குறியீடிலிருந்து வெளித்தள்ளப்பட்டு
குப்புற விழுந்த ஆமை
ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆமையோடு தன் வாழ்வுச்சுமைகளுக்கு
ஆகச்சிறந்த குறியீடு
என்று ஆசையாசையாய் அதைக்
கவிதையில்
விரும்பிச் சுமந்திருந்தார் கவிஞர்.
மொழிபெயர்த்தவர்
கையில் கிடைத்த ஆமையோட்டை
ஆமையின் முதுகு விரும்பிச் சுமப்பதாய்
ஒரே போடாய்ப் போட்டு
அதன்மீதான ஆமையின் பிறப்புரிமையை
நிலைநாட்டிவிட்டதில்
அந்த அருமையான குறியீடு
காலாவதியாகிவிட
ஆமையின் முதுகிலேறிப் பொருந்திக்கொண்ட
ஓடு 'ஓடு ஓடு ஓட்டமாய் ஓடு -இல்லை –
உன்னை யொரு
அரைவேக்காடு மொழிபெயர்ப்பாளர் கையில் பிடித்துக்கொடுத்துவிடுவேன் _
அதன்பின் உன் பாடு’
என்று பூச்சாண்டிகாட்ட
அலறியடித்துப் பறக்கலாயிற்று ஆமை
No comments:
Post a Comment