CULTURE LITERATURE PERSONALITIES
_ A COLLAGE
by Dr.K.S. SUBRAMANIAN
மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாள ருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.
இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங் களைக் கட்டுரைகளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல் வேறு தொகுப்புகளில் அவை வெளி யாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக எழுதிய கட்டுரை களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
டாக்டர் கே.எஸ். மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் கொண்ட, திரு.இறையன்பு டாக்டர் கே.எஸ்.ஸின் அரும் பணிகள் குறித்து அகல்விரிவான முன்னுரை எழுதியுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 20க்கும் மேற்பட்ட அடர்செறிவான கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலின் முகப்பு அட்டையைப் பார்த்ததும் மிகவும் வருத்தமா யிருந்தது.
‘ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் ஒரு நூலின் முகப்பு அட்டை அந்த நூலின் சாரத்தை, முக்கியத்துவத்தைக் குறிப்புணர்த்துவ தாய், அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமையவேண்டும். இந்த நூலின் முகப்பு அட்டையில் Dr. கே.எஸ். ஸின் புகைப்படத்தையே பெரிதாக வெளியிட்டிருக்கலாம்.
No comments:
Post a Comment