‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(லதா ராமகிருஷ்ணன்)
”ஏழையின் வயிற்றில்
இப்படி அடிக்கிறாயே?”
“பாழையை ஏன்
விட்டுவிட்டாய்? – போ
போ – நீ
அரை முக்கால் முழு
லூசு”
கோழைதான்
கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன்
சுத்தவீரன்.”
“கேளடா மானிடா,
உன் கோபாவேசமெல்லாம் எனக்குக்
கால்தூசு”
”வாழையடி வாழையாக
வந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளமாட்டேன்
என்று இப்படிப் பிடிவாதம்
பிடிக்கலாமா?
“தோ, தோ
நாய்க்குட்டி போதும் எனக்கு.
காட்டுவிலங்குகளை கண்ணிவைத்து வேட்டையாடினால்
கொள்ளைக் காசு!”
பேழை
நிறைய பொற்காசுகளிருந்தால்
மட்டும் பெரியவனாகிவிடுவாயா
_ சின்னராசு?”
“ஓ! ஓ!
ஓ! ஓ!
– புவியியல் புரிந்து பேசு!”
கீழை
மேலை நாடுகளெல்லாம் திரிந்தலைந்து
கற்றது இதுதானா?”
“கெக்கெக்கெக்கே……
காலாவதியானது உன் நியாயத்தராசு.”
No comments:
Post a Comment