LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 27, 2025

REST IN PEACE DEAR FELLOW POET KUMAR AMBAYERAM...

 REST IN PEACE 

DEAR FELLOW POET 

KUMAR AMBAYERAM...

Many a Contemporary Tamil Poet keep writing quality poetry and live on as unsung heroes, feeding their very souls with Poetry. A few poets, both quality ones and those gaining an aura around their heads by mouthing the right words to gain the attention of the powers-that-be - both of Establishment and Anti-Establishment and so receive all recognition and accolades and highlighted as representing Tamil Poetry , in particular Contemporary Tamil Poetry, there are many more better poets who go unrecognized. This is the prevailing sad state of affairs.

One such quality poet in Tamil is Kumar Ambaayiram who recently breathed his last. By way of remembering him and honouring him a few poems of his and their English versions (by me) are given here.

May his soul rest in peace.

*தரமான சமகால தமிழ்க்கவிஞர்கள் பலர் உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறாமலேயே, எனினும் இறுதிவரை கவிதை எழுதும், வாசிக்கும் ஈர்ப்பு குறையாமலேயே இருந்து மறைந்துவிடுகிறார்கள். இப்போது கவிஞர் குமார் அம்பாயிரம். முன்பு கவிதைகளை மொழிபெயர்த்து பதிவேற்றத் தொடங்கி யிருந்த சமயத்தில் ‘நாங்களெல்லாம் கவிஞர்கள் இல்லையா’ என்று கோபமாக ஏதோ பதிவிட்டிருந்தார். அவரிடம் உள்பெட்டியில் விளக்கம் அளித்து அவரு டைய கவிதை ஒன்றை மொழிபெயர்த்து வெளியிட்டேன். அதன் பிறகு இரண்டு மூன்று கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

இனிவரக் கூடிய இருமொழித்தொகுப்புக்ளுக்காகவும் INSIGHT இருமொழி வலைப்பூவுக்காகவும் கவிதைகள் கேட்டு உள்பெட்டியில் தொடர்புகொண்ட போது உடனே சில கவிதைகளை அனுப்பிவைத்தார். அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்துவைத்திருக்கிறேன்.

அவர் ஓர் அரிய இசைக்கருவியை அமர்க்களமாக இசைத்து சென்னை இலக்கிய அரங்கொன்றில் கேட்டு வியந்திருக்கிறேன்.

அவருடைய கவிதைகள் அவரை வாழுங்காலத்தில் இல்லையென்றாலும் தமிழ் கவிதை வரலாற்றிலாவது அமரகவிஞர்களுள் ஒருவராக நிலைபெறச் செய்யட்டும்.

.........................................................

POEMS BY KUMAR AMBAYIRAM

(Translated into English by Latha Ramakrishnan)
1. KONA HILLS


The twosome who have entrusted the Law
of Lovemaking
in the hands of Nature
go climbing.
She disowned by her husband being on one side
And he leaving his family being on another side
The mount go around them and continue ascending
Offering their garbs to those hook-thorns
that pull them backward implying
that this mount wouldn’t be the right place for them
to hold each other in their hands
with passion unleashed
and offering the ornaments to the
‘Ilanji’ tree
And to the hillocks that couldn’t walk
their footwear
With the ‘Nirvana’ so gained
the two reach their own peaks
In nearness that couldn’t be touched
She
And He in a distance beyond call
The Ilandhai tree observes
That the one who has scaled the peak of Kona Hills
is the one who has not set foot on it; nor ever will.

