள், மெத்துமெத்தென்ற துவாலை கள், ஏராளமான விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் முதலியவற்றின் முக்காலே மூன்று வீசம் வந்த சில நாட்களிலேயே–’ப்ளாக் டெவெலெப்மெண்ட்’ அதிகாரி போன்ற அதிகாரிகளின் வீட்டிற்கோ, ஊர்த் தலைவர் வீட்டிற்கோ பறந்து சென்றுவிடும். ’என்ன அநியாயம்-அயோக் கியத்தனம்’ என்று குமுறுவார்கள் குரலெழுப்ப வியலா ஏழைப் பெற்றோர்கள்.

 

இவ்வாறு குமுறுவோரில் நல்லுள்ளம் கொண்ட,  ஆசிரியப் பணியின் மகத் துவம் உணர்ந்த, சமூக அக்கறை நிறைந்த ஆசிரியப் பெருமக்களும் உண்டு. ஆனால்,  இவர்கள்  ’பிழைக்கத் தெரியாதவர்கள், நம் பிழைப்பைக் கெடுப்பவர்கள் என்ற வசையைத் தாங்கியவாறு உதிரிகளாக இருக்கும் அவல நிலையும் தொடர்கிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல்லூரியில் மொழிபெயர்ப்பு தொடர்பான சிறப்பு வகுப்புகள் எடுக்கச் சென்றுகொண்டிருந்த சமயம் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயின்றுவந்த மாணாக்கர்களில் ஒரு சிலர் பரிட்சையில் முப்பது பக்க விடைத்தாள்களைத் தந்தும் அதில் ஒரு வரி கூட இலக்கண சுத்தமாக அர்த்தமாகும் வகையில் இல்லாதிருப்பது கண்டு அதிர்ச்சியாக இருக்கும். அதாவது, அவர்களுக்கு விடை கள் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால்,  அவர்களுடைய மொழித்திறன் அத்தனை பலவீனமாக இருந்தது. ஆங்கில மொழி விஷயத்தில்தான் நிலைமை இப்படி என்றில்லை. பள்ளி மாணாக்கர்களில் – அரசுப் பள்ளிகளாகட்டும், தனியார் பள்ளிகளாகட்டும் கணிசமான எண்ணிக் கையில் தமிழ் மொழியே கூட திருத்தமாக எழுதப் படிக்கத் தெரியவில்லை. மொத்தமாக உருப்போட்டு, குத்துமதிப்பாகப் படித்துவிடுவதும் எழுதிவிடுவதும் எத்தனை கடினமான, மிகுந்த அயர்வூட்டும் பிரயத்தனம். ‘எங்கள் பள்ளியில் அப்படியெல்லாம் கிடையாது’  என்றோ, அல்லது ‘எல் லாப் பள்ளிகளிலும் இத்தகைய சில மாணாக்கர்கள் இருப்பது இயல்புதான்’  என்று   சொல்லிவிடுவதோ, அத்தகைய மொழித் திறன் பலவீனமாயுள்ள அத்தகைய மாணாக்கர்களைக் கடிந்து கொள்வதோ,  மதிப்பழிப்பதோ, பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவதோ,  பிரச்னைக்குத் தீர்வாகாது. மொழிப்பயிற்சியை மாணாக்கர்களுக்கு அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம்.

 

இன்றும் அரசுப்பள்ளிகள் பலவற்றில் குழந்தைகளுக்கான நூலகமும், கணினி மையமும் முறையாக அல்லது அறவே இயங்குவதில்லை என்று தெரியவருகிறது. மாணவர்களுக் கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசாலும், மாநில அரசாலும் செயல்வடிவம் தரப்பட்டும் மேற்குறிப்பிட்ட தரமான முன் முயற்சிகள் இலக்குப் பயனாளிகளான சமூக அடித்தட்டு மாணாக்கர்களை எட்டாததற்கு யார் பொறுப்பு? ஒருவகையில் நாமனைவருமே இந்த அவல நிலைக்குக் கூட்டுப் பொறுப் பாளிகளே.

 

ஆரம்பக் கல்வி முதல் மேநிலைப்பள்ளிக் கல்வி வரை இலவசமாக, கட்டாயமாக அரசால் தரப்பட்டுவரும் இந்நாளில் இந்தியாவில், குறிப்பாக நமது தமிழகத்தில் நிலவும் கல்விச்சூழல் குறித்து கவனம் செலுத்த வேண்டியது சமூக அக்கறையுள்ள நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை யாகும். அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல்கட்சிகள் இந்த விஷயத் தில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. குழந்தை கள் ‘வாக்கு வங்கிகள்’  அல்ல என்பதுதான் இந்த அலட்சியத் திற்குக் காரணம் என்று சொல்ல லாமா, தெரிய வில்லை. எனில், மாநிலத்தில் கல்விச் சலுகைகள் பள்ளிமாணவர் களுக்கு சரிவரக் கிடைக்கின்றனவா, உகந்த கல்விச்சூழல் நிலவுகின்றதா என்பதில் கவனம் செலுத்த அனைத்துக் கட்சிகளும், கல்வி என்ற விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேட முயலாமல் முன்வரவேண்டும்.

