//2021, MAY 5 - மீள்பதிவு//
A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MARBLES ROLLING IN THE LIQUOR SHOP
கவிஞர் யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பான சாத்தானும் சிறுமியும் 2013இல் வெளிவந்தது. 20, 25 கவிதைகள் இருக்கும். அனைத்துமே குழந்தைகளைப் பற்றிய கவிதைகள். அவற்றில் பல கவிதைகளைப் படிக்கும்போது நம்மால் அழாமல் இருக்க இயலாது. அந்த நூல் மொத்தத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். இதுவரை நூலாக வரவில்லை. அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைத்தால் மூல தொகுப்பு கிடைக்காது. மூல தொகுப்பு கிடைத்தால் என் ஆங்கில மொழிபெயர்ப்புகள் கணினியிலுள்ள கோப்புகளுக்கிடையில் காணாமல் போய்விடும். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று இரண்டும் கிடைத்தபோது மனம் உணர்ந்த மகிழ்ச்சி லட்சங்களாலும் கோடிகளாலும் வாங்க முடியாத ஒன்று!
என் மொழிபெயர்ப்புகளுள் ஒன்றை (அப்போது செய்த மொழிபெயர்ப்பு இப்போது கிடைத்தவற்றில் இல்லாத நிலையில் இப்போது புதிதாய் மொழிபெயர்த்து இங்கே தந்திருக்கிறேன்.
..........................................................................................
மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்
யூமா வாசுகி
குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லறை
கைந்ழ்வு விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்….
அவன் சட்டைப்பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக்குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருந்தவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக்குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.
A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MARBLES ROLLING IN THE LIQUOR SHOP
The coins that a boy doing errands
for those tipplers
pleaded with one fully drunk and
on his way out
slipped from hand and fell on the floor.
As he bent to collect them
a miracle takes place….
Some marbles slipping from his shirt-pocket
scattered on the floor tinkling.
Bonding all there at once
they keep running on and on.
Stalled they were
at the childhood of all those
looking at them and floating
in times bygone.
As the boy stood there hesitant, shocked
One being merciful picked up that which lay by his side
and gave it to the boy.
With love swelling inebriated
another followed suit.
Hands too many
softening in a sense of unbearable guilt
gathered the marbles and gave them to the boy
as blessings.