2. INSTA……
Early in the morning
the lovers meeting
and sitting in their respective vehicles
entwining there small tender fingers
blissfully oblivious of the surroundings _
And the Jacaranda tree that splashes Violet hue
at the onset of Summer and Love
showered flowers on them
in the manner of blessings.
Despite talking for hours through the mobiles
Throughout the night
Till dawn brekas
Exchanging sweet nothings
Cooing kissing cajoling
Love can’t blossom without meeting in person
Looking at each other under the sun or moon
Relishing intimacy real
Being near to your dear…..
On bidding goodbye
She climbed on to the bridge and flew afar
He just vanished on the other side
and seen no more.
Her husband
who had come pursuing her
stood there shell-shocked
sickeningly enraged
confusion-confounded
wondering whether to pursue her
and cut her into pieces
or chase the wretched male
and slice him with a dagger
Upon his head
the violet-colour Jacaranda flowers
began falling as a crown.....
........................................................................
1. இன்ஸ்டா...
அதிகாலையில்
காதலர்கள் சந்தித்து தம் தம்
வாகனத்தில் அமர்ந்தபடியே
சின்ன சின்ன விரல்களை
கோர்த்து விளையாடி
சூழல் மறந்த அவர்களின் லயிப்பை வியந்து
புது வேனிலுக்கும் காதலுக்கும் வைலட் நிறத்தை அள்ளி தெளிக்கும்
ஜாகரண்டா மரம் ஆசிர்வாதமென மலர்களை
காதலர்கள் மீது சொறிந்தது
என்னதான் பேசிகளில் விடிய விடிய பேசி
இழைந்தாலும் குழைந்தாலும்
சந்தித்து வதனங்கள்
நோக்குவது போல் நோக்காமல் வராது காதல்
பிரியாவிடையில்
அவள் பாலத்தின் மீதேறி பறந்து விட்டாள்
அவனோ பாலத்தின் புறத்தே
போய் மறைந்து விட்டான்
பின் தொடர்ந்து
வந்திருந்த கணவன்
அவளை பின் தொடர்ந்து போய்
கண்டம் துண்டமாக வெட்டலாமா அல்லது
அவனை துரத்தி போய்
சதக் சதக் சதக் என
கத்தியால் குத்தலாமா
என்ற கோப குழப்பத்தில்
திகைத்து நின்றவன்
தலையில் வைலட் நிற
ஜாகரண்டா மலர்கள்
ஒரு க்ரிடமென
சரிய துவங்கின....
குமார் அம்பாயிரம்



(3)
Facing an owl
We can’t stand as Falsehood.
In front of a bird
We would stand stark naked...
Lifting us from afar
More than a poem more than a song
isn’t that noise that Sound sounds ‘ AavvSooo’
the Language of Birds
My kinship with owl and liveliness
it looks at the universe straight
No other bird laughs
Owl should visit my dream
Long time no see
O, My Darling
Either you visit my dream
Or keep wandering in my dreams

ஒரு ஆந்தையின் முன்பாக
நான் பொய்மையாக நிற்க முடியாது.
ஒரு பறவையின் முன்பாக நாம்
நிர்வாணமாக நிற்போம்....
ஒரு கவிதையைவிட ஒரு பாடலைவிட ரொம்ப தூரத்திலிந்து அள்ளிக்கொள்ளும் அல்லது ஆவ்சூ என ஒலியிடும் சப்தமல்லவா பறவைகளின் மொழி. ஆந்தைகளுடனான என் உறவும் உயிர்ப்பும் அது பிரபஞ்சத்தை நேராக பார்க்கும்
சிரிக்கும் பறவை வேறில்லை.
ஆந்தை என் கனவில் வரவேண்டும் நெடுங்காலம் ஆகிற்று நாயகியே
ஒன்று என் கனவில் வா அல்லது
என் கனவுகளில் உலாவு
- Kumar Ambayeram

4. நீங்களதில்
குமார் அம்பாயிரம்
..................................................................
என்னிடம் ஒரு நிலம் இருக்கிறது
அதை நான் இப்போது பயன்படுத்தவில்லை
அதில் நான் விதைக்கவோ
அறுவடை செய்யவோ இல்லை
அது கன்னி நிலம்
தான் தோன்றி விதைகள்
அதில் முளைத்திருக்கின்றன
அதனளவு 3.6 தான்
சிறியதென எண்ணவேண்டாம்
அப்பத்தையும் மீனையும் போல்
அது பல்கிப் பெருகும்
நீங்களதில்
வாழ்நாளுக்கும்
பிறர் பசியாற்றலாம்
எனக்கோ
திரும்ப உயிர்த்தெழும் வரை
மூன்றுநாள்
கல்லறையின் கதவுகளை தட்டாமலிருந்தால் போதும்
A POEM BY KUMAR AMBAYIRAM
YOU IN THAT
I have a land
I am not using it now
I don’t sow seeds
Nor harvest there
It is a virgin land
Spontaneous seeds have sprouted in it
Its size is just 3.6
Don’t think of it as a tiny one
Just as Bread(‘Appam) and Fish
It would increase and multiply anon
There you can feed others
for the entire span of your life
As for me,
Enough if the doors of tomb are
not knocked at
for three days
Till the Time of Resurrection