 

குழந்தையிடம் சுயசார்பு,  தன்மதிப்பு,  கூட்டுறவுப்பண்பு,  தரமான வாழ்வு மதிப்புகள், வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள்,  நற்சிந்தனைகள், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றை  வளர்ப்பதையும்,  குழந்தைகள் மதிக்கப்பட வேண்டிய வர்கள் என்ற கண்ணோட்டத்தை, கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டு மழலையரை மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரச் செய்வதையும், பயிலச்செய்வதையும் நோக்கமாகக்கொண்டு பல வருடங்களுக்கு முன்பு இத்தாலியைச் சேர்ந்த மாண்டிசோரி அம்மையாரால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வித்திட்டம் காலப்போக்கில் (ஒருவேளை ஆங்கிலத்தில் கிடைத்த காரணத்தாலோ என்னவோ) வசதிபடைத்த குழந்தை களுக்கு மட்டுமானதாய் மாறிவிட்டது வருந்தத் தக்கது.  எனில், இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் மாண்டிசோரி கல்வித்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மாண்டி சோரி கல்வித்திட்ட முறையில் பயிலும் மழலையரிடம் வரவேற்கத் தக்க மாற்றம் தெரிவதாகக் கேள்விப்படும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இந்தக் கல்வித்திட்டம் தமிழகம் முழுமைக்கும், ஏன் இந்தியா முழு வதும்கூட, அடுத்தடுத்த வகுப்புகளுக்கும்கூட விரிவுபடுத்தப்பட வேண்டியது ஒரு தொலைநோக்குப் பார்வை யோடு எடுக்கப்பட்ட முடிவாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

 

ஆசிரியர் - மாணவர் - பெற்றோர்-பள்ளிநிர்வாகம் - சமூக ஆர்வ லர்கள் - அரசுப் பிரதிநிதிகள் - அரசியல்வாதிகள் - துறைசார் வல்லுநர்கள் - மனிதஉரிமைஆர்வலர்கள் என பல தரப்பினரும் ஒருங்கிணைந்து நிலவும் கல்விச்சூழலை மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகளைத் தர வேண்டும்;  நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணியில் ஊடகங்களும் பெரும் பணியாற்ற முடியும். இத்தகைய பல பிரிவினரை உள்ளடக்கிய வல்லுநர் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் அரசியல் தலையீடில்லாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் ஆலோச னைகளையும்,  ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்விப் பணியின் மகத்துவம் குறித்து அந்தத் துறையில் பணிபுரிவோருக்கு தொடர்ந்த இடைவெளி யில் ‘விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். மழலை யருக்கு, மாணாக்கர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிக்கத் தகுந்த வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பரவலாக்கப்பட வேண்டும்.

 

குழந்தைகளைப் பலவகைகளிலும் மதிப்பழிப்பதும், குச்சி கொண்டு அச்சுறுத்துவதும், அடக்கியொடுக்குவதும்,  மனப் பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதுவதுமே திறமை என அவர்க ளுக்கு மூளைச்சலவை செய்வதும், குழந்தைகளின் இயல்பான ஆளுமை யைச் சிதைப்பதும் முழுவளர்ச்சி பெற்ற சமுதாயம் உருவாக வழிவகுக்காது என்பதை நாம் உணரவேண்டியது அவசியம். அரசுகள் அளித்துவரும் கட்டாய இலவசக்கல்வி வருங்கால இந்தியாவைச் செதுக்கப்போகும் இன்றைய குழந்தைகளுக்கு முழுப் பயனையும் அளிக்கத் தேவையான அனைத்து முயற்சிக ளையும் சுயலாபம் கருதாது சமூக அக்கறையோடு அனைத்துத் தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

  

Ø      



வேண்டுதல்

ரிஷி
[முதல் தொகுப்பான அலைமுகம்-இலிருந்து]
[ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் வாசிக்கப்பட்ட கவிதை]



 நடுத்தெருவா யிருந்தாலும் நள்ளிரவா யிருந்தாலும்
கொடுங்கதிரோன் நடுமண்டை பிளந்தாலும் நகராமல்
கடுந்தவமாய் நெடுநேரம் காத்திருந்து பார்த்திருந்து குடங்குடமாய் நீர்சுமந்து பொடிநடையாய் போய்வந்து
தடுக்கித் தடுமாறியவர் தேகநலன் பழுதடைந்து
கலங்கிக் கண்ணுயர்த்திக் கருமேகம் தென்படாது
பலநாளாய் எம்மக்கள் படுந்துன்பம் விடைபெறவே
தடையின்றி விரைவாய்ப் பெய்மழையே, பெருங்கொடையே!
உடைநனைய, உயிர்நனைய, ஊர்வினை யெல்லாம் உன்னால்
மறைந் தொழியட்டும் மிகுதயாபரியே, மழையம்மையே!

