LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, August 1, 2025

சொல்லத்தோன்றும் சில…..

 சொல்லத்தோன்றும் சில…..



இன்றளவும் மனித இனத்தின் பல்வேறு வயதுநிலை களில் உள்ளவர்களில் அரசாலும், சமூகத்தாலும் போதிய கவனம் தரப்படாமல் இருப்பவர்கள் இரு பிரிவினர். குழந்தைகள் – முதியவர்கள்.

முதியவர்களை இரண்டாம் குழந்தைப்பருவத்திலிருப்ப தாகச் சொன்னாலும் அவர்களுடைய விழிப்புநிலை குழந்தையின் விழிப்புநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.
குழந்தைக்குப் புரியாத அதன் வயதின் இயலாமை முதியவர்களுக்கு முழுக்க முழுக்கப் புரிந்து முள்ளாய்க் குத்தும்.
ஒரு காலத்தில் 60 வயதே முதுமையாகப் பாவிக்கப் பட்டது. இன்று மருந்து மாத்திரைகள், சுயமான நிதியாதாரம் என பல காரணங்களால் 90, 100 வயது வரை வாழும் பெரியவர்கள் உண்டு.
ஆனால், பெரியவர்களை ‘பெரிசு’ என்று கிண்டலடிக்கும் போக்கை அரசுப் பேருந்தில்கூட பார்த்திருக்கிறேன். காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய முதியவரைக் கூட தேவை யில்லாமல், கிண்டல் செய்யும் சக பயணிகளும் உண்டு.
எழுந்து நின்று இருக்கையைப் பெரியவர்களுக்குத் தருபவர்கள் உண்டு. பெரியவர்களுக்கான இருக்கையில் அடமாக அமர்ந்தபடி எங்கோ பார்த்துக்கொண்டு யோச னையில் ஆழ்ந்திருப்பதாய் பாசாங்கு செய்பவர்கள் அதைவிட அதிகமாய் உண்டு.
முதியவர்கள் என்றாலே அவர்களை மொந்தைகளாக்கி, அவர்களுடைய ரசனைகள், ருசிகள், விருப்புவெறுப்புகள் எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மைத்தாய் பாவித்து, பேசி, எழுதி வருவோர் நிறைய. முதியவர்களுக்கான காப்பகங் களில் இவ்வகை அணுகுமுறையைக் காண முடியும்.
இன்று பொருளாதார வசதி படைத்த முதியவர்களுக் கென்று ’மூத்த குடிமக்கள் இல்லங்கள்’ இயங்கிவருகின் றன. அங்கு வசதிகள் உண்டே தவிர அணுகுமுறையில் பெரிய அளவு மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை.
தன்னுடைய வயதான தாய் தந்தையருக்கும், தன் மனைவிக்கும் ஒத்துவராததால் தாய் தந்தையரை வேற்றூருக்குப் புனிதத்தலங்களைப் பார்ப்பதாக அழைத்துச் சென்று அங்கேயே கைவிட்டு திரும்பிவரும் பிள்ளைகளைப் பற்றிய செய்தி படித்ததுண்டு.
வயதான தாய் தந்தையர் வாழுங்காலத்திலேயே அவர்களுடைய சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிட்டு விடும் பிள்ளைகளைப் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு.
மூத்த குடிமக்களுக்காக அயராது பாடுபட்ட, விஸ்ராந்தி என்ற மூத்த குடிமக்களுக்கான இல்லத்தை நிறுவிய அமரர் சாவித்திரி வைத்தி ‘வாழும்நாள் வரை உங்கள் சொத்துக்களை யாருக்கும் எழுதிக்கொடுத்து விடாதீர் கள் என்பார். ஆனால், அப்படி கறாராக எல்லாப் பெரியவர் களாலும் இருந்துவிட இயலாத நிலை.
அதேபோல், குடும்பத்தின் மீது அதீதப் பற்றுடையவராய் அதையே உலகமாகக்கொண்டு உழலும் பெரியவர்களும், காலத்திற்குமான குடும்பத்தலைவராய் தன்னை பாவித்துக் கொள்ளும் பெரியவர்களும் அந்த நிலை மாறுவதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாய் மனமுடைந்துபோகிறார்கள்.
DETACHED ATTACHMENT மனநிலையை நாமெல்லோருமே வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமக்கென்று சில பொழுதுபோக்குகளும் இருக்கவேண்டும்.
இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியும் அலை பேசியும் முதியவர்களுக்கு உற்ற தோழமையாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தனித்தனியாக அறைகளோ, அலைபேசிகளோ, தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத வறிய, நடுத்தரக் குடும்பங்களில் அவை முதியவர்களின் தேவைக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
வசதி படைத்த குடும்பங்களில்கூட வயது முதிர்ந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா போன்றவர்களுக்குத் தனி அறை வசதியோ, தனி தொலைக்காட்சிப்பெட்டி வசதியோ தரப்படுவதில்லை. அதற்கான தேவை உள்வாங்கப்படுவதில்லை.
அல்லது, அவற்றை வாங்கித்தந்து அவர்களை தனியறை யில் இருக்கச்செய்துவிடுகிறார்கள் வீட்டிலுள்ள இளையவர்கள்.
தங்கள் வாழ்வின் தினசரி அவசரத்தில் வீட்டுப் பெரியவர் களிடம் தினமும் சற்று நேரம் உட்கார்ந்து பேசவும் அவர்கள் நேரம் செலவிட நினைப்பதில்லை.
Nuclear குடும்பம் என்ற நிலை பரவலாகிவிட்ட பிறகு பேரக்குழந்தைகளும் தாய், தந்தையிடம் கலந்துரை யாடுவ தோடு, கலந்துறவாடுவதோடு நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
அவர்கள் விஷயத்தில் தாத்தா- பாட்டி ஏதேனும் கருத்து ரைப்பதை பெரும்பாலும் அவர்களும் விரும்புவதில்லை; அவர்களுடைய தாய்-தந்தையரும் விரும்புவதில்லை.
மூத்த குடிமக்கள் உடற்குறையுடையவர்களாக இருந் தால், அல்லது வயது காரணமாக உடற்குறையேற்பட் டவர்களாய் இருந்தால், அவர்களுடைய நிலைமை இன்னும் அவலமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைகள் நலனும் மூத்த குடிமக்கள் நலனும் குடும் பங்களாலும், சமூக அமைப்பாலும், அரசுகளாலும் இன்னும் அதிகமான அளவு கவனத்தில் எடுத்துக்கொள் ளப்பட வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவை.
.........................................................................................................................................


No comments:

Post a Comment