A TRIBUTE TO FELLOW POET KUMAR AMBAYERAM

 

A TRIBUTE TO

FELLOW POET KUMAR AMBAYERAM

BY POET IYARKKAI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
HEY-YOU AMBAA – ENOUGH OF EVERYTHING. HENCEFORTH, YOU BE A CELESTIAL BEING
The one who had the eyes of viewing the world. Or, he who had transformed his usual eyes as those meant for the Earth.
Its depth of depths and the height of heights and also those of immense lengths and widths, and also its core secrets of all mysteries he keeps seeing as ‘vision’ and stays blessed. Bird or tree, plant, creeper or notes on any other species his existence needs not as he identifies them all as born of the same mother sucking milk from her.
Thus he once turned towards me and asked, Have you appeased your hunger, my fellow being?” Then, he turned the other side and asked the same. There a wolf was licking its lips. A Lion, a Yello-billed Babbler , a Vulture, a Snake, a poisonous plant and a Herbal Plant too were there. Seeing that when I told him. “O, Poisonous Plant’’ called he and pulled me to him and embraced me calling me “O you, the Celestial Devadhaaru Tree” and released me calling , “O, the Serene Koel of the Mango Grove’ . Asking with concern, “Are you feeling hungry?” - so asking he picked up a withered shrunken plant and pushing a little aside the upper portion of mother’s attire and made it suck the mother’s milk and in a few hours I could see the plant happily playing with the wind. The Mother who would call him as dutifully calling the elder son would always be asking him, “Hey you, my son - Be careful. Had food? Hey – don’t get carried away by anything and everything. Don’t do that – So it would have its hands around his shoulders always. Climbing the mountains all too often when he would be panting, Mother Earth would ask him, caressing “Hei, you have grown up, my boy – why are you always on my bosom?” Somewhere they would say that they would start digging. Somewhere they would say, they would grind the sand. Somewhere they would say ‘We would fell the trees”. Just as the responsible eldest son doing his duty he would at once go to all those offsprings whom she has breastfed and tell them, “Look here, She is Our Mother. Don’t mutilate her. “Hei – leave it. Come here – atop the ring of my left bosom there is a creeper lying listless _ see, what is wrong with her” _ so Mother would say. Why she is silently bearing with all these and more ... _ so he would be dissatisfied with her abysmal tranquility. One day he picked up a primal Word which the world believed to be a primal musical instrument and conversed. Fellow-beings gave that Language incomprehensible names of their choice. But, when he was lying on her lap Mother planted a kiss with a drizzle. Quivering when he straightened up “ My Son - After eons it is you who has uttered My Word which was no tongue had accessed” _ and she fondly dropped a drizzle on him –