துளித்துளியாய் நீ வழியக் களிப்பெய்தும் குழந்தைகள்
குதித்துக் குதூகலிக்கும்.
தம் கறைபடியாக் கையேந்தி கனிவோடே நீ வழங்கும்
கவின்முத்து சேகரிக்கும்!
வெளிப்படையாய் சுழித்தோட மாட்டாத எம்போன்றோர்
கிளர்ந்திருப்போம் நீறுபூத்து.
வரமா யொரு சொல்வேண்டி வாழ்ந்திருக்கும் ஏழைக்கவி
திருமனதில் ஊன்றும் வித்தாய், உன்
அருமை பெருமையெலாம் அறிந்தே அழைக்கின்றோம்
வருவாய் மிகுதயாபரியே, மழையம்மையே!

பளிங்குச் சரமாய் நீ இறங்கக் கிறங்கும் உள்ளம் பல
கிளம்பித் தம் நனவோடையில் மெல்லப் பயணமாகும்.
புனைகதிஅயாய் இறந்துபடும் உறவுமுட்கள் கிழிக்கத் ஹ்டுடித்தெழும் கண்ணீர் உன்னில் இரண்டறத் தோய்ந்துவிடும்.
மனம் வெளுக்கவும் நீயொரு மார்க்கமாவாய் எமக்கு.
முகமறியா சிற்றிதழ் நட்பினர்தம் முழு உருவாய்
அகமெங்கும் பற்றி நின்றாய் ஆன்றதொரு ஒட்டுறவாய்!
முககதுவும் ஏசுவும் முத்துமாரி யம்மனுமாய்த்
திகழும் நீயல்ல்லால் வேறொரு தெய்வமில்லை யாதலினால்
பகற்கனவாகாது பொழிவாய் மிகுதயாபரியே மழையம்மையே!

காதம் பல கடந்திங்கே காரியமாற்ற வருவோரும்
வினைமுடித்த கையோடே வசைபாடுவார் எம்நகரை.
பூக்கடைப் பேருந்தில் வந்திறங்கிய வுடனே “சீச்சீ,
சாக்கடைச் சென்னை” யென்றே தூற்றுவார் எம்நகரை.
கான்கிரீட் வனமென்பார்; காயலான் கடையென்பார்.
வாக்குப் பொய்யானவர்கள் வாழுமிடம் என்றுரைப்பார்.
ஆக்கங்கெட்ட தாக்குதல்கள் ஆயிர மிருந்தாலும்
பார்க்குமிடத்திலெல்லாமான நந்தலாலாப் பசுமையாய்
நீக்கமற என்நெஞ்சில் நிறைந்திட்ட பட்டணத்தை
பாழ்வெளியாக்காது காப்பாய் மிகுதயாபரியே மழையம்மையே!

மடைதிறந்து அடைமழையாய் நீ கருணை சொரியும் நேரம்
குடையாய் விரியட்டும் உன் துளிகள் சில பின்னும் சில
குடிசைகளை கல்லுவீடுகளாக்கட்டும் பின்னும் சில
சாலையோர மாந்தர்க்குப் போர்வை நெய்யட்டும் பின்னும் சில
ஆறாத் தாகங்களை யடங்கச் செய்யட்டும் பின்னும் சில
தின்னச் சோறு தரட்டும் திக்கற்றோர்க்கு பின்னும் சில
உள்வெளி ஊனங்களைப் போக்கட்டும் பின்னும் சில
சொல்லவல்லாச் சோகங்களை மாய்க்கட்டும் பின்னும் சில
கல்லாத கேள்விகளில் வல்லமை சேர்க்கட்டும் பின்னும் சில
காசுபணத் தொல்லைகளைக் கரைத்தொழிக்கட்டும் பின்னும் சில
செய்யட்டும் இன்னும் பல; கையெட்டட்டும் தொடுவான.
மனிதத் தலைகள் மேல் முளைத்த கொம்புகளெல்லாம்
முறிந்துபோகட்டும். நாசமாகட்டும் பாசாங்குகளெல்லாம்.
இன்னும் பல உய்விக்கட்டும் உன்னை என்னை
இம்மண்ணை யெல்லாம்… ஐயோ, நாலும்
எண்ணியெண்ணித் தாளாமல் அனத்தியவா றிருக்கும்
என் மா பிச்சி மனம் கோரும் நாலாகிலும் நனவாக
பாலித்தருள்வாயே மிகுதயாபரியே மழையம்மையே!