LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 5, 2025

கவிஞர் காலக்ரமம் ஆத்மாஜீவிடமிருந்து ஒரு வேண்டுகோள்

கவிஞர் காலக்ரமம் ஆத்மாஜீவிடமிருந்து ஒரு வேண்டுகோள்



வணக்கம் நண்பர்களே...
நன்றாக வாழ்ந்த ஒருவன் சூழ்நிலையின் நெருக்கடியால் பலவிதமான பிரச்சனைகளால் கஷ்டப்படும்போதுதான், உறவுகள் யார், நண்பர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடிகிறது .
முகம் தெரியாத, பேசிப் பழகாத பல நண்பர்கள் என் பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து, தானாக முன்வந்து உதவும்போது,இதயம் நெகிழ்ந்து போகிறேன்.
அதேநேரம், நன்றாக இருந்த காலத்தில் என்னுடன் பேசிப்பழகி சிரித்து மகிழ்ந்த உறவுகளும் நண்பர்களும், இன்று நான் கையேந்தி யாசிக்கிற நிலைமைக்கு ஆளானவுடன், சொல்லாமல் கொள்ளாமல் விலகிச் சென்று விட்டனர். போன் செய்தால் எடுத்துப் பேசக்கூட செய்வதில்லை. முகநூல் நட்பிலிருந்த சிலரும் சொல்லாமல் கொள்ளாமல் நட்பை முறித்துக் கொண்டுவிட்டனர்.
என்னை நெகிழ்த்தும் எல்லாவற்றையும், எனக்குத் தெரிந்தவகையில் நேர்மையாக எழுதிக் கொண்டிருந்தேன். அது கவிதை என்ற பெயரில் இருந்தது.
கவிஞன் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை நான் என்றாலும், இன்று யாசிக்கிற நிலைக்கு வந்து விட்டதால், ஒரு கவிஞன் கையேந்துகிறான், பிச்சையாக நினைத்து உங்களாலான உதவியை செய்யுங்கள். கடன் பிரச்சனையில் சிக்கி சிதிலமாகிக் கொண்டிருக்கிறேன். அடிப்படையான உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என்று யாசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீண்டநேரம் அமர முடியாதபடி முதுகுத்தண்டுவடப் பிரச்சனை மற்றும் முற்றிய கண்புரை நோய், கண்அழுத்தநோய் (கிளாக்கோமா). சிறுநீரகப்பிரச்சனை, சமீபத்தில் முதல்முறையாக ஏற்பட்டு உயிர் தப்பிய மாரடைப்பு (இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கிறது நான் வாழ்ந்து கொள்ள...) போன்ற காரணங்களால் கடின உழைப்பு முடியவில்லை.
குறைந்த சம்பளத்தில் நிறைந்த கடன்பிரச்சனைகளுடன், வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன் இன்று.
நண்பர்களே...
உறவுகள், நண்பர்களின் புறக்கணிப்பு மற்றும் அவமானங்களை சுமந்து கொண்டு, தலைதாழ்த்தி கூனிகுறுகி உங்களிடம் கையேந்தும் இந்த ஏழைக்கவிஞனுக்கு, உங்களாலான உதவியை செய்து என்னையும், என்னையே நம்பியிருக்கும் சில உயிர்களையும் காப்பாற்றுங்கள்.
கையாலாகாத கவிஞனாய் யாசிக்கிறேன்.
உதவி செய்ய நினைப்பவர்கள், தயைசெய்து கீழேயுள்ள நம்பருக்கு உதவித்தொகை அனுப்பி உதவும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றியும் வணக்கங்களும்
ஆத்மாஜீவ் என்ற வி.சி.ராஜேந்திரன்
சேலம்.
#GPay_Number : 84385 44124
#Name : V.C. Raj


No comments:

Post a Comment