Existence and the poor semblance of an existence constantly causing him pain and unrest - The Mother was constantly having in a warm embrace . Unable to bear the sight of his body in anguish and pain “Won’t you listen to your Mother, My son – Enough. Come and lie in my lap” – She insisted. And, not arguing with her or going against her advice, he paused for a moment and then released all living species from the depth of his conscious mind. Not knowing why I too fell outside. As a Ray of Radiance Immense he went to the lap of Mother. The Mother not disturbing his deep sleep pulling the cosmos close to her and opening a Star like her shifted him to its lap.
ENOUGH AMBAA – HENCEFORTH BE A CELESTIAL BEING said she and swirled.
டேய் அம்பா போதும்.
இனி நீ தேவனாய் இரு.
****************************
- இயற்கை 21.5.25 / 14:53
பூமியைப் பார்க்கவேண்டியக் கண்களைக் கொண்டவன் அல்லது தனது வழக்கமான கண்களை பூமிக்கான கண்களாக மாற்றிக்கொண்டவன்
அதன் அத்தனை ஆழத்தின் ஆழமானவற்றையும் உயரத்தின் உயரமானவற்றையும் இன்னும் நீள, அகலமானவற்றையும் மேலும் அதன் இரகசியங்களின் இரகசியங்களையும் கூட தரிசிக்கிறான். பறவை என்றோ மரம் செடி கொடிகளென்றோ அல்லது வேறெந்த உயிரினக் குறிப்புகளையும்கூட தேவையற்ற அவனது இருப்பு ஒரே மடியில் பால் குடிக்கும் குட்டிகளென எல்லா ஜீவராசிகளையும் சொல்லிற்று. அப்படித்தான் ஒருமுறை என்பக்கம் திரும்பி பசியாறினாயா சக உயிரியே என்றான். பிறகு மறுப்பக்கம் திரும்பியு கேட்டான். அங்கே ஓர் ஓநாய் சப்புக்கொட்டிக்கொண்டிருந்தது. ஒரு சிங்கம், ஒரு தவிட்டுக்குருவி, ஒரு வல்லூறு, ஒரு நாகம், ஒரு விஷச்செடியும் மூலிகைச் செடியும் கூட. இதைக் கண்ணுற்று அவனிடம் சொன்னபோது ஓ விஷச் செடியே என்றென்னை இழுத்து ஓ தேவதாரு மரமே என்றென்னை அணைத்து ஓ மாங்குயிலே என விடுவித்தான். பசிக்கிறதா என்று ஒருத் துவண்டச் செடியை எடுத்து அம்மையின் முந்தி விலக்கி செடியின் வாய்க்குள் மடியைத் திணித்த சில மணி நேரங்களில் செடி காற்றோடு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். மூத்தவனை பொறுப்போடு அழைப்பதைப் போல அவனை அழைக்கும் அம்மை, டேய் பார்த்துடா, டேய் சாப்பிட்டயா, டேய் அதிகம் மதிமயங்காதே, இதைச் செய், அதைச் செய்யாதே என அவனுக்குத் தோளணைத்துக் கொண்டே இருக்கும். அவன் அடிக்கடி மலைகளிலேறி மூச்சிறைக்கும்போது, நீ வளர்ந்துட்டடா எப்போதும் ஏன் என் மார்புகள் மீதே கிடக்கறாய் என்று வருடிவிடும். எங்கோ கல் தோண்டுவேன் என்பார்கள், எங்கோ மண் அரைப்பேன் என்பார்கள், எங்கோ மரம் அறுப்பேன் என்பார்கள். மூத்தமகன் கடமையாற்றுவதைப் போல உடன் பால்குடித்த அத்தனை ஜீவன்களிடத்தும் போய் இது நம் அம்மை. அவளை அங்கஹீனம் செய்யாதீர் என்பான். டேய் அதை விடு. இங்கே வா. என் இடது மாரின் உச்சி வட்டத்தில் ஒரு கொடி துவண்டுக் கிடக்கிறாள் என்னவென்றுப் பார் என்பாள் அம்மை. ஏன் இத்தைனையும் இவ்வளவு சகித்துக் கொள்கிறாள் என்று அவளின் பாதாள மௌனம் பற்றி ஓர் அதிருப்தி அவனுக்கு. ஒரு நாள் உலகம் ஆதி இசைக் கருவி என்று நம்பியிருந்த ஒருத் தொல் சொல்லை எடுத்துப் பேசினான் சக ஜீவராசிகள் அந்தப் புரியாதை பாஷைக்கு அவரவர் இச்சைப் படி பெயரிட்டுக் கொண்டார்கள். ஆனால் அவன் மடி சாய்ந்திருந்தபோது அம்மை ஒரு தூறலால் முத்தமிட்டாள். அவன் சிலிர்த்து நிமிர்ந்தபோது, எந்த நாவும் கொண்டிராத என் சொல்லை யுகங்களுக்குப் பிறகு நீதான் மகனே பேசினாயென நெற்றியில் ஒரு தூறலிட்டாள். இருப்பும் இருப்பைப் போன்ற இருப்பும் சதா நோகச் செய்த அவனை அம்மை எப்போதும் மாரில் அணைத்துக்கொண்டே இருந்தாள். அவனது வதையும் தேகத்தைக் காணச் சகியாமல், டேய் அன்னை சொன்னால் கேட்க மாட்டாயா போதும். மடியில் வந்து படு என்றாள். மறுவார்த்தைப் பேசாத அவன் ஒரு கணம் தாமசித்து சகல ஜீவராசிகளையும் ஆழ் எண்ணங்களிலிருந்து விடுவித்தான். எதற்கென்றே புரியாமல் நானும் கூட வெளியே வந்து விழுந்தேன். ஒரு பேரொளியின் கீற்றுப் போல அவன் அம்மையின் மடிக்குச் சென்றான். அம்மை கண்ணயர்ந்த அவனைக் கலைக்காமல் அண்டத்தை அருகிழுத்து தன் போலொரு நட்சத்திரத்தைத் திறந்து மடி மாற்றினாள்.
டேய் அம்பா போதும். இனி நீ தேவனாய் இரு என்று சுழன்றாள்.

மொழிபெயர்ப்பின் அரசியல் – 1 லதா ராமகிருஷ்ணன்

 மொழிபெயர்ப்பின் அரசியல் – 1

லதா ராமகிருஷ்ணன்

நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். தனது கவிதை வேறு மொழியில் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் கவிதை எழுத முற்படுவதில்லை. (அப்படி எழுதும் காரியார்த் தக் கவிஞர்கள் இருக்கக்கூடும். என் பதிவு அவர்க ளைப் பற்றியதல்ல).
தனது மனவெழுச்சியை, பொற்குமிழ்த்தருணங் களை, ஆறா வலியைப் பதிவுசெய்து ஒருவித வடிகால் தேடும், ஒரு விஷயம் குறித்த தன் பார்வையை முன்வைக்கும் உட்தூண்டுதலே ஒருவர் கவிதை எழுதக் காரணமாகிறது.
அதை படித்த, தாய்மொழியைத் தவிர இன்னொரு மொழியும் தெரிந்தவர் – இங்கு ஆங்கிலம் என்று வைத்துக் கொள்ளலாம் - அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி முன்வருகிறார்.
இங்கே மூல கவிதை இல்லாமல் அதன் மொழி பெயர்ப்பு இருக்க வழியில்லை. எனவே, ஒரு கவிஞரை மொழிபெயர்ப்பதன் மூலம் அவருக்கு ஏதோ பெரிய FAVOUR செய்துவிட்டதாக எண்ணிக் கொள்வது அடாவடித்தனம்.
இன்று அலைபேசி குறுஞ்செய்தியும் சமூக வலைத் தளச் செய்திகளுமாக ஒரு மொழியை அதன் இலக்கணத்தை அசட்டை செய்து விருப்பம்போல் சுருக்கி திரித்து எழுதும் வழக்கம் மேலோங்கியிருக் கிறது. குறுஞ்செய்திகள் நட்பினருக்கிடையேயான தால் அதுகூடப் பரவாயில்லை.
ஆனால், அப்படித்தான் மொழிபெயர்ப்பையும் செய்வேன் என்ற மனப்போக்கு சரியல்ல.
ஒரு மொழி நமக்குத் தெரியும் என்பதற்கு என்ன அளவுகோல்? ஒரு மொழி பேசத் தெரியும், எழுதத் தெரியும் என்பதாலேயே எல்லோரும் அந்த மொழி யில் இலக்கியம் படைத்துவிட முடியுமா?
அதுபோல் தான் மொழிபெயர்ப்பும். மூன்றே நிமிடங் களில் மொழிபெயர்ப்பாளராகிவிட முடியும் என்று எண்ணிச் செயல்படுவது ஆணவம்; அபத்தம்.
யாரை இன்னொரு மொழிக்கு அறிமுகப்படுத்து வதாக எண்ணிக் கொள்கிறாரோ அந்தப் படைப்பாளிக்கு மொழிபெயர்ப்பாளர் செய்யும் நம்பிக்கைத் துரோகம் _ வெகு அலட்சியமாக ஒரு படைப்பை மொழிபெயர்த்து முடிப்பது.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் என்பதுபோல் ஒரு வார்த்தை சார்ந்த அப்பட்டமான தவறான மொழி பெயர்ப்பு ஒரு படைப்பையே மதிப்பழித்து விடும்; மொழிபெயர்ப்பாளரையும் படைப்பாளியை யும் மதிப்பழித்துவிடுவதாகும்.
எத்தனை கவனமாக மொழிபெயர்த்தாலும் தவறு நேர்ந்துவிடும் என்பது வேறு. அதற்காக படைப்பா ளிக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே என்ற மிதப்பில், ’நாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தால் அதில் யார் குற்றம் கண்டுபிடிக்கத் துணிவார்கள் என்ற அசட்டு தைரியத் தில் கைபோன போக்கில் மொழிபெயர்க்க லாகாது.
சிலர் 'கூகுள் ட்ரான்ஸ்லேட்'டில் பத்தி பத்தியாக ‘பேஸ்ட்’ செய்து’ தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு களை சுலபமாகச் செய்துவிடலாம் என்று சொல் வதைக் கேட்கும்போது சிரிப்பாக வரும். அதன் உதவியோடு இலக்கியப் படைப்பை மொழி பெயர்க்க முற்பட்டால் அதலபாதாளத்தில் விழவேண்டியது தான்.
ஆனால், அதில்கூட சரியாக பொருள் கிடைக்கும் சொற்கள் உண்டு. மூலமொழியிலான படைப்பின் ஒரு வார்த்தைக்கான பொருள் சரியாகப் புரிய வில்லையென்றால் அகராதிகளின் துணையை நாடலாம். Thesaurus இருக்கிறது. ஒரு வார்த்தை பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா, வட்டார வழக்குச் சொல்லா என்பதையெல்லாம் அறிய இணையத்திலேயே நிறைய வழிகள் இருக்கின்றன.
அப்படி எதையும் செய்யாமல் ஒரு சாதாரணச் சொல்லை அதன் நேரெதிரான அர்த்தத்தில் கவிதை மொழிபெயர்ப்பில் முதல் வரியில் தருவது என்பது சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் இலக்கு மொழித் தேர்ச்சியை (மூலமொழித் தேர்ச்சியை என்றுகூடச் சொல்லிவிட முடியும்) அம்பலமாக்கு வதோடு அவர் மொழிபெயர்த்துள்ள படைப்பை மதிப்பழிக்கிறது. மேலும், மொழிபெயர்ப்பு என்ற இலக்கியப்பணி குறித்த அவருடைய மனப்போக்கை யும் எடுத்துக்காட்டுகிறது.
இது புரியாமல் தனது படைப்பு ஆங்கிலத்தில் வந்ததற்காகப் பூரித்துப்போய் அதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரை வானளாவப் புகழும், முதல் தர மொழிபெயர்ப்பாளராய் முன்னிறுத்தும் படைப்பா ளியை என்ன சொல்ல? அப்படி நம்பும், நம்ப வைக்கப்படும், பிறரை நம்பவைக்க முயலும் படைப்பாளியைப் பார்க்க உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது. தாம் நம்பும் யாரிடமேனும் மொழிபெயர்ப்பை சரிபார்த்தால்கூட இந்தப் பிழைகளைத் தவிர்த்துவிட முடியும்.
இன்று யதேச்சையாகக் காணநேர்ந்த தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பு
/அவனுக்குத் தேவை/ என்பது /He is hardly in need/ என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்த ஆதங்கத்தில்தான் இதை எழுதும்படியாகியது. Hardly in need என்றால் ’அறவே தேவையில்லை’ என்று பொருள். There is hardly any rain here என்றால் இங்கே மழையே இல்லை, மழை அரிதாகவே பெய்கிறது என்று பொருள்.
ஒரே துறையில் இயங்குபவர்கள் ஒருவரையொருவர் விமர் சிப்பது சரியல்ல என்ற எண்ண முடையவள் நான். ஆனாலும், ஒரு சிலர் செய்யும் அலட்சியமான, பிழையான மொழிபெயர்ப் பால் ஒட்டுமொத்த மொழி பெயர்ப்பாளர் தரப்பே அவதூறுக் காளாகும் நிலைமை ஏற்படுகிறது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்………… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

பயிர் முளையிலே தெரியும்…………

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
அநியாய அவதூறுகள்
அவமானகரமான வசைச்சொற்கள்
அமைதியிழக்கச்செய்யும் கெக்கலிப்புகள்
அசிங்கப்படுத்தும் அடைமொழிகள்
அக்கிரம வக்கிரச்சொலவடைகள்
பொச்சரிப்புப் பழமொழிகள்
பொல்லாங்குப் புதுமொழிகள் என
ஒருவருக்கு நாம் தந்துகொண்டிருக்கும் அத்தனையையும்
நமக்கு இன்னொருவர் தரக்கூடும்
இன்றே
இங்கே
இப்போதே
குளிர்காலம் வசந்தம் போல்
முற்பகல் பிற்பகல்
இரண்டின் இடைத்தூரம் சில மாதங்கள்
அன்றி சில நாட்கள்
அன்றி
சில மணித்துளிகள்
அன்றி சில கணங்கள்
அன்றி ஒரு கணத்திற்கும் மறுகணத்திற்கும் இடையிலான
நூலிழை அவகாசம்….
காலம் கணக்குத்தீர்க்கும்போது
அதைப் புரிந்துகொள்ளத் தவறியும்
புரியாததுபோல் பாவனை புரிந்தும்
ஆழ்ந்த யோசனையிலிருப்பதாய் அண்ணாந்துபார்ப்பதாலேயே
நம்மை ஆகாசம் என்று இன்னும் எத்தனை நாள்தான் நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்….?

சகவாழ்வு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சகவாழ்வு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய்
வான்கோழியை வசைபாடுவோம்.
வாத்துமுட்டையைப் பரிகசிப்போம்.
நாயின் சுருள்வாலை நிமிர்த்தப்
படாதபாடு படுவோம்.
கிளியைக் கூண்டிலடைத்து
வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை
முழுமையாக்குவோம்.
குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால்
பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி
யோட்டி
பணம் பண்ணுவோம்.
காட்டுராஜா சிங்கத்தை நாற்றம்பிடித்த மிருகக்காட்சிசாலையில்
போவோர் வருவோரெல்லாம்
கல்லாலடித்துக் கிண்டலடிக்கும்படி
பாழடைந்து குறுகவிரிந்திருக்கும்
புழுதிவெளியில் உழலச் செய்வோம்.
வாழைப்பழத்தில் மதுபுட்டிக் கண்ணாடித்
துண்டைச் செருகி
யானைக்கு உண்ணத் தருவோம்.
பிடிக்காதவர்களைப் பழிக்க பன்னி என்று
பன்னிப்பன்னிச் சொல்லுவோம்.
அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்
கன்றுக்குட்டியின் முதுகில்
ஒரு தடித்த கழியால் ஓங்கியடிப்போம்.
எதிரேயுள்ள நடைமேடைச் சுவரின்
விளம்பரத்தாளை வாய்க்குள் இழுக்கப் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்
தாய்ப்பசுவின் கண்களில்
நீர் ததும்பக்கூடும்.
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?
மனம் கசிந்து அழுபவரையும்
பழித்து இழிவுபடுத்த
தினந்தினம் உதாரணம் காட்டுவோமே
யல்லாமல்
மற்றபடி முதலையின் ரணம், சினம் கனம்
அது அதிகமாய்க் காணப்படும் சதுப்புநில
வனம்
அதற்கு இருக்கலாகும் மனம் பற்றி
என்ன தெரியும் நமக்கு?

அனுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அனுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவம் எனக்கிருப் பதாகவும்
அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்
குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது….
முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்....
ஆனால், அதுவொரு அளவுகோலா,
தெரியவில்லை.
சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;
இல்லாதுபோகலாம்.
படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே
மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப் பாளர்களும் உண்டு.
இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்
அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக் கொள்ளும் உத்தியாவதுண்டு _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல் பீடமேற்றிக்கொண்டுவிட.
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவமுடையவர்
என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே
நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியவரை
முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்
இங்கே நடக்கவில்லையா என்ன?
இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்
இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.
புகழுரைகளையும் இகழுரைகளையும்
பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.
குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு
கேட்கிறது நான்:
‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும் என்னால்
மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.
கேள்வியை வழிமொழிகிறேன்.
இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது
பெயர்க்க முடியலாம் -
காற்றாக காலமாக
கண்ணாமூச்சிவிளையாடும்போது…?
சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்
இரு மொழிகளும் மாயம் செய்தபடி
நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.
அவை படிக்கத் தரும் வரிகள் அருள்பாலிக்கின்றன.
இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.
இவ்வளவே.

Monday, May 26, 2025

புரிந்தும் புரியாமலும்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 புரிந்தும் புரியாமலும்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எக்கச்சக்கமான நல்ல படைப்புகள்
இருபது வருடங்களுக்குப் பிறகும்
கண்டுபிடிக்கப்படாத
கொலைசெய்யப்படவன் பிணமாக
கிணற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும்
காலகட்டத்தில்
ஒரு கவிதைப்புத்தகத்திற்கு
விமர்சனம் கிடைப்பது என்றால்
அது எத்தனை பெரிய வரம்!
அந்த விமர்சகர் என்னவொரு
பெருந்தன்மையாளர்….!
அதுவும்,
விமர்சனம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவிட்ட
தென்றால் (அதாவது பாராட்டுரையாக)
அது கவிக்குத் தரப்பட்ட
மில்லியன் டாலர் பொற்கிழியல்லவா!
ஆனாலும் அந்தக் கவியின் முகம்
களையிழந்தேயிருந்தது.
விமர்சனம் என்ற பெயரில் எழுதப்படும்
முழுமொத்தப் புகழுரையானாலும்
சொற்கள் எப்போதுமே தப்பாமல்
காசுகளாவதில்லைதான்….
ஆனால், அதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை
அந்தக் கவிக்கு.
”அந்த விமர்சனம் என் கவிதையைப் பற்றி
என்ன சொல்கிறதென்றே புரியவில்லை”
என்று ஆதங்கத்தோடு கவி சொன்னதைக்
கேட்டு
”அதுவொரு பெரிய விஷயமில்லை.
ஆங்கிலம் தெரிந்தவரை அணுகிக்
கேட்டால் போயிற்று”
என்ற நண்பனிடம்
”இது மொழிப்பிரச்சனையில்லை.
அவர் என்ன சொல்கிறார் என்றே
புரியவில்லை”,
என்று கவி சொல்ல
”புரியாக்கவிதை எழுதும் கவியெனப்படும்
நீயா இப்படிச் சொல்வது?” என்று
பெரிதாகச் சிரித்துக்கொண்டே கேட்ட நண்பன்
”விமர்சனத்தை ஆராயக்கூடாது;
அனுபவிக்கவேண்டும்
என்று ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ குரலில்
சொல்ல
”வசூலில்லாத ராஜாவானாலும் நான்
இதுவரை புரியாக்கவிதையைத்தான் படி(டை)த்திருக்கிறேனே தவிர
புரியா விமர்சனத்தை இப்போதுதான்
முதல் தடவையாகப் படிக்கிறேன்
என்பதைப் பதிவுசெய்தேயாகவேண்டும்”
என்ற கவி
அதுகுறித்து புரியும் கவிதையொன்றை
எழுதத் தொடங்கினார்.